Published:Updated:

ராசிபலன்

அக்டோபர் 14 முதல் 27 வரை ஜோதிடரத்னா கே.பி.வித்யாதரன்

ராசிபலன்

அக்டோபர் 14 முதல் 27 வரை ஜோதிடரத்னா கே.பி.வித்யாதரன்

Published:Updated:
ராசிபலன்

ன்மானம், சுயமரியாதைக்கு அதிக முக்கியத்துவம் தருபவர்களே!

ராகு 6ல் வலுவாக அமர்ந்திருப்ப தால், திடீர் பணவரவு, உதவிகள் கிட்டும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் ராசிக்கு 6ம் வீட்டில் மறைந்துகொண்டு வீண் செலவுகளை யும், குடும்பத்தில் சச்சரவுகளையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கும் சுக்ரன் 20ம் தேதி முதல் ராசிக்கு 7ல் நுழைந்து உங்களைப் பார்க்க இருப்பதால், சோர்வு, சலிப்பு நீங்கி உற்சாகமடைவீர்கள். கணவன்மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். என்றாலும் ராசிக்கு 7ம் வீட்டிலேயே சனியும் தொடர்வதால், சிறுசிறு வாக்குவாதங்களும், அவ்வப் போது வீண் சந்தேகங்களும் வந்து நீங்கும். 18ம் தேதி முதல் சூரியனும் 7ல் அமர்வதால், உடல் உஷ்ணம், வேனல் கட்டி வரக்கூடும்.

ராசிநாதன் செவ்வாய் 9ம் வீட்டில் நிற்பதால், சகோதர வகையில் மகிழ்ச்சி தங்கும். கேது 12ல் நிற்பதால், நீண்ட நாட்களாகப் போகவேண்டுமென்று நினைத்திருந்த புண்ணிய ஸ்தலங் களுக்குச் சென்று வருவீர்கள்.  அரசியல்வாதிகள் தொகுதி மக்களுக்காக கூடுதல் நேரம் உழைக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். வியாபாரத்தில் ஏற்ற இறக்கங்கள் இருந்துகொண்டேயிருக்கும். எதிர் பார்த்த தொகை தாமதமாக வரும். உத்தியோகத்தில் சவால்களைச் சந்திக்கவேண்டி வரும். சகிப்புத் தன்மையால் முன்னேறும் நேரமிது.  

ராசிபலன்

தயத்தை எப்போதும் இளமையாக வைத்திருப்பவர்களே!

உங்களின் தனபூர்வ புண்ணியாதி பதியான புதன் 5ம் வீட்டில் உச்சம் பெற்று அமர்ந்திருப்பதால், பிள்ளைகளின் தனித்திறமைகளை இனம் கண்டறிந்து வளர்ப்பீர்கள். பூர்வீக சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும்.

20ம் தேதி முதல் உங்கள் ராசிநாதன் சுக்ரன் 6ம் வீட்டில் நுழைவதால், சளித் தொந்தரவு, கழுத்து வலி வந்து நீங்கும். வீண் சந்தேகம், ஈகோ பிரச்னையால் கணவன்மனைவிக்குள் பிரிவு ஏற்படக்கூடும். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. சனிபகவான் வலுவாக 6ம் வீட்டிலேயே அமர்ந்திருப்ப தால், மாறுபட்ட அணுகுமுறையால் பழைய பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பீர்கள்.

வெளிநாட்டு நிறுவனங்களில் சிலருக்கு வேலை கிடைக்கும். கேது வலுவாக லாப வீட்டில் நிற்பதால், பங்குச் சந்தை மூலமாக பணம் வரும். செவ்வாய் 8ல் நிற்பதால், வீண் அலைச்சல், படபடப்பு, வீண் பழி வந்து நீங்கும். 18ம் தேதி முதல் சூரியன் நீசமாகி 6ல் அமர்வதால், பெற்றோருடன் கருத்து வேறுபாடுகள் வந்து போகும்.

வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகள் உங்களைக் குறை கூறுவார்கள். சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்த காரியங்கள் முடிவடையும். நிதானத் துடன்  செயல்பட வேண்டிய காலமிது.

ராசிபலன்

தொடங்கிய வேலையை முடிக்கும் வரை தூங்காதவர்களே!

உங்களின் பூர்வ புண்ணியாதிபதி யான சுக்ரன் 20ம் தேதி முதல் 5ம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்வதால், புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். திடீர் பணவரவு, யோகம் உண்டாகும்.

வீடு வாங்குவது, கட்டுவது போன்ற முயற்சிகள் நல்ல விதத்தில் முடியும். 18ம் தேதி முதல் சூரியன் 5ம் வீட்டில் நுழைவதால், பிள்ளைகளை அவர்கள் போக்கிலேயே விட்டுப் பிடிப்பது நல்லது. அவர்களின் உத்தியோகம், திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் தாமதமாகி முடியும்.

ராசிநாதன் புதன் உச்சம் பெற்று அமர்ந்திருப்பதால், தாய்வழி உறவினர்களால் உதவிகள் உண்டு. வேலைக்கு விண்ணப்பித்து காத்திருந்த வர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். செவ்வாய் 7ல் நிற்பதால், மனைவியுடன் ஆரோக்கிய மான விவாதங்கள், அவருக்கு மருத்துவச் செலவுகள் வந்து நீங்கும்.

கன்னிப் பெண்களே! போலியாகப் பழகியவர்களிடமிருந்து ஒதுங்குவீர்கள். வியாபாரத்தில் சந்தை ரகசியங்களை தெரிந்துகொள்வீர்கள். புதிதாக முதலீடு செய்து வியாபாரத்தை விரிவு படுத்துவீர்கள். வேலையாட்கள், பங்குதாரர்கள் உங்களைப் புரிந்து கொள்வார்கள். உத்தியோகத்தில் உங்களின் கடின உழைப்பை உயரதிகாரிகள் பாராட்டுவார்கள். எதிர்பாராத திடீர் திருப்பங்கள் சூழும் தருணமிது.

ராசிபலன்

ணப்பற்றைவிடவும் நாட்டுப் பற்று, மொழிப் பற்று அதிகம் உள்ளவர்களே!

உங்களின் பூர்வ புண்ணியாதிபதி யான செவ்வாய் 6ம் வீட்டில் நிற்பதால், எதிர்த்தவர்கள் அடங்குவார்கள். தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். குடும்ப வருமானம் உயரும். புதிதாக வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். நிலம், வீடு வகையில் அனுகூலம் உண்டாகும்.

புதனும், சுக்ரனும் சாதகமான வீடுகளில் செல்வதால், வர வேண்டிய பணம் கைக்கு வரும். உறவினர், நண்பர்களின் வருகையால் வீடு களைகட்டும். ராசிக்கு 3ல் ராகு நீடிப்பதால், மனோபலம் அதிகரிக்கும்.

குலதெய்வக் கோயிலுக்குச் சென்று பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். சூரியன் சாதகமான வீடுகளில் செல்வதால், அரைகுறையாக நின்ற கட்டட வேலைகளை தொடங்குவீர்கள். அரசு வகையில் ஆதாயம் உண்டாகும். சனி 4ம் வீட்டில் தொடர்வதால், தாயாருக்கு முதுகு, மூட்டு வலி வந்து போகும். ஜென்ம குருவால், உங்களைப் பற்றிய வதந்திகள் அதிகமாகும்.

அரசியல்வாதிகளுக்கு கட்சியில் செல்வாக்கு கூடும். வியாபாரத்தில் கமிஷன், உணவு வகைகளால் ஆதாயமடைவீர்கள். வேலையாட்களை விட்டுப் பிடிப்பது நல்லது. உத்தியோகத் தில் சின்னச் சின்ன அலைக்கழிப்புகள் இருக்கும். கலைத் துறையினர் மூத்த கலைஞர்களின் நட்பால் முன்னேறுவர். கடின உழைப்பால்  இலக்கை எட்டும் வேளை இது.

ராசிபலன்

நெருக்கடி நேரத்திலும் தன்னம்பிக்கை தளராதவர்களே!

18ம் தேதி முதல் ராசிநாதன் சூரியன் 3ம் வீட்டில் நுழைவதால், எவ்வளவு பெரிய பிரச்னைகள், சிக்கல்கள், சூழ்ச்சிகள் இருந்தாலும் அவற்றையெல்லாம் முறியடித்து வெற்றி பெறுவீர்கள். நாடாளுபவர்களின் நட்பு கிடைக்கும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும்.

சுக்ரன் சாதகமான வீடுகளில் செல்வதால், எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். புதன் தனஸ்தானத்தில் உச்சம் பெற்று அமர்ந்திருப்பதால், உறவினர், நண்பர்கள் முக்கியத்துவம் தருவார்கள். செவ்வாய் 5ம் வீட்டில் நிற்பதால், பிள்ளைகள் எதிர்த்துப் பேசினாலும், அவர்களை அன்பால் அரவணைத்துப் போகவும். ராகு 2ம் வீட்டிலும், கேது 8லும் நீடிப்பதால், வாழ்க்கை மீது ஒருவித வெறுப்பு உணர்வும், எதிலும் நம்பிக்கை யின்மையும் ஏற்படக்கூடும். குரு12ல் மறைந்திருப்பதால், திடீர்ப் பயணங் களால் அலைச்சல் அதிகரிக்கும். எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக் குறை நீடிக்கும்.  வியாபாரத்தில் விளம்பர யுக்திகளைக் கையாண்டு லாபத்தைப் பெருக்குவீர்கள். புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவர். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். உயரதிகாரிகள் ஆதரித்தாலும் சக ஊழியர்களால் பிரச்னைகள் வெடிக்கும். கலைத்துறை யினர் மூத்த கலைஞர்களிடம் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வர். தொலைநோக்குச் சிந்தனையால் சாதிக்கும் நேரமிது.  

ராசிபலன்

குழுவாகச் செயல்படுவதை விரும்புபவர்களே!

18ம் தேதி முதல் சூரியன் உங்கள் ராசியை விட்டு விலகுவதால், உடல் ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும். அரசு சம்பந்தப்பட்ட காரியங்களில் இருந்து வந்த இழுபறி நிலை மாறும். அரசால் ஆதாயம் உண்டு. ஆனால் ராசிக்கு 2ம் வீட்டில் சூரியன் நீசமாகி அமர்வதால், காது, மூக்கு, பல் வலி வரக்கூடும். கண்களைப் பரிசோதனை செய்துகொள்வது நல்லது.

பாதச் சனி நடைபெறுவதால், சில காரியங்களை இரண்டு, மூன்று முறை முயன்று முடிக்க வேண்டி வரும். 20ம் தேதி முதல் உங்கள் தனபாக்கியாதி பதியான சுக்ரன் தனஸ்தானத்திலேயே ஆட்சி பெற்று அமர்வதால், மனதில் உற்சாகம் அதிகரிக்கும். கல்யாணப் பேச்சு வார்த்தை சுமுகமாக முடியும். ராசிநாதன் புதன் ராசியிலேயே உச்சம் பெற்று அமர்ந்திருப்பதால், பணம் வரும். செவ்வாய் 4ல் நிற்பதால், சகோதரர்கள் உதவிகரமாக இருப்பார் கள். கன்னிப் பெண்களுக்கு நல்ல வரன் அமையும்.

அரசியல்வாதிகளின் கோரிக்கையை மேலிடம் பரிசீலிக்கும். வியாபாரத்தில் சில்லரை வியாபாரத்திலிருந்து மொத்த வியாபாரத்துக்கு மாறுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் மட்டத்தில் செல்வாக்கு உயரும். சக ஊழியர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்து கொள்வர். கலைத் துறை யினருக்கு நல்ல வாய்ப்புக்கள் வரும். அனுபவ அறிவைப் பயன்படுத்தி முன்னேறும் காலம் இது.

ராசிபலன்

சோர்ந்து வரும் சொந்தபந்தங்களின் வேடந்தாங்கல்களே!

18ம் தேதி முதல் உங்கள் ராசிக்குள்ளேயே சூரியன் நீச்சமாகி நுழைவதால், ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்பாருங்கள். வேலைச் சுமை அதிகமாகும். அடிவயிற்றில் வலி, அலர்ஜி, இன்ஃபெக்‌ஷன், ரத்த அழுத்தம் வரக்கூடும். அரசு காரியங்கள் தாமதமாகும். என்றாலும், உங்கள் ராசிநாதன் சுக்ரன் 20ம் தேதி முதல் உங்கள் ராசிக்குள்ளேயே ஆட்சி பெற்று அமர்வதால், ஓரளவு மனநிம்மதி உண்டாகும்.

தள்ளிப் போன விஷயங்களை விரைந்து முடிப்பீர்கள். உங்களின் தனாதிபதி செவ்வாய் 3ம் வீட்டில் வலுவாக இருப்பதால், எதிர்பார்த்த வகையில் பணம் வரும். சொத்து வகையில் ஆதாயம் ஏற்படும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். சகோதர ஒற்றுமை பலப்படும். ஜென்மச் சனி தொடர்வதால், மறதி, மந்தம், தூக்கமின்மை, விரக்தி வந்து செல்லும்.

குரு 10ல் நீடிப்பதால், அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதி மொழியும் தர வேண்டாம். அரசியல் வாதிகள் தகுந்த ஆதாரமின்றி எதிர் கட்சிக்காரர்களை விமர்சிக்க வேண்டாம்.

கன்னிப் பெண்களின் விருப்பங் களை பெற்றோர் நிறைவேற்றுவார்கள். வியாபாரத்தில் ஓரளவுக்குத்தான் லாபம் வரும். போட்டிகள் அதிகமாகும். உத்தியோகத்தில் உங்கள் கடின உழைப்புக்கு வேறு சிலர் உரிமை கொண்டாடுவார்கள். சக ஊழியர்களுடன் விட்டுக் கொடுத்துப் போகவும். கலைத் துறையினருக்கு புதிய வாய்ப்புகள் தேடிவரும். தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்க வேண்டிய  வேளை இது.

ராசிபலன்

மாறுபட்ட சமுதாயப் பார்வை உள்ளவர்களே!

குருபகவான் 9ம் வீட்டில் நிற்பதால், உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். மழலை பாக்கியம் கிடைக்கும். தந்தைவழி உறவினர்களால் ஆதாயமடைவீர்கள்.

அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். சுக்ரன் 20ம் தேதி முதல் ராசிக்கு 12ம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்வதால், சுபச் செலவுகள் அதிகமா கும். ராகு வலுவாக இருப்பதால், உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும்.

ஏழரைச் சனி தொடர்வதால், செலவினங்கள் கூடிக்கொண்டே போகும். சில நேரங்களில் எதிர் காலத்தை நினைத்து சின்னச் சின்ன பயம் வரும். 18ம் தேதி முதல் சூரியன் ராசிக்கு 12ல் மறைவதால், அரசு காரியங்கள் சற்று தாமதமாகி முடியும். கேது 5ல் நிற்பதால், பிள்ளைகளிடம் உங்களின் பழங்கதை களைச் சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம். கன்னிப் பெண்களின் கல்யாணப் பேச்சு வார்த்தை நல்ல விதத்தில் முடியும்.

அரசியல்வாதிகள் கட்சியில் முக்கிய பொறுப்புக்குத் தேர்ந்தெடுக்கப்படுவர். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். வாடிக்கையாளர்களைக் கவர்ந்திழுக்க கடையை விரிவுபடுத்துவீர்கள், உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் அரவணைத்துப் போகும் மனப்பக்குவம் உண்டாகும். சக ஊழியர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். கலைத் துறையினரின் படைப்புகளுக்குப் பரிசு, பாராட்டு கிடைக்கும். தைரியமும், தன்னம்பிக்கை யும் கூடும் தருணம் இது.

ராசிபலன்

சுற்றியிருப்பவர்கள் சுகப்பட சுய தேவைகளை சுருக்கிக் கொள்பவர்களே!

18ம் தேதி முதல் சூரியன் லாப ஸ்தானத்தில் அமர்வதால், உங்களுடைய நிர்வாகத்திறன், ஆளுமைத்திறன் அதிகரிக்கும். மேல் மட்ட அரசியல்வாதிகள் உதவுவார்கள். பிதுர்வழிச் சொத்து கைக்கு வரும். பாகப்பிரிவினை சுமுகமாகும்.

அரசியலில் செல்வாக்கு கூடும். தந்தைவழியில் உதவிகள் உண்டு. புதன் 10ல் உச்சம் பெற்று நிற்பதால், முக்கிய பதவிக்குத் தேர்ந்தெடுக்கப் படுவீர்கள். கணவன்மனைவி இருவரும் மனம் விட்டுப் பேசி சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.  

20ம் தேதி முதல் சுக்ரனும் லாப வீட்டில் அமர்வதால், உங்களின் புகழ், கௌரவம் ஒரு படி உயரும். பணவரவு அதிகரிக்கும். ஆடை, ஆபரணம் சேரும். செவ்வாய் ராசிக்குள் நிற்பதால், பிள்ளைகளின் விருப்பு, வெறுப்பை அறிந்து அதற்கேற்ப அவர்களை நெறிப்படுத்துவீர்கள். சகோதர வகையில் அலைச்சலுடன் ஆதாயமும் உண்டாகும்.

சர்ப்ப கிரகங்களின் சஞ்சாரம் சாதகமாக இல்லாததால், தாயாரின் உடல் நிலை பாதிக்கும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும். வியாபாரத்தில் புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். வேலையாட்களிடம் கறாராக இருங்கள். வேற்றுமொழி பேசுபவர்களால் புது ஒப்பந்தங்கள் வரும். சிலர் சொந்தமாக கடை வாங்க முயற்சி செய்வீர்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடித்து வெற்றி பெறுவீர்கள். கலைத்துறையினரின் கடுமையான உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். உங்களுடைய எதிர் பார்ப்புகளில் சில நிறைவேறும் காலம் இது.  

ராசிபலன்

திலும் தலைமைப் பண்பை ஏற்கத் துடிப்பவர்களே!

கேது 3ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால், சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். சாதனையாளர்களின் நட்பு கிடைக்கும். எதிர்ப்புகள் அடங்கும்.

சுக்ரன் சாதகமான வீடுகளில் செல்வதால், மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனின் அலட்சியப் போக்கு மாறும். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். வெளியூரிலிருந்து மகிழ்ச்சிகரமான செய்தி வரும். தள்ளிப் போன திருமணம் கூடி வரும். உங்கள் ராசிக்கு 12ம் வீட்டில் செவ்வாய் நிற்பதால், சகோதர வகையில் செலவுகள் இருக்கும். வீடு, மனை வாங்குவது, விற்பதில் சிக்கல்கள் ஏற்படும். 18ம் தேதி முதல் சூரியன் 10ம் வீட்டில் நுழைவதால், தந்தை வழியில் நன்மை உண்டாகும். வெளிநாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலை கிடைக்கும். புதன் உச்சமாகி 9ல் நிற்பதால், நட்பு வட்டம் விரிவடையும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். 7ம் வீட்டில் குரு அமர்ந்திருப்பதால், உங்களுடைய அறிவாற்றலையும், திறமையையும் வெளிப்படுத்த நல்ல வாய்ப்புக்கள் வரும்.

கன்னிப் பெண்களின் எதிர் பார்ப்புகள் நிறைவேறும். வியாபாரத்தில் போட்டியாளர்கள் உங்களின் வேகத்தைக் கண்டு வியப்பார்கள். வாடிக்கையாளர்களிடம் நற்பெயரைச் சம்பாதிப்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உங்களுக்கு அனுசரணையாக நடந்துகொள்வார்கள். கலைத்துறையினருக்கு மூத்த கலைஞர்களின் ஆலோசனை கிடைக்கும். புதிய பாதையில் பயணிக்கும் நேரம் இது.

ராசிபலன்

முயன்றால் முடியாதது எதுவுமில்லை என்பதை நிரூபித்துக் காட்டுபவர்களே!

உங்கள் ராசிக்குச் சாதகமான வீடுகளில் சுக்ரன் செல்வதால், பிரச்னைகளிலிருந்து நூலிழையில் விடுபடுவீர்கள். எதிர்பார்த்த தொகை கிடைக்கும். வாகனத்தை சீர் செய்வீர்கள். ராசிநாதன் சனிபகவான் வலுவாக இருப்பதால், தாழ்வு மனப்பான்மை நீங்கும்.

செவ்வாய் லாப வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால், வேலைக்கு விண்ணப்பித்திருந்தவர்களுக்கு வேலை அமையும். புதன் சாதகமான நட்சத்திரங்களில் சென்று கொண்டிருப் பதால், பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். நண்பர்கள் உங்கள் தேவையறிந்து உதவுவார்கள். குரு 6ம் வீட்டில் தொடர் வதால், அவ்வப்போது மனக்குழப்பங்கள், தடுமாற்றங்கள் வந்து போகும்.

தோல்வி மனப்பான்மையால் மனஇறுக்கம் உண்டாகும். 18ம் தேதி முதல் சூரியன் 9ல் நுழைவதால், தந்தையாருடன் கருத்து மோதல்களும் பணப்பற்றாக்குறையும் ஏற்படும்.

கன்னிப் பெண்களுக்கு நல்லவர் களின் நட்பு கிடைக்கும். போட்டித் தேர்வுகளில் போராடி வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். உத்தியோக ஸ்தானாதிபதி செவ்வாய் வலுவாக இருப்பதால், உத்தியோகத்தில் வேலைச்சுமை குறையும். எதிர்பார்த்த சலுகைகளும் கிடைக்கும். உயரதிகாரி கள் பக்கபலமாக இருப்பார்கள். கலைத்துறையினரின் படைப்புத் திறன் வளரும். புதியவர்களின் நட்பால் உங்களுக்கு முன்னேற்றம் ஏற்படும் வேளை இது.

ராசிபலன்

ட்சியத்தை அடைவதிலேயே குறியாக இருப்பவர்களே!

உங்கள் ராசிநாதன் குருபகவான் 5ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால், குடும்பத்தின் அடிப்படை வசதிகளை உயர்த்துவீர்கள். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். மகளின் திருமணத்தைச் சிறப்பாக நடத்துவீர்கள். மகனுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.

உங்களின் தனபாக்கியாதிபதியான செவ்வாய் 10ம் வீட்டில் அமர்ந்திருப்ப தால், உடன்பிறந்தவர்கள் உங்கள் வளர்ச்சிக்கு சாதகமாக இருப்பார்கள். சொத்து வாங்க முன் பணம் தருவீர்கள். அஷ்டமத்துச் சனி நடைபெறுவதால், காரியத் தடை, முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழத்தல், வீண் விரயங்கள் ஏற்படும். புதன் சாதகமாக இருப்பதால், விலகிச் சென்ற உறவினர், நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். தாய்மாமன் வகையில் நன்மைகள் ஏற்படும். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடிவடையும். 18ம் தேதி முதல் சூரியன் 8ல் மறைவதால், அரசாங்க காரியங்கள் விரைந்து முடியும்.

அரசியல்வாதிகள் தங்களுடைய ராஜதந்திரத்தால் எதிரிகளை வீழ்த்துவர். கன்னிப் பெண்களின் புது முயற்சிகளை பெற்றோர் ஆதரிப்பார்கள். வியாபாரத் தில் நெளிவு, சுளிவுகளைக் கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் உங்கள் ஆலோசனைகளை ஏற்றுக் கொள்வார்கள். சக ஊழியர்கள் உங்களை மதிப்பார்கள். கலைத் துறையினரின் முடங்கிக் கிடந்த படைப்புகள் வெளியாகி புகழ் சேர்க்கும். நீங்கள் நினைத்தது நிறைவேறும் தருணம் இது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism