பிரீமியம் ஸ்டோரி

கரணம் என்பது ஒரு திதியின் பாதி அளவைக் குறிப்பதாகும். 6 பாகைகள் கொண்டது ஒரு கரணம். இரண்டு கரணங்கள் கொண்டது ஒரு திதியாகும். ஜன்ம ஜாதகத்தில் கரணம் விவரம் குறிப்பிடப்பட்டிருக்கும். பார்த்து அறிந்துகொள்ளலாம்.

கரணங்களும் இயல்புகளும்


கரணங்கள் 11. நாம் எந்த கரணமோ, அதற்கேற்ற இயல்புடன் திகழ்வோம். அதேபோல் கரணம் ஒவ்வொன்றும் குறிப்பிட்ட பறவை அல்லது மிருகத்தின் இயல்பை ஏற்றிருக்கும் என்கின்றன ஜோதிட நூல்கள்.

பவ கரணம் (சிங்கம்): பவ கரணத்தில் பிறந்தவர் எக்காரியத்திலும் பின்வாங்காத தைரியம் உடையவர். கூர்ந்து ஆராய்ச்சி செய்பவரும், சுகமுடையவரும், நன்னடத்தை உடையவரும், மென்மையான தலைமுடி உடையவரும் ஆவார்.

பாலவ கரணம் (புலி): சிற்றின்பப் பிரியர். நீங்காத செல்வம் உடையவர். தருமம் செய்பவர்; உறவுகளைப் பேணிக்காப்பவர்.

கெளலவ கரணம் (பன்றி): அரசாங்கப் பணியில் இருப்பார்கள். ஆசாரம் மிக்கவர்; பெற்றோர் மீது பற்றுள்ளவர். நிலபுலன்களைச் சம்பாதிப்பார்கள்.

தைதுலை கரணம் (கழுதை): சிக்கனம் மிகுந்தவர்; தருமத்தில் நாட்டம் இருக்காது. அரசு சார்ந்த பணிகளில் இருப்பார்.

கரசை கரணம் (யானை): எதிரிகளை எளிதில் வெல்லக்கூடியவர்; எல்லோருக்கும் உதவும் தரும சிந்தனையுடையவர். அரசாங்கம் மூலம் பண வரவு உண்டு.

வணிசை கரணம் (எருது): சிறந்த கற்பனைவாதி. சுய வட்டத்தில் வாழ்பவர். உலகப் பொது வழக்கத்தில் வெறுப்பு உடையவர்.

பத்திரை கரணம் (கோழி-சேவல்): சிக்கனக் குணம் மிக்கவர். மனச் சஞ்சலம் மிகுந்திருக்கும்.

சகுனி கரணம் (காகம்): மதியூகம் மிக்கவர், செல்வந்தர், தோற்றப் பொலிவும் தைரியமும் மிக்கவர்.

சதுஷ்பாத கரணம் (நாய்): கோபம் மிக்கவர்; வாக்கைக் காப்பாற்ற இயலாது. சிலர் வறுமையில் வாடவும் வாய்ப்பு உண்டு.

நாகவ கரணம் (பாம்பு): உத்தம குணம் கொண்டவர்; சுவையான உணவு உண்பதில் விருப்பம் உள்ளவர்.

கிம்ஸ்துக்கினம் கரணம் (புழு): சகோதரர்களுக்கு உதவும் குணம் கொண்டவர். பெற்றோர் மீதும் பற்றுள்ளவர். வேதசாஸ்திரமும் உலக ஞானமும் மிக்கவர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு