Published:Updated:

குழந்தை வரம் வேண்டுவோருக்குக் கை கொடுக்கும் எளிய 4 பரிகாரங்கள்!

குழந்தை வரம் அருளும் குழந்தை வேலாயுதன்!
குழந்தை வரம் அருளும் குழந்தை வேலாயுதன்!

குழந்தை வரம் வேண்டுவோருக்குக் கை கொடுக்கும் எளிய 4 பரிகாரங்கள்!

இன்றைய பஞ்சாங்கக் குறிப்புகள்

4. 5. 21 சித்திரை 21 செவ்வாய்க்கிழமை

திதி: அஷ்டமி மாலை 6.41 வரை பிறகு நவமி

நட்சத்திரம்: திருவோணம் பகல் 1.36 வரை பிறகு அவிட்டம்

யோகம்: சித்தயோகம்

ராகுகாலம்: பகல் 3 முதல் 4.30 வரை

எமகண்டம்: காலை 9 முதல் 10.30 வரை

நல்லநேரம்: காலை 7.30 முதல் 8.30 வரை/ மாலை 4.30 முதல் 5.30 வரை

பஞ்சாங்கம்
பஞ்சாங்கம்

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

வழிபடவேண்டிய தெய்வம்: முருகப்பெருமான்

செல்வங்களில் தலையாயது பிள்ளைச் செல்வம். எல்லாக் காலத்திலும் குழந்தை பாக்கியம் இல்லாமை என்பது தம்பதிகளை வாட்டும் பிரச்னை. நவீன காலத்தில் நகரெங்கும் கருத்தரிப்பு மையங்கள் பெருகிக்கிடக்கின்றன. அங்கு கூடும் கூட்டமும் அதிகமாகவே உள்ளது. இதை மாபெரும் வணிகச் சந்தையாகக் கண்டுகொண்டு செயல்புரிகின்றன பல மருத்துவமனைகள். ஆனாலு, குழந்தைபாக்கியம் வேண்டுவோரின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் இருக்கின்றன். இந்தக் குறையை நீக்க நம் சாஸ்திரங்களில் சில எளிய பரிகாரங்கள் உள்ளன. அவற்றைப் பின்பற்றினால் விரைவில் புத்திர பாக்கியம் அடையலாம் என்பது நம்பிக்கை. இதோ கைகொடுக்கும் அந்த எளிய 4 பரிகாரங்கள் குறித்துத் தெரிந்துகொள்ள கீழே உள்ள வீடியோவைப் பார்க்கவும்.

இன்றைய சுருக்கமான ராசிபலன்

விரிவான இன்றைய பலன்களை அறிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

மேஷம் : அனுகூலம் : காரிய அனுகூலம் மிக்க நாள். புதிய முயற்சிகளைத் தொடங்க ஏற்ற நாள். குடும்பத்தில் சிறுசிறு பிரச்னை தோன்றினாலும் பாதிப்பு இருக்காது. - ஆல் இஸ் வெல்!

ரிஷபம் : பணவரவு : எதிர்பார்த்த பணவரவு உண்டாகும் என்றாலும் செலவுகளும் அதிகரிக்கும். தேவையற்ற விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. பணிச்சுமை படிப்படியாகக் குறையும். - லெஸ் டென்ஷன் மோர் வொர்க்!

மிதுனம் : பொறுமை : இன்று நாள் முழுவதுமே செயல்களில் பொறுமை அவசியம். புதிய முயற்சிகளிலும் ஈடுபட வேண்டாம். இறைவழிபாடு அவசியம். - ஸ்லோ அண்ட் ஸ்டெடி வின்ஸ் தி ரேஸ்!

கடகம் : ஆரோக்கியம் : இன்று குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள் என்றாலும் செயல்களில் நிதானம் தேவை. குறிப்பாக உடல்நலனில் அக்கறை தேவை. ஹெல்த் இஸ் வெல்த்!

சிம்மம் : அதிர்ஷ்டம் : இன்று தொடங்கும் செயல்கள் அனைத்தும் வெற்றியாகும். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்புண்டு. உறவுகளால் எதிர்பாராத நன்மைகள் கிடைக்கும். - பெஸ்ட் ஆஃப் லக்!

கன்னி : சுறுசுறுப்பு : காலைமுதலே சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். செலவுகள் அதிகரித்தாலும் சமாளித்துவிடுவீர்கள். உறவினர்களிடம் பேசும்போது மட்டும் பொறுமை அவசியம். - ரிலாக்ஸ் ப்ளீஸ்!

துலாம் : உற்சாகம் : மனதில் உற்சாகம் அதிகரிக்கும். குடும்பத்தில் அன்பும் அந்நியோன்யமும் நிறைந்திருக்கும் என்றாலும் புதிய முயற்சிகளில் கூடுதல் கவனம் தேவை. - என்ஜாய் தி டே!

விருச்சிகம் : உதவி : எதிர்பார்த்திருந்த உதவிகள் கிடைக்கும் நாள். செயல்களில் சிறு சிறு தடைகள் காணப்படும் என்றாலும் அனுகூலமாகும். எதிரிகள் தொல்லை விலகும். - ஆல் தி பெஸ்ட்!

தனுசு : பிரச்னை : சகோதர வகையில் சின்னச் சின்னப் பிரச்னை ஏற்பட்ட வண்ணம் இருக்கும். செலவுகள் அதிகரிப்பதால் கையிருப்பும் குறையும். உணவு விஷயத்தில் அக்கறை தேவை. - கேர் ஃபுல் ப்ளீஸ்!

மகரம் : விவாதம் : முற்பகலில் பொறுமையும் பிற்பகலுக்கு மேல் சாதகம் நிறைந்த நாள். யாரோடும் விவாதத்தில் இறங்க வேண்டாம். ஆரோக்கியத்திலும் அக்கறை தேவை. -நோ ஆர்கியுமென்ட்ஸ்!

கும்பம் : நிதானம் : முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் பெரியோர்களை ஆலோசிப்பது நல்லது. நிதானமாகச் செயல்பட்டால் நன்மைகள் நடைபெறும் நல்ல நாள். - டேக் கேர் ப்ளீஸ்!

மீனம் : மகிழ்ச்சி : மனதில் உற்சாகமும் குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும் நல்ல நாள். மனதில் தன்னம்பிக்கை நிறைந்திருக்கும். தொடங்கும் காரியங்களும் வெற்றியாகும். - வெற்றிக்கொடிகட்டு!

அடுத்த கட்டுரைக்கு