Published:Updated:

செவ்வாய் பகவான்... அறிந்துகொள்ளவேண்டிய அற்புதத் தகவல்கள்! #Video

வளர்பிறைச்சந்திரன், சுக்கிரன், குரு ஆகிய கிரகங்களுடன் பத்தாமிடத்தில் செவ்வாய் இருந்தால் ஜாதகர் மருத்துவராவர்.

mars
mars

ஜோதிட சாஸ்திரம் 27 நட்சத்திரங்களையும், 12 ராசிகளையும், நவகிரகங்களையும் அடிப்படையாகக் கொண்டுதான் இயங்கி வருகின்றன. இதில் நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதமான குணநலன்கள் மற்றும் காரகத்துவங்கள் கொண்டவை.

நவகிரகங்களுள் செவ்வாய் பகவானின் தன்மைகள் என்ன? அவர் எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலன்கள் தருவார் என்பது பற்றி ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜியிடம் கேட்டோம். செவ்வாய் பகவான் குறித்து அறிந்துகொள்ளவேண்டிய அற்புதத் தகவல்களை நம்மோடு பகிர்ந்துகொண்டார்.

mars
mars

``ஜோதிட சாஸ்திரத்தில் சக்திமிக்க 5 கிரகங்களில் செவ்வாய்க்குத் தனி இடமுண்டு. செவ்வாயை `அங்காரகன்' என்றும் `வீரத்துக்கு அதிபதி' என்றும் அழைப்பார்கள். ஒருவரின் கோபம் முரட்டுக் குணம் ஆகியவற்றுக்குச் செவ்வாய் பொறுப்பாகிறார்.

mars
mars

செவ்வாய் சிவப்பு நிறம், மருத்துவம், விளையாட்டு, அதிகாரம் ஆகியவற்றுக்கு அதிபதி. இந்தச் செவ்வாய் சுபத்துவம் பெற்றிருக்கும்போதுதான் ஒரு ஜாதகர் மருத்துவராகிறார். வளர்பிறைச்சந்திரன், சுக்கிரன், குரு ஆகிய கிரகங்களுடன் பத்தாமிடத்திலிருந்தால் ஜாதகர் மருத்துவராவர்.

செவ்வாய் சகோதரகாரகனாகிறார். ஒருவரின் ஜாதகத்தில் சகோதரர்களின் நிலையைச் செவ்வாய் இருக்கும் நிலையைக் கொண்டு அறியலாம்.

செவ்வாய் இரு ஆதிபத்தியமுள்ள கிரகம். மேஷம், விருச்சிகம் ஆகிய இரு ராசிகளுக்கும் இவர்தான் அதிபதி. மகர ராசியில் உச்சமடையும் அவர் கடகராசியில் நீசமடைகிறார். மகர ராசியில் பூமிக்கு அருகில் வரும்போது ஜோதிப் பிழம்பாக இருப்பார். பூமியிலிருந்து தூரத்தில் இருக்கும்போது கடக ராசியிலிருப்பார்.

கடகம், சிம்மம் ஆகிய இரு ராசிக்காரர்களுக்கும் எவ்வளவு கீழான நிலையில் இருந்தாலும் செவ்வாய் எந்தவிதக் கெடுதலையும் செய்ய மாட்டார்.

rasi
rasi

மேஷம், விருச்சிகம், தனுசு, மீனம், சிம்மம், கடகம் ஆகிய ஆறு லக்னக்காரர்களுக்கு மிகவும் அனுகூலமான பலன்களைத் தருவார். இந்த ஆறு லக்னக்காரர்களுக்கும் செவ்வாய் சரியான நிலையில் இல்லாவிட்டால், அவர்கள் சென்று வணங்க வேண்டிய மிக முக்கியத்தலம் வைத்தீஸ்வரன் கோயில்.