Published:Updated:

ராசிகளும் பெண்களும்...

ப.கிருஷ்ணசாமி

'மங்கையராகப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா’ எனப் பாடினார் கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை. அப்படி, பெண்ணாகப் பிறந்த பாக்கியசாலிகளின் பண்பு நலன்களை, அவர்கள் பிறந்த ராசியின் அடிப்படையில் விளக்குகின்றன ஜோதிட நூல்கள்.

மேஷம்: அழகும், களையும் பொருந்தியவர்கள். மூத்தோரை வரை மதித்து நடப்பவர்கள். கணவனை உயிருக்குயிராக நேசிப்பவர்கள். குடும்பத்தினரிடம் நம்பிக்கையும், குடும்ப நலனில் அக்கறையும் கொண்டவர்கள்.

ரிஷபம்: அழகானவர்கள். சகல வசதிகளை ஒரு சேரப் பெற்றவர்கள். நிறைந்த அறிவும்; ஓவியம், நாடகம் போன்ற கலைகளில் ஈடுபாடும் கொண்டவர்கள். கருணை மனம் கொண்டவர்கள்.

ராசிகளும் பெண்களும்...

மிதுனம்: கற்புநெறி சிறக்க வாழ்பவர்கள். சகல கலைகளிலும் தேர்ச்சி பெற்ற இவர்கள், குடும்பத்தை மதிப்பவர்கள். மற்றவரைக் கவரும் தோற்றம் கொண்டவர்கள்.

கடகம்: சாஸ்திர நெறிகளை மதித்து நடப்பவர்கள். ஆன்மிகப் பணிகளில் ஈடுபாடு உள்ளவர்கள். கணவரின் மனத்தைப் புரிந்து நடப்பவர்கள் பகைவரை வெல்லும் சாதுர்யம் பெற்றவர்கள்.

சிம்மம்: இல்லறத்தை நல்லறமாக நடத்துவார்கள். அறநெறிகளைக் கடைப்பிடிக்கும் இவர்கள், பலருக்கும் வழிகாட்டியாகத் திகழ்வார்கள்.

கன்னி: ஒழுக்கத்தையும், சுத்தத்தையும் எதிலும் கடைப்பிடிப்ப வர்கள். மற்றவர் களிடமும் அதை எதிர்பார்ப்பார்கள். கற்புநெறி காப்பவர்கள்; பண்பானவர்கள்; ஆசாரம் கொண்டவர்கள்;

துலாம்: சாஸ்திர சம்பிரதாயங்களை மதிப்பவர்கள். ஆன்மிக நெறிகளைக் கடைப்பிடிப்பவர்கள். காம குரோதம் அற்றவர்கள். குழந்தைகளிடம் அதீத அன்பு கொண்டவர்கள்.

விருச்சிகம்: கண்டிப்பு நிறைந்த இவர்கள் கனவிலும் மற்றவர்களுக்குக் கெடுதல் செய்ய நினைக்கமாட்டார்கள். ஒருசிலர் ஆன்மிகத்தில் உயர்நிலை அடையவும் கூடும்.

தனுசு: சாந்தமானவர்கள். பாச மனம் கொண்ட இவர்கள் அனைவரையும் நேசிப் பார்கள். இரக்கம் நிரம்பிய இவர்கள் தான தர்மங்கள் செய்வதில் ஈடுபாடு உள்ளவர்கள்.

மகரம்: ஆசாபாசங்களை அடக்கும் திறன் கொண்ட இவர்கள் சற்றே அகங்காரம் கொண்டவராகவும் இருப்பார்கள். உத்தம குணம் உள்ள இவர்கள் நல்ல அந்தஸ்தும், சமூகத்தில் மதிப்பும், சிறப்பும் பெற்றவர்களாக இருப்பார்கள்.

கும்பம்: அன்பானவர்கள், அழகானவர்கள். பிறரிடம் கனிவு கொண்டு உதவுபவர்கள். செல்வச் செழிப்பில் திளைப்பவர்கள்.

மீனம்: கற்பும், கண்ணியமும் கொண்ட இவர்கள் அறநெறியைப் போற்றி நடப்பவர்கள். தான தர்மங்களைத் தயங்காமல் செய்வர்.

பன்னிரண்டு ராசிகளில் பிறந்த பெண் களின் பொதுவான பண்புகள் பற்றிய சிறு குறிப்பே இது. முழுமையான பலன்கள் அல்ல. சில ராசிகளில் பிறந்த பெண்கள் கற்புநெறி போற்றுபவர்கள் என்று குறிப்பிடப்பட்டு இருப்பதால், மற்ற ராசிகளில் பிறந்த பெண்கள் அவ்வாறு இல்லை என்று எடுத்துக் கொள்ளலாகாது. பாரதி கண்ட புதுமைப் பெண்களாக அவர்களைக் குறிப்பிடலாம்.