Published:Updated:

வீட்டில் தூண்கள் அவசியமா?

வாஸ்து வழிகாட்டல்
பிரீமியம் ஸ்டோரி
வாஸ்து வழிகாட்டல்

வாஸ்து வழிகாட்டல் - வித்யாவாரிதி சுப்ரமணிய சாஸ்திரிகள்

வீட்டில் தூண்கள் அவசியமா?

வாஸ்து வழிகாட்டல் - வித்யாவாரிதி சுப்ரமணிய சாஸ்திரிகள்

Published:Updated:
வாஸ்து வழிகாட்டல்
பிரீமியம் ஸ்டோரி
வாஸ்து வழிகாட்டல்

அண்டத்துக்கு ஒப்பானதே பிண்டம். பஞ்சபூத சக்தியால் இயங்கும் உலகம் போன்றதே நம் உடம்பும்! ஒரு மனிதனின் மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐம்பொறிகளை கோயில், நகரம், வீடு, தடாகம், கூபம் ஆகியவற்றுடன் ஒப்புமைப்படுத்துகின்றன சிற்ப நூல்கள். இந்த ஐந்தில் ஒன்று குறைவுபட்டாலும் ஊனம்தான் என்பது, அந்த நூல்கள் தரும் விளக்கம்.

வீட்டில் தூண்கள் அவசியமா?
Balaji Srinivasan

ள்ளமே பெருங்கோயில், ஊனுடம்பு ஆலயம்...’ என்பது திருமூலரின் திருமந்திர வாக்கு. ஆக, உடம்பையும் உயிரையும் பேணுவதுபோன்று நாம் வசிக்கும் இடங்களையும் முறைப்படி நிர்மாணிப்பதும் பேணுவதும் மிக அவசியம். அதற்கு உறுதுணை யாகத் திகழ்வது வாஸ்து சாஸ்திரம்.

அவ்வகையில் புது வீட்டுக்கான சகல சுபலட்சணங்களை விவரிக்கும் வாஸ்து சாஸ்திரம், என்னென்ன குறைகள் இருக்கக் கூடாது என்பதையும் விளக்குகிறது. இதை `வேதை’ என்று சொல்வார்கள். குறிப்பிடத் தக்க வேதைகள் சிலவற்றை நாமும் அறிவது அவசியம்.

கல்ப வேதை: வீட்டின் முற்றத்தில் பனை மரம் வளர்ந்து இருந்தால் பேய், பிசாசு, பூதங்கள் போன்ற தீய சக்திகளால் தொல்லை வரும். இடிதாக்குதலும் நிகழும்.

சங்கபாலக வேதை: தூண்கள் இல்லாத இல்லம் குற்றம் ஆகும். இல்லத்தில் தூண்கள் அமையாவிடினும், போர்டிகோவில் 2 தூண்கள் அமைப்பு வருவது போன்று கட்டுமானம் செய்யவேண்டும். அவ்வாறு இல்லையெனில், அது அச்சாணி இல்லாத இல்லமாகி, அங்கு வசிப்பவர்களுக்கு நிம்மதி பறிபோகும்.

பட்சி வேதை: காகம், வௌவால் ஆகியன வீட்டில் எந்த இடத்தில் தங்கினாலும், அவ்வீட்டில் வசிக்கும் குழந்தைகளுக்கு கேடு வரும். வசிப்பவர்களுக்கு மனக்கவலை கூடும். கழுகு, கோட்டான் போன்றவை வீட்டில் தங்கக்கூடாது.

பரஜல வேதை: அடுத்த வீட்டில் இருந்து மழைநீர், உபயோகித்த நீர் ஆகியன நம் இல்லத் துக்கு வருமானால், வீண் கலகம், எதிரிகளால் துன்பம், விஷ ஜந்துக்களால் அபாயம் ஏற்படும்.

தடாக வேதை: வீட்டின் தெற்கு, தென் கிழக்கு வடமேற்கு பகுதிகளில் ஏரி, குளம், கிணறு, ஆழமான பள்ளத்தில் தேங்கிய நீர், நீர்நிலை தொட்டி ஆகியன இருந்தால், அந்த வீட்டில் வசிக்கும் குடும்பத் தலைவனுக்கு பல துன்பங்கள் வந்து சேரும்

நீச வேதை: இல்லத்தின் கிழக்கில், வடக்கில், வடகிழக்கு பகுதிகளில் சாணம், குப்பை போன்ற கழிவுகள் குவிந்து இருக்கக் கூடாது. அப்படி இருப்பின், அந்த வீட்டில் வசிக்கும் குழந்தைகளுக்குக் கேடுகள் வந்து சேரும்.

கவாட வேதை: வீட்டின் தலைவாயில், கதவுகள், ஜன்னல்கள் ஆகியன கரையான் அரித்து இருந்தாலோ, கதவுகள் இல்லாமல் இருந்தாலோ, உடைந்து வலுவிழந்து இருந்தாலோ அந்த வீட்டில் வசிப்பவர்களுக்கு தாளாத துயரமும், செல்வ அழிவும், திருடர்களால் பயமும் ஏற்படும்.

காத வேதை: வீட்டுக்கு தென்கிழக்கு, தெற்கு, தென்மேற்கு, மேற்கு, வடமேற்கு பகுதிகளில் குழி இருந்தால் கடன் பெருகும், மன அமைதி குறைவும். கால்நடை அழிவும் ஏற்படும்.

சினிமா வாய்ப்பு அமையுமா?

குருவருள் பல பேறுகளை அளிக்கவல்லது. ஜாதகத்தில் குருபகவான் நல்லபடியாக அமைந்துவிட்டால், அந்த ஜாதகருக்கு நன்மைகள் அதிகம் கிடைக்கும். இல்லறம் இனிக்கவும் குருவருள் தேவை. 7-ல் இருக்கும் செவ்வாயை குரு லக்னத்தில் இருந்து பார்க்கும்போது, இடையூறுகள் நீங்கும். இத்தகைய அமைப்புள்ள ஜாதகக்காரர்களுக்கு தாம்பத்தியத்தில் இன்னல்கள் ஏதும் நேராது.

ஒருவரது ஜாதகத்தில் 1, 4, 7, 10 ஆகிய இடங்களை கேந்திர ஸ்தானம் என்பார்கள். அதேபோல், 5 மற்றும் 9-ம் இடங்களை திரிகோண ஸ்தானம் என்பர். இந்த இடங்களில் குரு பலம் பெற்று அமைந்திருந்தால், குழந்தைப் பேற்றுக்குக் குறை இருக்காது!

அதேபோல், துலாத்தில் குரு அமையப்பெற்ற ஜாதகக்காரர்கள் மதிநுட்பம் மிகுந்தவர்களாகத் திகழ்வர். சுபிட்சமான வாழ்வு, கல்வி- கேள்விகளில் மேன்மை, குறையற்ற குழந்தைச் செல்வம், இணை பிரியாத நட்பு ஆகிய அனைத்தும் கிடைக்கும். இத்தகைய அமைப்புள்ள வர்கள், சினிமாத் துறையிலும் கோலோச்சுவர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism