Published:Updated:

அட்சய திருதியை சிறப்பு ஜோதிட சங்கமம்... இணையவழி சந்திப்பு... நீங்களும் கலந்து கொள்ளலாம்!

அட்சய திருதியை
அட்சய திருதியை

பொதுவாக தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் வாங்குவது மங்கலமானது என்றாலும் ஒவ்வொருவருக்கும் அதிர்ஷ்டம் தரும் சில பொருள்கள் நகைகள் உண்டு. அதை அவர்களின் ராசிகளின் அடிப்படையில் அறிந்துகொண்டு வாங்கும்போது அது மிகவும் பயனுள்ளதாக அமையும்.

அட்சய திரிதியை தங்கமும் நகைகளும் வாங்க உகந்த நாளாகக் கருதப்படுகிறது. காரணம் அந்த நாளில் செய்யும் சுபகாரியங்கள் அனைத்தும் பல்கிப் பெருகும் என்பது நம்பிக்கை. சித்திரை மாத வளர்பிறை திருதியையே அட்சய திருதியை. 'அட்சயம்’ என்றால் 'வளர்தல்’ என்று பொருள். மகாவிஷ்ணு பலராமராக அவதரித்ததும் குபேரனுக்குச் செல்வங்களின் அதிபதியாகும் வரம் கிடைத்ததும், கணபதி தன் ஒற்றைத் தந்தத்தை முறித்து அதையே எழுதுகோலாகக் கொண்டு பாரதம் எழுதத் தொடங்கியதும், ஓர் அட்சய திரிதியை தினத்தில்தான். சூரிய பகவான் அருளால் திரெளபதி அட்சய பாத்திரம் பெற்றது, கிருஷ்ண பரமாத்மாவின் கருணையால் குசேலன் குபேர சம்பத்து பெற்றது போன்ற அற்புதங்களும் அட்சய திருதியை நாளில்தான் நிகழ்ந்தன என்கின்றன புராணங்கள். இத்தகைய சிறப்புகள் வாய்ந்த அட்சய திருதியை நாளில் தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் வாங்குவது மிகவும் சிறப்புடையதாகக் கருதப்படுகிறது.

அட்சய திருதியை
அட்சய திருதியை

நகைகளும் நம் மரபும்

நாம் பூட்டும் ஆபரணங்கள் எல்லாம் வெறும் அழகுப்பொருள்கள் என்னும் கருத்து பலரிடையே உள்ளது. சிலர் அவற்றை சேமிப்பாகக் கருதி வாங்கி வைப்பதும் உண்டு. இந்த இரண்டு கருத்துகளுமே ஒருவகையில் சரி என்றாலும் இதைத் தாண்டியும் நகைகள் வாங்கவும் சேமிக்கவும் அணிந்துகொள்ளவும் பல காரணங்கள் உண்டு என்கிறது நம் சாஸ்திரம்.

ஆபரணங்கள் பல வகைப்படும். அதிலும் ஒவ்வொரு பாகத்திலும் அணியும் அணிகலன்களுக்கு மருத்துவ நலகளும் உண்டு என்கிறது ஆபரணமாலை என்னும் நூல். உதாரணமாக நாம் காதில் அணியும் அணிகலனைத் ‘தோடு’ என்று ஒரு சொல்லால் சொல்லிவிட முடியாது. முன்காது, பின்காது, நடுக்காது என்று ஆறுவகையான ஆபரணங்களைக் காதில் அணிந்துகொள்வதை நம் பெண்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். இவை ஒவ்வொன்றும் உடல் நலனுக்கு உதவுவது என்கிறது அக்கு பஞ்சர் மருத்துவம்.

சங்க காலத்திலிருந்தே பல்வேறு நகைகளை அணியும் வழக்கம் நம் மரபில் உள்ளது. ஆயிழை, அணியிழை, வடம் போன்ற சொற்கள் எல்லாம் விதவிதமான நகைகளைக் குறித்தன. சங்க காலத்தில் ஆண்களும் மெட்டி அணிந்திருந்தார்கள். மெட்டி, உடல் நரம்புகளைக் கட்டுப்படுத்தி நலம் செய்யும் அணிகலனே என்பது நம்பிக்கை.

ஆரோக்கியம் போலவே ஆன்மிகமும் நகைகளுடன் இணைந்துள்ளது. தங்கம் சாஸ்திரத்தில் மகாலட்சுமி வாசம் செய்யும் பொருளாகக் கருதப்படுகிறது. மஞ்சள் நிறப்பொருள்கள் அனைத்தும் மங்கலம் தருபவை. எனவே தங்கத்தில் செய்யப்படும் அனைத்தும் புனிதமாகக் கருதப்படுபவை. குருபகவானுக்குரிய உலோகமும் பொன்தான். எனவே பொன்னை அணிகலன்களாக்கி அணிந்துகொள்வதன் மூலம் நாம் மகாலட்சுமி மற்றும் குருபகவானின் அருளைப் பெறலாம். தங்க நகைகள் அணிந்துகொண்டவர் மற்றவர்களைவிட அதிக மனோபலத்தோடும் நம்பிக்கையோடும் பேசுவதையும் செயல்படுவதையும் கண்டிருக்கிறோம். தங்கம் மட்டுமல்ல வெள்ளியும் நகைகள் செய்து அணிந்துகொள்ள உகந்த பொருள்களாகக் கருதப்படுபவை.

தங்க நகைகள்
தங்க நகைகள்
representational image

ஜோதிட சங்கமம்

பொதுவாக தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் வாங்குவது மங்கலமானது என்றாலும் ஒவ்வொருவருக்கும் அதிர்ஷ்டம் தரும் சில பொருள்கள் நகைகள் உண்டு. அதை அவர்களின் ராசிகளின் அடிப்படையில் அறிந்துகொண்டு வாங்கும்போது அது மிகவும் பயனுள்ளதாக அமையும். இதனை அறிந்துகொள்ள உதவியாக சக்திவிகடனும் ஜி.ஆர்.டி யும் இணைந்து ஜோதிட சங்கமம் ஒன்றினை நடத்தத் திட்டமிட்டுள்ளது. இந்த நிகழ்வில் ஜோதிடர் ஸ்ரீரங்கம் இரா. கார்த்திகேயன் கலந்துகொண்டு பன்னிரு ராசிகளுக்கான அதிர்ஷ்டக் குறிப்புகளை வழங்க இருக்கிறார்.

தங்கம் வாங்குவது குறித்து ஜோதிடம் என்ன சொல்கிறது? ஒவ்வொரு ராசிக்கும் உகந்த உலோகம் அல்லது நகை எது? யார் எதை வாங்கினால் அது மேன்மேலும் வளரும் என்பன குறித்த விளக்கங்களைத் தர இருக்கிறார் ஜோதிடர். மேலும் அட்சயத் திருதியை அன்று நாம் கட்டாயம் செய்ய வேண்டியவை குறித்தும் வழிகாட்ட இருக்கிறார். கட்டணமில்லாத இந்த வெபினாரில் நீங்களும் கலந்துகொண்டு பயன் அடையலாம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் கீழே இருக்கும் லிங்கைக் க்ளிக் செய்து உங்கள் விவரங்களைப் பதிவு செய்யுங்கள். நிகழ்வு 10.5.21 அன்று மாலை 4.30 முதல் 5.30 மணிவரை நடைபெறும்.

ஜோதிட சங்கமத்தில் நீங்களும் கலந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

அடுத்த கட்டுரைக்கு