அசுவினி முதல் அஸ்தம் வரையிலான நட்சத்திர குணாதிசயங்களை கடந்த அத்தியாயங்களில் பார்த்தோம். நட்சத்திர வரிசையில் சித்திரை, சுவாதி மற்றும் விசாகம் குறித்து இந்த அத்தியாயத்தில் விரிவாக அறிவோம்.

சீர்மிகு சித்திரை...

இது ஒற்றை நட்சத்திரம். ஒரு வட்டத்தின் நடுப்புள்ளி போன்று தோற்றம் அளிப்பது. வெண்மையான வண்ணத்துடன் மிக அழகாகத் தோற்றம் அளிப்பதால், 'சௌம்ய தாரா’ என்று இந்த நட்சத்திரம் அழைக்கப்படுகிறது. எல்லா சுப காரியங்களுக்கும் உகந்த நட்சத்திரம் இது.

ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் ஒரு பழமொழியைச் சொல்லி பயமுறுத்தும் சம்பிரதாயம் நம் நாட்டில் உண்டு. ஆனால், அந்தப் பழமொழிகளின் கருத்துக்கு ஆதாரம் கிடையாது. சித்திரை நட்சத்திரம் குறித்தும், 'சித்திரை அப்பன் தெருவிலே’ எனும் பழமொழி உண்டு. இதனால் பயந்து, தகப்பனைக் காப்பாற்ற சித்திரையில் பிறக்கும் பிள்ளையை தத்துக் கொடுக்கும் பழக்கமும் தமிழகத்தில் குறிப்பிட்ட சமூகத்தவரில் காணப்படுகிறது. இது அறியாமை என்பதே ஜோதிட வல்லுநர்களின் கூற்று.

பிறந்த குழந்தை எந்த நட்சத்திரமாக இருந்தாலும், நூற்றில் இரண்டு தகப்பன்மார்கள் வெவ்வேறு காரணங்களுக்காக குடும்பத்தைப் பிரிந்து செல்ல நேரிடலாம். இது அந்தத் தகப்பனின் ஜாதகத்தைப் பொறுத்தது. ஆகவே, சித்திரையில் பிறக்கும் எல்லா குழந்தைகளின் தந்தைமார்களுக்கும் இப்படித்தான் நேரிடும் என்று பயமுறுத்துவது மூடத்தனம்.

சித்திரையின் முதல் இரண்டு பாதங்கள் கன்யா ராசியிலும், அடுத்த இரண்டு பாதங்கள் துலா ராசியிலும் அமையும்.

பொதுவான குணங்கள்:

அழகிய தோற்றம், அன்போடு பழகும் தன்மை, பேச்சுத் திறமை, ஆடம்பரத்தில் பிரியம், தற்புகழ்ச்சியில் ஆர்வம், பொருள்களில் பற்று ஆகியவை இந்த நட்சத்திரக்காரர்களின் பொதுவான இயல்புகள்.

முதல் பாதம்: இதன் அதிபதி சூரியன். சிறந்த கல்வியறிவு, திறமை, கடமையுணர்வு, கடும் உழைப்பு இவர்களது இயல்புகள். துணிச்சல் குறைவானவர்கள், முடிவெடுப்பதில் குழப்பம் உள்ளவர்கள். மற்றவர்கள் வழிகாட்டுதல் இருந்தால் இவர்கள் ஜெயிப்பார்கள்.

2-ம் பாதம்: இதன் அதிபதி புதன். தெய்வபக்தி, நல்லொழுக்கம், நீதி-நேர்மை உள்ளவர்கள். தன்னம்பிக்கை குறைவு. குழப்பமான சிந்தனையால், இவர்கள் எடுத்துக்கொள்ளும் காரியங்கள் தாமதமாகும்.

3-ம் பாதம்: இதன் ஆட்சி கிரகம் சுக்கிரன். ஆசாபாசம் மிக்கவர்கள். பிறருக்கு உதவும் சுபாவம் மிகுதியாகக் காணப்படும். நல்லதையே நினைத்து, நல்லதையே செய்ய விரும்புபவர்கள். குடும்பத்தை நேசிப்பவர்கள்.

4-ம் பாதம்: இது செவ்வாயின் ஆட்சிக்கு உட்பட்டது. இவர்கள் தைரியசாலிகளாகவும், நல்ல பேச்சாளர்களாகவும் திகழ்வர். வெற்றி அடையும் வெறியும் உண்டு. தலைமை தாங்கும் இயல்புகள் உண்டு. நன்மை தரும் செயல்கள் அல்லது தீமை பயக்கும் செயல்கள் எதுவானாலும் எடுத்துக்கொண்ட காரியத்தைப் பிடிவாதமாக நடத்தி முடிப்பவர்கள். கோபமும் ஆவேசமும் உள்ளவர்கள்.

வைரமாக ஜொலிக்கும் சுவாதி...

தேவ கணத்தைச் சேர்ந்தது இந்த நட்சத்திரம். மாதுளை முத்து போன்று சிவந்து காணப்படும் இது, ஒரு வைரக்கல் நடுவில் ஜொலிப்பது போன்று தோற்றமளிக்கும். இதுவும் ஒற்றை நட்சத்திரமே! பௌர்ணமி தினங்களில் ஆக்ஸிஜன் எடுக்க கடலின் மேற்பரப்புக்குச் சிப்பிகள் வரும்போது, விண்ணிலுள்ள பனித் துளிகள் அதில் விழுந்து முத்தாகும் நிகழ்வு, சுவாதி நட்சத்திரத்து நாளில்தான் சாத்தியமாகும் என்று ரஸகுளிகை சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

பொதுவான குணங்கள்:

அழகும், தெய்வ பக்தியும் மிகுந்தவர்கள். கூரிய அறிவு, ஞாபக சக்தி, கலைகளில் ஆர்வம், தன்னம்பிக்கை, தாராள மனப்பான்மை, இரக்க சிந்தனை கொண்டவர்கள். ஓரளவு தர்ம நியாயத்தைக் கடைப்பிடிப்பவர்கள். அதேநேரம் கோபம், பாசம், சுயநலமும் இவர்களிடம் உண்டு. இந்த நட்சத்திரத்தின் நான்கு பாதங்களும் துலா ராசியில் அமையும். துலாக்கோல் போல் நல்லது- கெட்டதை சீர்தூக்கிப் பார்த்து, தீயதை அகற்றி நல்லதைக் கடைப்பிடித்து, வாழ்வில் உயர்பவர்கள்.

முதல் பாதம்: இதன் ஆட்சிக் கிரகம் குரு. புத்திசாலிகள். தைரியசாலிகள், நியாயவாதிகள், பேச்சுத்திறன் உடையவர்கள், பல மொழிகளைக் கற்பார்கள். கவிதைத் திறமை இருக்கும். அழகை ஆராதிப்பவர்கள். திட்டமிட்டுச் செயல்படுபவர்கள்.

2-ம் பாதம்: இதனை ஆட்சி செய்பவர் சனி. இந்த பாதத்தைச் சேர்ந்தவர்கள் கடும் உழைப்பால் பொருளீட்டுவர். அதிகாரம் செய்வார்கள். சுயநலம் கொண்டவர்கள். சாதிக்கத் துடிப்பவர்கள். சொத்து சேர்க்கவும் விரும்புவர். தலைமைப் பண்பு மிகுந்தவர்கள். நல்ல நண்பர்களாகத் திகழ்வர்.

3-ம் பாதம்: இதற்கும் அதிபதி சனி பகவான்தான். இந்த பாதத்தைச் சேர்ந்தவர்களுக்கு கர்வம் இருக்கும். ஆழமானவர்கள்; கோபமும் மூர்க்கத்தனமும் உண்டு. அவசரமாகச் சிந்தித்து, அவசரமாக செயல்பட்டுத் தவறிழைப்பார்கள். உணர்ச்சிவசப்படுபவர்கள். ஆனால் பாசமும், கடமை உணர்ச்சியும் மிக்கவர்கள்.

4-ம் பாதம்: இதன் அதிபதி குரு. நல்ல நடத்தை, புகழைத் தேடும் உத்வேகம் உண்டு. மற்றவர்கள் மெச்ச வாழ்வார்கள். நட்பு, உறவுகளிடம் பற்றும் பாசமும் மிக்கவர்கள். ஆடம்பரத்தை விரும்புவார்கள். தெய்வ பக்தி, கடமையுணர்வு மிக்கவர்கள். உழைத்து உயர்பவர்கள்.

முருகப்பெருமான் அவதரித்த விசாகம்...

இது முருகப்பெருமானின் அவதார நட்சத்திரம். குயவனின் மண்பாண்ட சக்கரத்தைப் போல் அமைந்துள்ள ஐந்து நட்சத்திரங்களின் கூட்டம் இது. விசாகத்தின் முதல் மூன்று பாதங்கள் துலா ராசியிலும், 4-ம் பாதம் விருச்சிக ராசியிலும் அமையும்.

பொதுவான குணங்கள்:

அறிவாளிகள், தெய்வபக்தி உள்ளவர்கள், கடமை உணர்வுடன் செயலாற்றுபவர்கள், ஆடம்பரப் பிரியர்கள், பணம் சேர்ப்பதில் ஆவல் கொண்டவர்கள், உணவு மற்றும் சிற்றின்பங்களில் ஈடுபாடு கொண்டவர்கள், மனித நேயமும், நியாய உணர்வும் உள்ளவர்கள், பேச்சுத் திறமை கொண்டவர்கள்.

முதல் பாதம்: இதன் அதிபதி செவ்வாய். இந்த பாதத்தில் பிறந்தவர்கள் சுகவாசிகளாகத் திகழ்வர். சொத்து சுகம் மட்டுமின்றி, நட்பையும் சுற்றத்தையும் விரும்புவார்கள். கோபம், எளிதில் உணர்ச்சிவசப்படுதல், பிடிவாதம், பிறரை நம்பாமை ஆகிய குணங்களும் இவர்களிடம் உண்டு.

2-ம் பாதம்: இதன் அதிபதி சுக்கிரன். இந்தப் பாதத்தில் பிறந்தவர்கள் சுகவாசிகள். சுயநலம் மிகுந்தவர்கள். வாழ்க்கையை ரசித்து வாழ்வர். உணர்ச்சிபூர்வமாகத் திகழும் இவர்கள், நல்ல அறிவாளிகள். தன்னம்பிக்கையும், கலைகளில் ஈடுபாடும் உண்டு.

3-ம் பாதம்: இதன் அதிபதி புதன். இதில் பிறந்தவர்கள் பக்திமான்கள். கணிதம், விஞ்ஞானத்தில் ஈடுபாடு கொண்டவர்கள். திட்டமிட்டு வாழ்பவர்கள். பிறரை நம்பமாட்டார்கள். உயர் பட்டங்கள், பதவிகளைப் பெறுவார்கள். புகழுடன் வாழ்வார்கள்.

4-ம் பாதம்: இதன் அதிபதி சந்திரன். இதில் பிறந்தவர்கள் பொருளீட்டுவதில் வல்லவர்கள். தாராளமாகச் செலவு செய்வார்கள். குடும்பப் பாசம் மிக்கவர்கள். சுகமான, ஆடம்பரமான, கௌரவமான வாழ்க்கை வாழ விரும்புபவர்கள். தாராள மனப்பான்மை இருக்கும். பொதுவாழ்வில் ஈடுபாடு இருக்கும். புகழை நாடுபவர்கள்.

- தொடரும்...