Published:Updated:

செவ்வாய் தோஷம்: இந்த 10 பரிகாரங்கள் மிக அவசியம்! - வழிகாட்டுகிறார் ஜோதிடரத்னா கே.பி.வித்யாதரன்

செவ்வாய் தோஷம்

பிறக்கும்போது லக்னத்திலிருந்து 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் ஏதேனும் ஒரு நிலையில் செவ்வாய் கிரகம் அமைந்திருக்கும். அப்படி அமைந்திருந்தால் செவ்வாய் தோஷம் ஆகும்.

செவ்வாய் தோஷம்: இந்த 10 பரிகாரங்கள் மிக அவசியம்! - வழிகாட்டுகிறார் ஜோதிடரத்னா கே.பி.வித்யாதரன்

பிறக்கும்போது லக்னத்திலிருந்து 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் ஏதேனும் ஒரு நிலையில் செவ்வாய் கிரகம் அமைந்திருக்கும். அப்படி அமைந்திருந்தால் செவ்வாய் தோஷம் ஆகும்.

Published:Updated:
செவ்வாய் தோஷம்
ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் என்றதுமே ஒருவித பதற்றத்துக்கும் அவநம்பிக்கைக்கும் ஆளாகிவிடுகிறோம். காரணம், கல்யாணத் தடைக்குக் காரணமாகிவிடுகிறது இந்த தோஷம். செவ்வாய் தோஷம் என்றாலே பயப்பட வேண்டுமா, இந்த தோஷத்துக்கான காரணம் என்ன, பரிகாரத் தீர்வுகள் என்னென்ன என்று ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரனிடம் கேட்டறிந்தோம். அவர் சொன்ன விளக்கங்கள் இங்கே உங்களுக்காக...
ஜோதிட ரத்னா கே.பி. வித்யாதரன்
ஜோதிட ரத்னா கே.பி. வித்யாதரன்

1) ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் முதலான தோஷங்கள் ஏற்படக் காரணம் என்ன?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பூர்வ ஜன்ம வினைகளும், பாவங்களும் தோஷங்களாக மாறுகின்றன என்கின்றன ஞானநூல்கள். அந்த வகையில் பூர்வ ஜன்மத்தில் பெற்றோரை சரியாகக் கவனிக்காதவர், முதிய வயதில் அவர்களை முறையாகப் பேணாதவர், மறுஜன்மத்தில் செவ்வாய் தோஷத்துக்கு ஆளாவர் என்கின்றன ஜோதிட நூல்கள். அதேபோல், சகோதர- சகோதரிக்குச் சேரவேண்டிய சொத்துக்களை ஒருவரே அபகரிக்கும் போதும், ஒரு நிலத்தை அநியாய விலைக்கு ஏமாற்றி விற்கும்போதும், அந்த நபரை பூமிகாரகனான செவ்வாயின் கோபம் தோஷமாக தாக்குகிறது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

2) ஜாதகத்தில் எந்தெந்த இடத்தில் செவ்வாய் இருந்தால் தோஷம்? அதனால் என்னென்ன பிரச்னைகள்?

பிறக்கும்போது லக்னத்தில் இருந்து 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் ஏதேனும் ஒரு நிலையில் செவ்வாய் கிரகம் அமைந்திருக்கும். அப்படி அமைந்திருந்தால் செவ்வாய் தோஷம் ஆகும்.

2-ல் செவ்வாய்: தனம், குடும்பம், வாக்கு ஸ்தானமாக திகழ்வது இரண்டாவது இடம். அதில் செவ்வாய் இருந்தால், மற்றவர் மனத்தைப் புண்படுத்தும்படி பேச்சு வெளிப்படும். அதனால் பிரச்னைகள் எழும். குடும்ப ஒற்றுமை பாதிக்கப்படும்.

4-ல் செவ்வாய்: கடுமையான பிடிவாதம் இருக்கும். அதுவே மற்றவர்களின் புறக்கணிப்புக்கு ஆளாக்கும்.

7-ல் செவ்வாய்: வாழ்க்கைத் துணையுடன் ஏட்டிக்குப் போட்டி யாகவே பேசிக் கொண்டிருப்பார். இவர்களுக்கு, 7-ல் செவ்வாய் இருக்கும் ஜாதகக்காரர்களையே மணம் செய்து வைப்பது நல்லது. இவர்கள் வியாபாரத்தில் பார்ட்னர்ஷிப்பைத் தவிர்ப்பது நல்லது.

8-ல் செவ்வாய்: எவ்வளவு செல்வம் சேர்ந்தாலும் திடீர் விரயம் ஏற்படும். பயணங்களால் அலைக்கழிப்புகள் அதிகமாகும். வாழ்வில் ஸ்திரத்தன்மை இருக்காது.

12-ல் செவ்வாய்: நிம்மதியான தூக்கம் இருக்காது. பழிவாங்கும் குணம் மிகுந்திருக்கும். இவர்களை வெளிப்படையாகப் பேச விடாமல் கல்லுளிமங்கனாக மாற்றிவிடுவார் செவ்வாய். சமூகம் தள்ளிவைக்கும் நபர்களிடம் இவர்கள் பழகி, கெட்ட பெயர் சம்பாதித்துக் கொள்வர்.

நவகிரகங்கள்
நவகிரகங்கள்
Vijay.T

3) செவ்வாய் தோஷ நிலைகளில் விதிவிலக்கு உண்டா?

ஜாதகத்தில் மேற்சொன்ன இடங்களில் செவ்வாய் இருக்கிறார் என்று மேலோட்டமாகப் பார்த்துவிட்டு முடிவுக்கு வரக்கூடாது. மற்ற கிரகங்களில் நிலைகளையும் கவனிக்கவேண்டும்.

செவ்வாய் தோஷம் சில தருணங்களில் வலு குன்றியதாகவும் திகழும். செவ்வாய் ஆட்சி அல்லது உச்சம் பெற்றிருந்தாலோ, குருவோடு சேர்ந்து நீச கதியில் நின்றாலோ, வர்க்கோத்தமம் பெற்றிருந்தாலோ (உங்கள் ஜாதக ராசி கட்டத்திலும் நவாம்சத்திலும் ஒரே ராசியில் இருப்பது) செவ்வாய் தோஷத்தின் பாதிப்பு குறையும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

4) செவ்வாய் தோஷத்துக்குப் பரிகாரம்தான் என்ன?

1. செவ்வாய் தோஷத்துக்கு செவ்வாய் தோஷத்தைச் சேர்ப்பது தான் நல்லது என்பதே எனது கருத்து. ஏனெனில், உணர்ச்சிக்குரியதே செவ்வாய் கிரகம். உடல் மற்றும் மன உணர்வுகளைச் சமமாக இருவரும் வெளிப்படுத்தும்போது, கணவன்-மனைவிக்குள் வீண் பிரச்னைகள் எழாது.

2. செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் புளி சாதம், புளிச்ச கீரையை உணவில் குறைவாகச் சேர்ப்பது நல்லது.

3. அன்றாடம் நாம் எதிர்கொள்ளும் செவ்வாய் ஆதிக்கமுள்ள (நிலம், சகோதரர்கள் முதலான...) விஷயங்களில் நேர்மறையான அணுகுமுறையை வைத்துக்கொண்டால், செவ்வாய் தோஷத்தின் வீரியம் குறையும்.

4. முடிந்தவரையிலும் ரத்த தானம் செய்யுங்கள். விபத்தில் சிக்கியவர்களுக்கு இயன்ற உதவியைச் செய்யுங்கள்.

5. பூர்வீகச் சொத்துப் பிரிவினையில் சகோதர- சகோதரிகள் பெற்றோரின் மனத்தாங்கலுக்கு ஆளாகிவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். முதன் முதலாக வாங்கும் சொத்தை நிலமாக வாங்காமல், கட்டப்பட்ட கட்டடமாக வாங்குவது சிறப்பு.

6. நிறுவனத்தை நடத்துபவராக இருந்தால், தொழிலாளியின் வியர்வை காய்வதற்கு முன்பே கூலியைத் தந்துவிடுங்கள்.

7. ஊர்க் காவல் முதல் ராணுவம் வரையிலும் காவல் பணியை ஆட்டுவிப்பது செவ்வாய்தான். எனவே, ராணுவம், போலீஸ் என காவல் பணியில் இருப்பவர்களுக்கு ஒத்துழைப்பதும், உதவி செய்வதும் நன்று.

8. ஊர் எல்லையில் கோயில்கொண்டிருக்கும் காவல் தெய்வங்களுக்குச் செம்பருத்தி மற்றும் விருட்சிப்பூ சாற்றி வணங்குங்கள்.

9. வீட்டில் வில்வம், வன்னி மரக்கன்றுகள் நட்டுப் பராமரியுங்கள்.

10. எல்லாவற்றுக்கும் மேலாக அனுதினமும் முருகப்பெருமானை வழிபட, அவர் அருளால் செவ்வாய் தோஷ பாதிப்புகள் குறைந்து, வாழ்க்கை செம்மையுறும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism