சூரியன் முதலான நவக்கிரகங்களோடு உபகிரகங்கள் குறித்தும் பல்வேறு தகவல்களை ஜோதிட நூல்கள் விவரிக்கின்றன. உபகிரகங்கள் ஒன்பது. அவை: குளிகன், எமகண்டகன், அர்த்தபிரஹரணன், காலன், தூமம், வியதிபாதன், இந்திர தனுசு, உபகேது மற்றும் பரிவேடன்.

தூமம் என்பது புகைபடலமாகவும், வியதிபாதன் - எரிகற்கள் மற்றும் எரிநட்சத்திரங்களாகவும், பரிவேடன் என்பது சூரியன் மற்றும் சந்திரனை சுற்றிக் காணப்படும் வளையமாகவும், இந்திர தனுசு என்பது வானவில்லாகவும், உபகேது என்பது கேதுவின் தோற்றத்துடனும் திகழும் எனும் குறிப்புகள் உண்டு.

உபகிரகங்களில் குளிகனின் சேர்க்கை அசுபத்தையும், எமகண்டனின் சேர்க்கை சுபத்தையும் நல்கும் என்பது பொதுவான கருத்து. அதேபோன்று, காலன் எனும் உபகிரகம் ராகுவைப் போன்று பலன் தரும். அர்த்தபிரஹரணன் நல்ல வீட்டில் நன்மையும், தீய வீடுகளில் இருக்கும்போது தீமையும் தரும் எனும் தகவலை ஜாதக பாரிஜாதம் விளக்குகிறது.

மேலும் லக்னம் முதலான வீடுகளில் பாவாதிபதிகள் தூமம் முதலிய உபகிரகங்களுடன் சேர அந்த பாவம் நாசம் அடையும் என்பது பராசர மகரிஷியின் கூற்று.

உபகிரகங்களில் தூமம் உஷ்ணத்தையும், தீ விபத்தையும், மனக் கவலையும் அளிப்பவன். வியதிபாதனால் நான்கு கால் பிராணிகள் மற்றும் கொம்புள்ள விலங்குகளால் ஆபத்து நேரும். இந்திரசாபனின் சேர்க்கையால் கல் மற்றும் ஆயுதத்தால் ஆபத்து நேரிடும். உபகேதுவின் சேர்க்கை வியாபாரத்தில் நஷ்டம் ஏற்படுத்தும்; இடியால் துன்பம் உண்டு. அதாவது, எந்த உபகிரகம் எந்த பாவத்தில் இணைந்து உள்ளதோ, அந்த பாவாதிபதியின் திசையில் மேற்கண்ட பலன்கள் ஏற்படும்.

இப்படி உபகோள்களின் அமைப்பும் பலனில் மாற்றங்களை உருவாக்கும் என்பது ஜோதிட விற்பன்னர்களின் கருத்து. மேலும், பிரச்ன ஜோதிடத்தில் மாந்தி அல்லது குளிகன், எமகண்டகன், அர்த்தபிரஹரணன், தூமகேது போன்ற உபகோள்களின் அமைப்பாலும், பார்வையாலும் பலவிதமான் சுப-அசுப பலன்கள் கூறப்படுகிறது. ஆக, இந்த உபகோள்கள் குறித்த விஷயஞானமும் அவசியம் ஆகும்.