Published:Updated:

பிறந்த நாள் பலன்கள்

14.10.2014 முதல் 27.10.2014 வரை நவகிரக ரத்னஜோதி சந்திரசேகரபாரதி

பிறந்த நாள் பலன்கள்

14.10.2014 முதல் 27.10.2014 வரை நவகிரக ரத்னஜோதி சந்திரசேகரபாரதி

Published:Updated:

ண்ணற்ற வாசகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, இந்த இதழிலிருந்து பிறந்த நாள் பலன்கள் அளிக்கப்படுகின்றன. ஒருவர் தனது பிறந்த தேதியைக் கொண்டு இந்தப் பலன்களைப் படித்துப் பயன் பெறலாம். இதை, ஆஸ்ட்ரோ நியூமராலஜி என்பர்.  1 முதல் 31 தேதிகளும் 9 கிரகங்களின் ஆதிக்கத்தில் உள்ளன. 9 கிரகங்களுக்கும் தனித் தனி எண்கள் உண்டு. சூரியன் எண் 1க்கு உரியவர்; சந்திரனின் எண் 2; குரு பகவானின் எண் 3; ராகுவின் எண் 4; புதனின் எண் 5; சுக்கிரனின் எண் 6; கேதுவின் எண் 7; சனி பகவானின் எண் 8; செவ்வாயின் எண் 9.  

உதாரணத்துக்கு, 1, 10, 19 மற்றும் 28-ம் தேதிகளில் பிறந்தவர்கள் சூரியனின் ஆதிக்க எண்ணிலும் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் சந்திரனின் ஆதிக்க எண்ணிலும் பிறந்தவர்கள் ஆவர்.

பிறந்த தேதிகள்: 1, 10, 19, 28

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் எண்ணின் நாயகன் சூரியனுக்கு இப்போது பலம் குறைந்து உள்ளது. எதிலும் நிதானம் தேவை. உடல்நலனில் அக்கறை அவசியம். குறிப்பாக, கண் சம்பந்தமான உபாதை கள் ஏற்படும். வீண் அலைச்சலையும், வீண் வம்புகளையும் தவிர்க்கவும்.

பெற்றோருடன் சிறுசிறு கருத்து வேறுபாடுகள் உண்டாகும். பயணத்தின் போது பொருள் இழப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு். எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. இயந்திரப் பணியாளர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை நிலவி வரும். நிலங்களின் சேர்க்கையோ, அவற்றால் ஆதாயமோ கிடைக்கும். எதிரிகளை சமாளிப்பீர்கள். தியானம், யோகா ஆகியவற்றில் ஈடுபடுவது நல்லது. மன அமைதி பெறலாம்.

தேதி 1ல் பிறந்தவர்களுக்கு: கெட்டவர்களின் தொடர்பை விட்டு விலகுங்கள். எதிர்ப்புகள் அதிகரிக்கும். பக்குவமாகச் சமாளிக்கவும்.

10ல் பிறந்தவர்களுக்கு: தேக நலனில் கவனம் தேவை. வீண் செலவைத் தவிர்க்கவும்.

19ல் பிறந்தவர்களுக்கு: வெற்றிகள் குவியும். சொத்துக்கள் சேரும். மனத்துணிவு அதிகரிக்கும்.

28ல் பிறந்தவர்களுக்கு: மனக்குழப்பம் உண்டாகும். பதற்றம் வேண்டாமே. தலை சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். தந்தை நலனில் கவனம் தேவை.

அதிர்ஷ்ட தேதிகள்: அக்டோபர் 19, 20, 23, 26.

பிறந்த தேதிகள்: 2, 11, 20, 29

நல்ல எண்ணங்கள் உருவாகும். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். வெளிநாட்டுத் தொடர்புடன் செய்யும் வர்த்தகம் லாபம் தரும். இயந்திரப் பணியாளர்களுக்கு ஆதாயம் உண்டு. ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. மக்களால் ஓரிரு நன்மைகள் உண்டு.

கணவன் மனைவி உறவு நிலை சீராகும். 18ம் தேதி முதல், குடும்ப நலனில் கவனம் தேவை. சொத்துக் களால் ஆதாயம் உண்டு. புதிய ஆடை, அணிமணிகளின் சேர்க்கை நிகழும். வியாபாரம், கணிதம், எழுத்து, பத்திரிகை போன்ற துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு முன்னேற்றம் தடைப்படும். தாயாராலும், தாய் வழி உறவாலும் சிறு பிரச்னைகள் தலை தூக்கும். பக்குவமாகச் சமாளிக்கவும்.

2ல் பிறந்தவர்களுக்கு: தர்ம குணம் மேலோங்கும். பயணங்களால் அனுகூலம் உண்டு. மன உறுதி கூடும்.  

11ல் பிறந்தவர்களுக்கு: உடல்நலம் பாதிக்கும். அரசாங்கம் மூலம் பிரச்னை ஏற்படும். தந்தை நலனில் அக்கறை தேவை.

20ல் பிறந்தவர்களுக்கு: உழைப்பு அதிகமானாலும் பலன் முழுமையாகக் கிடைக்காது. செலவு அதிகரிக்கும்.  

29ல் பிறந்தவர்களுக்கு: எதிர்ப்புக்கள் குறையும். பிரச்னை களுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். தொழிலில் அபிவிருத்தி காணலாம்.

அதிர்ஷ்ட தேதிகள்: அக்டோபர் 16, 17, 20, 21, 25, 26, 27.

பிறந்த தேதிகள்: 3, 12, 21, 30

உங்கள் எண்ணின் நாயகன் குரு வலுத்திருக்கிறார். புத்திசாலித்தனம் பளிச்சிடும். தர்ம காரியங்களிலும் தெய்வ காரியங்களிலும் ஈடுபடுவீர்கள். தொலைதூரத் தொடர்பால் நலம் உண்டாகும். பிறரால் போற்றப்படுவீர்கள். பொறியியல் துறை லாபம் தரும். உடன்பிறந்தவர்கள் உதவிபுரிவார்கள்.

மாணவர்களின் நிலை உயரும். வெளிநாடு சென்று கல்வி பயில விரும்புபவர்களின் எண்ணம்

இப்போது கைகூடும். முன்னேற்றம் காண நீங்கள் போட்ட திட்டங்கள் இப்போது நிறைவேறும். 20ம் தேதி முதல், சொத்துக்களின் சேர்க்கையோ, அவற்றால் ஆதாயமோ கிடைக்கும். நல்ல நண்பர்கள் உங்களுக்கு ஆதர வாக இருப்பார்கள். நல்லவர் அல்லாத வர்களை இனம் கண்டு, அவர்களை ஒதுக்கிவைப்பது நல்லது.

3ல் பிறந்தவர்களுக்கு: மதிப்பு உயரும். பாராட்டுக்கள் குவியும். தர்ம சிந்தனை மேலோங்கும்.

12ல் பிறந்தவர்களுக்கு: சுகம் குறையும். அலைச்சல் அதிகமாகும். உடல் சோர்வு ஏற்படும்.

21ல் பிறந்தவர்களுக்கு: கடல் வாணிபம் லாபம் தரும். புதிய பொருட்களின் சேர்க்கை நிகழும்.

30ல் பிறந்தவர்களுக்கு: வெற்றிகள் குவியும். புத்திசாலித்தனம் கூடும். அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும்.

அதிர்ஷ்ட தேதிகள்:  அக்டோபர் 16, 21, 22, 23.

பிறந்த தேதிகள்: 4, 13, 22, 31

பொருள் திரட்டுவதில் ஆர்வம் கூடும் நேரமிது. செய்து வரும் தொழில் விருத்தி அடையும். உங்களின் அறிவாற்றலும் செயல்திறமையும் வெளிப்படும். பிறரால் போற்றப் படுவீர்கள். துணிச்சலான காரியங் களில் அதீத ஈடுபாடு உண்டாகும். பொருளாதார நிலை உயரும்.

பெரியவர்களும் தனவந்தர்களும் உங்களுக்கு உதவி செய்வார்கள். தெய்வ தரிசனமும் சாதுக்கள் தரிசன மும் உங்களுக்குக் கிடைக்கும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்னைகள் ஏற்படலாம். தந்தைக்கும் மகனுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும். அக்டோபர் 20ம் தேதி முதல், குடும்பத்தில் சுபகாரியங்கள் நிகழ வாய்ப்பு கூடிவரும்.

விருந்து, விழாக்களில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். புதிய பதவிகளும் கெளரவ பட்டங்களும் உங்களைத் தேடி வரும். கொடுக்கல் வாங்கல் முதலான விஷயங்களில் லாபம் உண்டு. கண், வாய், எலும்பு சம்பந்தமான உபாதைகள் சிலருக்கு ஏற்படும்.

4ல் பிறந்தவர்களுக்கு: புதிய கண்டுபிடிப்புக்களின் மூலம் உங் களுக்கு பேரும் புகழும் உண்டாகும். எதிர்பாராத வகையில், சிலருக்கு சொத்துக்கள் சேரும்.  

13ல் பிறந்தவர்களுக்கு: புதிய பதவிகளும் பட்டங்களும் கிடைக்கும். சிவ வழிபாட்டில் ஈடுபாடு உண்டாகும்.

22ல் பிறந்தவர்களுக்கு: உங்களின் பொருளாதார நிலை உயரும். சாதுரிய மான செயல்பாடுகளும் புத்திசாலித் தனமும் கூடும். சோர்வுகள் சலிப்புகள் நீங்கி, மன உற்சாகம் பெருகும்.

31ல் பிறந்தவர்களுக்கு: செய்து வரும் தொழிலில் அபிவிருத்தி காண வழிவகை பிறக்கும். உயர் பொறுப்புகள் உங்களைத் தேடி வரும்.

அதிர்ஷ்ட தேதிகள்:  அக்டோபர் 14, 19, 22, 23.

பிறந்த தேதிகள்: 5, 14, 23

உங்கள் எண்ணின் நாயகனுக்குப் பலம் கூடியிருப்பதால், உங்களின் சுய பலமும் அதிகமாகும். உடல்நலம் சீராக இருந்து வரும். சுற்றியிருப்பவர்கள் மத்தியிலும் வெளி வட்டாரத்திலும் மதிக்கப்படுவீர்கள். நீங்கள் செய்து வரும் தொழில், வியாபாரம் ஆகியன வளர்ச்சி பெறும்.

முக்கியமான எண்ணங்கள் யாவும் ஈடேறும். நல்லவர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். பண வரவு அதிகமாகும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் கூடிவரும். தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். எழுத்தாளர்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும், தரகர்களுக் கும் அனுகூலமான சூழ்நிலை நிலவி வரும்.

குடும்பத்தில் சிறுசிறு பிரச்னைகள் ஏற்படும் என்றாலும், மனம் கலங்காமல் சாதுரியமாக அவற்றைச் சமாளிப்பீர்கள். அக்டோபர் 20ம் தேதி முதல் பண நடமாட்டம் அதிகரிக்கும். உங்களின் தந்தையாலும், வாழ்க்கைத் துணைவர் மூலமும் ஓரிரு எண்ணங்கள் ஈடேற லாம். உஷ்ணாதிக்கத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. அதேபோன்று வீண் அலைச்சல்கள் பயணங்களையும்  தவிர்த்துவிடுங்கள்.

5ல் பிறந்தவர்களுக்கு: உங்களின் கற்பனை வளம் கூடும். பல வழிகளிலும் ஆதாயம் கிடைக்கும். வியாபாரம் சூடு பிடிக்கும்.  

14ல் பிறந்தவர்களுக்கு: குடும்பத் தில் அமைதி குறையும். அலைச்சல் கூடும். தேவையற்ற வீண் வம்புகளைத் தவிர்க்க பாருங்கள்.

23ல் பிறந்தவர்களுக்கு: மன உற்சாகம் பெருகும். அறிவாற்றல் பளிச்சிடும். தெய்வ காரியங்களில் ஈடுபாடு கூடும். நல்லவர்கள் உதவிக் கரம் நீட்டுவார்கள். மனம் மகிழும்படியாக நற்காரியங்கள் நிகழும்.

அதிர்ஷ்ட தேதிகள்:  அக்டோபர் 14, 15, 22, 23, 24.

பிறந்த தேதிகள்: 6, 15, 24

உங்கள் எண்ணின் நாயகன் சுக்கிரன் அக்டோபர் 20ம் தேதி முதல் பலம் பெறுகிறார். அதுவரை எந்த விஷயமானாலும் அதில் கூடுதல் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. உடல்நலனிலும் கவனம் செலுத்தவும்.

வீண் அலைச்சல்களை தவிர்த்து விடுங்கள். கலைத் துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு நல்ல நல்ல வாய்ப்புகள் கைகூடி வரும் காலம் இது. காரியங்களில் வெற்றி கிடைக்கும். மந்த நிலை விலகும். சுறுசுறுப்பு கூடும். எதிரிகள் காணாமல் போவார்கள். பொது நலப்பணிகளில் ஆர்வம் அதிகமாகும். ஆன்மிக, அறநிலையப் பணிகளில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு நற்பெயர் கிட்டும்.

தந்தை நலனுக்காக சிறிது செலவு செய்ய வேண்டிவரும். போக்குவரத்து துறைகளைச் சேர்ந்தவர்கள், பொறுப்புடன் செயல்பட வேண்டும். இல்லையெனில் வீண் பிரச்னைகள் எழலாம். வியாபாரிகளுக்கு முன்னேற்றம்  சற்று தடைபடும். மாணவர்கள் விளையாட்டிலும் மற்ற பொழுதுபோக்கு அம்சங்களிலும் பொழுதை கழிக்காமல், படிப்பில் முழுக்கவனம் செலுத்துவது அவசியம் ஆகும். சிலருக்கு கால் மூட்டு சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். உடல்நலனில் அலட்சியம் வேண்டாம்.  கூடுதல் அக்கறை தேவை.

6ல் பிறந்தவர்களுக்கு: வெற்றிகள் குவியும். மனத்துணிவு கூடும். சொத்துக்களும் புதிய பொருட்களும் சேரும்.  

15ல் பிறந்தவர்களுக்கு: உடல் நலனில் கவனம் தேவைப்படும். ஏமாற்றமும் விரயமும் ஏற்படும். வெறுப் பும் அவநம்பிக்கையும் உண்டாகும்.

24ல் பிறந்தவர்களுக்கு: தொழில் முன்னேற்றத்துக்காகச் செலவு செய்ய வேண்டிவரும். பயணத்தின்போது விழிப்புடன் இருக்கவும். இடமாற்றம் உண்டாகும்.

அதிர்ஷ்ட தேதிகள்:  அக்டோபர் 15, 16, 17, 24, 25

பிறந்த தேதிகள்: 7, 16, 25

தெய்வ அருள் கிடைக்கும் காலம் இது. நல்லவர்களும் உத்தமர்களும் உங்களுக்கு பெரும் பக்கபலமாக இருப்பார்கள். உங்களின் பொருளாதார நிலை உயரும். அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும்.

சிலருக்கு புதிய பதவி, பட்டங்கள் கிடைக்கும். மகப்பேறு பாக்கியம் உண்டாகும். இயந்திரங்கள், எரிபொருட்கள், மின்சாதனங்கள், கட்டடப் பொருட்கள் ஆகியவை மூலம் ஆதாயம் கிடைக்கும். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். சுப காரியங்கள் நிகழ வாய்ப்பு கூடிவரும்.

பெரியவர்கள் மற்றும் மகான்களின் ஆசிகள் கிடைக்கும் வாய்ப்பு உண்டு. உடன்பிறந்தவர்களால் ஓரிரு காரியங் கள் நிறைவேறும். உங்களுடைய திறமைக்கும் உழைப்புக்கும் உரிய பலன் கிடைக்கும். அக்டோபர் 20ம் தேதி முதல் கலைத்துறையினருக்கும் மாதர்களுக்கும் தொல்லைகள் சற்று குறையும். எதிர்பாராத பொருட் சேர்க்கைகள் நிகழும். வாயு சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். உணவு விஷயத்தில் கவனம் தேவை. தந்தை நலனிலும் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள்.

7ல் பிறந்தவர்களுக்கு: உங்களின் அறிவாற்றல் கூடும். நல்லவர்கள் உங்களுக்கு நலம் புரிவார்கள். அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும். மக்களால் நலம் உண்டாகும்.  

16ல் பிறந்தவர்களுக்கு: இவர்களில் சிலருக்கு மன அமைதி குறையும். அதிக நேரம் உழைக்க வேண்டி வரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

25ல் பிறந்தவர்களுக்கு: இதுவரை இருந்து வந்த தடைகளும், எதிர்ப்பு களும் குறையும். புத்திசாலித்தனம் வெளிப்படும். எழுத்துத் துறையில் இருப்பவர்களுக்கு, திறமைகள் பளிச்சிடும்.

அதிர்ஷ்ட தேதிகள்:  அக்டோபர் 16, 17, 20, 25, 26.

பிறந்த தேதிகள்: 8, 17, 26

உங்கள் எண்ணின் நாயகன் வலுத்திருப்பதால், உடல்நலம் சீராக இருந்துவரும். வெளி வட்டாரங்களில் உங்களின் மதிப்பும் அந்தஸ்தும் உயரும். பொது நலப் பணிகளில் உங்களின் ஆர்வம் அதிகரிக்கும். வெளிநாட்டுத் தொடர்புடன் நீங்கள் செய்து வரும் தொழில் விருத்தி அடையும்.

தொழிலாளர்களுக்கும் விவசாயி களுக்கும் முன்னேற்றமான பாதை புலப்படும். பொருள் வரவு கூடும் என்றாலும், செலவுகள் அதைவிட அதிகமாகும் என்பதால், வீண் செலவு களை குறைக்கவும். சிக்கன நடவடிக்கை அவசியம் தேவை.

வியாபாரிகள் எச்சரிக்கையுடன் செயல்பட்டால், சரிவுக்கு ஆளாகாமல் தப்பிக்கலாம். அக்டோபர் 20ம் தேதி முதல், உங்களுக்கு அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் அதிகரிக்கும். கலைத் துறையைச் சேர்ந்தவர்களுக்கு மந்த நிலை விலகும். புதிய வாய்ப்புகளும் ஒப்பந்தங்களும் கைக்கு வந்து சேரும். கணவனுக்கும் மனைவிக்கும் இடையிலான பிரச்னைகள் மற்றும் பிணக்குகளும் நீங்க வழிபிறக்கும். குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும்; நற்காரியங்கள் நிகழும்.

8ல் பிறந்தவர்களுக்கு: உங்களின் சுயபலம் கூடும். சமுதாய  பொதுநல முன்னேற்றப் பணிகளில் எல்லாம் ஆர்வம் அதிகமாகும். வெளிநாட்டுத் தொடர்புகள் பயன்படும்.  

17ல் பிறந்தவர்களுக்கு: தந்தைக் கும் மகனுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகலாம். வீண் அலைச்சல்களைத் தவிர்க்க இயலாமல் போகும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

26ல் பிறந்தவர்களுக்கு: எடுத்த காரியங்களில் எல்லாம் வெற்றி கிட்டும். புதிய பதவி, பட்டங்கள் கிடைக்கும். சிலருக்கு சொத்துக்கள் சேரும்.

அதிர்ஷ்ட தேதிகள்:  அக்டோபர் 17, 18, 26, 27.

பிறந்த தேதிகள்: 9, 18, 27

உங்களுடைய பராக்கிரமம் வெளிப் படும் காலம் இது. நீங்கள் செய்து வரும் தொழில் விருத்தி அடையும். அரசியல்வாதிகளுக்கு புதிய பதவி களும் பொறுப்புகளும் கிடைக்கும்.

அரசுப் பணியாளர்கள் தங்கள் நிலைமையில் வளர்ச்சி காண்பார்கள். நிர்வாகத் துறையினருக்கு வரவேற்பு கூடும். எலெக்ட்ரானிக், கம்ப்யூட்டர் துறைகள் லாபம் தரும். மனைவியால் அனுகூலம் ஏற்படும்.

வியாபார முன்னேற்றத் திட்டங்கள் கைகூடும். வெளிநாட்டுத் தொடர்புடன் செய்யும் வர்த்தகம் லாபம் அள்ளித் தரும். அக்டோபர் 20ம் தேதி முதல் கலைத் துறையினருக்கு நல்ல காலம் ஆரம்பம்; வெளிச்சமான பாதை தெரிய வரும். இந்த தேதிகளில் பிறந்த பெண்களுக்கு உற்சாகமான சூழ்நிலை உருவாகும். வெளிநாடு சென்று பொருள் திரட்ட விரும்பும் அன்பர்கள் அதற்கான வாய்ப்பைப் பெறுவார்கள்.  தாயாரின் நலனிலும் பிள்ளைகளின் நலனிலும் அதிக அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது.

9ல் பிறந்தவர்களுக்கு: தடைகளையும் எதிர்ப்புகளையும் முறியடிப்பீர்கள்.  சிலருக்கு வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். வீண் பயமும் மனக் கலக்கமும் நீங்கி, மனதில் துணிச்சலும் உற்சாகமும் அதிகரிக்கும்.

18ல் பிறந்தவர்களுக்கு: எடுத்த காரியங்களில் ஆதாயம் அதிகமாகும். பொதுப்பணிகளில் ஈடுபாடு கூடும். உங்களுடைய முக்கியமான எண்ணங் கள் ஈடேறும்.

27ல் பிறந்தவர்களுக்கு: அலைச் சலும் தடங்கல்களும் அதிகமாக இருக்கும். அதன் காரணமாக மனச் சோர்வும் உடல் சோர்வும் ஏற்படும்.  தாயாரின் உடல்நலனில் கவனம் தேவை. சிலருக்கு சொத்து சம்பந்தமான பிரச்னைகள் ஏற்படலாம்.

அதிர்ஷ்ட தேதிகள்: அக்டோபர் 14, 18, 19, 21, 24, 27.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism