Published:Updated:

ராசி பலன்கள்

ராசி பலன்கள்

'ஜோதிட ரத்னா’ கே.பி.வித்யாதரன்
ஆகஸ்ட் 31ம் தேதி முதல் செப்டம்பர் 13ம் தேதி வரை

ராசி பலன்கள்

மேஷம்: முற்போக்குவாதிகளே! சூரியனும், புதனும் சாதகமாக இருப்பதால், பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்கள் ரசனைக்கேற்ப வீடு, வாகனம் அமையும். 11-ம் தேதி முதல் சுக்கிரன் 6-ல் மறைவதால், உடல் உபாதை வரக்கூடும். 9-ம் தேதி வரை ராசிநாதன் செவ்வாய் 3-ல் நிற்பதால், தடைகள் நீங்கும். 10-ம் தேதி முதல் நீசமாவதால், சோர்வு வந்து விலகும். 3-ம் தேதி இரவு 10 மணி முதல் 5-ம் தேதி வரை சந்திராஷ்டமம் இருப்பதால், உணர்ச்சி வசப்படாமல் இருப்பது நல்லது. வியாபாரத்தில் லாபம் கணிசமாக உயரும். உத்யோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். இனிமை தரும் காலமிது.             

ராசி பலன்கள்

ரிஷபம்: ரசிப்புத் தன்மை அதிகம் கொண்டவர்களே! சூரியன் 4-ல் ஆட்சி பெற்று அமர்ந்திருப்பதால், உங்கள் செயலில் வேகம் கூடும். வீடு கட்டும் பணியைத் தொடருவீர்கள். 11-ம் தேதி முதல் சுக்கிரன் நீசமாவதால், வீண் டென்ஷன் வந்து நீங்கும். 10-ம் தேதி முதல் செவ்வாய் 3-ல் அமர்வதால், சகோதர வகையில் இருந்த மனவருத்தம் நீங்கும். 6, 7 ஆகிய தேதிகளில் சந்திராஷ்டமம் இருப்பதால், எதிலும் அவசரப்பட வேண்டாம். குரு 12-ல் மறைந்திருப்பதால், வேலைச்சுமை, கவலைகள் வந்து செல்லும். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். நினைத்ததை சாதிக்கும் நேரமிது.      

ராசி பலன்கள்

மிதுனம்: கலகலப்பானவர்களே! புதன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், கடனாக கொடுத்த பணம் கைக்கு வரும். பூர்விக சொத்தால் வருமானம் வரும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். நட்பு வட்டம் விரியும். அரசால் ஆதாயம் உண்டு. 11-ம் தேதி முதல் சுக்கிரன் சனியுடன் சேர்ந்து நீசமாவ தால், மன இறுக்கம், வீண் செலவு வந்து போகும். 8-ம் தேதி முதல் 10-ம் தேதி மாலை 3 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால், முக்கிய முடிவுகளைத் தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் புதுக் கிளைகள் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். கனவுகள் நனவாகும் காலமிது.

ராசி பலன்கள்

கடகம்: நன்றி மறவாதவர்களே! புதனும், சூரியனும் சாதகமாக இருப்பதால், உங்களின் மனோபலம் அதிகரிக்கும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். கணவர் உங்களுடன் கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பார். செவ்வாயும், குருவும் தொடர்ந்து பலவீனமாக இருப்பதால்... ஏமாற்றம்,          படபடப்பு வந்து நீங்கும். 10-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் வேலைச் சுமை அதிகரிக்கும். வியாபாரத்தில் பழைய பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். வேலையாட்களால் இழப்புகள் ஏற்படலாம். உத்யோகத்தில் இடமாற்றம் உண்டு. இங்கிதமான பேச்சால் வெற்றி பெறும் தருணமிது.      

ராசி பலன்கள்

சிம்மம்: தவறு செய்பவர்களைத் தயங்காமல் கண்டிப்பவர்களே! சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால், சவாலான விஷயங்களை சாமர்த்தியமாகப் பேசி முடிப்பீர்கள். முகப்பொலிவு கூடும். கணவர் நேசிப்பார். மகனுக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். அரசால் அனுகூலம் உண்டு. 10-ம் தேதி முதல் செவ்வாய் நீசமாகி 12-ல் மறைவதால்... செலவுகள், தூக்கமின்மை வந்து செல்லும். 13-ம் தேதி சந்திராஷ்டமம் தொடங்குவதால், கொஞ்சம் அலைச்சல் இருக்கும். வியாபாரத்தில் அதிரடி முன்னேற்றம் காண்பீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். பயணங்களால் பயனடையும் காலமிது.

ராசி பலன்கள்

கன்னி: விடாமுயற்சியால் முதலிடத்தைப் பிடிப்பவர்களே! ராசிநாதன் புதன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், புதிய யோசனைகள் பிறக்கும். பணப்பற்றாக்குறை அகலும். பூர்விக சொத்தை புதுபிப்பீர் கள். பிள்ளைகளின் திறமைகள் வெளிப்படும். நட்பு வட்டம் விரியும். விலகிப்போன உறவினர்களில் சிலர் வலிய வந்து பேசுவார்கள். யோகாதிபதி சுக்கிரன் வலுவிழந்திருப்பதால்... வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள் வந்து போகும். வியாபாரத்தில், வேலையாட்கள் அனுசரணையாக இருப்பார்கள். என்றாலும், உத்யோகத்தில் அதிருப்தி உண்டாகும். விட்டுக்கொடுத்து போக வேண்டிய வேளையிது.  

ராசி பலன்கள்

துலாம்: மனித நேயத்துடன் உதவுபவர்களே! லாப வீட்டில் முக்கிய கிரகங்கள் நிற்பதால் மதிப்பு, மரியாதை கூடும். திடீர் பணவரவு உண்டு. புது டிசைனில் நகை எடுப்பீர்கள். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். 10-ம் தேதி முதல் செவ்வாய் 10-ல் அமர்வதால், புது வேலை அமையும். சகோதரர் பாசமழை பொழிவார். ராகுவும், கேதுவும் சரியில்லாததால் வீண் விரயம், அலைச்சல் வந்து செல்லும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். உத்யோகத்தில் மேலதிகாரி மதிப்பார். அதிக சம்பளத்துடன் புது வாய்ப்புகள் தேடி வரும். வெற்றிக் கனியை சுவைக்கும் நேரமிது.

ராசி பலன்கள்

விருச்சிகம்:  தளராத தன்னம்பிக்கையாளர்களே! சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால், தடைகள் நீங்கும். ஓரளவு பணப்புழக்கம் அதிகரிக்கும். கணவரின் ஆரோக்கியம் சீராகும். விலை உயர்ந்த சமையலறை சாதனங்கள் வாங்குவீர்கள். 10-ம் தேதி முதல் ராசிநாதன் செவ்வாய் 9-ல் நுழைவதால்... அசதி, சோர்வு நீங்கி உற்சாகம் பிறக்கும். சகோதர வகையில் இருந்த மனவருத்தம் நீங்கும். குரு 6-ல் மறைந்திருப்பதால், கவலைகள் வந்து போகும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்கள் தேடி வரும். உத்யோகத்தில் அதிகாரிகளை கலந்தாலோசிக்காமல் முடிவெடுக்க வேண்டாம். விட்டதை பிடிக்கும் வேளையிது.

ராசி பலன்கள்

தனுசு: பிறர் நிழலில் வாழ விரும்பாதவர்களே! ராசிநாதன் குருபகவான் வலுவாக இருப்பதால், திட்டமிட்ட காரியங்கள் முடியும். பணவரவு அதிகரிக்கும். பிள்ளைகளால் அந்தஸ்து உயரும். குலதெய்வப் பிரார்த்தனைகள் நிறைவேறும். கணவர் வழி உறவினர்கள் உங்கள் வார்த்தைக்கு மதிப்பளிப்பார்கள். புது வீடு வாங்குவீர்கள். 10-ம் தேதி முதல் செவ்வாய் 8-ல் மறைவதால் முன்கோபம், வாகனப் பழுது வந்து நீங்கும். வியாபாரத்தில் கடையை அழகுபடுத்துவீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். உயரதிகாரி பாராட்டுவார். மாறுபட்ட அணுகுமுறையால் முன்னேறும் தருணமிது.

ராசி பலன்கள்

மகரம்: களங்கமில்லாத பேச்சுக்கு சொந்தக்காரர்களே! யோகாதிபதிகளான சுக்கிரனும், புதனும் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், குடும்பத்தில் அமைதி நிலவும். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். சிலர் வீடு மாற நேரிடலாம். பழையதாகிவிட்ட வீட்டு உபயோக சாதனங்களை மாற்றுவீர்கள். பள்ளி, கல்லூரி கால தோழிகளை சந்தித்து மகிழ்வீர்கள். குரு 4-ல் நீடிப்பதால், தாயாருக்கு உடல் உபாதை வந்து நீங்கும். வியாபாரத்தில் வழக்கமான லாபம் உண்டு. புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் தொல்லை தந்த மூத்த அதிகாரி இடம் மாறுவார். புதிய பாதையில் பயணிக்கும் நேரமிது.        

ராசி பலன்கள்

கும்பம்: யதார்த்தத்தை விரும்புபவர்களே! புதன் 7-ல் நுழைந்திருப்பதால், புதிய திட்டங்கள் உதயமாகும். வங்கிக் கடன் கிடைத்து வீடு கட்டத் தொடங்குவீர்கள். சூரியன் 7-ல் நிற்பதால், கணவர் உங்கள் மேல் கோபப்படலாம். ஆனாலும், அன்பு குறையாது. 11-ம் தேதி முதல் செவ்வாய் 6-ல் நுழைவதால் திடீர் யோகம் உண்டாகும். 31-ம் தேதி முதல் 1-ம் தேதி இரவு 8 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால், யோசித்து முடிவெடுங்கள். வியாபாரத்தில் சலுகை திட்டங்களை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் தேங்கிக் கிடக்கும் பணிகளை விரைந்து முடியுங்கள். அலட்சியப் போக்கை தவிர்க்க வேண்டிய காலமிது.

ராசி பலன்கள்

மீனம்: சமாதானத்தால் சாதிப்பவர்களே! கேது வலுவாக இருப்பதால், கடினமான வேலைகளையும் மாறுபட்ட அணுகுமுறையால் முடித்துக் காட்டுவீர்கள். புதன் 6-ல் மறைந்திருப்பதால், உறவினர்கள் விஷயத்தில் அத்துமீறி நுழைய வேண்டாம். 1-ம் தேதி இரவு 8 மணி முதல் 3-ம் தேதி இரவு 10 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால், முன்கோபத்தை தவிர்ப்பது நல்லது. 11-ம் தேதி முதல் சுக்கிரன் 7-ல் நுழைவதால்... சலிப்பு, சோர்வு நீங்கி சுறுசுறுப்பாவீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். உத்யோகத்தில் உங்கள் உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கும். புதிய மாற்றங்கள் வரும் வேளையிது.