Published:Updated:

சித்தத்தைத் தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்

காலக் கணிதத்தின் சூத்திரம் சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

சித்தத்தைத் தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்

காலக் கணிதத்தின் சூத்திரம் சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

Published:Updated:

பிறந்த வேளை (லக்னம்), நட்சத்திர பாதம் இணைந்த வேளை (சந்திரன்), கர்க்கடக ராசியில் இருக்கும்போது, சுக்ர த்ரிம்சாம்சகத் தில் தோன்றியவள் ஒழுக்கமற்றவளாக இருப்பாள் என்கிறது ஜோதிடம் (அஸாத்வீ). ஒழுக்கமுள்ளவள், கணவனின் சித்தனையை ஏற்று தன்னை உயர்த்திக்கொள்வாள். அவள் 'பதிவிரதை’ என்ற சிறப்பைப் பெற்றிருப்பாள். ஒழுக்கம் இழந்தவளோ, வழிதவறி பெருமையை இழப்பாள். 

சித்தத்தைத் தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்

கணவனோடு இணைந்து வாழ்ந்து இன்பம் காணுவது இலக்கு. ஒழுக்கம் அதை நிறைவு செய்யும். ஒழுக்கம் இல்லாதவளுக்கு அது கானல் நீர். ஒழுக்கமின்மை அவளை விலைமாதாக மாற்றிவிடும். இதைச் சுட்டிக்காட்ட, கணவனை மதிக்காதவள் 'அஸாத்வீ’ அதாவது ஒழுக்கத்தை இழந்தவள் என்று வரையறுத்தது ஜோதிடம். உடலுறவை பலபேருடன் பங்குபோடும் இயல்பு ஒழுக்கம் இன்மைக்கு எடுத்துக்காட்டு. அவளிடம் விலங்கினத்தின் இயல்பு தென்படுவதால், அதை குறையாகப் பார்க்கிறது ஜோதிடம். மனித இனத்தில் தோன்றியவள், இனத்தின் பெருமையை நிறைவு செய்து, தெய்வத்தன்மையை எட்டுவது இலக்காக இருக்கவேண்டும். பிறப்பின் பெருமையை இழந்து, விலங்கின இயல்புடன் தரம் தாழ்ந்து வாழ்வதை, சாஸ்திரம் இழிவாகப் பார்க்கும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பதிவிரதை தத்துவம்

அறத்துக்கே ஆதாரமானவளிடம் ஒழுக்கமின்மை தென்படுவது, அவளுக்கு மட்டுமல்ல சமுதாயத்துக்கே இழுக்கு. ஆகவே தான், பதிவிரதைகளைப் போற்றிப் புகழ்கிறது தர்மசாஸ்திரம். தனி மனிதனின் விருப்பு  வெறுப்பைச் செயல்படுத்துவதில் சுதந்திரம்  வேண்டும். ஆனால் அது சமுதாய சீர்கேட்டுக்கு வழிவகுப்பதை உணர்ந்த சாஸ்திரம், 'ஒருவனுக்கு ஒருத்தி’ என்ற தாரக மந்திரத்தை அறிமுகம் செய்தது.

விலைமாதுக்கு குழந்தைகள் இருக்காது. இருந்தாலும் அவர்களிடம் அவளுக்குப் பற்றுதல் இருக்காது. ஆண்டியும் அரசனும் அவளுக்கு ஒன்றுதான். கள்ளனும் கற்றவனும் ஒன்றுதான். இணைப்பிலும் எந்த இன்ப உணர்வும் அவளுக்கு இருக்காது. பிறரது இன்பத்துக்குத் தன்னை அர்ப்பணிக்கிறாள். உடம்பும் உள்ளமும் கெட்டு, அவள் சமுதாயத்துக்கு சுமையாக மாறுகிறாள். இவளைப் போன்றவர்களைக் காப்பாற்றவே 'பதிவிரதை’ தத்துவத்தை அழுத்தம்திருத்தமாக வலியுறுத்துகிறது சாஸ்திரம்.

சித்தத்தைத் தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்

மனைவி இருந்தும் தவறான உடலுறவில் இணைந்து, பிணியில் சிக்கி மருத்துவமனையை சரணடைபவர்களும் உண்டு. பெண்ணின் தவறு ஆணின் வழிதவறுதலுக்கு ஊக்கமளிக்கிறது. அவனது குடும்பம் சங்கடத்தைச் சந்திக்கிறது. ஒரு தவறு பல கோணங்களில் சமுதாயத்தை அலைக்கழிக்க முற்படுகிறது. காலப் போக்கில் திருத்த முடியாத அளவுக்கு சமுதாயம் சீரழிந்து விடும். இதை மனதில் கொண்டு, கசப்பான உணர்்வாக இருந்தாலும் கணவனுடன் பிரியாமல் வாழ்வதை சிறப்பாகச் சித்திரித்தது சாஸ்திரம். 'கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்’ என்ற சொல்வழக்கை கேலி செய்யும் சீர்திருத்தவாதிகளும் உண்டு. சமுதாயம் விவாஹ ரத்தை ஏற்றதும், 'சம உரிமை வென்றது. சமூக நீதி நிலைநாட்டப்பட்டது’ என்று குதூகலத்துடன் புகழ்ந்து பாடும் சீர்திருத்தவாதிகள், சமுதாயத்தின் நலனை மறந்தவர்கள் ஆவார்கள்.

சுக்ர த்ரிம்சாம்சகம்

விவாஹரத்தைச் சந்தித்தவர்களில், 'சுக்ர’ த்ரிம்சாம்சகதத்தில் பிறந்தவர்களும் அடங்குவர். இப்படி ஆராய்ந்து சொல்லும் அறிவுரைகளை அறவே ஒதுக்கிவிட்டு... 7ல் சுக்கிரன். அதனால் விவாஹரத்து; 12ல் சுக்கிரன் உள்ளதால், சயனசுகம் இல்லை; 6ல் சுக்கிரன் கள்ளக்காதல் உண்டு; 8ல் சுக்கிரன் என்பதால், சிற்றின்பம் எட்டாக்கனி ஆகிவிடும்; சுக்கிரனோடு இணைந்த

ராகு எனவே சோரம் போவாள்; லக்னத்தில் சுக்கிரன்

இருப்பதால் இன்பத்தில் திளைப்பாள்; 2ல் சுக்கிரன்

செல்வந்தர் ஆவாள்; 4ல் சுக்கிரன் மாமனை மணப்பாள்; 5ல் சுக்கிரன் பூர்வீகச் சொத்தில்

திளைப்பாள்; சுக்கிரன் செவ்வாய் இணைப்பு

இரண்டு கணவன்கள்; சுக்கிரனோடு பாபக் கிரகங்கள் இணைந்தால், மாறிமாறி பல

விவாஹரத்தைச் சந்தித்து, பல கணவன்மார்கள் இருப்பர்; 9ல் இருந்தால் திரைமறைவு தொடர்பு

உண்டு; 10ல் இருந்தால், உடன் வேலை செய்பவரோடு தொடர்பு இருக்கும்; என்று இப்படியெல்லாம் சான்றில்லாத தகவல்களைக் கூறி, விருப்பப்படி பலனை அளிக்கும் துணிவு ஜோதிடனிடம் இருக்கக்கூடாது. கூட இருந்து குடியைக் கெடுக்கும் அனுகூல சத்ருக்கள் ஜோதிடத்தில் இணையக்கூடாது. விவாஹரத்து சமுதாயத்தின் பரிசு; ஜோதிடத் தகவல் அல்ல.

ஜோதிடம், கணவனைப் பிரிந்து வாழும் மனைவியைச் சுட்டிக்காட்டும். திரும்பவும் சேர்ந்து வாழும் காலத்தையும் எடுத்துச் சொல்லும். பிரிந்த மனைவி மனத்தெளிவு பெற்று கணவனை ஏற்க இடமளிக்கும். விவாஹரத்து, உறவை வெட்டி விட்டு மாற்றுக் கணவனை ஏற்க ஊக்கம் அளிக்கிறது. உண்மையில் புதுக் கணவனிடம் அவளுக்கு இன்பம் இருக்காது. பழைய கணவனிடம் ஏற்பட்ட கசப்பு, போலி இன்பத்தைச் சுவைக்கவைக்கிறது. புதுக் கணவனிடம் பழைய கணவனின் இன்பத்தைக் காணமுடியாமல் போனால், மீண்டும் அவள் விவாஹரத்துக்கு முற்படுவது உண்டு. வீட்டையும் வாகனத்தையும் மாற்றுவதுபோல், விவாஹரத்து மூலம் கணவனை மாற்றுவது, அவளது வாழ்க்கையைச் சுரத்தில்லாமல் செய்துவிடும். இதை உணர்ந்த

ஜோதிடம் 'ஒருவனுக்கு ஒருத்தி’ என்பதை நிலைநாட்ட ஜாதகப் பொருத்தத்தை அறிமுகம் செய்தது.

சித்தத்தைத் தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்

பொருத்தங்கள்...

எல்லாவிதமான பொருத்தங்களும் அவர்களது மன இறுக்கத்துக்கு உரம் ஊட்டுவதாகவே அமைந்திருக்கும். இதை எல்லாம் ஆராயாமல் ரஜ்ஜு, வேதை போன்ற சான்றில்லாத தகவல்களை வைத்து பொருத்தம் பார்ப்பதில் ஜோதிடத்துக்கு உடன் பாடு இல்லை. பாட்டு, கவிதை, சிற்றின்பம், அழகு, பெண்மை, ஈர்ப்பு, செல்வச் செழிப்பு, மனைவி,

வாகனம், படுக்கை அறை, நுகர்பொருள்கள், ஆடை ஆபரணங்கள், அலங்காரம், நிதி, நாட்டியம், நறுமணப் பொருள்கள், பெருந்தன்மை, கலைகள், நகைச்சுவை, ரசமான உரையாடல், கணவனை விட்டுப் பிரிதல் கவிதை புனைவதில் திறமை  இவற்றை எல்லாம் சுக்ரனை வைத்து நிர்ணயம் செய்யும் ஜோதிடம். நாட்டியமும், நாடகமும், அலங்காரமும் பெண்மை யின் கலப்பில் மென்மை அடையும்.

இதில் கணவனைப் பிரிந்து வாழும் இயல்பை, த்ரிம்சாம்சகம் வரையறுக்கிறது. சிற்றின்பத்தின் ஈர்ப்பில், சூழலை மறந்து விலைமாதாக மாறும் தகவலை வெளியிடுகிறது, அவளது த்ரிம்சாம்சகம். பரிணாம வளர்ச்சியில் இயற்கையாகத் தோன்றும் சிற்றின்ப ஆர்வமானது அளவு கடந்து இருப்பதை த்ரிம்சாம்சகம் விளக்குகிறது.

அளவு கடந்த ஆர்வமானது சுவைக்க சுவைக்க தணியும்.  ஆனால், இங்கு சுவைத்தும் தணியாமல் தொடர்வதை சுட்டிக்காட்டும். இந்த நிலை, கடைசியில் இன்ப உணர்வை அழித்து, சுரத்தில்லாத தொடர்பை நடைமுறைப்படுத்தும் எண்ணத்தை ஏற்படுத்தி, அதையே இயல்பாக மாற்றிவிடும். பசிக்கும் உணவு உண்டு; ருசிக்கும் உணவு உண்டு. ஆனால் இங்கே பசியும் இல்லை; ருசியும் இல்லை. பழக்கத்துக்கு உணவு இருக்கும். மனம் தொடாத உடலுறவு தொடரும். இது அறியாமையின் அடையாளம் ஆனாலும், சுக்ர த்ரிம்சாம்சகம் அவளை யந்திரம்

போல் செயல்பட வைக்கும் என்று எடுத்துரைக்கிறது ஜோதிடம்.

சமுதாயத்தைப் பார்த்தாவது, இந்த நிலையில் இருந்து வெளிவர

வேண்டும் என்ற எண்ணம் உதிக்காது. மனிதன் தோன்றிய நாளில் இருந்தே இந்த இயல்புடைய மாந்தர்கள் இருந்து வருகிறார்கள். அதைக் கட்டுப்படுத்த ஜோதிடம் உதயமானது.

பண்டைய நடைமுறை...

பண்டைய நாட்களில் தாசிகள், வேசிகள் என்று அவர்களை

குறிப்பிடுவார்கள். அவர்கள் சமுதாயத்தில் இருந்து ஒதுங்கி வாழ்வார்கள். செல்வந்தர்களும் அரசர்களும் அவர்களை ஏற்றுக்கொண்டனர். இப்படியான தொடர்பை அவர்களுக்கான இழுக்காக சமுதாயம் பார்க்காது. இப்படியான பெண்களின் செயல்பாடு சமுதாயத்தில் ஊடுருவாமல் இருப்பதை நினைத்து அவர்களது சின்ன வீடாக ஏற்றுக்கொள்வர். அவர்களது வளர்ச்சியை அறவே ஒடுக்க இயலாது என்பதால், அரண் அமைத்துக் காப்பாற்ற முற்பட்டனர்.

வெளிநாட்டவரின் ஆட்சியிலும் சிவப்பு விளக்குப் பகுதி என்று ஏற்படுத்தி, அவர்களை சமுதாயத்தோடு இணையாமல் பாதுகாத்தார்கள். அவர்கள் போக்கில் விட்டு அவர்களுக்குப் பாதுகாப்பாகச் செயல்பட்டார்கள். தாசி அபரஞ்சி கதையில் கனவில் அவளோடு உடலுறவு வைத்த வனும் 1000 பொற்காசுகள் தர வேண்டும் என்று சட்டம் இருந்தது. அரசாங்கமும் அதற்குத் துணை போனது என்ற தகவல் உண்டு. ஒளிவு மறைவு இல்லாமல் வாழ்ந்த அவர்கள், சமுதாயத்தில் இருந்து ஒதுங்கி வாழ்ந்தனர். அதையும் அவர்களது விருப்பப்படி நடைமுறைப்படுத்தினார்கள். தாசிகளின் தொடர்பு, பல கெட்டவர்களையும் நல்லவர்களாக மாற்றி இருக்கிறது.

தாசியின் கதை!

சித்தத்தைத் தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்

பிக்ஷைக்கு வந்த பௌத்த இளைஞன் ஒருவனைப் பார்த்த தாசி, தொழிலைத் துறந்து அவனோடு உண்மையான இன்பத்தைச் சுவைத்து

வாழ ஆசைப்பட்டாள். பிக்ஷை ஏற்பவனோ பதற்றம் அடையாமல், ''நான் சில நாட்கள் கழித்து உனது விருப்பத்தை நிறைவேற்றுகிறேன்'' என்று அவளிடம் கூறிவிட்டு விடைபெற்றான். பல வருஷங்கள் கழித்து அவள் முன் தோன்றினான்.

ஆனால், அவளோ முதுமையில் பலமிழந்து காணப்பட்டாள். விருப்பம் மறைந்த வேளையில் அவள் தெளிவு பெற்றாள் என்ற கதை தாசியின் மனத்தெளிவைச் சுட்டிக் காட்டுகிறது. தாசிகள் என்றதும் 'வெறுக்கத்தக்கவர்கள்’ என்ற எண்ணம் அன்றைய நாளில் இருக்கவில்லை. இன்று, சூழல் முற்றிலும் மாறிவிட்டது. கசப்பான பல விபரீதங்களைச் சந்திக்க வேண்டியிருக்கிறது. ஆக, அவர்களையும் கட்டுப்படுத்தும் அளவுக்கு ஜோதிட சிந்தனைகள்

பயன்படவேண்டும். அந்த கோணத்தில் தாசிகளின் இயல்பை சுட்டிக்காட்டுகிறது ஜோதிடம்.

சுக்ரனின் செயல்பாடு...

இரட்டைப் படை ராசியில் முதல் ஐந்து பாகைகள் சுக்ரனின் த்ரிம்சாம்சகம் இருக்கும். ராசிநாதன் சந்திரன்; ஹோரா நாதனும் சந்திரனே. முதல் த்ரேக்காண நாதனும் சந்திரன்தான். தட்பக் கிரகங்களின் கூட்டு முயற்சியில், சுக்ரனின் த்ரிம்சாம்சகம் மாறுபட்ட இயல்பை அவளிடம் திணித்தது. சுக்ரன் சிற்றின்பத்தின் முறையை நடைமுறைப்படுத்துபவன். அவன், மனதுக்குக்காரகனான சந்திரனோடு (தட்பக் கிரகம்) இணைந்ததால் வலுப்பெற்று, தனது திறமையை மனதுக்கு ஊட்டி அதைத் தன் வசமாக்கி, சூழலை மறந்து வெட்கம் இல்லாமல் செயல்படும் இயல்பை நிலைநாட்டினான்.

பரிணாமத்துக்குக் காரணமான வெப்ப கிரகத்தின் தொடர்பு வலுவிழந்து இருப்பதால், அவளில் மாற்றம் தென்படாமல் தன்னையே இழக்கக் காரணமானது. மற்ற ராசிப் பிரிவுகள்... குறைந்த அளவில் வெப்ப கிரஹ சேர்க்கை இருந்தாலும் சுக்ரனின் வலுவால் அது செயலிழந்து விட்டது. சுக்ரன் பெண் கிரகம், சந்திரன் பெண். இரண்டும் நீர் மயமான கிரகங்கள். ராசியும் நீர் ராசி! தவறு என்று தோன்றினாலும் அதை விட்டு விலகாத எண்ணத்துக்குக் காரணம், நீரின் தன்மையான சோம்பல். அது அவளை தனது அதீனத்தில் இருக்கவைத்தது. நல்லதையும் கெட்டதையும் பாகுபடுத்தி அறியும் அறிவு இருந்தும், சுக்ரன் அதை முடக்கிவிட்டான்.

பெண் நினைத்தால் ஆக்கவும் முடியும், அழிக்கவும் முடியும் என்ற வழக்குச் சொல் சுக்ரனை வைத்து வந்தது. அன்றாட அலுவல்களிலும் ஆக்கமும் ஊக்கமும் அளிப்பதில் சுக்ரனின் பங்கு இருக்கும். அதே நேரம் அழிவைத் தேடி ஆட்கொண்டு, துயரத்தை ஏற்கவைப்பவனும் அவனே. மற்ற கிரகங்களின் சேர்க்கையின் தராதரத்தை ஒட்டி, அவனது செயல்பாடு மாறும். இங்கு, குறிப்பாக மனம் தளராமல் குறிப்பிட்ட விஷயத்தில் நிலைத்து நின்று, தன்னையும் சமுதாயத்தையும் அலைக்கழிக்கும் செயலான ஒழுக்கமின்மையை ஏற்றவளைச் சுட்டிக்காட்டுகிறது.

ஜோதிட சாஸ்திரத்தை உள்வாங்கி, அதன் சட்டதிட்டங்களை அறிந்து ஊடுருவி ஆராய்ந்து பலன் அளிக்கும் திறமையை ஜோதிடர்கள் பெற வேண்டும். அது, சமூக சேவையாக மாறி சமுதாயத்தைச் செழிப்பாக்கும்.

சிந்திப்போம்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism