Published:Updated:

மகரத்தில் சூரியனும் சனியும் உங்களுக்குச் சாதகமா?

சூரியதேவனே போற்றி!
பிரீமியம் ஸ்டோரி
சூரியதேவனே போற்றி!

ஸ்ரீரங்கம் கார்த்திகேயன்

மகரத்தில் சூரியனும் சனியும் உங்களுக்குச் சாதகமா?

ஸ்ரீரங்கம் கார்த்திகேயன்

Published:Updated:
சூரியதேவனே போற்றி!
பிரீமியம் ஸ்டோரி
சூரியதேவனே போற்றி!
சூரியன் தன் வடக்கு நோக்கிய சஞ்சாரத்தைத் தொடங்கும் நாள் மகர சங்கராந்தி - தை முதல் நாள் (ஜனவரி-14). அன்றுதான் உத்தராயன புண்ணிய காலம் தொடங்குகிறது. சூரியன் மகர ராசிக்குள் அன்றுதான் பிரவேசிக்கிறார். எனவே அந்த நாள் மிகவும் விசேஷமானது.

ஜோதிட சாஸ்திரப்படி சூரிய பகவானின் ஆட்சி வீடு சிம்மம். உச்ச வீடு மேஷம். அவர் மகர ராசிக்குப் பகை கிரகமாக விளங்குகிறார். காரணம், மகரத்தின் ஆட்சி அதிபதி சனிபகவான். சனிக்கும் சூரியனுக் கும் எப்போதும் ஆகாது.

சனி உச்சமடையும் துலாமில் சூரியன் நீசமடைவார். சூரியன் உச்சமடையும் வீட்டில் சனி நீசமடைவார். இப்படி ஆகாத இரண்டு கிரகங்களும் இந்த ஆண்டு மகர ராசியில் இணைகின்றன. (மகர சங்கராந்தி தினம் முதல் - ஜன.14 முதல் பிப்.12 வரையிலும்) இந்த ஒருமாத காலகட்டத்தில் நெருப்பினால் சில அழிவுகள் ஏற்படலாம். உலக அளவில் கச்சா எண்ணெயின் விலை மேலும் உயர வாய்ப்பிருக்கிறது. கீழை நாடுகளில் பிரச்னைகள் உண்டாகலாம்.

இரும்பு சார்ந்த துறைகளில் பெரிய விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. நாட்டில் அநேக போராட்டங்கள், குழப்பங்கள் ஏற்படும். அரசியல்வாதிகள், உயர்பதவி வகிப்பவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தனிப்பட்ட வாழ்வில் தந்தை மகன் இடையிலான உறவுகளில் சிக்கல் எழ வாய்ப்பிருக்கும்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மேஷம்: இந்த ராசிக்கு சாதகமான மாதமாகவே அமையும். புதிய தொழில் தொடங்கவும், கூட்டுத் தொழிலில் ஈடுபடவும் உகந்த மாதம். பதவி உயர்வை எதிர்பார்க்க லாம். வழக்குகள் வெற்றியாகும். கொடுக்கல் வாங்கலிலிருந்த சிக்கல்கள் தீரும். கடன் களை அடைப்பீர்கள்.

ரிஷபம்: உடல் நலனில் அக்கறை தேவை. தந்தைவழி உறவினர்களிடம் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. தந்தையுடன் விவாதம் வேண்டாம். தொழில், பணியில் பாதிப்புகள் குறைவே.

மிதுனம்: வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். நேரத்துக்கு உணவு எடுத்துக் கொள்வதும் அவசியம். உழைப்பும் தேகப் பயிற்சியும் கட்டாயம்.

கடகம்: மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய மாதம். இறைவழிபாட்டில் கவனம் செலுத்துங்கள். வாழ்க்கைத்துணை வழி உறவினர்களிடம் பேசும்போது மரியாதையான வார்த்தைகளைப் பயன்படுத்துங்கள். திருமண பேச்சு வார்த்தைகளில் கவனம் தேவை.

சிம்மம்: மிகவும் அற்புதமான காலகட்டம். கடன்கள் அடையும்; பணவரவு அதிகரிக்கும்; எடுத்த காரியங்களில் வெற்றி உண்டாகும். கட்டுமானப் பணிகளில் சிக்கல்கள் விலகும். புதிய முயற்சிகளை தைரியமாக மேற்கொள்ளலாம்.

கன்னி: மிகவும் சாதகமான மாதம். சுப காரிய பேச்சுவார்த்தைகளைத் தொடங்கலாம். புதிய எலக்ட்ரானிக்ஸ் பொருள்கள் வாங்குவது, பரிசளிப்பது நடைபெறும். வி.ஐ.பிகளின் அறிமுகமும் வழிகாட்டுதலும் கிடைக்கும். தை 2 முதல் நல்ல பலன்கள் உண்டு. தோல்விகளும் வெற்றியாக மாறும்.

துலாம்: தாயின் உடல் நிலையில் அக்கறை செலுத்த வேண்டிய மாதம். சுய மருத்துவம் கூடாது. மருத்துவச் செலவுகள் அதிகரிக்கலாம். அடுத்தவர்கள் சொல்லும் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பதும் அவசியம்.

விருச்சிகம்: சகோதர உறவுகளிடம் தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்க்க வேண்டும். பண விஷயங்களில் அவர்களிடம் விட்டுக்கொடுத்துப் போங்கள். புதிய முயற்சி களைத் துணிந்து மேற்கொள்ளலாம். சிறு சிறு தடைகள் ஏற்பட்டாலும் வெற்றியே கிடைக்கும்.

தனுசு: வாக்கு கொடுக்குமுன் நன்கு ஆலோசித்து முடிவெடுக்கவும். பணவரவு தாமதமாகலாம். வார்த்தைகளில் கவனம் தேவை. பொறுமையும் நிதானமும் அவசியம். அலுவலக ரகசியங்களை வெளியில் சொல்வது கூடாது.

மகரம்: உங்கள் ராசியில்தான் சனியும் சூரி யனும் இணைகிறார்கள். செலவுகள் அதிகரிக்கும். கடன் வாங்காமல் சமாளிக்கப் பாருங்கள். குடும்ப நலனில் கவனம் செலுத்துங்கள். எந்தப் பிரச்னை யிலும் கருத்து சொல்லாமல் மௌனமாக இருந்து விடுங்கள். இருக்கும் தங்கத்தை அடமானம் வைக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

கும்பம்: பணவரவு இருந்தாலும் செலவுகள் அதிகரிக்கும். சுபச் செலவுகள் ஏற்படும். வங்கிக் கடன் கட்டாயம் கிடைக்கும். யாரிடமும் நல்ல பெயரை எதிர்பார்த்துச் செயல்படாதீர்கள். குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற வாக்கு வாதத்தையும் கருத்து முரண்களையும் தவிர்க்க வேண்டியது அவசியம்.

மீனம்: இந்த மாதத்தில் பெரும்பாலும் நற்பலன் களையே பெறுவார்கள். பெரிய உயரங்களை எட்டுவதற்கான அஸ்திவாரம் போடும் காலமாக இந்த மாதம் அமையும். அரசியல்வாதிகளால் அனுகூலம் உண்டாகும். பணவரவு அதிகரிக்கும்.

பரிகாரம்: சனி - சூரியன் சேர்க்கையால் மேஷம், சிம்மம், கன்னி, மீனம் ஆகிய ராசிகளுக்கு உத்தம பலன்களும் ரிஷபம், துலாம், விருச்சிகம், கும்பம் ஆகிய ராசிகளுக்கு மத்திம பலன்களும் வாய்க்கும். மிதுனம், கடகம், தனுசு, மகரம் ஆகிய ராசிக்காரர்களுக்குப் பரிகாரங்கள் அவசியம்.

இவர்களுக்கு அனுமன் வழிபாடு நன்மைகள் அளிக்கும். ஸ்ரீராம ஜயம் எழுதுவது, சனிக் கிழமைகளில் காலை எட்டு மணிக்கு முன்பாக அனுமனை தரிசிப்பதும், நெய் தீபம் ஏற்றி வழிபடுவதும் விசேஷம். அனுமன் சந்நிதி துளசி தீர்த்தமும் சடாரியும் உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

தொகுப்பு: முருகப்ரியன்

சூரியதேவனே போற்றி!

ஞாயிற்றுக்கிழமை, சூரிய வழிபாட்டுக்கு உகந்த நாள். விண்வெளியில் தனது ஓடுபாதை நடுநாயகமாக விளங்க, மற்ற கிரகங்களைத் தனது கிரணத்தால் செயல்பட வைத்து உலக இயக்கத்தைச் செம்மைப்படுத்தும் சூரியதேவனை ‘ஸூம் ஸூர்யாயநம:’ என்று சொல்லி, 16 உபசாரங்களை நடைமுறைப்படுத்த வேண்டும்.

மகரத்தில் சூரியனும் சனியும் உங்களுக்குச் சாதகமா?

சூரியன் உதிப்பதற்கு முன்பே அவரை வணங் குவதும் வழிபடுவதும் சிறப்பு.

சூரிய நமஸ்காரம் 12 முறை செய்ய வேண்டும்.

மித்ர - ரவி - ஸூர்ய - பானு - கக - பூஷ - ஹிரண்யகர்ப - மரீசி - ஆதித்ய - ஸவித்ரு - அர்க்க - பாஸ்கரேப்யோ நம: என்று சொல்லி வணங்கலாம்.

மித்ராயநம: ரவயநம: ஸூர்யாயநம: பானவேநம: ககாயநம: பூஷ்ணெநம: ஹிரண்யகர்பாயநம: மரீசயேநம: ஆதித்யாயநம: ஸவித்ரேநம: அர்க்காய நம: பாஸ்கராயநம: என்று சொல்லிப் புஷ்பத்தைக் கைகளால் அள்ளி, அவரது திருவுருவத்துக்கு அளிக்க வேண்டும்.

‘பானோ பாஸ்கர மார்த்தாண்ட சண்ரச்மே திவாகர...’ என்ற செய்யுளைச் சொல்லி வழிபட்டால், நினைத்தது நிறைவேறும்!