'குரு பார்க்க கோடி நன்மை’ என்று அறிவோம் சரி! குரு பகவான், தான் இருக்கும் இடங்களைப் பொறுத்து என்னென்ன பலன்களைத் தருவார்? தெரிந்துகொள்வோமா?

லக்னத்தில் குரு: அழகு, அதிர்ஷ்டம், அச்சமின்மை, நீண்டஆயுள், நல்ல குழந்தைகள் அமையும்.

2-ம் இடம்: பேச்சாளர், வசீகரமான முகம், செல்வம், புகழ், கல்வி உடையவர், நல்ல உணவுகளை ரசித்து உண்பவர்.

3-ம் இடம்: கருமி, மரியாதை கிடைக்காதவர், வஞ்சகமானவர். பாவ காரியங்களில் ஈடுபடுபவர். ஆனால் இவரது சகோதரர் புகழ் உள்ளவராகத் திகழ்வார்.

4-ம் இடம்: அன்புமிகு தாய், நல்ல அணுக்கமான நண்பர்கள், வேலையாட்கள், மனைவி- மக்களோடு சகல செல்வத்துடன் வாழ்வார்கள்.

5-ம் இடம்: அறிவாளியாகத் திகழ்வார்; அரசுக்கே ஆலோசனை தரும் நிலையில் இருப்பவர். எனினும் மகன்களால் தொல்லை உண்டு.

6-ம் இடம்: சோம்பல் மிகுந்தவர், அவ்வப்போது அவமரியாதையைச் சந்திக்க நேரிடும். எனினும் எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்வார். மாய-மந்திரத்தில் வல்லவர்.

7-ம் இடம்: நல்ல மனைவி, மகன்கள் உண்டு. நேசிக்கத் தக்கவர். தன் தந்தையைவிட தாராள குணமுடையவராக விளங்குவார்.

8-ம் இடம்: ஏழையாகவும், நீசத் தொழில் புரிபவராகவும் திகழ்வார்கள்.ஆனாலும் நீண்ட ஆயுளுடனும், மற்றவர்களால் விரும்பப்படுபவராகவும் வாழ்வார்கள்.

9-ம் இடம்: லட்சுமி கடாட்சம், மக்கட்செல்வம் நிரம்பியவர். புகழ் பெற்ற அமைச்சர் ஆவார்.

10-ம் இடம்: நன்னடத்தை, புகழ், மிகப்பெரும் செல்வம், அரசாங்கத் தலைவர்களிடம் நட்பு உடையவராக விளங்குவார்.

11-ம் இடம்: செல்வம், அச்சமின்மை, குறைவான எண்ணிக் கையில் குழந்தைச்செல்வம், நீண்ட ஆயுள், வாகன வசதிகள் உடையவர்.

12-ம் இடம்: பிறரால் வெறுக்கப் படுபவர். தீயச் சொல்லும், சுடு சொல்லும் பேசுபவராகவும், சோம்பல் மிகுந்தவராகவும் திகழ்வர்.

கோசாரத்தில் குரு சாதகமற்ற நிலைகளில் இருப்பதால் ஏற்படும் தோஷ பலன்களைக் களைவதற்கு, கீழ்க்காணும் துதியைப் படித்து, வழிபட்டு பலன் பெறலாம்.

தேவ மந்திரி விசாலாக்ஷ
சட லோக ஹிதே சதா
அநேக சிஷ்ய சம்பூர்ண
பீடாம் ஹரது மே குரு

கருத்து: அகன்ற விழிகளை உடையவரும், தேவர்களுக்கு அமைச்சர் போன்றவரும், எப்போதும் உலக நன்மையையே கருத்தில் கொள்பவரும், ஏராளமான சீடர்களைக் கொண்டவருமாகிய குருவை, எனது துன்பங்கள் நீங்க வணங்குகிறேன்.