Published:Updated:

வியாழ பகவான் - அறிந்துகொள்ள வேண்டிய அற்புதத் தகவல்கள்! #video

குரு பலம் பெற்று இருந்தால் ஜாதகருக்கு குரு தசை நடக்கும்போது புகழடையச் செய்வார்.

Jubiter
Jubiter

ஜோதிட சாஸ்திரம் 27 நட்சத்திரங்களையும், 12 ராசிகளையும், நவகிரகங்களையும் அடிப்படையாகக் கொண்டுதான் இயங்கி வருகின்றது. இதில் நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதமான குணநலன்கள் மற்றும் காரகத்துவங்கள் கொண்டவை.

நவகிரகங்களுள் வியாழனின் தன்மை என்ன? அவர் எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலன்கள் தருவார் என்பது பற்றி `ஜோதிடக்கலை அரசு' ஆதித்ய குருஜியிடம் கேட்டோம். அவர் வியாழன் குறித்து, அறிந்துகொள்ளவேண்டிய அற்புதத் தகவல்களை நம்மோடு பகிர்ந்துகொண்டார்.

Jubiter
Jubiter

''நவகிரகங்களிலேயே மிகவும் விரும்பப்படுபவராகவும் இயற்கைச் சுபராகவும் திகழ்பவர் குரு பகவான் (வியாழன்). அளவிலும் மற்ற கிரகங்களைவிட பெரிய கிரகமாகவும் முழுசுபராகவும் திகழ்பவர். கானகத்தில் பெரிதான யானையும் கடலில் பெரியதான திமிங்கிலமும் குருவின் ஆதிபத்தியம் பெற்றவை.

ஜோதிட சாஸ்திரத்தில் எந்த கிரகம் கெட்டுப்போயிருந்தாலும் குருவோ சுக்கிரனோ இவர்கள் இருவரில் ஒருவர் நன்றாக இருந்தாலும் ஜாதகர் சோடை போகாமல் நன்றாக இருப்பார். குரு பலம் பெற்று இருந்தால் ஜாதகருக்கு குரு தசை நடக்கும்போது புகழடையச் செய்வார்.

Rasi
Rasi

குரு பகவான் தனுசு, மீனம், மேஷம், விருச்சிகம், கடகம், சிம்மம் ஆகிய ஆறு லக்னக்காரர்களுக்கும் யோகமான பலன்களைத் தருவார். குருவே தனக்காரகனாகவும் புத்திரக்காரகனாகவும் இருக்கிறார். சந்ததி விருத்திக்கும் இவரே காரணம். வாழ்வதற்குத் தேவையான பண வரவுக்கும் இவரே பொறுப்பாகிறார். மஞ்சள் நிறத்துக்கு அதிபதியாக இருப்பதால், குரு வலுத்திருப்பவர்கள் தங்கம் அதிகமுள்ளவர்களாகவும் செல்வந்தராகவும் இருப்பார்கள்.

குரு என்பதால், மற்றவர்களுக்கு கல்வி கற்று தரும் ஆசிரியர். கல்லூரிப் பேராசிரியர் வங்கி அதிகாரி, நேர்மையான நீதித்துறை அதிகாரிகள் பலரும் குருவின் பலம் பெற்றவர்களே. குரு பகவான் தனுசு, மீனத்தில் ஆட்சி பெறுகிறார். கடகத்தில் உச்சமாகும் குரு மகரத்தில் நீசமடைகிறார்.

ஆலங்குடிக்குச் சென்று வழிபட்டால் குருவின் முழுமையான அருளைப் பெறலாம். தென் மாவட்டங்களில் வசிப்பவர்கள் திருச்செந்தூர் சென்று வழிபட்டால் சகல ஐஸ்வர்யங்களையும் பெறலாம். சென்னையில் இருப்பவர்கள் பாடி திருவல்லீஸ்வரர் கோயிலுக்குச் சென்று வழிபட்டால் சிறப்பான பலன்களைப் பெறலாம்'' என்கிறார்.