Published:Updated:

ஐந்தாம் இடம்...

Vikatan Correspondent

ஜோதிட மாமணி. கிருஷ்ணதுளசி

ஐந்தாம் இடம்...

னிதப் பிறவி என்பது நம்முடைய பூர்வஜென்மத்தில் நாம் செய்திருக்கக்கூடிய கர்மவினைகளின் பயனாகத்தான் ஏற்படுகிறது. அப்படி ஏற்படக்கூடிய நம்முடைய இந்த வாழ்க்கை எப்படி அமைய உள்ளது என்பதைத் தெரிந்துகொள்ளவும், தோஷங்கள் ஏதும் இருந்தால் சாஸ்திரரீதியான பரிகாரங்களைச் செய்து நன்மை அடையவும் நமக்கு வழிகாட்டுவது, ஒருவரின் ஜனன ஜாதகத்தில் லக்னத்தில் இருந்து எண்ணிவரும் 5-ம் வீடான புத்திரஸ்தானம் என்று சொல்லப்படும் பூர்வபுண்ணிய ஸ்தானம்தான்.

ஒருவரின் ஜனன ஜாதகத்தில் பூர்வபுண்ணிய ஸ்தானத்தை நன்கு ஆராய்ந்து பார்த்தால், அவருடைய கடந்த பிறவி பற்றியும், அப்பிறவியில் அவர் செய்திருக்கக்கூடிய பாவபுண்ணியங்கள் பற்றியும் தெரிந்துகொள்ளலாம். அதுமட்டுமல்ல, அதன் விளைவாக  இந்தப் பிறவியில் அவருக்கு ஏற்படக்கூடிய சுக துக்கங்கள்; லாப நஷ்டங்கள்; ஜாதகத்தில் இருக்கக்கூடிய தோஷங்கள் போன்றவை பற்றியும் துல்லியமாகச் சொல்லமுடியும்.

ஐந்தாம் இடம்...

இந்த ஸ்தானத்தை பீஜஸ்புடம் போட்டுப்பார்ப்பதன் மூலம் ஓர் ஆண் ஆண்மைத்தன்மை உள்ளவரா என்பதையும், க்ஷேத்திரஸ்புடம் போட்டுப்பார்ப்பதன் மூலம் ஒரு பெண் பெண்மைத்தன்மை உள்ளவரா என்பதையும் சொல்லிவிடமுடியும். இந்த ஸ்தானத்தைக் கொண்டு ஒருவரின் பூர்வஜென்மம், மறுபிறவி, பிதுர்வகைச் சொத்துக்கள், பரம்பரைச் சிறப்பு, அனுபவிக்கும் சுகம், மனைவி, லாபம், தர்மகுணங்கள், ஜாதகருடைய முன்னோர்களில் யாருடைய பிரதியாக அவர் பிறந்திருக்கிறார் என்பதையும் துல்லியமாகச் சொல்லிவிடலாம்.

உடல் அமைப்பைப் பொறுத்தவரையில் வயிற்றின் மேல்பகுதி மற்றும் முதுகையும் குறிக்கும். பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் அமைந்திருக்கும் கிரகம், மேற்படி ஸ்தானத்தைப் பார்க்கும் கிரகம் ஆகியவற்றைப் பொறுத்தே ஒருவரின் வாழ்க்கை அமைகிறது.

பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் இருக்கக் கூடிய கிரகங்கள் மற்றும் அதனால் ஏற்படக் கூடிய பலாபலன்களைப் பற்றிப் பார்ப்போம்.

சூரியன்: இந்த இடத்தில் சூரியன் இருந்தால், பருத்த சரீரம் உள்ளவர்களாகவும், குறைவான புத்திர ப்ராப்தி பெற்றவர்களாகவும் இருப்பர். இயற்கை எழில் சூழ்ந்த பகுதிகளில் வசிப்பதில் விருப்பம்  கொண்டிருப்பர். இவரின் சிறுவயதில் தந்தைக்கு ஆபத்து ஏற்படக்கூடும். இதயம், வயிறு தொடர்பான நோய்களால் பாதிப்பு உண்டாகும். வாழ்க்கை ஏழ்மையானதாக இருந்தாலும், செல்வந்தர் களின் நட்பும், உதவிகளும் கிடைக்கும்.

சந்திரன்: 5-ம் இடத்தில் சந்திரன் இருப்பின் நல்ல கல்வி, பரம்பரைச் சொத்து, சுய சம்பாத்தியம், கலைகளை நேசிப்பதிலும் கற்பதிலும் ஆர்வம், அரசியலில் ஈடுபட்டு அமைச்சராகும் யோகம், உயர்பதவிகளைத் திறம்பட நிர்வகிக்கும் ஆற்றல் போன்ற பலன்கள் ஏற்படும். பெரும்பாலும் இவர்களுக்குப் பெண் குழந்தைகளே பிறக்கும் என்று கூறலாம்.

செவ்வாய்: புத்திர ப்ராப்தி இல்லை என்றே சொல்லலாம். அப்படியே இருந்தாலும் பிரச்னைகள் உண்டு. சிறிய விஷயங்களை முடிப்பதற்குக்கூட மிகுந்த பிரயத்தனம் செய்யவேண்டியதிருக்கும். பூர்வீகச் சொத்து கிடைப்பது கஷ்டம். ஜீவனவகையில் அடிக்கடி மாற்றங்கள் ஏற்படும். முன்கோபத்தால் தங்களுக்குத் தாங்களே ஆபத்தைத் தேடிக்கொள்வார்கள். குரு பார்வை அல்லது சேர்க்கை இருந்தால் கெடு பலன்கள் குறைந்து நற்பலன்கள் ஏற்படும்.

புதன்: அழகாக உடை உடுத்திக்கொள்வதில் ஆர்வம் இருக்கும். அரசியலில் பிரகாசிக்கக்கூடும். பெற்றோர், தாய்மாமன் உடல்நலன் பாதிக்கக்கூடும். விரைந்து முடிவெடுத்து உடனே செயல்படுத்தக்கூடிய வல்லமை பெற்றிருப்பர். புத்திர ப்ராப்தி இருக்காது. அப்படியே இருந்தாலும் உடல் வளர்ச்சி, மனவளர்ச்சி குறைபாடுள்ள குழந்தைகளே பிறக்கக்கூடும்.

ஐந்தாம் இடம்...

குரு: பூர்வ புண்ணியஸ்தானத்தில் குரு அமைந்திருப்பது மிகவும் சிறப்பானது. நல்ல பிள்ளைகளும், அவர்களால் பெயரும் புகழும் உண்டாகும். ஆன்மிகத்தில் நாட்டம் கொண்டிருப்பர். இதிகாச புராணங்களிலும் சாஸ்திரங்களிலும் நல்ல தேர்ச்சி பெற்றிருப்பர். அன்பும் நற்பண்புகளும் சேர்த்துப் பெற்றிருக்கும் இவர்கள் நீதிக்கும் நேர்மைக்கும் முக்கியத்துவம் கொடுத்து வாழ்வர். எப்படிப்பட்ட நெருக்கடி, ஆபத்து ஏற்பட்டாலும் தங்களுடைய புத்திக்கூர்மையினால் தற்காத்துக்கொள்வர்.

சுக்ரன்: நல்ல கல்வி அறிவைப் பெற்றிருக்கும் இவர்கள் சிறந்த ராஜதந்திரியாகத் திகழ்வர். பெண்களுடனும் பணம் படைத்தவர்களுடனும் பழகுவதில் நாட்டம் கொண்டிருப்பர். பிறருக்கு நல்ல ஆலோசனைகளை வழங்கி அவர்கள் நன்மை அடையச்செய்வர். பூர்வீகச் சொத்துக்களைப் பெற்றிருப்பதுடன் இவர்களுடைய தேவைக்கேற்ப பணம் கிடைத்துக்கொண்டே இருக்கும். சிறுவயதில் தாய்க்கு ஆகாது. இவர்களுக்கு பெண்குழந்தைகளிடம்தான் அன்பும் ஆதரவும் கிடைக்கும்.

சனி:- 5-ம் இடத்தில் சனி இருப்பதும் புத்திரதோஷத்தைக் குறிப்பதாகும். இதர கிரக நிலைகளைப் பொறுத்தே தத்தெடுக்கும் வாய்ப்பு ஏற்படும். ஸ்திரபுத்தி என்பது இவர்களுக்கு இல்லை என்றே சொல்லலாம். கலக வார்த்தைகளைப் பேசுவதில் நாட்டம் கொண்டிருப்பர். செய்தொழில் ஜீவன வகைகளிலும் இவர்களுக்குப் பிரச்னையே! தங்களுடைய தவறான செயல்களால் அரச தண்டனைக்கும் ஆளாகக்கூடும்.

ராகு: இந்த இடத்தில் ராகு இருப்பதுகூட புத்திரதோஷத்தையே குறிப்பதாகும். உரிய பரிகாரங்களைச் செய்வதன்மூலமே பெண்குழந்தை பிறக்கும். வாக்குசாதுர்யத்தால் எல்லாவற்றிலும் வெற்றி பெறுவர். அலுவலகத்தில் உயர் பதவியில் இருப்பவர்களுடன் சரிசமமாக அமர்ந்து பேசுவர். நெஞ்சழுத்தம் நிரம்பப் பெற்ற இவர்கள் அரசாங்கத்தை எதிர்த்துப் பேசி அதனால் கஷ்டநஷ்டங்களுக்கு ஆளாவர். பூர்வீகச் சொத்து இவர்களுக்குக் கிடைக்காது. அதற்கு ஜாதகரின் தந்தையே காரணம்.

கேது: இதுவும் ஒருவகையில் புத்திரதோஷத்தையே குறிப்பதாகும். ஆனால், நடுத்தர வயதுக்குப் பிறகு பெண்குழந்தை பிறக்கக்கூடும். மற்றவர்களை எளிதில் நம்பமாட்டார்கள். மனைவிக்கு சித்தப்பிரமை ஏற்பட வாய்ப்பு உண்டு. வேத சாஸ்திரங்களில் தேர்ச்சியும் ஆன்மிகத்தில் நாட்டமும் கொண்டிருப்பர். பூர்வீகச் சொத்துக்களால் பயன் இல்லை. சிலர் அரச தண்டனைக்கு ஆட்படவும் நேரும்.