Published:Updated:

ராசி பலன்கள்

ஜோதிடம்ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன் செப்டம்பர் 24-ம் தேதி முதல் அக்டோபர் 7-ம் தேதி வரை

ராசி பலன்கள்

ஜோதிடம்ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன் செப்டம்பர் 24-ம் தேதி முதல் அக்டோபர் 7-ம் தேதி வரை

Published:Updated:
ராசி பலன்கள்

நினைத்தது நடக்கும்!

மேஷம்: மனவலிமை மிக்கவர்களே! சூரியன் 6-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால், நினைத்த காரியங்கள் எளிதாக முடிவடையும். எதிர்ப்புகள் அடங்கும். பிள்ளைகளால் சமூகத்தில் அந்தஸ்து உயரும். செப்டம்பர் 26-ம் தேதி முதல் சுக்கிரன் 6-ல் மறைவதால், உடல் உபாதை வந்து நீங்கும். உறவினர், தோழிகளுடன் நெருடல்கள் ஏற்படும். ராகு வலுவாக 6-ம் வீட்டில் தொடர்வதால், உடன்பிறந்தவர்களால் உதவிகள் உண்டு. வியாபாரத்தில், புது ஏஜன்ஸி எடுப்பீர்கள். பழைய பாக்கிகளைப் போராடி வசூலிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் தவறுகளை சுட்டிக்காட்ட வேண்டாம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ராசி பலன்கள்

புதிய பாதை!

ரிஷபம்: செயல்திறன் அதிகம் உள்ளவர்களே! உங்களின் பூர்வபுண்யாதிபதி புதன், ராசிக்கு 5-ம் வீட்டில் உச்சம் பெற்று அமர்ந்திருப்பதால், புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். பூர்விக சொத்து கைக்கு வரும். என்றாலும், சூரியன் 5-ம் வீட்டில் நிற்பதால் மனஇறுக்கம், வீண் டென்ஷன் வந்து போகும். சனிபகவான் 6-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால், போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். வியாபாரத்தில் ரகசியங்கள் யார் மூலம் கசிகிறது என்பதை அறிந்து, நடவடிக்கை எடுப்பீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகளின் ஆதரவு உண்டு.

ராசி பலன்கள்

வாழ்க்கை வளமாகும்!

மிதுனம்: நல்லது செய்தே நலிந்தவர்களே! குருபகவான் 2-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால், வாழ்க்கையின் நெளிவு சுளிவுகளைக் கற்றுக்கொள்வீர்கள். புது வீடு கட்டி குடிபுகுவீர்கள். செவ்வாய் வலுவாக 6-ம் வீட்டில் நிற்பதால், அரசால் அனுகூலம் உண்டு. சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால், பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர், தோழிகளின் வருகையால் வீடு களைகட்டும். 5-ம் வீட்டில் சனி நீடிப்பதால், மற்றவர்களை நம்பி பெரிய முயற்சியில் ஈடுபட வேண்டாம். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் உங்களின் பரந்த மனதை மற்றவர்கள் புரிந்துகொள்வார்கள்.

ராசி பலன்கள்

தைரியம் பிறக்கும்!

கடகம்: சிந்தனைச் சிற்பிகளே! சூரியன் 3-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால், சவால்களில் வெற்றி பெறுவீர்கள்.  சிலருக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால், பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிந்து வளர்ப்பீர்கள். ராகு வலுவாக 3-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால், தைரியமாக முடிவுகள் எடுப்பீர்கள். குருவும், சனியும் உங்களுக்கு சாதகமாக இல்லாததால், வருங்காலம் குறித்த கவலைகள் வந்து நீங்கும். வியாபாரத்தில் பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். உத்யோகத்தில் உங்கள் சாதனைகளுக்கு வேறு சிலர் உரிமை கொண்டாடுவார்கள்.

ராசி பலன்கள்

இல்லறத்தில் இனிமை!

சிம்மம்: மனசாட்சிக்கு மதிப்பளிப்பவர்களே! உங்களின் யோகாதிபதியான செவ்வாய் ஆட்சிபெற்று 4-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால், உங்கள் நிர்வாகத் திறன் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணைவரின் ரசனைக்கேற்ப உங்களை மாற்றிக்கொள்வீர்கள். ராசிநாதன் சூரியன் 2-ல் நிற்பதால், உடல்நலக் கோளாறு வந்து போகும். குரு 12-ல் மறைந்திருப்பதால், வாக்குறுதிகளை நிறைவேற்ற போராட வேண்டி வரும். சுக்கிரன் சாதகமாக இருப்பதால், வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவீர்கள். வியாபாரத்தில் லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிக்க வேண்டி வரும்.

ராசி பலன்கள்

நீண்ட கால ஆசைகள் நிறைவேறும்!

கன்னி: கூடிவாழும் குணமுடையவர்களே! குருபகவான் லாப வீட்டிலேயே வலுவாக தொடர்வதால், உங்களின் நீண்ட கால ஆசைகள் நிறைவேறும். சூரியனும், ராகுவும் ராசிக்குள் நிற்பதால், திடீர் பயணங்களால் அலைச்சல், செலவுகள் உண்டு. செவ்வாய் 3-ம் வீட்டில் தொடர்வதால், வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். கேது 7-ல் தொடர்வதால், சிறுசிறு ஏமாற்றங்கள், வீண் பிரச்னைகள் வந்து போகும். ஏழரைச் சனி இருப்பதால், மற்றவர்கள் விஷயத்தில் தலையிட வேண்டாம். வியாபாரத்தில் கணிசமாக லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில், உயரதிகாரிகள் உங்களின் புதிய முயற்சிகளை ஆதரிப்பார்கள்.

ராசி பலன்கள்

பக்திப் பயணம் பரவசம் தரும்!

துலாம்: எளிமையை விரும்புபவர்களே! கேது வலுவாக 6-ம் வீட்டில் நீடிப்பதால், போராட்டங்களைக் கடந்து நீங்கள் சாதிப்பீர்கள். குடும்பத்தினருடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். செவ்வாய் 2-ல் அமர்ந்தாலும், ஆட்சிபெற்று நிற்பதால், வாழ்க்கைத் துணைவர் கோபப்பட்டாலும், அவரை பக்குவமாகப் பேசி வழிநடத்துவீர்கள். ராசிநாதன் சுக்கிரன் 12-ம் வீட்டில் மறைவதால், சுபச்செலவுகள் அதிகமாகும். வியாபாரத்தில் போட்டிகள் அதிகமாக இருக்கும். குரு 10-ல் இருப்பதால், உத்யோகத்தில் உங்களுக்கு மறைமுக அவமானங்களும், எதிர்ப்புகளும் வந்து போகும்.

ராசி பலன்கள்

ஆடை, ஆபரணம் சேரும்!

விருச்சிகம்: வெள்ளை உள்ளம் கொண்டவர்களே! உங்களுடைய ராசிநாதன் செவ்வாய் ராசிக்குள்ளேயே ஆட்சிபெற்று அமர்ந்திருப்பதால், கடினமாக காரியங்களையும் முடித்துக்காட்டுவீர்கள். சிலருக்கு அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலை அமையும். சுக்கிரன் சாதகமாக இருப்பதால், விலை உயர்ந்த ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். ஏழரைச் சனி நடப்பதால், தூக்கம் குறையும். வியாபாரத்தில் லாபம் இரட்டிப்பாகும். வி.ஐ.பி-க்களும் வாடிக்கையாளர்களாக அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்களை நம்பி சில முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள்.

ராசி பலன்கள்

கௌரவம் உயரும் வேளை!

தனுசு: நீதி, நெறி தவறாதவர்களே! சனி பகவான் லாப வீட்டில் உச்சம் பெற்று அமர்ந்திருப்பதால், உங்களுக்கு தன்னம்பிக்கை அதிகமாகும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். அயல் நாட்டில் இருப்பவர்களால் ஆதாயம் உண்டு. சூரியன் 10-ம் வீட்டில் இருப்பதால், வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதை கூடும். உங்கள் ராசிநாதன் குருபகவான் மறைந்து கிடப்பதால், இனம்தெரியாத கவலைகள் வந்து போகும். வியாபாரத்தில் கடையை உங்கள் ரசனைக்கேற்ப விரிவுபடுத்தி, அழகுபடுத்துவீர்கள். உத்யோகத்தில், அலுவலக ரகசியங்களைப் பற்றி பேசிக்கொண்டிருக்க வேண்டாம்.

ராசி பலன்கள்

காரிய வெற்றி!

மகரம்: எதிலும் உடனடி தீர்வை எதிர்பார்ப்பவர்களே! குருபகவான் உங்கள் ராசியைப் பார்த்துக்கொண்டிருப்பதால், நல்லவர்களின் நட்பால் முன்னேறுவீர்கள். தாமதமான விஷயங்கள் விரைந்து முடியும். வீட்டில் கூடுதலாக ஒரு தளம் அல்லது அறை அமைக்கும் முயற்சிகள் பலிதமாகும். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால், வீட்டு உபயோக சாதனங்களைப் புதிதாக  வாங்குவீர்கள். சூரியன் 9-ம் வீட்டில் நிற்பதால், சேமிப்புகள் கரையும். வியாபாரத்தில் புதிய சரக்குகளைக் கொள்முதல் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும்.

ராசி பலன்கள்

நல்ல செய்தி வரும்!

கும்பம்: கொடுத்து உதவும் குணமுடையவர்களே! செவ்வாய் 10-ம் வீட்டில் ஆட்சிபெற்று அமர்ந்திருப்பதால், சவாலான வேலைகளையும் கூட சர்வசாதாரணமாக செய்து முடிப்பீர்கள். புது வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு நல்ல பதில் வரும். பழைய மனையை விற்று புது வீடு வாங்குவீர்கள். சூரியனும், ராகுவும் 8-ல் மறைந்திருப்பதால்... உடல்நலக் கோளாறுகள், எதிலும் ஒரு சலிப்பு வந்து போகும். உறவினர்களுடன் ஈகோ பிரச்னை ஏற்படும். வியாபாரத்தில் லாபம் கணிசமாக உயரும். உத்யோகத்தில் உயரதிகாரிகளால் அலைக்கழிக்கப்பட்டாலும், சக ஊழியர்களால் மதிக்கப்படுவீர்கள்.

ராசி பலன்கள்

உற்சாகம் பெருக்கெடுக்கும் நேரம்!

மீனம்: சமாதானத்தை விரும்புபவர்களே! சுக்கிரன் செப்டம்பர் 26-ம் தேதி முதல் உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டில் அமர்ந்து உங்கள் ராசியைப் பார்க்கவிருப்பதால், சோர்வு நீங்கி சுறுசுறுப்பாவீர்கள். அழகு, ஆரோக்கியம் கூடும். சிலர் புது வண்டி வாங்குவீர்கள். சூரியன் 7-ம் வீட்டில் நிற்பதால், முன்கோபம், மனஇறுக்கம் வந்து செல்லும். உறவினர், தோழிகள் உங்களிடம் அதிக உரிமை எடுத்துக்கொள்வார்கள். அஷ்டமத்துச் சனி நடப்பதால் யாருக்கும் பணம் வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism