மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ராசி பலன்கள்

ராசி பலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
ராசி பலன்கள்

ஜூலை 9-ம் தேதி முதல் ஜூலை 22-ம் தேதி வரை

மேஷம்
மேஷம்

மேஷம்: நீண்ட நாள் கனவு நனவாகும். பணவரவு அதிகரிக்கும். குழந்தைபாக்கியம் சிலருக்குக் கிடைக்கும். சொத்து பிரச்னை தீரும். வீடு கட்ட வங்கிக்கடன் கிடைக்கும். கணவர் உங்களின் நிர்வாகத் திறமையை மதிப்பார். விலையுயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். பிள்ளைகள் உங்களின் அருமையைப் புரிந்துகொள்வார்கள். உறவினர்கள், நண்பர்களுடன் இருந்த மனத்தாங்கல் நீங்கும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் தவற்றைச் சுட்டிக்காட்டினால் அமைதியாக ஏற்றுக்கொள்ளுங்கள். எதிர்பாராத வெற்றிகளைச் சந்திக்கும் நேரமிது.

ரிஷபம்
ரிஷபம்

ரிஷபம்: இங்கிதமாகப் பேசி பல செயல்களைச் சாதிப்பீர்கள். புதிய திட்டங்கள் நிறைவேறும். ஆளுபவர்கள் அறிமுகமாவார்கள். குடும்பத்தில் நல்லது நடக்கும். வெள்ளிச் சாமான்கள் வாங்குவீர்கள். பணப்புழக்கம் கணிசமாக உயரும். கணவன் மனைவி அந்நியோன்யம் பெருகும். அரசு வகை காரியங்கள் உடனே முடியும். வங்கியில் குறைந்த வட்டிக்கு கடன் கிடைக்கும். சகோதரியின் திருமணம் சிறப்பாக நடந்தேறும். புது சொத்து வாங்குவீர்கள். வியாபாரத்தில் தேங்கிக்கிடந்த சரக்குகள் விற்றுத் தீரும். உத்தியோகத்தில் மறைமுக அவமானங்கள் நீங்கும்.உழைப்பால் உயரும் நேரமிது.

மிதுனம்
மிதுனம்

மிதுனம்: நிர்வாகத் திறன் கூடும். எந்த விஷயத்திலும் இங்கிதமாகப் பேசி வெற்றிபெறுவீர்கள். பாதியில் முடங்கிய வீடு கட்டும் பணி முழுமையடையும். நட்புவட்டம் விரியும். பழைய சொந்தங்கள் தேடி வரும். பழுதான சாதனங்களை மாற்றுவீர்கள். கணவர் உங்கள் ஆலோசனையை முதலில் மறுத்தாலும், பிறகு ஏற்றுக்கொள்வார். சகோதரிக்கு நல்ல இடத்தில் திருமணம் கூடி வரும். ஆனால், மாமனார் மாமியாரை அனுசரித்துச் செல்வது நல்லது. வியாபாரத்தில் பாக்கிகளைப் போராடி வசூலிக்க வேண்டியிருக்கும். பொறுமை தேவை. உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உதவிக்கரம் நீட்டுவார்கள். வேலைப்பளு குறையும். சிந்தித்து செயல்படவேண்டிய நேரமிது.

கடகம்
கடகம்

கடகம்: சொன்ன சொல்லைக் காப்பாற்றுவீர்கள். பழைய கடன் பிரச்னைகள் தீரும். கௌரவப் பதவிகள் தேடி வரும். கணவர் உங்களை முழுமையாக நம்பி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். பிள்ளைகளை எதிர்பார்த்த கல்விப் பிரிவில் சேர்ப்பீர்கள். அலுப்பு, சலிப்பு நீங்கும். உற்சாகமாகப் பல வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். புது வீடு கட்டுவீர்கள். மாமனார் மாமியார் வகையில் மகிழ்ச்சி உண்டு. வியாபாரத்தில் சில நுணுக்கங்களைக் கற்றுக்கொள்வீர்கள். உத்தியோகத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். சம்பள உயர்வு கைக்கு வரும். பொறுப்புகள் அதிகரிக்கும் நேரமிது.

சிம்மம்
சிம்மம்

சிம்மம்: அலைச்சல், செலவுகள் நீங்கும். மன அமைதி கிடைக்கும். தன்னம்பிக்கை துளிர்விடும். முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். எதிர்பார்த்த பணம் வரும். கைமாற்றாக வாங்கியதைத் தந்து முடிப்பீர்கள். சொத்தில் உங்களுக்கான பங்கைக் கேட்டு வாங்குவீர்கள். சகோதரிக்குத் திருமணம் முடியும். கணவர் உங்களிடம் அனுசரணையாக நடந்துகொள்வார். பழுதான வாகனத்தை மாற்றுவீர்கள். பிள்ளைகள் உங்களைப் புரிந்துகொள்வார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். லாபம் பெருகும். உத்தியோகத்தில் கௌரவப் பொறுப்புகள் தேடி வரும். பலரின் பாராட்டையும் பெறுவீர்கள். திட்டமிடுதல் மூலம் சாதிக்கும் நேரமிது.

கன்னி
கன்னி

கன்னி: புதிய முயற்சிகள் பலிதமாகும். எதிர்த்தவர்கள் அடங்குவார்கள். வெளிநாட்டில் இருப்பவர்கள் உதவுவார்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். கணவர், நீங்கள் சொல்வதை விரும்பிச் செய்வார். வீட்டைக் கட்டி முடிக்க, எதிர்பார்த்த வங்கிக்கடன் கிடைக்கும். சகோதரருக்கு நல்ல வேலை கிடைக்கும். நாத்தனாரின் கோபம் தீரும். சுபச் செலவுகள் அதிகரிக்கும். புதிய வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். பணியாளர்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகளின் மதிப்பைப் பெறுவீர்கள். பதவி உயர்வு கிடைக்கும். விட்டுக்கொடுப்பதால் வெற்றிபெறும் நேரமிது.

துலாம்
துலாம்

துலாம்: ஆளுமைத் திறன், நிர்வாகத் திறன் அதிகரிக்கும். பொது விழாக்கள், சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். கட்டுக்கடங்காமல் போகும் செலவுகளை சாமர்த்தியமாகச் சமாளிப்பீர்கள். உறவினர்கள், நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சவால்களில் வெற்றிபெறுவீர்கள். சகோதரர் வகையில் நிம்மதி அடைவீர்கள். சொத்தை மாற்றுவீர்கள். புதிய டிசைனில் நகைகள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் புது ஏஜென்சி எடுப்பீர்கள். விற்பனை அதிகமாகி லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உங்களைப் பற்றிய விமர்சனங்கள் அதிகரிக்கும். உழைப்பால் உயரும் நேரமிது.

விருச்சிகம்
விருச்சிகம்

விருச்சிகம்: குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகளால் நிம்மதி உண்டாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். சொத்து வாங்குவது, வீடு கட்டுவது சுலபமாகும். பெரிய பதவிகள் தேடி வரும். கணவர் மனம்விட்டுப் பேசுவார். சொந்த பந்தங்களின் பலம் பலவீனங்களை அறிந்துகொள்வீர்கள். மகனுக்கு நீங்கள் எதிர்பார்த்ததைப் போலவே நல்ல வாழ்க்கை அமையும். நாத்தனார், மாமியார் மதிப்பார்கள். வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களைக் கற்றுக்கொள்வீர்கள். புதிய கிளை தொடங்குவீர்கள். உத்தியோகத்தில் இழந்த சலுகைகளை மீண்டும் பெறுவீர்கள். மனோபலத்தால் நினைத்ததை முடிக்கும் நேரமிது.

தனுசு
தனுசு

தனுசு: உங்களின் போக்கில் கொஞ்சம் மாற்றம் செய்வீர்கள். பாதியில் நின்ற வேலைகள் முடியும். பழைய வீட்டை நல்ல விலைக்கு விற்று, புது இடம் வாங்குவீர்கள். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். வீட்டுக்குத் தேவையான அடிப்படைச் சாதனங்கள் வாங்குவீர்கள். சிலர் வீடு மாறவேண்டிய சூழ்நிலை உண்டாகும். உறவினர்கள் உதவுவார்கள். வாகனத்தைச் சீர்செய்வீர்கள். சொத்துப் பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். லாபம் அதிகமிருக்கும். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளைத் தாண்டி அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். சமயோஜித புத்தியால் சாதிக்கும் நேரமிது.

மகரம்
மகரம்

மகரம்: உங்களின் திறமைகள் வெளிப்படும். கடனாகக் கொடுத்த பணம் கைக்கு வரும். நீண்ட நாள் பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்கும். நிலம், வீடு வாங்க வங்கிக்கடன் கிடைக்கும். உறவினர்கள் வலியவந்து உறவாடுவார்கள். மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்துவீர்கள். கணவர் வீட்டினர் பல வகையிலும் உதவிகரமாக இருப்பார்கள். சகோதரர்களிடம் வீண் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். திடீர் பயணங்கள், செலவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிடைக்கும். சம்பள உயர்வு உண்டு. சகிப்புத்தன்மையால் நிம்மதி பெறும் நேரமிது.

கும்பம்
கும்பம்

கும்பம்: எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். திருமணப் பேச்சுவார்த்தை கை கூடும். பணம் ஓரளவு கைக்கு வரும். வாகனப்பழுது நீங்கும். கணவர் உங்களின் மனத்தைப் புரிந்துகொள்வார். கணவரின் கோபம் குறையும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். குழந்தைபாக்கியம் சிலருக்குக் கிடைக்கும். வீடு வாங்குவதற்கு வங்கிக்கடன் கிடைக்கும். நாத்தனார், மாமியார் உங்கள் செயலைப் பாராட்டுவார்கள். வியாபாரத்தில் ரகசியங்கள் யார் மூலம் கசிகிறது என்பதை அறிந்து புதிய முடிவு எடுப்பீர்கள். உத்தியோகத்தில் உங்களின் மதிப்பு உயரும். பதவி உயர்வு கிடைக்கும். தடைகளைத் தாண்டி வெற்றிபெறும் நேரமிது.

மீனம்
மீனம்

மீனம்: எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். சிலருக்கு புதிய வேலை கிடைக்கும். சொத்து வாங்கும் யோகம் உண்டாகும். சில மாதங்களாக முடிவெடுக்க முடியாமலிருந்த ஒரு விஷயத்தில் தெளிவான முடிவு எடுப்பீர்கள். மாமியார், நாத்தனார் உங்களின் திறமையைக் கண்டு அதிசயிப்பார்கள். குழந்தைபாக்கியம் சிலருக்குக் கிடைக்கும். கணவர் உங்களிடம் மனம்விட்டுப் பேசுவார். பணப்புழக்கம் அதிகரிக்கும். மின்னணு, மின்சார சாதனங்கள் புதிதாக வாங்குவீர்கள்.வியாபாரத்தில் புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்தியோகத்தில் தலைமையின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். எதிர்பாராத நன்மைகள் வந்தடையும் நேரமிது.