Published:Updated:

தொல்லைதரும் பிள்ளைகளை நல்வழிப்படுத்தும் எளிய 5 பரிகாரங்கள்!

பரிகாரங்கள்
பரிகாரங்கள்

தொல்லைதரும் பிள்ளைகளை நல்வழிப்படுத்தும் எளிய 5 பரிகாரங்கள்!

இன்றைய பஞ்சாங்கம்

12. 5. 21 சித்திரை 29 புதன்கிழமை

திதி: பிரதமை

நட்சத்திரம்: கிருத்திகை

யோகம்: அமிர்தயோகம்

ராகுகாலம்: பகல் 12 முதல் 1.30 வரை

எமகண்டம்: காலை 7.30 முதல் 9 வரை

நல்லநேரம்: காலை 9.30 முதல் 10.30 வரை / மாலை 4.30 முதல் 5.30 வரை

முருகப்பெருமான்
முருகப்பெருமான்

சந்திராஷ்டமம்: சித்திரை

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

வழிபடவேண்டிய தெய்வம்: முருகப்பெருமான்

இன்று: கிருத்திகை விரதம்

தொல்லைதரும் பிள்ளைகளை நல்வழிப்படுத்தலாம்!

பிள்ளைகள் குழந்தைகளாக இருக்கும்வரை அவர்கள் செய்யும் சேட்டைகள், தொல்லைகள் அனைத்தும் அழகானவை. ஆனால் வளர்ந்தபின்னும் அவர்கள் அப்படியே இருப்பது நல்லதல்ல. இது பெற்றோருக்குப் பெரும் மன வருத்தத்தைத் தரும். மேலும் பிள்ளைகளின் எதிர்காலமும் பாதிக்கப்படும். பதின்மப் பருவத்தில் பிள்ளைகள் கூடா நட்பு, தீய பழக்கவழக்கங்கள், தேவையற்ற சண்டை சச்சரவுகள் எனப் பல பிரச்னைகளால் பாதிக்கப்படுவதைப் பார்க்கும்போது பெற்றோரின் மனம் பாதிக்கப்படும். இதற்கு ஜாதக ரீதியாகப் பல காரணங்களைச் சொல்லமுடியும் என்றாலும் தற்கால வாழ்வியல் சூழலிலும் நாம் பல மாற்றங்களைக் கண்டிருக்கிறோம். இப்படிப்பட்ட மாற்றங்களே பிள்ளைகள் வாழ்விலும் பல பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இந்தப் பிரச்னைகளில் சிக்கித் தவிக்கும் குழந்தைகள் மீண்டும் நல்வழிப்படுவதற்கு ஆன்மிகத்தில் சில பரிகாரங்கள் கூறப்பட்டுள்ளன. அவைகுறித்து கீழே உள்ள வீடியோவைப் பாருங்கள்.

12.5.21 - இன்றைய சுருக்கமான பலன்கள்

விரிவான இன்றைய ராசிபலன்களை அறிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

மேஷம் : உற்சாகம் : மனதில் உற்சாகம் நிறைந்திருக்கும். குடும்பத்தில் உள்ளவர்கள் அன்பும் அந்நியோனமும் காட்டுவர். என்றாலும் புதிய முயற்சிகளில் இறங்க வேண்டாம். - ஆல் இஸ் வெல்!

ரிஷபம் : செலவு : செலவுகள் அதிகரிக்கும் நாள். காலை முதலே பணிச்சுமையும் இருக்கும். முறையாக உணவு எடுத்துக்கொள்வதில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். - செலவே சமாளி!

மிதுனம் - நன்மை : இன்று நன்மைகள் அதிக அளவில் நடைபெறும் நல்ல நாள். உறவினர்களால் ஆதாயம் ஏற்படும். குடும்பத்திலும் மகிழ்ச்சி நீடிக்கும். - நாள் நல்ல நாள்!

கடகம் - அனுகூலம் : செயல்கள் அனுகூலமாக முடியும். ஆரோக்கியத்திலிருந்த பின்னடைவுகளும் நீங்கும். தேவையில்லாமல் வெளியே செல்வதைத் தவிர்ப்பது நல்லது. - ஸ்டே ஹோம் ஸ்டே ஸேஃப்

சிம்மம் - கவனம் : மனதில் உற்சாகம் அதிகரிக்கும். உறவுகளால் செலவுகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பிற்பகலுக்கு மேல் நிலைமை சாதகமாகும். - டேக் கேர் ப்ளீஸ்!

கன்னி - தெளிவு : முற்பகலில் குழப்பமும் பிற்பகலில் தெளிவும் ஏற்படும் நாள். சந்திராஷ்டமம் காலையிலேயே முடிந்துவிடுவதால் நன்மைகள் அதிகரிக்கும். நண்பர்கள் உதவுவார்கள். - நாளை உங்க நாள்!

துலாம் - தன்னம்பிக்கை : மனதில் நம்பிக்கை நிறைந்திருக்கும். என்றாலும் பிற்பகலுக்கு மேல் இறைவழிபாட்டில் கவனம் செலுத்தவும். - நம்பிக்கை அதானே எல்லாம்!

விருச்சிகம் - மகிழ்ச்சி : வரவும் செலவும் சமமாக இருக்கும் நாள். எதிரிகள் ஏற்பட்ட தொல்லைகள் விலகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும். - என்ஜாய் தி டே!

தனுசு - பொறுமை : சின்னச் சின்ன பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். அக்கம் பக்கத்தில் பேசும்போது பொறுமை அவசியம். வார்த்தைகளால் வம்பு வரலாம். - நா காக்க!

மகரம் - நிதானம் : சொல்லிலும் செயலிலும் நிதானம் தேவைப்படும் நாள். செலவுகள் அதிகரிக்கும். குடும்பத்தினர் ஆரோக்கியத்திலும் கவனம் தேவை. - கேர் ஃபுல் ப்ளீஸ்

கும்பம் - பணவரவு : எதிர்பார்த்த பணவரவு உண்டாகும் நாள். குடும்பத்தில் அனைவரும் உங்கள் மனம் கோணாமல் நடந்துகொள்வர். சகோதர உறவுகளால் செலவுகள் அதிகரிக்கும். - ரிலாக்ஸ் ப்ளீஸ்!

மீனம் - வெற்றி : நேற்றுவரை இழுபறியாக இருந்த ஒரு விஷயம் இன்று வெற்றிகரமாக முடியும். புதிய முயற்சிகளைத் திட்டமிடலாம். மனதில் உற்சாகம் நிறைந்திருக்கும். - வெற்றிக்கொடிகட்டு!

அடுத்த கட்டுரைக்கு