ஜோதிடம்
திருக்கதைகள்
Published:Updated:

புதையல் யோகம் யாருக்கு?

புதையல் யோகம்
பிரீமியம் ஸ்டோரி
News
புதையல் யோகம்

- ஆர். சுப்பிரமணியன் -

`அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை; பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை’ என்கின்றன ஞானநூல்கள். உண்மைதான் உலக வாழ்க்கைக்குப் பணமும் பொருளும் அத்தியாவசியம் ஆகும். எனினும் ஒருசிலருக்கு பொன்-பொருள் யோகம் அற்புதமாக அமைந்துவிடுகிறது.

சிலருக்கோ தேவைக்கு ஏற்ப சமாளிக்கும் நிலையில் பொருளாதாரம் அமைகிறது. இன்னும் சில அன்பர்களுக்கு அத்தியாவசிய தேவைகளுக்குக்கூட பணப் பற்றாக்குறை நிலைமைதான். இந்த அடிப்படையில் மனிதர்களை மூவகையாகப் பிரித்துப் பார்க்கலாம்.

முதல் வகை - செழிப்பான வருவாயும் பண வரவும் அமைந்துவிட, அவற்றைக் காப்பதிலும் பெருக்குவதிலும் முனைப்பு காட்டும் அன்பர்கள். இரண்டாவது வகையினர் அடுத்த வேளை உணவுக்கும் வழியின்றி தவிக்கும் ஏழைகள். இந்த இரண்டிலும் சேராத மூன்றாவது வகையினர் உண்டு. அவர்கள், பண வரவு இருந்தும் எப்போதும் பற்றாக்குறை நிலையில் வாழும் நடுத்தர மக்கள்.

ஜாதகப்படி பொருளாதாரம் எப்படி என்று அறிந்து செயல் படுவதற்கு, ஜோதிட சாஸ்திரம் வழிகாட்டுகிறது. ஜோதிடத்தில் செல்வம்-சுப தனம் குறித்து, ஜன்ம லக்னத்திலிருந்து எண்ண வரும் இரண்டாம் வீட்டின் நிலை, கிரகங்களில் குருபகவானின் நிலை ஆகியவற்றைக்கொண்டு அறியலாம். இவை இரண்டும் பாதிப்பு எதுவும் இல்லாமல் பலமாக இருக்கவேண்டும்.

செல்வம் - புதையல்
செல்வம் - புதையல்
Chinnachart Martmoh

செல்வம் சேரும் நிலை

ஜாதகத்தில் இரண்டாம் வீட்டுக்குச் சுபகிரகங்களின்-குரு, சுக்கிரன், புதன், சந்திரன் ஆகியோரின் பார்வையோ சேர்க்கையோ இருந்தால் பணம் வந்து சேரும். மேலும், இரண்டாம் வீட்டுக்கு அதிபதி கிரகம் உச்சம், ஆட்சி பெற்று கேந்திர வீடுகள் (1, 4, 7, 10) அல்லது திரிகோண வீடுகளில் (1,5,9) இருந்தால் செல்வம் செழித்தோங்கும்.

இரண்டாம் வீட்டுக்குரிய அதிபதி கிரகமும் 11-ம் வீட்டுக்குரிய அதிபதி கிரகமும் தொடர்பு பெற்றிருந்தால், பணப்புழக்கத்துக்குக் குறை இருக்காது. இரண்டாம் வீட்டு அதிபதி இரண்டாம் வீட்டிலேயே இருந்து செவ்வாய்க் கிரகத்தின் சேர்க்கையும் பெற்றால், வசதியான வாழ்க்கை அமையும்.

இரண்டாம் வீட்டு அதிபதி ஏழாம் வீட்டு அதிபதியுடன் தொடர்பு கொண்டு பலம் பெற்றால், மனைவி மூலம் சொத்து-சுகங்கள் வந்து சேரும். அவரே 9-ம் வீட்டு அதிபதியுடன் தொடர்பும் பலமும் பெற்றிருந்தால் பூர்விகச் சொத்துகள் சேரும். 10-ம் வீட்டு அதிபதியுடன் தொடர்பு பெற்று பலம் அடைந்தால், தொழில் அல்லது வேலையின் மூலம் பண வசதிகளைப் பெறுவார்கள்.

குருபகவான் ஜாதகத்தில் உச்சம்-ஆட்சி பெற்று, சுபகிரகப் பார்வையும் பெற்றால் வற்றாத செல்வம் வந்து சேரும்.

குருபகவான்
குருபகவான்

செல்வம் நிலைக்காத நிலைகள்...

இரண்டாம் வீடு பாதிப்பு அடைந்தால் செல்வம் சேராது. அதேபோல் இரண்டாம் வீட்டில் அசுப கிரகங்கள் இருந்து, எவ்வித சுபகிரக பார்வையும் இல்லாமல் இருந்தால் வறுமையே மிஞ்சும். குறிப்பாக இரண்டாம் வீட்டில் சனி இருந்து, சுபகிரகங்களின் தொடர்பும் இல்லாமல் இருந்தால் வறுமை ஏற்படும். எவ்வளவு வருமானம் வந்தாலும் செலவுகளும் அதிகரிக்கும். எப்போதும் பணப் பற்றாக்குறையே இருந்துவரும்.

இரண்டாம் வீட்டின் அதிபதி, 6, 8, 12 ஆகிய இடங்களில் இருந்தாலும், அந்த அசுப வீடுகளின் அதிபதிகளோடு தொடர்பு பெற்றாலும் பணம் வரவு இருக்காது. மேலும் ஜாதகத்தில் குருவுடன் சந்திரன் 6-ம் வீடு, 8-ம் வீடு என்ற நிலைப்பாடு அமைந்தால், சகட யோகம் எனும் அவயோகம் ஏற்படும்.

குருபகவான்
குருபகவான்

புதையல் யோகம் எப்படி?

அன்பர்கள் சிலருக்குப் புதையல் யோகம் வாய்த்து, அவரின் வாழ்க்கை நிலை உச்சம் தொடும் அற்புதமும் நிகழ்வது உண்டு. அவர்கள் மகா பாக்கியசாலிகளாகவும், யோகக் காரர்களாகவும் திகழ்வார்கள். புதையல் யோகம் அமைவதற்கான ஜாதக நிலை என்ன... தெரிந்துகொள்வோமா?

ஒருவரின் ஜாதகத்தில் ஜன்ம லக்னம் மேஷமாகி, லக்ன-கேந்திர வீடான நான்காம் வீட்டில்-கடகத்தில் சந்திரன் ஆட்சி பெற்று அமர்ந்தால், அந்த ஜாதகருக்குப் புதையல் கிடைக்க வாய்ப்பு உண்டு. மேலும் அவரின் ஜன்ம நட்சத்திரம் ஆயில்யமாக இருக்க, சந்திர தசை, சூரிய தசை காலங்களில் புதையல் பெறும் வாய்ப்பு அதிகரிக்கும்.

ஒருவரின் ஜாதகத்தில் ரிஷபம் லக்னமாகி, இரண்டாம் வீட்டில் புதன் ஆட்சியாக அமர்ந்திருந்தால் புதையல் பெறும் வாய்ப்பு உண்டு. அவரின் ஜன்ம நட்சத்திரம் புனர்பூசம் எனில், புதன் தசை நடைபெறும் காலத்தில் புதையல் வாய்ப்புகள் அதிகரிக்கும்.

ஜன்ம லக்னம் சிம்மம். இரண்டாம் வீட்டில் புதன் உச்சம் பெற்று இருந்தால், புதையல் யோகம் உண்டு. இந்த ஜாதகரின் ஜன்ம நட்சத்திரம் அவிட்டம் எனில், குரு தசை நடைபெறும் வேளையில் புதையல் யோகம் வாய்க்கும். ஒருவரின் ஜன்ம லக்னம் எதுவாக இருந்தாலும் லக்ன கேந்திர நான்காம் வீட்டில் செவ்வாய், ராகு சேர்ந்து இருந்தாலும், அந்த நான்காம் வீட்டை செவ்வாய், ராகு பார்த்தாலும் அந்த ஜாதகருக் குப் புதையல் இருக்கும் விவரங்கள் தெரிய வரும். ஆனால், அந்தப் புதையல் அவருக்குக் கிடைக்காது என்பது ஜோதிடவிதி!