Published:Updated:

பங்குச் சந்தையில் உங்கள் யோகம் எப்படி?

பங்குச் சந்தை யோகம்
பிரீமியம் ஸ்டோரி
பங்குச் சந்தை யோகம்

ஜோதிடர் ஸ்ரீரங்கம் கார்த்திகேயன்

பங்குச் சந்தையில் உங்கள் யோகம் எப்படி?

ஜோதிடர் ஸ்ரீரங்கம் கார்த்திகேயன்

Published:Updated:
பங்குச் சந்தை யோகம்
பிரீமியம் ஸ்டோரி
பங்குச் சந்தை யோகம்

ஜோதிடரீதியாக நாம் என்ன தொழில் செய்யலாம் என்கிற சந்தேகம் அனைவருக்குமே உண்டு. அதுகுறித்து ஜோதிடர்களிடமும் பலரும் ஆலோசிப்பது உண்டு. ஜாதகப்படி எந்தத் தொழிலில் முதலீடு செய்தால் நன்மை நடக்கும் என்பது குறித்த கேள்வி எல்லோருக்குள்ளும் உண்டு.

பங்கு வர்த்தகம் அதிகமாக வளர்ந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்யலாமா, செய்தால் லாபம் ஈட்ட முடியுமா அல்லது ஏமாற்றங்களே மிஞ்சுமா என்பது குறித்தும் ஜாதகர்கள் பலரும் கேட்பார்கள். அவ்வகையில், பங்கு வர்த்தகத்தை தொழிலாக தேர்ந்தெடுக்கும் ஜாதக அமைப்பு எது என்பது குறித்து நாம் காணலாம்.

பங்குச் சந்தையில் 
உங்கள் யோகம் எப்படி?

27 நட்சத்திரங்கள், 12 ராசிகள், 9 கிரகங்கள் கொண்ட ஜோதிடத்தில் நிறைய கணக்கீடுகளும் குறியீடுகளும் உண்டு. பன்னிரு ராசிகளில் நான்கு குண ராசிகளுக்குப் பங்கு வர்த்தகத்தின் மீது அதிக ஈர்ப்பு உண்டு. அதிக உழைப்பு இல்லாத வருமானத்தை அடையக்கூடிய அமைப்பு மீனம், மிதுனம், கன்னி, தனுசு ஆகிய நான்கு ராசிகளுக்கு உண்டு.

இந்த நான்கையும் கோண ராசிகள் என்று ஜோதிடத்தில் குறிப்பிடுவர். கோணத்தில் அமையப்பெற்றதால் அதிக உழைப்பு இல்லாத வருமானத்தை நோக்கிய ஈர்ப்பு இந்த ராசியினருக்கு இயல்பாகவே இருக்கும். இவர் களுக்கு பங்குச்சந்தையில் ஈடுபடக்கூடிய அமைப்பு உண்டு. அதற்காக மற்றைய எட்டு ராசிகளுக்கும் பங்கு வர்த்தகத் தொடர்பு இல்லை என்று சொல்லிவிட முடியாது.

ரிஷபம், கடகம், விருச்சிகம், சிம்மம் ஆகிய ராசியினருக்கு பங்குச் சந்தை தொடர்பானவற்றில் மறைமுகத் தொடர்பு அல்லது ஆதாயம் கமிஷன் தொகையுடன் அமையக்கூடிய வாய்ப்பு உண்டு. மேஷம், துலாம், மகரம், மற்றும் கும்ப ராசியினருக்கு உலோகம் சார்ந்த முதலீடுகள் கைகொடுக்கும்; அரசாங்க பத்திரங்கள் ஆதாயம் கொடுக்கும்.

இவை ராசியைப் பொறுத்த பொதுவான பலன்கள். இனி, சுய ஜாதக அமைப்பு எவ்வாறு இருந்தால், ஒருவர் பங்கு சந்தையில் வெற்றி பெற முடியும் என்பதைக் காண்போம்.

பங்குச் சந்தையில் 
உங்கள் யோகம் எப்படி?

ஜோதிடத்தில் 12 லக்னங்கள். ஒரு நாள் 24 மணி நேரம்; ஆக, ஒரு லக்னம் 2 மணி நேரம் ஆதிக்கம் செலுத்தும். ஜாதகத்தில் உங்களுடைய லக்னம் எதுவாக இருந்தாலும், அந்த லக்னத்திற்கு 2, 5 மற்றும் 11-ம் இடத்து அதிபதி குருபகவானுடன் இணைந்திருந்தாலோ, பார்வை பலம் பெற்றிருந்தாலோ, பங்குச் சந்தை வர்த்தககத்தில் லாபம் பெறும் அமைப்பு உண்டு. ஒருசிலருக்கு ஆயிரங்களிலும், சிலருக்கு லட்சங்களிலும், வேறுசிலருக்கு கோடிகளிலும்கூட லாபம் கிடைக்கலாம்.

ஜாதகத்தில் இப்படிப் பங்கு வர்த்தகத்தில் சாதகம் தரக்கூடிய கிரகங்களின் தசா - புத்தி நடக்கும் காலத்தை வைத்து, லாபம் ஈட்டும் அமைப்பைக் கணக்கிட்டுச் சொல்லலாம். குறிப்பிட்ட கிரகங்களின் தசா - புத்தி வரவில்லை எனில் பலன் இல்லை.

பங்கு வர்த்தகத்தில் கமிஷன் மூலம் ஆதாயம் அடையும் அமைப்பு புதன் கிரகத்தைச் சார்ந்தது. ஜாதகத்தில் புதன் மிதுனம் மற்றும் கன்னி ராசியில் இருந்தால், அவர்களுக்குப் பங்குச்சந்தையின் தொடர்பு மற்றும் கமிஷன் லாபம் சாத்தியமே. இவர்கள் வங்கி, காப்பீடு நிறுவனங்கள் மற்றும் பொருளாதாரத் துறை சார்ந்த பங்குகளை வாங்குவதில் தீவிரம் காட்டுவார்கள். பங்குவர்த்தக முகவர்களாக பணிபுரியும் வாய்ப்பும் இவர்களுக்கு அதிகம் உண்டு.

பங்குச் சந்தையில் 
உங்கள் யோகம் எப்படி?

குரு பகவான் ஒரு ஜாதகத்தில் தனுசு, மீனம் மற்றும் கடக ராசியில் வீற்றிருந்தால், தங்கம் சார்ந்த முதலீடுகளால் லாபம் உண்டு; பங்கு வர்த்தகத்தில் மறைமுக ஆதாயங்கள் நிறைய கிடைக்கும். குருபகவான் சந்திரனோடு இணைந்து இருந்தாலோ, பார்வை பலம் (1,4,5,7,9,11) பெற்றிருந்தாலோ நிச்சயம் பங்குவர்த்தகத்தில் மிகப் பெரிய உயரத்திற்கு செல்லும் வாய்ப்பு தேடி வரும்.

அதேநேரம், இத்தகைய அமைப்புள்ள ஜாதகத்தில் சந்திரன் தேய்பிறைச் சந்திரனாக இருந்தால், பங்குகளை அடிக்கடி வாங்குவதும் விற்பதுமாக குறுகிய காலத்தில் லாபம் அடைவதைக் காணலாம். அதுவே, வளர்பிறைச் சந்திரன் எனில், அந்த ஜாதகர் பங்கு சந்தையில் நீண்ட கால முதலீடுகளை நோக்கி நடைபோடலாம்.

சுய ஜாதகத்தில் பாவ கிரகங்கள் (சனி, ராகு - கேது மற்றும் செவ்வாய்) ஒன்றாக இணைந்து இருந்தால், அந்த ஜாதகர் பங்குச் சந்தையில் இருந்து சற்று விலகி நின்று வேடிக்கை பார்ப்பதே நல்லது. இந்தக் கிரகங்களின் தசாபுத்திகள் வரும் நிலையில், அவர்கள் பங்குச் சந்தையில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். மட்டுமன்றி, நல்ல கிரகநிலைகள் அமையப்பெற்றுள்ள ஜாதகமாக இருந்தாலும், பாவ கிரகங்களின் தசா - புத்தி காலங்களில் பங்குச் சந்தையில் தடுமாற்றங்கள், நஷ்டங்கள் ஏற்படலாம்.

ஜாதகம் மட்டுமன்றி ஒருவரின் முன்வினைகளும் பங்குச்சந்தையில் வெல்லவோ, சறுக்கவோ காரணமாகிவிடும். ஆகவே, எவ்வித பாவ காரியங்களிலும் ஈடுபடாமலும் எவரிடமும் சாபம் பெறாமலும் இருந்தால், பங்குச் சந்தை முதலானவை நமக்குச் சாதகமாகவே அமையும்.

ஆகவே, வாசகர்கள் தங்களின் சுய ஜாதகத்தில் உரிய கிரகநிலைகளை ஆராய்ந்து அறிந்து, ஒன்றுக்கு இரண்டுமுறை ஜோதிடர்களிடம் ஆலோசித்து, தசாபுத்திகளைக் கணக்கிட்டு, செயல்படுங்கள்; வெற்றி உங்களுக்கே.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism