Published:Updated:

சுக்கிரன்: குணநலன்கள், வணங்க வேண்டிய திருத்தலங்கள்! #video

ஒருவர் பணத்தைப் பற்றிக் கவலைப்படாமல் செலவு செய்கிறாரென்றால், அவர் சுக்கிரனின் ஆதிக்கத்தில் பிறந்தவரென்பதை அவரின் ஜாதகத்தைப் பார்க்காமலே அறிந்துகொள்ளலாம்.

சுக்கிரன்
சுக்கிரன்

ஜோதிட சாஸ்திரம் 27 நட்சத்திரங்களையும் 12 ராசிகளையும், நவகிரகங்களையும் அடிப்படையாகக் கொண்டுதான் இயங்கி வருகின்றன. இதில் நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதமான குணநலன்கள் மற்றும் காரகத்துவங்கள் கொண்டவை.

சுக்கிரன்
சுக்கிரன்

நவகிரகங்களுள் வெள்ளியின் தன்மைகள் என்ன? அவர் எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலன்கள் தருவார் என்பது பற்றி `ஜோதிடக்கலை அரசு' ஆதித்ய குருஜியிடம் கேட்டோம். அவர் வெள்ளி குறித்து, அறிந்துகொள்ள வேண்டிய அற்புதத் தகவல்களை நம்மோடு பகிர்ந்துகொண்டார்.

``நவகிரகங்களில் குருவை அடுத்து இரண்டாவது சுபராகத் திகழ்பவர் சுக்கிரன். தனகாரகனான குரு பணத்தைத் தருகிறாரென்றால் அந்தப் பணத்தைச் சந்தோஷமான வழிகளில் செலவு செய்ய வைப்பவர் சுக்கிரன். ஒருவர் பணத்தைப் பற்றிக் கவலைப்படாமல் செலவு செய்கிறாரென்றால், அவர் சுக்கிரனின் ஆதிக்கத்தில் பிறந்தவரென்பதை அவரின் ஜாதகத்தைப் பார்க்காமலே அறிந்துகொள்ளலாம்.

Planets
Planets

சுக்கிரனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்களைச் சுற்றி எப்போதும் பெண்கள் கூட்டம் இருக்கும். அதற்குக் காரணம் அவர்கள் பெண்களைப் பாதுக்காப்பவர்களாகவும் மற்றவர்களைவிடப் பெண்களின் மீது கூடுதலான அக்கறையுள்ளவர்களாகவும் இருப்பார்கள். ஆடம்பரப்பிரியர்களாகவும் செலவு செய்பவர்களாகவும் இருப்பார்கள். அழகிய உடைகள், வாசனைத் திரவியங்கள் ஆகியவற்றில் ஈடுபாடு மிக்கவர்களாக இருப்பார்கள். இதற்காகக் கடன் வாங்கிச் செலவு செய்வார்கள் என்றில்லை தங்களின் சொந்த சம்பாத்தியத்திலேயே இவர்கள் இப்படிச் செலவு செய்வார்கள்.

சுக்கிரன் கலைகளுக்கு அதிபதி என்பதால் எழுத்து, இசை, பாடல் நடனம், நாடகம், பாட்டு சினிமா ஆகியவற்றில் புகழ் பெற ஜாதகத்தில் சுக்கிரன் நல்ல நிலையில் இருக்க வேண்டுமென்பது அவசியம்.

சுக்கிரன் ஜாதகத்தில் எந்த நிலையில் இருந்தாலும் ரிஷபம், துலாம், மிதுனம், கன்னி, மகரம் மற்றும் கும்பம் ஆகிய ஆறு ராசிக்காரர்களுக்கும் துன்பம் விளைவிப்பதில்லை.

ரிஷபத்திலும் துலாத்திலும் ஆட்சி பெறும் சுக்கிரன் தனது எதிரியான குருவின் வீடான மீனத்தில் உச்சமடைகிறார். தனது நண்பனான புதனின் வீடான கன்னியில் நீசமடைகிறார். ஜாதகத்தில் சுக்கிரன் வலுவிழந்தால், அவரின் திருமண வாழ்க்கையில் தடைகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.

பரிகாரம்:

சுக்கிரன் வலுக்குறைந்து இருப்பவர்கள், கும்பகோணம் அருகே இருக்கும் சுக்கிரனுக்கு உரிய ஸ்தலமான கஞ்சனூர் சென்று வழிபட்டால் சிறப்பான பலன்களைப் பெறலாம். சென்னையிலிருப்பவர்கள் மாங்கட்டிலிருக்கும் வெள்ளீஸ்வரர் கோயிலுக்கோ மயிலாப்பூரிலிருக்கும் வெள்ளீஸ்வரர் கோயிலுக்கோ சென்று வழிபட்டால் சிறப்பான பலன்களைப் பெறலாம்.