Published:Updated:

ராசி பலன்கள்

அக்டோபர் 22-ம் தேதி முதல் நவம்பர் 4-ம் தேதி வரைஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்

ராசி பலன்கள்

மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும்!

மேஷம்: வளைந்துகொடுக்கத் தெரியாதவர்களே! உங்களின் தனாதிபதியான சுக்கிரன் 7ம் வீட்டில் அமர்ந்து உங்கள் ராசியைப் பார்த்துக்கொண்டிருப்பதால், சோர்வு நீங்கி, உற்சாகமாவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். என்றாலும், சனியும், சூரியனும் 7ம் வீட்டில் நிற்பதால், உடல் உபாதை, வேலைச்சுமை வந்து போகும். அரசு காரியங்கள் தாமதமாகி முடியும். புதன் 6ம் வீட்டிலேயே மறைந்து கிடப்பதால்... உறவினர், தோழிகளுடன் உரசல் போக்கு வந்து நீங்கும். வியாபாரத்தில் பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ராசி பலன்கள்

உறவினர், தோழிகளால் ஆதாயம்!

ரிஷபம்: விளம்பரத்தை விரும்பாதவர்களே! நவம்பர் 1ம் தேதி வரை புதன் 5ம் வீட்டில் நிற்பதால், வரவேண்டிய பணம் கைக்கு வரும். உறவினர், தோழிகளால் ஆதாயமடைவீர்கள். ஆனால், உங்கள் ராசிநாதன் சுக்கிரன் 6ம் வீட்டிலும், சப்தமாதிபதி செவ்வாய் 8ம் வீட்டிலும் மறைந்து நிற்பதால், வாகனத்தை இயக்கும்போது கவனம் தேவை. சனிபகவான் வலுவாக 6ம் வீட்டிலேயே தொடர்வதால், எத்தனை பிரச்னைகள் வந்தாலும், அவற்றைச் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளைக் கற்றுக்கொள்வீர்கள். உத்யோகத்தில் அலுவலக ரகசியங்களை வெளியிட வேண்டாம்.

ராசி பலன்கள்

இல்லக் கனவு மெய்ப்படும்!

மிதுனம்: 'மறப்போம், மன்னிப்போம்’ என்றிருப்பவர்களே! குருபகவான் 2ம் வீட்டிலேயே தொடர்வதால், புது வீடு கட்டிக் குடிபுகுவீர்கள். சுக்கிரன் 5ம் வீட்டில் அமர்ந்திருப்பதால், பிள்ளைகள் படிப்பில் முன்னேறுவார்கள். என்றாலும்... சூரியனும், சனியும் 5ல் நிற்பதால், அவர்களின் எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்து போகும். ராசிநாதன் புதன் 4ம் வீட்டில் உச்சம் பெற்று அமர்ந்திருப்பதால், உறவினர் வீட்டுத் திருமணத்தை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் உங்களுக்குத் தொல்லை தந்த அதிகாரி இடம் மாறுவார்.

ராசி பலன்கள்

எதிர்ப்புகள் அடங்கும்!

கடகம்: ஆரவாரமில்லாமல் சாதிப்பவர்களே! சூரியன் சாதகமான வீடுகளில் செல்வதால், எதிர்ப்புகள் அடங்கும். அரசு காரியங்கள் விரைந்து முடியும். புதனும், ராகுவும் 3ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால், ஷேர் மூலமாக பணம் வரும். செவ்வாய் 6ம் வீட்டில் நிற்பதால், உறவினர்கள் உங்களைப் பாராட்டுவார்கள். சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். ஜென்ம குரு தொடர்வதால், சோர்வு வந்து நீங்கும். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் கடின உழைப்புக்கு அங்கீகாரம் இல்லையே என்று ஆதங்கப்படுவீர்கள்.

ராசி பலன்கள்

சவால்களில் வெற்றி!

சிம்மம்: கேள்விக்கணை தொடுப்பதில் வல்லவர்களே! ராசிநாதன் சூரியன் வலுவாக 3ம் வீட்டில் அமர்ந்திருப்பதால், சவாலான விஷயங்களிலும் வெற்றி பெறுவீர்கள். புதனும், சுக்கிரனும் சாதகமான வீடுகளில் செல்வதால், புதிதாக வாகனம் வாங்குவீர்கள். செவ்வாய் 5ம் வீட்டில் நிற்பதால் 'பிள்ளைகள் இன்னும் பொறுப்பாக நடந்துகொண்டால் நன்றாக இருக்குமே’ என்று ஆதங்கப்படுவீர்கள். ராகுவும், கேதுவும் சாதகமாக இல்லாததால், மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துகொள்வீர்கள். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும்.

ராசி பலன்கள்

இனிக்கும் இல்லறம்!

கன்னி: கற்பனையில் கோட்டை கட்டுபவர்

களே! புதனும், சுக்கிரனும் சாதகமான வீடுகளில் செல்வதால், பணப் பற்றாக்குறை தீரும். தாம்பத்யம் இனிக்கும். விலை உயர்ந்த ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். செவ்வாய் 4ம் வீட்டில் நிற்பதால், வீடு, மனை வாங்குவது, விற்பது சுலபமாக முடியும். சூரியனும், சனியும் 2ல் நிற்பதால், உடல் உபாதை, பேச்சால் பிரச்னைகள் வந்து போகும். குருபகவான் வலுவாக இருப்பதால், சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் அதிகாரிகள் நினைப்பதை முடித்துக் காட்டுவீர்கள்.  

ராசி பலன்கள்

பணவரவு திருப்தி தரும்!

துலாம்: நீதியின் பக்கம் நிற்பவர்களே! ராசிநாதன் சுக்கிரன் ஆட்சிபெற்று அமர்ந்திருப்பதால்... அழகு, இளமை கூடும். பணவரவு மிகவும் திருப்திகரமாக இருக்கும். புதனும் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், நீங்கள் புண்ணிய தலங்களுக்குச் சென்று வருவீர்கள். செவ்வாய் 3ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால், உங்களின் மனோபலம் கூடும். சூரியனும், சனியும் ராசிக்குள் நிற்பதால், உடல்நலக் கோளாறு வந்து நீங்கும். அரசு காரியங்கள் தாமதமாகி முடியும். வியாபாரத்தில் திடீர் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் உங்களுக்கு வேலைச்சுமை அதிகமாகும்.

ராசி பலன்கள்

அநாவசியப் பேச்சைத் தவிருங்கள்!

விருச்சிகம்: முன் எச்சரிக்கை உணர்வு அதிகமுள்ளவர்களே! குருபகவான் வலுவாக அமர்ந்திருப்பதால், புதிய வியூகம் அமைத்து வாழ்வில் முன்னேறுவீர்கள். பழைய நகையை மாற்றி புது டிசைனில் ஆபரணம் வாங்குவீர்கள். ராகு வலுவாக லாப வீட்டில் நிற்பதால், புதுப் பதவிகள் தேடி வரும். சூரியனும், சனியும் 12ம் வீட்டில் மறைந்திருப்பதால், திடீர் பயணங்கள், தூக்கமின்மை வந்து போகும். செவ்வாய் 2ல் நிற்பதால், அநாவசியப் பேச்சைத் தவிருங்கள். வியாபாரத்தில் லாபம் இரட்டிப்பாகும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்களை நம்பி சில முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள்.

ராசி பலன்கள்

சொத்து வாங்கும் யோகம்!

தனுசு: சிக்கல்களைக் கண்டு அஞ்சாதவர்களே! சூரியன் லாப வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால், எதிலும் உங்கள் கை ஓங்கும். சனியும், சுக்கிரனும் லாப வீட்டில் நிற்பதால், வீட்டு உபயோக சாதனங்களை புதிதாக வாங்குவீர்கள். ராசிக்குள் செவ்வாய் நிற்பதால், ஒரு சொத்தை விற்று, மறுசொத்து வாங்கும் யோகம் உண்டாகும். ராகுவும், கேதுவும் சாதகமாக இல்லாததால்... மனஇறுக்கம், பிறர் மீது நம்பிக்கையின்மை வந்து செல்லும். வியாபாரத்தில் புகழ்பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்யோகத்தில், அலுவலக சூட்சுமங்கள் உங்களுக்கு அத்துப்படியாகும்.

ராசி பலன்கள்

நினைத்த காரியம் நிறைவேறும்!

மகரம்: வீரியத்தை விட காரியத்தில் கண்ணாக இருப்பவர்களே! கேது வலுவாக 3ம் வீட்டில் அமர்ந்திருப்பதால், நினைத்த காரியம் நிறைவேறும். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். குருபகவான் 7ல் நிற்பதால் திருமணம் தாமதமானவர்களுக்கு, விரைவில் நடைபெறும். புதனும், சுக்கிரனும் சாதகமான வீடுகளில் செல்வதால், சொந்த பந்தங்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். செவ்வாய் 12ம் வீட்டில் மறைந்திருப்பதால்... வீண் டென்ஷன், சகோதர வகையில் மனத்தாங்கல் வந்து போகும். புது முதலீடு செய்து வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள்.

ராசி பலன்கள்

உடன்பிறப்பால் உதவி!

கும்பம்: தகுதிக்கு மீறி ஆசைப்படாதவர்களே! சுக்கிரன் சாதகமாக இருப்பதால், வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவது, கூடுதல் அறை அமைப்பது போன்ற முயற்சிகள் பலிதமாகும். பிள்ளைகள் பாசமாக நடந்துகொள்வார்கள். செவ்வாய் வலுவாக லாப வீட்டில் அமர்ந்திருப்பதால், சகோதர வகையில் உதவிகள் உண்டு. சப்தமாதிபதி சூரியன் நீசமாகி சனியுடன் நிற்பதால், வாழ்க்கைத் துணைவருக்கு ஆரோக்கிய குறைவு ஏற்படலாம். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் உயரதிகாரிகளின் மனநிலையை அறிந்து அதற்கேற்ப செயல்படத் தொடங்குவீர்கள்.

ராசி பலன்கள்

மதிப்பு, மரியாதை உயரும்!

மீனம்: பாசவலையில் சிக்குபவர்களே! சூரியன் 8ம் வீட்டில் மறைந்து நிற்பதால், நீங்கள் சவால்களில் வெற்றி பெறுவீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள். ராசிக்குள் கேதுவும், 7ல் ராகுவும் மற்றும் 8ல் சனியும் தொடர்வதால்... ஒருவித சலிப்பு, சோர்வு வந்துசெல்லும். மற்றவர்களுக்காக ஜாமீன், கேரண்டர் கையொப்பமிட வேண்டாம். வியாபாரத்தில் உங்களுக்கு வர வேண்டிய பாக்கிகள் வசூலாகும். வேலையாட்களிடம் நயமாகப் பேசி வேலை வாங்குவது நல்லது. உத்யோகத்தில் மற்றவர்கள் உங்களை மதிப்பார்கள்.