Published:Updated:

ஜாதகத்தில் பூர்வ புண்ணியம்!

பூர்வபுண்ணியம்
பிரீமியம் ஸ்டோரி
பூர்வபுண்ணியம்

ஜோதிடஶ்ரீ முருகப்ரியன்

ஜாதகத்தில் பூர்வ புண்ணியம்!

ஜோதிடஶ்ரீ முருகப்ரியன்

Published:Updated:
பூர்வபுண்ணியம்
பிரீமியம் ஸ்டோரி
பூர்வபுண்ணியம்

`பூர்வ ஜன்ம வினைப் பயனே இந்தப் பிறவி’ என்கின்றன நம் ஞானநூல்கள். ஜாதகத்தில் நம்முடைய லக்னத்திலிருந்து எண்ண வரும் 5-ம் இடத்தை புத்திரஸ்தானம் என்றும் பூர்வ புண்ணிய ஸ்தானம் என்றும் குறிப்பிடுகின்றன ஜோதிடநூல்கள்.

ஜாதகத்தில் பூர்வ புண்ணியம்!

ந்த ஸ்தானத்தைக் கொண்டு ஒருவரின் பூர்வஜென்மம், மறுபிறவி, பிதுர்வகைச் சொத்துக்கள், பரம்பரைச் சிறப்பு, அனுபவிக் கும் சுகம், மனைவி, லாபம், தர்மக் குணங்கள் முதலானவை குறித்த பலன்களை ஆராயலாம்.

முற்பிறவியில் நாம் செய்த பாவ-புண்ணியங்களுக்கு ஏற்ற பலன் களை தரும் வகையில், உரிய கிரகங்கள் இந்த இடத்தில் அமைந்து பலன்களைத் தருவார்களாம். ஆக, நம் ஜாதகத்தில் 5-ம் இடத்தில் என்ன கிரகம் உள்ளது, நம் பூர்வ வினைப்படி அமைந்த அந்தக் கிரகம் அளிக்கும் பலன்கள் என்னென்ன என்று அறிவோமா?

சூரியன்: இந்த இடத்தில் சூரியன் இருந்தால், பருத்த சரீரம் உள்ளவர்களாகவும், குறைவான புத்திர ப்ராப்தி பெற்றவர்களாகவும் இருப்பார்கள். இயற்கை எழில் சூழ்ந்த பகுதிகளில் வசிப்பதில் விருப்பம் கொண்டிருப்பர். இவரின் சிறுவயதில் தந்தைக்கு ஆபத்து ஏற்படக்கூடும். இதயம், வயிறு தொடர்பான நோய்களால் பாதிப்பு உண்டாகும். வாழ்க்கை ஏழ்மையானதாக இருந்தாலும், செல்வந்தர் களின் நட்பும், உதவிகளும் கிடைக்கும்.

சந்திரன்: 5-ம் இடத்தில் சந்திரன் இருப்பின் நல்ல கல்வி, பரம்பரைச் சொத்து, சுய சம்பாத்தியம், கலைகளை நேசிப்பதிலும் கற்பதிலும் ஆர்வம், அரசியலில் ஈடுபட்டு அமைச்சராகும் யோகம், உயர்பதவிகளைத் திறம்பட நிர்வகிக்கும் ஆற்றல் போன்றவை ஏற்படும்.

செவ்வாய்: புத்திர ப்ராப்தியில் சிக்கல்கள் உண்டாகலாம். சிறிய விஷயங்களையும் கடின முயற்சியுடன் செய்துமுடிக்க வேண்டியது இருக்கும். பூர்வீகச் சொத்து கிடைப்பது கஷ்டம். ஜீவன வகையில் அடிக்கடி மாற்றங்கள் ஏற்படும். முன்கோபத்தால் தங்களுக்குத் தாங்களே ஆபத்தைத் தேடிக்கொள்வார்கள். குரு பார்வை அல்லது சேர்க்கை இருந்தால் கெடு பலன்கள் குறைந்து நற்பலன்கள் ஏற்படும்.

புதன்: அழகாக உடை உடுத்திக்கொள்வதில் ஆர்வம் இருக்கும். அரசியலில் பிரகாசிக்கக்கூடும். விரைந்து முடிவெடுத்து உடனே செயல்படுத்தக்கூடிய வல்லமை பெற்றிருப்பர். புத்திர ப்ராப்தியில் தடைகள் உண்டாகும்.

குரு: பூர்வ புண்ணியஸ்தானத்தில் குரு அமைந்திருப்பது மிகவும் சிறப்பானது. நல்ல பிள்ளைகளும், அவர்களால் பெயரும் புகழும் உண்டாகும். ஆன்மிகத்தில் நாட்டம் இருக்கும். நீதிக்கும் நேர்மைக்கும் முக்கியத்துவம் கொடுத்து வாழ்வர். எப்படிப்பட்ட நெருக்கடி, ஆபத்து ஏற்பட்டாலும் புத்திக்கூர்மையினால் தற்காத்துக்கொள்வர்.

சுக்ரன்: கல்வியறிவும் ராஜதந்திரமும் மிகுந்திருக்கும். பெண்களுட னும் பணம் படைத்தவர்களுடனும் பழகுவதில் நாட்டம் கொண்டிருப் பர். பிறருக்கு நல்ல ஆலோசனைகளை வழங்கி அவர்கள் நன்மை அடையச்செய்வர். பூர்வீகச் சொத்துக்களைப் பெற்றிருப்பதுடன் இவர்களுடைய தேவைக்கேற்ப பணம் கிடைத்துக்கொண்டே இருக் கும். சிறுவயதில் தாய்க்கு ஆகாது. இவர்களுக்குப் பெண் குழந்தைகளிடம் இருந்தே அன்பும் ஆதரவும் கிடைக்கும்.

சனி: 5-ம் இடத்தில் சனி இருப்பதும் புத்திரதோஷத்தைக் குறிப்பதாகும். இதர கிரக நிலைகளைப் பொறுத்தே தத்தெடுக்கும் வாய்ப்பு ஏற்படும். ஸ்திர புத்தி இருக்காது. கலக வார்த்தைகளைப் பேசுவதில் நாட்டம் கொண்டிருப்பர். செய்தொழில் ஜீவன வகைகளி லும் இவர்களுக்குப் பிரச்னையே! தங்களுடைய தவறான செயல் களால் அரச தண்டனைக்கும் ஆளாகவும் நேரிடலாம்.

ராகு: ஐந்தில் ராகு இருந்தால், வாக்குசாதுர்யத்தால் எல்லாவற்றிலும் வெற்றி பெறுவர். அலுவலகத்தில் உயர் பதவியில் இருப்பவர்களுடன் சரிசமமாக அமர்ந்து பேசுவர். நெஞ்சழுத்தம் நிரம்பியவர்கள். அரசாங்க பகை உண்டாக வாய்ப்பு உண்டு. பூர்வீகச் சொத்து இவர்களுக்குக் கிடைப்பதில் சிக்கல்கள் ஏற்படலாம். உரிய பரிகாரங் களைச் செய்வதன்மூலமே பெண் குழந்தை பிறக்கும்.

கேது: இதுவும் ஒருவகையில் புத்திரதோஷத்தையே குறிப்பதாகும். ஆனால், நடுத்தர வயதுக்குப் பிறகு பெண்குழந்தை பிறக்கக்கூடும். மற்றவர்களை எளிதில் நம்பமாட்டார்கள். மனைவிக்குச் சித்தப்பிரமை ஏற்பட வாய்ப்பு உண்டு. வேத சாஸ்திரங்களில் தேர்ச்சியும் ஆன்மிகத் தில் நாட்டமும் கொண்டிருப்பர். பூர்வீகச் சொத்துக்களால் பயன் இல்லை. சிலர் அரச தண்டனைக்கு ஆட்படவும் நேரும்.

5-ம் இடத்தில் அமையும் கிரகங்களுக்கு ஏற்ப சொல்லப்படும் பொதுவான பலன்கள் இவை. ஒருவருடைய பூர்வபுண்ணிய ஸ்தானத்தின் நிலையைப் பார்க்கும்போது, ஜாதகத்தில் மற்ற இடங் களில் இருக்கும் கிரகங்கள், அவற்றுக்கும் 5-ம் இடத்துக்கும் உள்ள தொடர்பு முதலான பிற விஷயங்களையும் கவனித்துத் துல்லியமாக ஆராய்ந்தறிய வேண்டும்.