Published:Updated:

ராசிபலன்: ஆகஸ்ட் 27 - முதல் செப்டம்பர் 9-ம் தேதி வரை

திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைக்கும்.

பிரீமியம் ஸ்டோரி

மேஷம்

சூரியன், சுக்கிரன், செவ்வாய் ஆகிய கிரகங்கள் 5-ம் வீட்டில் நிற்பதால் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பணவரவு அதிகரிக்கும். நாடாளுபவர்களின் தொடர்பு கிடைக்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். புது வீடு கட்டத் தொடங்குவீர்கள். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். பிள்ளைகளால் புகழ், கௌரவம் உயரும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். மனைவிவழியில் ஆதாயம் உண்டு.

ராசிபலன்: ஆகஸ்ட் 27 - முதல் செப்டம்பர் 9-ம் தேதி வரை

ஆலயங்களைப் புதுப்பிக்க உதவுவீர்கள். புதன் சாதகமாக இருப்பதால் உறவினர்கள், நண்பர்களால் ஆதாயமடைவீர்கள். வியாபாரத்தில் லாபம் வரும். புதுக் கிளைகள் தொடங்குவீர்கள். உத்தியோகத்தில் தலைமையின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். சக ஊழியர்களிடம் கவனமாகப் பழகுங்கள். கலைத்துறையினர், விமர்சனங்கள் பற்றி கவலைப்படாமல் செயலாற்றுங்கள்.

சகிப்புத் தன்மையால் சங்கடங்கள் தீரும்.

ரிஷபம்

சுக்கிரனும், சூரியனும், புதனும் வலுவாக நிற்பதால் எதிர்பார்த்த காரியங்கள் தடையின்றி முடியும். வி.ஐ.பிகள் உதவுவார்கள். வீடு வாங்குவது, கட்டுவது சாதகமாகும். அரசாங்கம் சம்பந்தப்பட்ட வேலைகள் உடனே முடியும். சிலர் வீடு மாறுவீர்கள். பெற்றோரின் உடல் நலம் சீராகும். குரு பகவான் வலுவாக 7 - ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் தொட்ட காரியம் துலங்கும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும்.

ராசிபலன்: ஆகஸ்ட் 27 - முதல் செப்டம்பர் 9-ம் தேதி வரை

பூர்வீக சொத்தில் பங்கைக் கேட்டு வாங்குவீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். குழந்தைபாக்கியம் சிலருக்குக் கிடைக்கும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். வியாபாரத்தில் புது யுக்திகளைக் கையாண்டு லாபத்தைப் பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளைத் தாண்டி வெற்றிபெறுவீர்கள். கலைத்துறையினரின் திறமைகள் வெளிப்படும்.

விடாமுயற்சியால் இலக்கை எட்டுவீர்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மிதுனம்

சூரியனும், சுக்கிரனும், புதனும் 3-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் முயற்சிகள் பலிதமாகும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். வங்கிக் கடன் கிடைத்து வீடு கட்டத் தொடங்குவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். பிள்ளைகளின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். இளைய சகோதரர் வகையில் நன்மை உண்டு. ஆடை, ஆபரணங்கள் சேரும். கல்யாண பேச்சு வார்த்தை கைகூடும். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள்.

ராசிபலன்: ஆகஸ்ட் 27 - முதல் செப்டம்பர் 9-ம் தேதி வரை

வியாபாரத்தில் அவ்வப்போது விடுமுறையில் சென்ற பணியாளர்கள் பொறுப்பாக நடந்துகொள்வார்கள். உத்தியோகத்தில் உங்களை எப்போதும் எதிரியாக நினைத்த சக ஊழியர்கள் இனி வலிய வந்து நட்பாகப் பழகுவார்கள். கலைத்துறையினரின் படைப்புகளுக்கு மதிப்பு மரியாதை கூடும்.

அடுத்த வாரத்தின் பிற்பகுதியில் சாதிப்பீர்கள்.

கடகம்

சுக்கிரனும், புதனும் சாதகமாக நிற்பதால், உங்கள் செயலில் வேகம் கூடும். அதிகாரம் மிக்க பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன், மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். புது இடத்தில் சிலருக்கு வேலை கிடைக்கும். பூர்வீக சொத்தை மாற்றியமைப்பீர்கள். தனாதிபதி சூரியன் ஆட்சி பெற்றிருப்பதால், தொட்டது துலங்கும். கேட்ட இடத்தில் பண உதவி கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமைவதில் இருந்த தடைகள் நீங்கும். வீடு மாறுவது, கட்டுவது சிறப்பாக முடியும்.

ராசிபலன்: ஆகஸ்ட் 27 - முதல் செப்டம்பர் 9-ம் தேதி வரை

கணவன், மனைவிக்குள் வீண் விவாதங்களில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வேலையாட்கள், வாடிக்கையாளர்களிடம் கனிவாக நடந்துகொள்ளுங்கள். உத்தியோகத்தில் சவால்களைச் சந்திக்கவேண்டி வரும். மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். கலைத்துறையினருக்குத் தள்ளிப்போன ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

சூழ்ச்சிகளை முறியடித்து வெற்றி பெறுவீர்கள்.

சிம்மம்

ராசிநாதன் சூரியன் ராசிக்குள் ஆட்சி பெற்றிருப்பதால் எதிலும் வெற்றி கிட்டும். நிர்வாகத் திறமை அதிகரிக்கும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டு. அழகும் இளமையும் கூடும். தன்னம்பிக்கை, தைரியம் பிறக்கும். அயல்நாட்டுப் பயணம் சாதகமாக அமையும். ராசிக்குள்ளேயே சுக்கிரன் வலுவாக நிற்பதால் பரபரப்பாகச் செயல்பட்டு பல வேலைகளையும் முடிப்பீர்கள். எதிலும் ஆர்வம் பிறக்கும்.

ராசிபலன்: ஆகஸ்ட் 27 - முதல் செப்டம்பர் 9-ம் தேதி வரை

புதன் சாதகமாக இருப்பதால் சுபநிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். உறவினர்கள், உடன்பிறந்தவர்கள் உங்களின் தியாக உணர்வைப் புரிந்து கொள்வார்கள். வியாபாரத்தில் புதிய சலுகைகளை அறிவிப்பீர்கள். வாடிக்கையாளர்களின் வருகை அதிகரிக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள் தொடர்ந்து உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். கலைத்துறையினர் வேற்றுமொழிகளில் வாய்ப்புகளால் புகழடைவீர்கள்.

அடிப்படை வசதிகள் பெருகும்.

கன்னி

ங்கள் ராசிநாதன் புதன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். வி.ஐ.பிகள் நண்பர்களாவார்கள். கடனாகக் கொடுத்த பணம் கைக்கு வரும். புதிய வாகனம் வாங்குவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துகொள்வார்கள். மனக்கசப்பால் ஒதுங்கி இருந்த உறவினர்கள் இனி பேசுவார்கள். செவ்வாய் சாதகமாகச் செல்வதால் பெரிய பதவிகள் தேடி வரும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள்.

ராசிபலன்: ஆகஸ்ட் 27 - முதல் செப்டம்பர் 9-ம் தேதி வரை

திருமணம், சீமந்தம் போன்ற சுபசெலவுகள் அதிகரிக்கும். விருந்தினர்கள் வருகையால் வீட்டில் உற்சாகம் பொங்கும். வியாபாரத்தில் புதிய திட்டங்கள் வகுத்து லாபத்தைப் பெருக்க முற்படுவீர்கள். உத்தியோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். கலைத்துறையினர் படைப்புகள் பற்றிப் பகிர்ந்து கொள்ளவேண்டாம்.

புதிய திட்டங்கள் நிறைவேறும்.

துலாம்

புதன் சாதகமாக இருப்பதால் பழைய பிரச்னைகளுக்கு எதார்த்தமான முடிவுகள் எடுப்பீர்கள். மனைவிவழி உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நட்புவட்டம் விரியும். சூரியனும், சுக்கிரனும் லாப வீட்டில் நிற்பதால் அரசாங்க அதிகாரிகளின் அறிமுகம் கிடைக்கும். தாயாரின் உடல்நலம் சீராகும். குருவும், செவ்வாயும் சாதகமாக இருப்பதால் தைரியமாக எதையும் முடிப்பீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும்.

ராசிபலன்: ஆகஸ்ட் 27 - முதல் செப்டம்பர் 9-ம் தேதி வரை

பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். மகளின் திருமணத்தைச் சிறப்பாக நடத்துவீர்கள். சனியும், கேதுவும் வலுவாக அமர்ந்திருப்பதால் எதிர்பாராத பணவரவு உண்டு. பலம் பலவீனத்தை உணர்வீர்கள். வழக்கில் திருப்பம் ஏற்படும். வியாபாரத்தில் பெரிய நிறுவனங்களுடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். பழைய பங்குதாரரை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உயர்வு உண்டு. கலைத்துறையினருக்கு புது வாய்ப்புகள் தேடி வரும்.

நல்லவர்களின் நட்பால் சாதிப்பீர்கள்.

விருச்சிகம்

சூரியனும், புதனும் ஆட்சிபெற்று பலமாக நிற்பதால் நிர்வாகத் திறமை கூடும். புது வேலை அமையும். தந்தைவழிச் சொத்துகள் வந்து சேரும். குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். பிள்ளைகளால் இருந்த பிரச்னைகள் நீங்கும். அரசால் ஆதாயம் உண்டு. உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். வழக்கினால் இருந்த பயம் விலகும். தேர்வில் வெற்றி கிடைக்கும். சுக்கிரனும் 10-ம் வீட்டில் நிற்பதால் மனைவிவழியில் அலைச்சல் இருக்கும். மனைவிக்கு வேலை கிடைக்கும்.

ராசிபலன்: ஆகஸ்ட் 27 - முதல் செப்டம்பர் 9-ம் தேதி வரை

குரு பகவான் ராசிக்குள் நிற்பதால் யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்திடவேண்டாம். பெரிய பதவிகள் தேடி வரும். சகோதரிக்கு இருந்த பிரச்னை தீரும். வழக்கில் வெற்றிபெறுவீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை ஈடுகட்டுவீர்கள். உத்தியோகத்தில் உங்களை நம்பி முக்கியப் பொறுப்புகளை ஒப்படைப்பர். கலைத்துறையினர் மூத்த கலைஞர்களின் வழிகாட்டல் மூலம் வெற்றியடைவார்கள்.

திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைக்கும்.

தனுசு

சுக்கிரனும், புதனும் சாதகமான வீடுகளில் பயணிப்பதால் உங்கள் அணுகுமுறையை மாற்றிக்கொள்வீர்கள். சோர்வு நீங்கித் துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். பணவரவு திருப்தி தரும். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். மகளின் கல்யாண முயற்சிகள் வெற்றியடையும். பூர்வீக சொத்தைச் சீர்செய்வீர்கள். தங்கைக்குத் திருமணம் முடியும். உங்களின் பாக்யாதிபதியான சூரியனும் 9-ம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்ந்திருப்பதால் சவாலான வேலைகளையும் உடனே முடிப்பீர்கள்.

ராசிபலன்: ஆகஸ்ட் 27 - முதல் செப்டம்பர் 9-ம் தேதி வரை

பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய வாய்ப்புகள் வரும். 12-ம் வீட்டில் மறைந்திருப்பதால் அலைச்சல், செலவுகள் வரக்கூடும். வியாபாரத்தில் லாபம் பெருகும். பங்குதாரர்கள் உங்களின் ஆலோசனையை ஏற்பர். உத்தியோகத்திலிருப்பவர்களுக்குச் சம்பள பாக்கி கைக்கு வரும். தலைமையால் பாராட்டப்படுவீர்கள். கலைத்துறையினரின் கலைத்திறன் வளரும்.

முற்போக்குச் சிந்தனையால் முன்னேறுவீர்கள்.

மகரம்

ந்தைவழியில் அனுகூலம் உண்டு. திடீர் பயணங்களால் ஆதாயமடைவீர்கள். புண்ணியஸ்தலங்கள் சென்று வருவீர்கள். 8-ம் வீட்டில் சூரியன் மறைந்திருப்பதால், உங்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தையும் அறியும் வாய்ப்பு வரும். பணப்புழக்கம் இருக்கும். ஆனாலும் வரவுக்கு மிஞ்சிய செலவுகளால் கடன் வாங்க வேண்டி வரும். உறவினர் திருமணத்தை முன்னின்று நடத்துவீர்கள். வெளிவட்டாரத்தில் மரியாதை கூடும்.

ராசிபலன்: ஆகஸ்ட் 27 - முதல் செப்டம்பர் 9-ம் தேதி வரை

குருபகவான் சாதகமாக இருப்பதால் எல்லா பிரச்னைகளையும் சமாளிக்கும் சமார்த்தியம் பிறக்கும். வியாபாரத்தில் லாபம் உயரும். மற்றவர்களை நம்பி பெரிய முதலீடுகள் வேண்டாம். பழைய பாக்கிகளைப் போராடி வசூலிப்பீர்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். கலைத்துறையினர் போட்டிகளிருந்தாலும் வெற்றிபெறுவார்கள்.

அமைதி காக்கவேண்டிய நேரமிது.

கும்பம்

சூரியனும், புதனும் வலுவாக இருப்பதால் எதிர்ப்புகள் அடங்கும். அரசு வகை உதவி கிடைக்கும். குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் விலகும். சுக்கிரனும் 7-ம் வீட்டில் நிற்பதால் மனைவிக்கு இருந்து வந்த மூட்டுவலி நீங்கும். வீடு மாறுவீர்கள். திருமணம் கூடி வரும். மனஇறுக்கம், கோபம், ஏமாற்றம் குறையும். உறவினர்களுடன் இருந்த உரசல் விலகும்.வீண்வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. எதிர்பார்த்திருந்த தொகையும் கைக்கு வரும்.

ராசிபலன்: ஆகஸ்ட் 27 - முதல் செப்டம்பர் 9-ம் தேதி வரை

வழக்கு சாதகமாகத் திரும்பும். 7 - ம் வீட்டில் செவ்வாய் நிற்பதால் மகனுக்கு உயர்கல்வி, உத்தியோகம் அயல்நாட்டில் அமையும். வியாபாரிகளுக்கு லாபம் சுமாராகத்தான் இருக்கும். வேலையாட்களால் செலவுகள் வரும். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். கலைத்துறையினரை உதாசினப்படுத்திய நிறுவனமே அழைத்துப் பேசும்.

எதையும் கறாராகப் பேசி சாதிப்பீர்கள்.

மீனம்

சூரியன் 6-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால், செல்வாக்கு, புகழ் கூடும். சுபநிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். அரசாங்க விஷயங்கள் உடனே முடியும். திடீர் பணவரவு உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். புது வீடு கட்டத் தொடங்குவீர்கள். ஆனால் 6-ம் வீட்டில் சுக்கிரனும், 7-ம் தேதி வரை புதனும் மறைந்திருப்பதால் மனைவியுடன் வீண்வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது.

ராசிபலன்: ஆகஸ்ட் 27 - முதல் செப்டம்பர் 9-ம் தேதி வரை

உறவினர்களுடன் மோதல்கள் வரும். நண்பர்கள், உறவினர்களால் அலைச்சல், செலவுகள் வந்து நீங்கும். துணிச்சலாகச் சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வியாபாரம் சூடு பிடிக்கும். வெளிநாட்டு நிறுவனங்களுடன் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் எதிர்த்த பதவி உயர்வு கிடைக்கும். கலைத்துறையினருக்கு வசதி, வாய்ப்புகள் பெருகும்.

எதிர்பாராத திடீர் நன்மைகள் சூழும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு