மற்ற எபிசோடுகள்
Published:Updated:

குருபெயர்ச்சி பலன்கள்!

ஜோதிட  ரத்னா  கே.பி.வித்யாதரன்

குருபெயர்ச்சி பலன்கள்!

13.6.2014 ஜய வருடம் வைகாசி மாதம் 30-ம் தேதி வெள்ளிக்கிழமை கிருஷ்ணபட்சத்து பிரதமை திதி, கீழ்நோக்குள்ள மூலம் நட்சத்திரம், சுபம் நாமயோகம், கௌலவம் நாமகரணம், நேத்திரம், ஜீவனம் நிறைந்த அமிர்தயோகத்தில் பஞ்ச பட்சியில் கோழி பலவீனமாக உள்ள நேரத்தில் உத்ராயணப் புண்ணிய காலம் வசந்த ருதுவில் குருபகவான் மிதுன ராசியிலிருந்து கடக ராசிக்கு மாலை மணி 6.04-க்கு பெயர்ச்சி ஆகிறார். 13.6.2014 முதல் 4.7.2015 வரை இங்கு அமர்ந்து தன் அதிகாரத்தை செலுத்துவார். பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும் குறிஞ்சி மலர் போல் பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தன் உச்ச வீட்டில் குரு அமர்கிறார்.

குருபெயர்ச்சி பலன்கள்!

டந்த ஓராண்டு காலமாக உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டில் அமர்ந்துகொண்டு உங்களை பலவிதங்களிலும் முடக்கிப் போட்ட குருபகவான், 13.6.2014 முதல் 4.7.2015 வரை உங்கள் ராசிக்கு 4-ம் இடத்தில் அமர்கிறார். உங்கள் பிரபல யோகாதிபதியான குரு 4-ம் வீட்டில் உச்சம் பெற்று அமர்வதால், கடந்த ஓராண்டை விட இனி நல்லது நடக்கும். தயக்கம், தடுமாற்றங்கள் நீங்கும். தாழ்வுமனப்பான்மை விலகும். பிள்ளைகளின் உயர்கல்வி, திருமண விஷயத்தில் அலைச்சல் அதிகமாக இருக்கும். குரு உங்கள் ராசிக்கு 8-ம் இடத்தைப் பார்ப்பதால், வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். குரு உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டைப் பார்ப்பதால், வேலைக்கு விண்ணப்பித்திருந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். குரு 12-ம் வீட்டைப் பார்ப்பதால், புகழ்பெற்ற புண்ணிய தலங்களுக்குச் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகமாகும்.  

இந்த குரு மாற்றம் உங்களுக்கு வேலைச்சுமையையும், பணப்பற்றாக்குறையையும் தந்தாலும், ஓரளவு எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றுவதாக அமையும்.

பரிகாரம்: ஸ்ரீமுருகப் பெருமானை சஷ்டி திதி நடைபெறும் நாளில் வணங்குங்கள்.

குருபெயர்ச்சி பலன்கள்!

துவரை உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டில் அமர்ந்து ஓரளவு செல்வ செழிப்பை தந்த குருபகவான், 13.6.2014 முதல் 4.7.2015 வரை ராசிக்கு 3-ம் வீட்டில் மறைகிறார். உங்கள் ராசிக்கு அஷ்டம - லாபாதிபதியாக வரும் குரு, உங்களுடைய அஷ்டம ஸ்தானத்துக்கு எட்டாவது வீட்டில் மறைவதால், உங்களுக்கு கெடுபலன்கள் குறையும். '3-ம் இடத்து குரு முடக்கிவிடுமே’ என்றெல்லாம் கவலைப்பட வேண்டாம். உங்களுடைய ராசிக்கு யோகாதிபதிகளான புதன், சனி ஆகியோரின் நட்சத்திரங்களில் குரு செல்வதால், குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டு. தொடர்ந்து பணம் வரும். குருபகவான் மாங்கல்ய ஸ்தானமான 7-ம் வீட்டைப் பார்ப்பதால், திருமணம் தாமதமானவர்களுக்கு நல்ல விதத்தில் முடியும். 3-ம் இடத்தில் அமரும் இந்த குருவால் திட்டமிடாத விஷயங்களில் அலைச்சல் ஏற்படும். குரு 7-ம் வீட்டைப் பார்ப்பதால், வாழ்க்கைத் துணைவர் உங்களின் பெருந்தன்மையைப் புரிந்துகொள்வார். குரு 9-ம் வீட்டைப் பார்ப்பதால், சேமிக்கத் தொடங்குவீர்கள். குரு, லாப வீட்டைப் பார்ப்பதால், மூத்த சகோதர வகையில் உதவிகள் உண்டு. வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் வருவார்கள். பங்குதாரர்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில், செல்வாக்கு கூடும்.  

இந்த குரு மாற்றம் சின்னச் சின்ன அலைச்சல், செலவினங்களைத் தந்தாலும்... நீங்கள் தொடர்ந்து வெற்றிப் பாதையில் பயணிக்க உதவும்.

பரிகாரம்: ஏகாதசி திதி நடைபெறும் நாளில், பெருமாள் கோயிலுக்குச் சென்று துளசி மாலை அணிவித்து வணங்குங்கள்.

குருபெயர்ச்சி பலன்கள்!

கடந்த ஓராண்டு காலமாக உங்களுடைய ராசிக்குள்ளே அமர்ந்து உங்களை பலவித பிரச்னைகளால் கசக்கிப் பிழிந்தெடுத்த குருபகவான், 13.6.2014 முதல் 4.7.2015 வரை 2-ம் வீட்டில் நுழைக்கிறார். இனி சோர்வு நீங்கும். ஆரோக்கியம் சீராகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். கணவன் - மனைவிக்குள் நேசம் அதிகரிக்கும், வேலையில்லாமல் தவித்துக் கொண்டிருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும். குரு 6-ம் வீட்டைப் பார்ப்பதால், உறவினர்களின் எதிர்ப்பு விலகும். குரு 8-ம் வீட்டைப் பார்ப்பதால், அயல்நாடு செல்ல வாய்ப்பு கிட்டும். வெளிநாட்டில் வேலை கிடைக்கவும் யோகம் உண்டு. குரு 10-ம் வீட்டைப் பார்ப்பதால், சமூக அந்தஸ்து கூடும். குடும்பத்தில் உங்கள் ஆலோசனையை எல்லோரும் ஏற்றுக்கொள்வார்கள். உடன்பிறந்தவர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் வரவு உயரும். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்யோகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு எல்லாம் இனி தடையில்லாமல் வந்து சேரும்.

இந்த குரு மாற்றம், உங்களைப் பிரபலப்படுத்துவதாகவும், வசதி, வாய்ப்புகளைத் தருவதாகவும் அமையும்.

பரிகாரம்: ஸ்ரீசரபேஸ்வரரை சனிக்கிழமையன்று வணங்குங்கள்.

குருபெயர்ச்சி பலன்கள்!

துவரை உங்கள் ராசிக்கு விரய ஸ்தானத்தில் அமர்ந்து பலவிதங்களிலும் நஷ்டங்களையும், பிரச்னைகளையும், நிம்மதியற்றப் போக்கையும் ஏற்படுத்திய குருபகவான், 13.6.2014 முதல் 4.7.2015 வரை உங்கள் ராசிக்குள் நுழைகிறார். ஜென்ம குரு என்பதால் நீங்கள் இனி ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும். உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடு அவசியம். உங்களின் பிரபல யோகாதிபதியான குருபகவான், உங்கள் ராசிக்குள் உச்சம் பெற்று அமர்வதால், கெடுபலன்கள் குறையும். குரு உங்களுடைய ராசிக்கு 5-ம் வீட்டைப் பார்ப்பதால் பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். பூர்விக சொத்து கைக்கு வரும். குரு 7-ம் வீட்டைப் பார்ப்பதால்... உத்யோகம், வியாபாரத்தின் பொருட்டு வாழ்க்கைத் துணைவருடன் சிறுசிறு பிரிவுகள் ஏற்படும். குரு 9-ம் வீட்டைப் பார்ப்பதால், பணப்புழக்கம் உண்டு. அதேசமயம், ஜென்ம குருவாக இருப்பதால், பணப்பற்றாக்குறையும் அவ்வப்போது ஏற்படும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் மதிப்பு கூடும். பதவி உயர்வு உண்டு.

இந்த குருமாற்றம் சற்றே மன நிம்மதியற்றப் போக்கையும், ஆரோக்கிய குறைவையும் தந்தாலும், ஓரளவு வளர்ச்சியையும் தருவதாக அமையும்.

பரிகாரம்: அருகிலுள்ள ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் குருபகவானையும், குலதெய்வத்தையும் வணங்குங்கள்.

குருபெயர்ச்சி பலன்கள்!

னதில் தோன்றுவதை மறைக்காமல் பேசுபவர்களே! கடந்த ஓராண்டு காலமாக உங்களுடைய ராசிக்கு லாப வீட்டில் அமர்ந்து பணவரவையும், செல்வாக்கையும், குடும்பத்தில் மகிழ்ச்சியையும், நிம்மதியையும் அள்ளிக் கொடுத்த குருபகவான், 13.6.2014 முதல் 4.7.2015 வரை ராசிக்கு 12-வது வீட்டில் நுழைக்கிறார். இதனால் பயணங்கள் அதிகமாகும். செலவினங்கள் கூடிக்கொண்டே போகும். திட்டமிட்ட காரியங்கள் தாமதமாக முடியும். குரு 4-ம் வீட்டைப் பார்ப்பதால், புது வாகனம் வாங்குவீர்கள். சிலர் புது வீடு கட்டி குடிபுகுவீர்கள். குரு 6-ம் வீட்டைப் பார்ப்பதால், உடல் உபாதை  குறையும். குரு 8-வது வீட்டைப் பார்ப்பதால், புகழ்பெற்ற புண்ணிய தலங்களுக்குச் சென்று வருவீர்கள். உயர்கல்வி, உத்யோகத்தின் பொருட்டு பிள்ளைகள் உங்களை விட்டுப் பிரிவார்கள். வியாபாரத்தில், வேலைச்சுமை அதிகமாகும். உத்யோகத்தில், மூத்த அதிகாரிகள் உங்களின் கடின உழைப்பைப் புரிந்துகொள்வார்கள்.

இந்த குரு மாற்றம் அவ்வப்போது செலவுகளையும், பயணங்களையும் தந்தாலும் மகிழ்ச்சியையும், மனநிறைவையும் தரக்கூடியதாக இருக்கும்.

பரிகாரம்: ஸ்ரீலக்ஷ்மி நரசிம்மரை நெய் விளக்கேற்றி வணங்குங்கள்.

குருபெயர்ச்சி பலன்கள்!

டந்த ஓராண்டு காலமாக உங்களுடைய ராசிக்கு 10-ம் வீட்டில் அமர்ந்து பலவிதங்களிலும் அவமானங்களையும், தோல்வியையும் கொடுத்த குருபகவான், 13.6.2014 முதல் 4.7.2015 வரை லாப வீட்டில் நுழைகிறார். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். குழந்தை இல்லாதவர்களுக்கு, பிள்ளை பாக்கியம் கிடைக்கும். நெடுநாள் ஆசையான வீடு கட்டும் முயற்சி பலிதமாகும். புது வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல பதில் வரும். சிலருக்கு அயல்நாட்டில் வேலை கிடைக்கவும் வாய்ப்பிருக்கிறது. குரு உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டைப் பார்ப்பதால், புது டிசைனில் நகை வாங்குவீர்கள். குரு 5-ம் வீட்டைப் பார்ப்பதால், பூர்விக சொத்துப் பிரச்னை தீரும். குரு 7-ம் வீட்டைப் பார்ப்பதால், அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். உங்களின் கற்பனைத் திறன், கலைத்திறனை வெளிப்படுத்தவும் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர் எண்ணிக்கை அதிகமாகும். உத்யோகத்தில் அவஸ்தைகள், அவமானங்கள் எல்லாம் நீங்கி... பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும்.

இந்த குரு மாற்றம், உங்களை வெளிச்சத்துக்கு கொண்டு வருவதுடன், சமூக அந்தஸ்தையும் தருவதாக அமையும்.

பரிகாரம்: வில்வ இலையுடன் பிரதோஷ பூஜையில் கலந்துகொள்ளுங்கள்.

குருபெயர்ச்சி பலன்கள்!

டந்த ஓராண்டு காலமாக உங்களுடைய ராசிக்கு 9-ம் இடத்தில் அமர்ந்து ஏழரைச் சனியால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் கொஞ்சம் கட்டுப்படுத்தி, ஓரளவு பணவரவையும் தந்துகொண்டிருந்த குருபகவான், 13.6.2014 முதல் 4.7.2015 வரை உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டுக்குள் நுழைக்கிறார். '10-ம் இடம் பதவியைக் கெடுக்குமே, அந்தஸ்தைக் குறைக்குமே’ என்று பெரிதாக கவலைப்பட வேண்டாம். குரு உச்சமாகி நிற்பதாலும், உங்களின் யோகாதிபதிகளின் நட்சத்திரங்களில் செல்லவிருப்பதாலும் ஓரளவு நல்ல பலன்கள் உண்டாகும். 10-ல் குரு அமர்வதால், வேலைச்சுமை, அலைச்சல் அதிகமாகும். குருவின் பார்வை உங்களுடைய ராசிக்கு 2-ம் வீட்டின் மீது விழுவதால், வருமானம் உயரும். ஆனால், தவிர்க்க முடியாத செலவுகளால் பணப்பற்றாக்குறை இருக்கும் குரு 4-ம் வீட்டைப் பார்ப்பதால், தாயாரின் உடல் நிலை சீராகும். குரு 6-ம் வீட்டைப் பார்ப்பதால் பழைய கடனை பைசல் செய்ய வழி பிறக்கும். வியாபாரத்தில் பெரிதாக முதலீடு செய்ய வேண்டாம். உத்யோகத்தில் அவமானங்களும், விரும்பத்தகாத இடமாற்றமும் ஏற்படலாம்.

சகிப்புத்தன்மையுடனும், நாவடக்கத்துடனும் செயல்பட்டால், இந்த குரு மாற்றம் ஓரளவு நன்மையைத் தருவதாக அமையும்.

பரிகாரம்: அருகிலுள்ள அம்மன் ஆலயத்துக்குச் சென்று குங்குமார்ச்சனை செய்து வழிபடுங்கள்.

குருபெயர்ச்சி பலன்கள்!

டந்த ஓராண்டு காலமாக உங்கள் ராசிக்கு 8-ல் அமர்ந்து, பணத்தட்டுப்பாட்டையும், பிள்ளைகளால் பிரச்னைகளையும், குடும்பத்தில் நிம்மதியற்றப் போக்கையும் உருவாக்கிய குருபகவான், 13.6.2014 முதல் 4.7.2015 வரை 9-ம் வீட்டில் நுழைகிறார். உங்களின் தன - பூர்வ புண்யாதிபதியான குருபகவான் 9-ம் வீட்டுக்குள் நுழைவதால், உங்கள் வாழ்க்கையில் பல யோகங்கள் அடுத்தடுத்து நடக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். வருமானம், வசதி, வாய்ப்புகள் அதிகரிக்கும். குரு உங்கள் ராசியைப் பார்ப்பதால், அழகு, ஆரோக்கியம் கூடும். மகளின் திருமணத்தை கோலாகலமாக நடத்துவீர்கள். குரு 3-ம் வீட்டைப் பார்ப்பதால், புது டிசைனில் நகை வாங்குவீர்கள். சகோதர பாசம் அதிகரிக்கும். குரு 5-ம் வீட்டைப் பார்ப்பதால், நிம்மதியாக இருப்பீர்கள். வியாபாரத்தில் அதிரடி லாபம் உண்டு. உத்யோகத்தில் அதிகாரிகள் உதவுவார்கள். சிலருக்கு அதிக சம்பளத்துடன் புது வேலை கிடைக்கும்.

இந்த குரு மாற்றம் பலவித பிரச்னைகளால் சிரமப்பட்ட உங்களின் வாழ்வில் வசந்தத்தை உண்டாக்கும்.

பரிகாரம்: ஸ்ரீஆஞ்சநேயரை வெற்றிலை மாலை அணிவித்து வணங்குங்கள்.

குருபெயர்ச்சி பலன்கள்!

ங்களுடைய ராசிக்கு 7-ம் வீட்டில் அமர்ந்து ஓரளவு நிம்மதியைத் தந்த குருபகவான், இப்போது 13.6.2014 முதல் 4.7.2015 வரை 8-ம் வீட்டுக்குள் நுழைகிறார். '8-ல் குரு வந்தால் எல்லாம் தட்டிப் போகுமே, தாமதமாகுமே’ என்று கவலைப்பட வேண்டாம். குரு 8-ல் அமர்ந்தாலும், முக்கியமான வீடுகளைப் பார்ப்பதால், உங்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும். அயல்நாட்டு வேலைக்கு  முயற்சிப்பவர்களுக்கு நல்ல செய்தி வரும். செலவுகள், தவிர்க்க முடியாத பயணங்கள் அதிகரிக்கும். ஆனாலும், அவற்றையெல்லாம் சமாளிக்கும் சக்தியும் கிடைக்கும். குரு 8-ல் மறைவதால், தங்க ஆபரணங்களை இரவல் தரவோ, வாங்கவோ வேண்டாம். குரு 2-ம் வீட்டைப் பார்ப்பதால், பணப்புழக்கம் அதிகரிக்கும். குரு 4-ம் வீட்டைப் பார்ப்பதால், புது வீட்டில் குடிபுகு வீர்கள். குரு 12-ம் வீட்டைப் பார்ப்பதால், புண்ணிய தலங்களுக்கு சென்று வருவீர்கள். வியாபாரத்தில். விளம்பரம், தள்ளுபடி விற்பனை மூலமாகவும் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் அதிக நேரம் உழைக்க வேண்டி வரும்.

இந்த குருமாற்றம் வேலைச்சுமையையும், பதற்றத்தையும் தந்தாலும், கூடவே வெற்றியையும், உற்சாகத்தையும் அள்ளித் தருவதாக அமையும்.

பரிகாரம்: அருகிலுள்ள சிவாலயத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீதட்சணாமூர்த்தியை வணங்குங்கள்.

குருபெயர்ச்சி பலன்கள்!

டந்த ஓராண்டு காலமாக உங்களுடைய ராசிக்கு 6-ம் வீட்டில் அமர்ந்து உங்களை பலவிதங்களிலும் பாடாய்ப்படுத்தி, அடிமட்டத்துக்கு தள்ளிய குருபகவான், 13.6.2014 முதல் 4.7.2015 வரை 7-ம் வீட்டுக்குள் வந்தமர்கிறார். உச்சம் பெற்று அமர்ந்து உங்களுடைய ராசியைப் பார்க்க இருப்பதால், கவலை ரேகைகள் ஓடிக்கொண்டிருந்த உங்கள் முகத்தில் இனி மகிழ்ச்சி ரேகைகள் மலரத் தொடங்கும். அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். வருமானம் உயரும். வசதிகள் கூடும். வீடு, மனை வாங்குவீர்கள். வாகனத்தை மாற்றுவீர்கள். மருந்து, மாத்திரை என்றிருந்தது நீங்கி... ஆரோக்கியம், அழகு கூடும். குரு 3-ம் வீட்டைப் பார்ப்ப தால், சுயமாக சில முடிவுகள் எடுப்பீர்கள். வாழ்க்கைத் துணைவர் உங்களுடைய புதிய திட்டங்களை ஆதரிப்பார். குரு லாப வீட்டைப் பார்ப்பதால், மூத்த சகோதர வகையில் ஆதாயம் உண்டு. வியா பாரத்தில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும்.

பிரச்னைகளால் அவதிப்பட்ட உங்களுக்கு, இந்த குரு மாற்றம் தொட்டதெல்லாம் துலங்க வைப்பதுடன், பணவரவையும் தருவதாக அமையும்.  

பரிகாரம்: ஸ்ரீநடராஜப் பெருமானை வணங்குங்கள்.

குருபெயர்ச்சி பலன்கள்!

இதுவரை உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் அமர்ந்து ஓரளவு நிம்மதியையும், மகிழ்ச்சியையும் கொடுத்த குருபகவான், 13.6.2014 முதல் 4.7.2015 வரை 6-ம் வீட்டில் சென்று மறைவதால், நீங்கள் ஆரோக்யத்தில் அக்கறை காட்டுவது அவசியம். முடிந்தவரை மற்றவர்கள் விவகாரத்தில் தலையிடாமல் இருக்கப் பாருங்கள். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். வாழ்க்கைத் துணைவருடன் கருத்து மோதல் வரும். குரு 12-ம் வீட்டைப் பார்ப்பதால்... வீடு, மனை வாங்குவது, வீடு கட்டுவதற்கு வங்கிக் கடன் உதவி கிடைக்கும். குரு 2-ம் வீட்டைப் பார்ப்பதால், ஓரளவு பணவரவு உண்டு. நீங்கள் எதிர்பார்க்கும் தேதியில் பணம் கிடைக்காவிட்டாலும் கடைசி நேரத்தில் கைக்கு வந்து சேரும். குரு 10-ம் வீட்டைப் பார்ப்பதால், சிலர் வேறு வேலைக்கு மாற வேண்டி வரும். வியாபாரத்தில் கடுமையான போட்டிகள் நிலவும். உத்யோகத்தில் உங்கள் உழைப்புக்கு வேறு சிலர் உரிமை கொண்டாடுவார்கள்.

இந்த குருமாற்றம் உங்கள் இமேஜை ஒருபடி குறைத்து, உடல் நலக் குறைவையும் தந்தாலும்... சகிப்புத்தன்மையாலும், சாதுர்யமான பேச்சாலும் ஓரளவு முன்னேற வைக்கும்.

பரிகாரம்: ஸ்ரீபிரத்யங்கரா தேவியை எலுமிச்சை பழ மாலை அணிவித்து வணங்குங்கள்.

குருபெயர்ச்சி பலன்கள்!

ங்கள் ராசிநாதனான குருபகவான், கடந்த ஓராண்டு காலமாக 4-ம் வீட்டில் அமர்ந்து உங்களை நாலாவிதத்திலும் கஷ்டப்படுத்தினார். இப்போது 13.6.2014 முதல் 4.7.2015 வரை உங்கள் ராசிநாதன் 5-ம் வீட்டில் உச்சம் பெற்று அமர்வதால், இனி விஸ்வரூபம் எடுப்பீர்கள். தொட்ட காரியங்கள் துலங்கும். தடைகளும், தடுமாற்றங்களும் நீங்கும். உங்கள் ரசனைக்கேற்ப புது வீடு அமையும். மகளின் திருமணம் சீரும், சிறப்புமாக நடக்கும். மகனுக்கு நல்ல வேலை கிடைக்கும். குரு உங்கள் ராசியைப் பார்ப்பதால், உடல் உபாதை விலகும். குரு 9-ம் வீட்டைப் பார்ப்பதால், உங்களிடம் பணம் வாங்கியவர்கள், அதை திருப்பித் தருவார்கள். லாப வீட்டை குரு பார்ப்பதால், சிலருக்கு ஷேர் மூலம் பணம் வரும். உறவினர்கள் உங்களை மதிப்பார்கள். வியாபாரத்தில் லாபம் கணிசமாக அதிகரிக்கும் உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்களுக்கு முன்னுரிமை தருவார்கள். எதிர்பார்த்த சலுகைகளும், பதவி உயர்வும் கிடைக்கும்.

இந்த குரு மாற்றம் எதிர்பாராத திடீர் யோகங்களையும், செல்வ செழிப்பையும், அந்தஸ்தையும் உங்களுக்கு வாரி வழங்கும்.

பரிகாரம்: ஸ்ரீவிநாயகப் பெருமானை அருகம்புல் மாலை அணிவித்து வணங்குங்கள்.