மேஷம்: நினைத்தது நிறைவேறும். எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள். தடைப்பட்டிருந்த வீடு கட்டும் பணியைத் தொடங்குவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். கணவன் மனைவி அந்நியோன்யம் அதிகரிக்கும். குழந்தைபாக்கியம் சிலருக்குக் கிடைக்கும். பிள்ளைகள் உங்களுக்குப் பெருமை சேர்க்கும்விதமாக படிப்பில் சாதனை புரிவார்கள். புதிய இடத்தில் நல்ல வேலை அமையும். நாத்தனார், மாமியாருக்கு உங்கள்மீது நம்பிக்கை வரும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் உங்களின் நிறுவனத்தைத் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும். சந்தர்ப்பம் அறிந்து காய் நகர்த்தும் நேரமிது.

ரிஷபம்: திட்டங்கள் நிறைவேறும். கனிவாகப் பேசி சாதிப்பீர்கள். பணவரவு அதிகரிக்கும். பழைய சொத்தை மாற்றி, புது இடம் வாங்குவீர்கள். கணவர் மனம்விட்டுப் பேசுவார். பிள்ளைகளின் நினைவாற்றல் கூடும். திருமண முயற்சிகள் கைகூடும். வாகனத்தைச் சரிசெய்வீர்கள். தாயாரின் உடல்நலம் சீராகும். அரசாங்க காரியங்கள் விரைந்து முடியும். மாமியார், நாத்தனார் உங்களிடம் முக்கிய விஷயங்களைப் பகிர்ந்துகொள்வார்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் அதிகாரிகள் புதிய பொறுப்பை உங்களிடம் ஒப்படைப்பார்கள். மாறுபட்ட அணுகுமுறையால் வெற்றிபெறும் நேரமிது.

மிதுனம்: கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். பூர்வீகச் சொத்தைச் சீரமைப்பீர்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். கணவர் உங்களின் வார்த்தைகளுக்கு மதிப்பளிப்பார். மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். மகனின் அலட்சியப்போக்கு மாறும். பழைய உறவினர்கள், தோழிகளைச் சந்தித்து மகிழ்வீர்கள். இங்கிதமான பேச்சால் மாமனார், மாமியாரைக் கவருவீர்கள். விலையுயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். வியாபாரத்தில் இருப்பவர்கள் கடையை விரிவுபடுத்துவார்கள். உத்தியோகத்தில் உங்களின் புதிய முயற்சிகளை உயரதிகாரி பாராட்டுவார். தைரியமான முடிவுகள் எடுக்கும் நேரமிது.

கடகம்: எதிர்பாராத பணவரவு உண்டு. புது வீடு கட்டத் தொடங்குவீர்கள். கணவருக்கு வர வேண்டிய சம்பள பாக்கி கைக்கு வரும். பிள்ளைகளிடம் முக்கியமான குடும்ப விஷயங்களைப் பகிர்ந்துகொள்வீர்கள். புதிய பயிற்சி வகுப்புகளில் அவர்களைச் சேர்ப்பீர்கள். வழக்கில் புதிய திருப்பம் ஏற்படும். வாகனத்தை மாற்றுவீர்கள். உறவினர்கள் மத்தியில் உங்களின் அந்தஸ்து உயரும். கோயில் விழாக்களை முன்னின்று நடத்துவீர்கள். மாமனார், மாமியார் வகையில் மகிழ்ச்சி உண்டு. பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். உத்தியோகத்தில் பொறுப்புகள் கூடும். மற்றவர்களின் உதவியால் சாதிக்கும் நேரமிது.

சிம்மம்: உங்களின் ஆளுமைத்திறன் அதிகரிக்கும். செல்வாக்கு கூடும். பணபலம் உயரும். பெரிய பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். வீடு கட்ட வங்கிக் கடனுதவி கிடைக்கும். கணவர் நீங்கள் சொல்வதைச் செய்வார். பிள்ளைகளின் உத்தியோகம், திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் வெற்றியடையும். மாமியார், நாத்தனார் உங்களின் நிர்வாகத் திறமையை மதிப்பர். உறவினர்கள், தோழிகளால் செலவுகள் வரும். புதிதாகச் சொத்து வாங்குவீர்கள். வியாபாரத்தில் புது யுக்திகளைக் கையாளுவீர்கள். உத்தியோகத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். மூத்த அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். அதிரடியாகப் புதிய திட்டங்களைத் தீட்டும் நேரமிது.

கன்னி: சவால்களில் வெற்றிபெறுவீர்கள். பணவரவு உண்டு. புதிதாக வீடு, மனை வாங்குவீர்கள். வீட்டு வேலைகளை உங்கள் கணவர் இழுத்துப்போட்டுக்கொண்டு செய்வார். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக்கொள்வார்கள். நாத்தனார், உடன்பிறந்தவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சுப செலவுகள் அதிகரிக்கும். வாகனப்பழுதை நீக்குவீர்கள். மாமியாரால் இருந்த பிரச்னை தீரும். தேவையற்ற வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. தோழிகள், உறவினர்களின் வருகையால் வீடு களைகட்டும். வியாபாரத்தில் சூட்சுமங்களைக் கற்றுக்கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருந்துவந்த பழைய பிரச்னைகள் முடிவுக்கு வரும். சுப காரியங்கள் கூடிவரும் நேரமிது.

துலாம்: நீண்ட நாள் கனவு நனவாகும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். திருமணம், சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். வீடு வாங்குவது, விற்பது சாதகமாக அமையும். கணவரிடம் கலந்தாலோசித்து செலவுகளைக் குறைப்பீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாயமும் உண்டு. மகளின் திருமணத்தைச் சிறப்பாக நடத்துவீர்கள். புதியவரின் நட்பு கிடைக்கும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். மாமியார், நாத்தனார் கனிவாக நடந்துகொள்வார்கள். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் உண்டு. உத்தியோகத்தில் பதவி உயர்வுடன் இடமாற்றம் உண்டு. ஆசைகள் நிறைவேறும் நேரமிது.

விருச்சிகம்: எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். எதிர்ப்புகள் அடங்கும். அரசாங்க அதிகாரிகளால் உதவிகள் கிடைக்கும். நீண்ட நாள் பிரச்னைகள் முடிவுக்கு வரும். எதிர்பார்த்த இடத்தில் கடன் கிடைக்கும். புது வேலை கிடைக்கும். வீட்டில் கூடுதலாக அறை ஒன்றைக் கட்டுவீர்கள். மகள் உங்களைப் புரிந்துகொள்வாள். மாமியார், மாமனார் உங்களுக்கு ஆதரவாகப் பேசுவார்கள். கணவர் சில நேரங்களில் முணுமுணுப்பார். சித்தர்களின் ஆசி கிடைக்கும். எதிர்பார்த்த அயல்நாட்டுப் பயணம் அமையும். வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு உண்டு. பழைய சிக்கல்கள் தீரும் நேரமிது.

தனுசு: உங்கள் அணுகுமுறையை மாற்றிக்கொள்வீர்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். அறிஞர்களின் நட்பால் தெளிவடைவீர்கள். சொத்தில் மாற்றம் செய்வீர்கள். கணவரின் அன்பு பெருகும். பிள்ளைகளின் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். நவீன டிசைனில் நகை வாங்குவீர்கள். மாமியார், நாத்தனார் உங்கள் புத்திசாலித்தனத்தை மெச்சுவார்கள். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. மனக்கசப்பால் ஒதுங்கியிருந்த உறவினர்கள் இனிமையாகப் பேசுவார்கள். வெளியூர்ப் பயணங்கள் இருக்கும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்வீர்கள். உத்தியோகத்தில் உங்களின் திறமையைக்கண்டு மேலதிகாரி பாராட்டுவார். சவால்களில் வெற்றிபெறும் நேரமிது.

மகரம்: சமூகத்தில் உங்கள் கை ஓங்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். கம்பீரமாகப் பேசுவீர்கள். நிலம், வீடு வாங்குவது, விற்பது சுமுகமாக முடியும். கணவர் உங்களின் தியாக மனத்தைப் புரிந்துகொள்வார். பிள்ளைகளின் பிடிவாதத்தைச் சாதுர்யமாகச் சரிசெய்வீர்கள். பழைய கடனைத் தீர்க்க, புதிய வழி பிறக்கும். சகோதரர் வகையில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். நட்புவட்டம் விரியும். வியாபாரத்தில் போட்டிகளைச் சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் விமர்சனங்களைக் கண்டு அஞ்ச வேண்டாம். சொன்ன சொல்லை நிறைவேற்றும் நேரமிது.

கும்பம்: தடைகளைத் தாண்டி முன்னேறுவீர்கள். பிரபலங்களின் உதவியால் சில காரியங்களைச் சாதிப்பீர்கள். பணம் வரும் என்றாலும் பற்றாக்குறையும் நீடிக்கவே செய்யும். கணவர் உங்களுக்குச் சாதகமாகப் பேசுவார். சொந்தபந்தங்களின் பலவீனங்களையும் உங்களிடம் விவரிப்பார். உறவினர்கள், தோழிகளுடன் இருந்த மனஸ்தாபம் நீங்கும். சொத்து சிக்கலுக்கு சுமுகத் தீர்வு காண்பீர்கள். பழுதான வாகனத்தை மாற்றுவீர்கள். மாமியார், நாத்தனார் வகையில் ஒற்றுமை பலப்படும். வியாபாரத்தில் சந்தை நிலவரம் அறிந்து புது ஏஜென்ஸி எடுங்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களை உதாசீனப்படுத்த வேண்டாம். வளைந்து நிமிரும் நேரமிது.

மீனம்: உங்களின் மனப்போராட்டங்கள் ஓயும். எதிர்பாராத பணவரவு உண்டு. வாங்கியிருந்த பணத்தைத் திருப்பித் தருவீர்கள். மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். சொந்தபந்தங்கள் மத்தியில் மதிப்பு கூடும். மாமியார், நாத்தனாரின் மனம் மாறும். அரசு வகையில் உதவிகள் கிடைக்கும். செல்வாக்கு கூடும். சகோதரிக்கு இருந்த பிரச்னையைத் தீர்ப்பீர்கள். வழக்கு சாதகமாகும். கணவருடன் ஈகோ பிரச்னை வரும். நவீன சாதனங்கள் பழுதாகும். வியாபாரம் சூடுபிடிக்கும். புது முதலீடு செய்வீர்கள். உத்தியோகத்தில் புதிய தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொள்வீர்கள். பிரச்னைகளிலிருந்து விடுபடும் நேரமிது.