ஜூலை 8 முதல் அரசால் ஆதாயம்... யாருக்கு? 'ஜோதிடரத்னா’ கே.பி.வித்யாதரன்
சூரியன் - 19-ம் தேதி வரை புனர்பூசம் நட்சத்திரத்திலும், 20-ம் தேதி முதல் பூசம் நட்சத்திரத்திலும்...
செவ்வாய் - சித்திரை நட்சத்திரத்திலும்...
புதன் - 16-ம் தேதி வரை திருவாதிரை நட்சத்திரத்திலும் 17-ம் தேதி முதல் புனர்பூசம் நட்சத்திரத்திலும்...
குருபகவான் - பூசம் நட்சத்திரத்திலும்...
சுக்ரன் - 19-ம் தேதி வரை மிருகசீரிடம் நட்சத்திரத்திலும், 20-ம் தேதி முதல் திருவாதிரை நட்சத்திரத்திலும்...
சனி - 18-ம் தேதி முதல் சுவாதி நட்சத்திரத்தில் (வக்ர நிவர்த்தி)
ராகு - சித்திரை நட்சத்திரத்திலும்...
கேது - ரேவதி நட்சத்திரத்திலும் பயணம் செய்கின்றனர்.
பரணி, திருவாதிரை, புனர்பூசம், ஆயில்யம், பூரம், திருவோணம், சதயம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு வாகன வசதியும், பணவரவும் உண்டாகும்.
கிருத்திகை, பூசம், சித்திரை, சுவாதி, அவிட்டம், ரேவதி ஆகிய நட்சத்திரங் களில் பிறந்தவர்களுக்கு ஆரோக்கிய குறைவும், பணப்பற்றாக்குறையும் வந்து நீங்கும்.




