Published:Updated:

ராசி பலன்கள்

நவக்கிரக ரத்னஜோதி சந்திரசேகரபாரதி

ராசி பலன்கள்

நவக்கிரக ரத்னஜோதி சந்திரசேகரபாரதி

Published:Updated:

துணிச்சல் மிக்க மேஷ ராசி அன்பர்களே!

ராசி பலன்கள்

உங்கள் ஜன்ம ராசிக்கு 5-ல் சுக்கிரனும், 6-ல் புதனும் ராகுவும் உலவுவது சிறப்பாகும். 4-ல் உலவும் குருவும், 5-ல் சஞ்சரிக்கும் சூரியனும்கூட ஓரளவு நலம் புரிவார்கள். ராசிநாதன் செவ்வாய் 8-ல் இருந்தாலும் குருவால் பார்க்கப்படுவதால், சங்கடங்கள் குறையும். குடும்ப நலம் சீராக இருந்துவரும். பெண்களால் அனுகூலம் உண்டாகும். அயல் நாட்டுத் தொடர்புடன் செய்யும் தொழில் விருத்தி அடையும். அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும். நெருங்கிய நண்பர்கள் உதவுவார்கள். 7-ல் சனி இருப்பதால், பிறரிடம் சுமுகமாகப் பழகிவருவது நல்லது. கணவன் மனைவியிடையே சிறுசிறு சச்சரவுகள் ஏற்பட்டு விலகும். ஆன்மிகவாதிகள் மதிப்பு உயரப் பெறுவார்கள். தரகர்களுக்கு வருமானம் அதிகமாகும். ரியல் எஸ்டேட் இனங்கள் ஓரளவு லாபம் தரும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அசுவினி, பரணி நட்சத்திரக் காரர்களுக்கு விசேஷமான நேரமிது.

அதிர்ஷ்டத் தேதிகள்: செப்டம்பர் 4, 5 (பிற்பகல்), 8, 10, 11, 12, 15.

திசைகள்: தென்கிழக்கு. கிழக்கு, வடக்கு, தென்மேற்கு.

எண்கள்: 1, 4, 5, 6.

பரிகாரம்: சனிப் பிரீதி செய்வது நல்லது. மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்யவும்.


அழகை ஆராதிக்கும் ரிஷப ராசி நேயர்களே!

ராசி பலன்கள்

உங்கள் ராசிநாதன் சுக்கிரன் 4-லும், சனி 6-லும், கேது 11-லும் உலவுவது சிறப்பாகும். புதிய சொத்துக்களும், பொருட்களும் சேரும்.உழைப்புக்கும் திறமைக்கும் உரிய பயன் கிடைத்துவரும். ஆன்மிகத்தில் நாட்டம் கூடும். நண்பர்கள் உதவி புரிவார்கள். வியாபாரிகள் தங்கள் திறமைக்குரிய பயனைப் பெற்று வருவார்கள். 3-ல் குரு உலவுவதால், பொருளாதாரம் சம்பந்தப்பட்ட இனங்களில் விழிப்பு தேவை. ஸ்பெகுலேஷன் துறையில் ஓரளவு லாபம் உண்டு. மக்களால் சிறுசிறு பிரச்னைகள் ஏற்படும். செவ்வாய் 7-ல் இருப்பதாலும் சுக்கிரன் பகைவீட்டில் சூரியனோடு உலவுவதாலும், கணவன் மனைவியிடையே சண்டை, சச்சரவுகள் ஏற்பட்டு 7-ம் இடத்தைக் குரு பார்ப்பதால்  விலகும். அலைச்சல் வீண் போகாது. அதற்கான பயன் கிடைக்கவே செய்யும். மாணவர்களது நிலை உயரும்.
ரோகிணி, மிருகசீரிட நட்சத்திரக்காரர்களுக்குச் சுப பலன்கள் உண்டாகும்.

அதிர்ஷ்டத் தேதிகள்: செப்டம்பர் 8, 10, 11, 12, 15.

திசைகள்: கிழக்கு, வடக்கு, மேற்கு, தென்கிழக்கு.

எண்கள்: 1, 5, 6, 7, 8.

பரிகாரம்: குருவுக்கும் ராகுவுக்கும் அர்ச்சனை செய்வது நல்லது.

நகைச்சுவையாகப் பேசும் மிதுன ராசி நேயர்களே!

ராசி பலன்கள்

உங்கள் ராசிக்கு 2-ல் குருவும், 3-ல் சூரியனும் சுக்கிரனும், 4-ல் புதனும், 6-ல் செவ்வாயும், 10-ல் கேதுவும் உலவுவதால் குடும்பத்தில் சுப காரியங்கள் நிகழும். விருந்து, உபசாரங்களில் கலந்துகொண்டு மனம் மகிழ்வீர்கள். செய்து வரும் தொழில் விருத்தி அடையும். முக்கியஸ்தர்களது சந்திப்பால் நலம் உண்டாகும். வியாபாரம் பெருகும். கணிதம், எழுத்து, பத்திரிகை, விஞ்ஞானம், மருத்துவம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் வளர்ச்சி காண்பார்கள். ஆன்மிக, அறநிலையப் பணியாளர்கள் புகழ் பெறுவார்கள்.  வழக்குகளில் வெற்றி கிட்டும். பேச்சாற்றல் வெளிப்படும். பொருளாதார நிலை உயரும். நண்பர்களும் உறவினர்களும் உங்களுக்கு உதவுவார்கள்.  கணவன் மனைவி உறவு நிலை திருப்தி தரும்.
மிருகசீரிடம், திருவாதிரை நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்டத் தேதிகள்: செப்டம்பர் 4, 5 (பிற்பகல்), 8, 10, 11, 12, 15.

திசைகள்: வடகிழக்கு, வடமேற்கு, தென்கிழக்கு, கிழக்கு, தெற்கு.

எண்கள்: 1, 3, 5, 6, 7, 9.

பரிகாரம்: சனி, ராகு ஆகியோருக்கு பிரீதி, பரிகாரங்கள் செய்வது நல்லது. துர்கையையும், ஆஞ்சநேயரையும் வழிபடவும்.

எதற்கும் உணர்ச்சிவசப்படும் கடக ராசி நேயர்களே!

ராசி பலன்கள்

உங்கள் ராசிக்கு 2-ல் சுக்கிரனும்  3-ல் ராகுவும் உலவுவது சிறப்பாகும். செவ்வாய் 5-ல் இருந்தாலும், தன் சொந்த வீட்டில் அமர்ந்து குருவின் பார்வையைப் பெறுவதால், நலம் புரிவார். பண வரவு அதிகமாகும் நேரமிது. குடும்பத்தில் சுப காரியங்கள் நிகழும். பேச்சில் இனிமையும் திறமையும் கலந்திருக்கும். புதியவர்களின் தொடர்பு நலம் தரும். மக்களால் அனுகூலம் ஏற்படும். கலைஞர்கள் ஓரளவு வளர்ச்சி காண்பார்கள். பெண்களால் ஆண்களுக்கு நலம் உண்டாகும். சனி 4-லும், கேது 9-லும் இருப்பதால், பெற்றோர் நலனில் கவனம் தேவை. புதன் 3-ல் இருப்பதால், வியாபாரிகள் பொறுப்புடன் செயல்பட்டால் நஷ்டத்துக்கு ஆளாகாமல் தப்பலாம். மாணவர்கள் படிப்பில் முழுக்கவனம் செலுத்தினால்தான் முன்னேற்றம் காணமுடியும். நண்பர்கள், உறவினர்களால் செலவுகள் ஏற்படும்.

பூச நட்சத்திரக்காரர்களுக்கு அனுகூலமான நேரமிது.

அதிர்ஷ்டத் தேதிகள்: செப்டம்பர் 4, 5 (பிற்பகல்), 10, 11, 12, 15.

திசைகள்: தென்கிழக்கு, தென்மேற்கு, தெற்கு.

எண்கள்: 4, 6, 9.

பரிகாரம்: சனிபகவானுக்கு நல்லெண்ணெய் தீபமேற்றி வழிபடவும். விஷ்ணு சஹஸ்ரநாமம் படிக்கவும் கேட்கவும் செய்யலாம்.

கொள்கைப் பிடிப்புள்ள சிம்ம ராசி நேயர்களே!

ராசி பலன்கள்

உங்கள் ராசிநாதன் சூரியன் ராசியிலேயே இருப்பது சிறப்பாகும். புதன், சுக்கிரன், சனி ஆகியோரது சஞ்சாரமும் அனுகூலமாக உள்ளது. செவ்வாய் 4-ல் தன் சொந்த வீட்டில் அமர்ந்து குருவின் பார்வையைப் பெறுவது சிறப்பாகும். உங்கள் மதிப்பும் அந்தஸ்தும் உயரும். புதிய சொத்துக்களும் பொருட்களும் சேரும். வியாபாரிகளுக்கு லாபம் கூடும். கலைஞர்களது நிலை உயரும். கணவன் மனைவி உறவு நிலை திருப்தி தரும்.  எழுத்தாளர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் வரவேற்பு கூடும். எதிரிகள் அடங்கிப் போவார்கள். ராகு, கேது, குரு ஆகியோரது சஞ்சாரம் சிறப்பாக இல்லாததால், கொடுக்கல்-வாங்கலில் கவனம் தேவை. புதியவர்களிடம் அதிகம் நெருக்கம் வேண்டாம்.மக்கள் நல முன்னேற்றத்துக்காகச் செலவு செய்யவேண்டிவரும்.
மகம், பூர நட்சத்திரக்காரர் களுக்குச் சுப பலன்கள் கூடும் நேரமிது.

அதிர்ஷ்டத் தேதிகள்: செப்டம்பர் 4, 5 (பிற்பகல்), 8, 12, 15

திசைகள்: கிழக்கு, தெற்கு, தென்கிழக்கு, மேற்கு, வடக்கு.

எண்கள்: 1, 5, 6, 8, 9.

பரிகாரம்: சர்ப்ப கிரகங்களையும், குருவையும் வழிபடவும்.

நடுநிலையாளராக விளங்கும் கன்னி ராசி நேயர்களே!

ராசி பலன்கள்

உங்கள் ராசிநாதன் புதன் ராசியிலேயே இருப்பது சிறப்பாகும். 3-ல் செவ்வாயும், 11-ல் குருவும், 12-ல் சுக்கிரனும் உலவுவதும் குறிப்பிடத்தக்கது. உடல் ஆரோக்கியம் சீராகும். மதிப்பும் அந்தஸ்தும் உயரும். எதிர்ப்புக்கள் விலகும். போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள். நிலம், மனை, வீடு, வாகனங்கள் சேரும். மக்களால் நலம் உண்டாகும். கணிதம், எழுத்து, பத்திரிகை போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் சுபிட்சம் காண்பார்கள். செல்வ நிலை உயரும். ஜன்ம ராசியில் ராகு இருப்பதால், அலைச்சல் அதிகமாகும். 2-ல் சனி இருப்பதால், பேச்சில் நிதானம் தேவை. 7-ல் கேது இருப்பதால், வாழ்க்கைத்துணை நலம் கவனிப்பின்பேரில் சீராகும். சூரியன் 12-ல் இருப்பதால், கண், கால் சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். தந்தையாலும், அரசாங்கத்தாராலும் செலவுகள் ஏற்படும்.
ஹஸ்தம், சித்திரை நட்சத்திரக் காரர்களுக்கு நற்பலன்கள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்டத் தேதிகள்: செப்டம்பர் 4, 5 (பிற்பகல்), 8, 10, 11, 15.

திசைகள்: வடகிழக்கு, தென்கிழக்கு, வடக்கு, தெற்கு.

எண்கள்: 3, 5, 6, 9.

பரிகாரம்: துர்கையையும், விநாயகரையும் வழிபடவும். சூரிய நமஸ்காரம் செய்வது நல்லது.

வசீகர சக்தியுள்ள துலா ராசி நேயர்களே!

ராசி பலன்கள்

உங்கள் ராசிக்கு 6-ல் கேதுவும் 11-ல் சூரியனும் சுக்கிரனும் உலவுவது சிறப்பாகும். செவ்வாய் 2-ல் இருந்தாலும் தன் சொந்த ராசியில் அமர்ந்து குருவின் பார்வையைப் பெறுவது நல்லது. இதனால் குடும்ப நலம் சிறக்கும். பணவரவு கூடும்.  மதிப்பு உயரும். அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும். முக்கியஸ்தர்கள், மேலதிகாரிகள் ஆகியோரது ஆதரவு கிட்டும். கலைஞர்களுக்கும் மாதர்களுக்கும் எதிர்ப்புகளுக் கிடையே ஓரிரு நன்மைகளும் உண்டாகும். ஜன்ம ராசியில் சனி உலவுவதால், அதிகம் உழைக்க வேண்டிவரும். 12-ல் புதனும் ராகுவும் இருப்பதால், பயணத்தின் போது விழிப்பு தேவை. வியாபாரிகள் அகலக்கால் வைக் கலாகாது. வாழ்க்கைத்துணை வரால் நலம் உண்டாகும். அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுடன் சுமுகமாகப் பழகுவது அவசிய மாகும்.
சித்திரை, சுவாதி நட்சத்திரக் காரர்களுக்கு நற்பலன்கள் கூடும் நேரமிது.

அதிர்ஷ்டத் தேதிகள்: செப்டம்பர் 4, 5 (பிற்பகல்), 8, 10, 11, 12.

திசைகள்: கிழக்கு, வடமேற்கு, தென்கிழக்கு.

எண்கள்: 1, 6, 7.

பரிகாரம்: விஷ்ணு துர்கையையும் திருமாலையும் வழிபடவும்.

ஆராய்ச்சிகளில் ஈடுபடும் விருச்சிக ராசி நேயர்களே!

ராசி பலன்கள்

உங்கள் ராசிநாதன் செவ்வாய் ராசியிலேயே உலவுவது சிறப்பாகும். ராசியையும் ராசிநாதன் செவ்வாயையும் 9-ல் உலவும் குரு பார்ப்பது குறிப்பிடத்தக்கது. 10-ல் சூரியனும், 11-ல் புதனும் ராகுவும் உலவுவதும் சிறப்பாகும். இதனால் உங்கள் மதிப்பும் அந்தஸ்தும் உயரும். உடல் ஆரோக்கியம் சீராகும். பொருளாதார நிலை உயரும். வியாபாரம், கணிதம், எழுத்து, பத்திரிகை, சிற்பம், ஓவியம், தரகு போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் ஆதாயம்் பெறுவார்கள். பயணத்தால் அனுகூலம் உண்டாகும். அயல்நாட்டுத் தொடர்பு பயன்படும். பிரச்னைகள் எளிதில் தீரும். 5-ல் கேதுவும், 12-ல் சனியும் இருப்பதால், மக்களாலும் வேலையாட்களாலும் தொல்லை கள் சூழும். குருபலத்தால் எதையும் சமாளிப்பீர்கள்.

அனுஷ நட்சத்திரக்காரர் களுக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகமாகும்.

அதிர்ஷ்டத் தேதிகள்: செப்டம்பர் 4, 5 (பிற்பகல்), 8, 10, 11, 12, 15.

திசைகள்: வடகிழக்கு, வடக்கு, கிழக்கு, தென்மேற்கு, தெற்கு.

எண்கள்: 1, 3, 4, 5, 9.

பரிகாரம்: பிள்ளையாரையும் ஆஞ்சநேயரையும் வழிபடவும்.

தர்ம குணம் நிறைந்த தனுசு ராசி நேயர்களே!

ராசி பலன்கள்

உங்கள் ராசிக்கு 9-ல் சுக்கிரனும், 10-ல் புதனும் ராகுவும், 11-ல் சனியும் உலவுவது சிறப்பாகும். சூரியன் 9-ல் இருந்தாலும் தன் சொந்த வீட்டில் இருப்பதால் நலம் புரிவார். தெய்வப்பணிகளிலும் தர்மப்பணிகளிலும் ஈடுபாடு கூடும். எழுத்தாளர்களும் பத்திரிகையாளர்களும் புரட்சிகர மான கருத்துக்களை வெளியிட்டுப் புகழ் பெறுவார்கள். அயல்நாட்டுத் தொடர்பு பயன்படும். தொழிலாளர் களுக்கும் விவசாயிகளுக்கும் ஆதாயம் கூடும்.  தந்தையால் அனுகூலம் உண்டாகும். 4-ல் கேதுவும், 8-ல் குருவும், 12-ல் செவ்வாயும் உலவுவதால், தாயாராலும் மக்களாலும் சிறுசிறு இடர்ப்பாடுகள் ஏற்படும். இயந்திரப்பணியாளர்கள், பொறுப்புடன் காரியமாற்றுவது நல்லது. கேதுவையும், செவ்வாயையும் குரு பார்ப்பதால், மோசமான நிலை என்று ஏதும் ஏற்படாதவாறு காக்கப்படுவீர்கள்.
மூலம், பூராட நட்சத்திரக்காரர் களுக்கு அனுகூலமான நேரமிது.

அதிர்ஷ்டத் தேதிகள்: செப்டம்பர் 4, 5 (பிற்பகல்), 8, 10, 11, 12, 15.

திசைகள்: தென்மேற்கு, மேற்கு, வடக்கு, கிழக்கு, தென்கிழக்கு.

எண்கள்: 1, 4, 5, 6, 8.

பரிகாரம்: கணபதியையும் தட்சிணாமூர்த்தியையும் முருகனையும் வழிபடவும்.

சமயோசிதமாக நடந்து கொள்ளும் மகர ராசி நேயர்களே!

ராசி பலன்கள்

உங்கள் ராசிக்கு 3-ல் கேதுவும், 7-ல் குருவும், 8-ல் சுக்கிரனும், 10-ல்  சனியும், 11-ல் செவ்வாயும் உலவுவதால், செல்வாக்கும் மதிப்பும் உயரும். மற்றவர்கள் உங்களைப் போற்றிப் புகழுவார்கள். நல்லவர்களின் நட்புறவும் அதனால் அனுகூலமும் உண்டாகும். பண வரவு கூடும். எதிர்பாராத  பொருள்வரவும் உண்டாகும். கலைத்துறை யினருக்கு அளவோடு நலம் உண்டாகும். உத்தியோகஸ்தர் களுக்கும் தொழிலாளர்களுக்கும் முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். இயந்திரப்பணிகள் லாபம் தரும். நிலம், மனை, வீடு, வாகனங்களின் சேர்க்கையோ, அவற்றால் ஆதாயமோ கிடைக்கும் உடன்பிறந்தவர்களாலும் மக்களாலும் அனுகூலம் உண்டாகும். 8-ல் சூரியனும், 9-ல் புதனும் ராகுவும் இருப்பதால், தந்தை நலனில் கவனம் தேவை.
திருவோண, அவிட்ட நட்சத்திரக்காரர்களுக்கு விசேஷமான நேரமிது.

அதிர்ஷ்டத் தேதிகள்: செப்டம்பர் 4, 5 (பிற்பகல்), 8, 10, 11, 12, 15.

திசைகள்: தெற்கு, வடகிழக்கு, மேற்கு, வடமேற்கு.

எண்கள்: 3, 5, 6, 7, 8, 9.

பரிகாரம்: ஆதித்தனை வழிபடவும்.

பொதுப்பணிகளில் ஈடுபடும் கும்ப ராசி நேயர்களே!

ராசி பலன்கள்

உங்கள் ராசிக்கு 8-ல் புதனும், 10-ல் செவ்வாயும் உலவுவது சிறப்பாகும். சனி 9-ல் இருந்தாலும் தன் உச்ச ராசியில் இருப்பதால், நலம் புரிவார்.  மாணவர்கள் வளர்ச்சி காண்பார்கள். ஆராய்ச்சியாளர்களுக்கு மதிப்பு உயரும். பொறியியல், சட்டம், காவல், ராணுவம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் சுபிட்சம் காண்பார்கள். சொத்துக் களால் ஆதாயம் கிடைத்து வரும். சமுதாய நலப்பணிகளில் ஈடுபாடு உண்டாகும். தர்ம குணம் வெளிப்படும். 2-ல் கேதுவும், 8-ல் ராகுவும், 6-ல் குருவும், 7-ல் சூரியனும் சுக்கிரனும் உலவு வதால், குடும்ப நலனில் கவனம் தேவை. மக்களாலும் வாழ்க்கைத் துணைவராலும் சிறுசிறு பிரச்னைகள் சூழும். பிறரிடம் சுமுகமாகப் பேசிப் பழகுவது நல்லது. வீண் விவகாரங்களில் தலையிட வேண்டாம். முன்பின் தெரியாதவர்களை நம்பி ஏமாற வேண்டாம்.
 அவிட்டம், சதய நட்சத்திரக் காரர்களுக்குச் சுபபலன்கள் கூடும் நேரமிது.

அதிர்ஷ்ட தேதிகள்: செப்டம்பர் 4, 5 (பிற்பகல்), 8, 10, 11, 12, 15.

திசைகள்: வடக்கு, தெற்கு.

எண்கள்: 5, 8, 9.

பரிகாரம்: சக்தி வழிபாடு செய்வது நல்லது. நாகரை வழிப டவும். வேத விற்பன்னர்களுக்கு உதவவும்.

சிந்தனையில் தெளிவு உள்ள மீன ராசி நேயர்களே!

ராசி பலன்கள்

உங்கள் ராசிக்கு 5-ல் குருவும் 6-ல் சூரியனும் உலவுவது சிறப்பாகும். செவ்வாய் 9-ல் தன் சொந்த வீட்டில் அமர்ந்து, குருவால் பார்க்கப்படுவதும் சிறப்பு. புத்திசாலித்தனம் பளிச்சிடும். பண நடமாட்டம் திருப்திதரும். உத்தி்யோகஸ்தர் களது நிலை உயரும். புனிதமான காரியங்களில் ஈடுபாடு கூடும் அரசுப்பணியாளர்களுக்குப் பதவியில் உயர்வு கிடைக்கும். ராகு, கேது, சனி ஆகியோரது நிலை சிறப்பாக இல்லாததால், சிறுசிறு இடர்ப்பாடுகள் ஏற்பட்டாலும், குருபலத்தால் சமாளித்துவிடுவீர்கள். தொழிலாளர்களுக்கும் விவசாயி களுக்கும் பிரச்னைகள் சூழும். சுக்கிரன் 6-லும், புதன், ராகு ஆகியோர் 7-லும் இருப்பதால், வாழ்க்கைத் துணை நலனில் கவனம் தேவை.
உத்திரட்டாதி நட்சத்திரக்காரர் களுக்கு அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் அதிகமாகும்.

அதிர்ஷ்டத் தேதிகள்: செப்டம்பர் 4, 5 (பிற்பகல்), 10, 11, 12, 15.

திசைகள்: வடகிழக்கு, கிழக்கு, தெற்கு.

எண்கள்: 1, 3, 9.

பரிகாரம்: நாகரை வழிபடுவதுடன் சனி பகவானுக்கு நல்லெண்ணெய் தீபமேற்றி வழிபடவும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism