Published:Updated:

ராசி பலன்கள்: ஆகஸ்ட் 6-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை

ராசி பலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
ராசி பலன்கள்

ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவேண்டிய நேரமிது

ராசி பலன்கள்: ஆகஸ்ட் 6-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை

ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவேண்டிய நேரமிது

Published:Updated:
ராசி பலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
ராசி பலன்கள்
ராசி பலன்கள்: ஆகஸ்ட் 6-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை

மேஷம்: நினைத்தது நிறைவேறும். வீடு கட்டுவது பற்றி முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். கணவரின் அன்பும் ஆதரவும் பெருகும். பிள்ளைகளின் தனித் திறமைகளை வளர்ப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பூர்வீக சொத்தில் மாற்றம் செய்வீர்கள். குழந்தைபாக்கியம் சிலருக்குக் கிடைக்கும். பழைய நகைகளைக் கொடுத்து புதிய டிசைனில் நகைகள் வாங்குவீர்கள். வழக்குகள் சாதகமாகும். வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் யாரையும் பகைத்துக்கொள்ள வேண்டாம். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவேண்டிய நேரமிது.

ராசி பலன்கள்: ஆகஸ்ட் 6-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ரிஷபம்: சவால்களில் வெற்றிபெறுவீர்கள். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். நிலம், வீடு வாங்க வங்கிக்கடன் கிடைக்கும். பெரிய பதவிகள் தேடி வரும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். உங்கள் ரசனைக்கேற்ப வீடு, வாகனம் அமையும். அவ்வப்போது உடல் சோர்வு, மன உளைச்சல் வந்துபோகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். வேலையாட்கள் உதவுவார்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகமானாலும் தலைமையின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். சமயோஜித புத்தியால் முன்னேறும் நேரமிது.

ராசி பலன்கள்: ஆகஸ்ட் 6-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை

மிதுனம்: இதமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். திடீர் பணவரவு உண்டு. பழைய இடத்தை விற்று புது வீடு வாங்குவீர்கள். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து யோசிப்பீர்கள். நவீன சாதனங்கள் வாங்குவீர்கள். மாமனார், மாமியார் பாராட்டும்படி நடந்துகொள்வீர்கள். கணவரின் குற்றம், குறைகளை அடிக்கடி குத்திக்காட்ட வேண்டாம். உடல்நலனில் கவனம் செலுத்துவது அவசியம். கார உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் புதிய தொழில்நுட்பத்தின் மூலம் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு எதிர்பார்த்தபடி அமையும். உறவினர்களால் ஆதாயமடையும் நேரமிது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
ராசி பலன்கள்: ஆகஸ்ட் 6-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை

கடகம்: உற்சாகமாகப் பல வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். முகத்தில் தெளிவு பிறக்கும். பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். வீடு, வாகனச் சேர்க்கை உண்டு. கௌரவப் பதவிகள் தேடி வரும். கணவர் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துகொள்வார். பிள்ளைகளைப் புதிய பயிற்சி வகுப்பில் சேர்ப்பீர்கள். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். மாமியார் உங்களின் செயல்களைப் பாராட்டுவார். முன்கோபத்தைத் தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துகொள்வீர்கள். உத்தியோகத்தில் நிலையற்ற சூழல் நிலவும். கவனமாக இருப்பது நல்லது. அக்கம்பக்கம் அனுசரித்துச் செல்லவேண்டிய நேரமிது.

ராசி பலன்கள்: ஆகஸ்ட் 6-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை

சிம்மம்: எடுத்த காரியங்கள் சுபமாக முடியும். பணப்புழக்கம் அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். நிலம், வீடு வாங்குவது, விற்பது சாதகமாக அமையும். கணவர் உங்களின் பெருந்தன்மையைப் பாராட்டுவார். மகளுக்கு தீவிரமாக வரன் தேடுவீர்கள். மகனுக்கு புதிய இடத்தில் வேலை கிடைக்கும். தங்க நகைகள் வாங்குவீர்கள். வழக்கு சாதகமாகும். நாத்தனார், மாமியார் உங்கள் பேச்சுக்கு மதிப்பளிப்பார்கள். பிள்ளைகளுடன் வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். சமூகத்தில் மதிப்பு மரியாதை கூடும் நேரமிது.

ராசி பலன்கள்: ஆகஸ்ட் 6-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை

கன்னி: கடினமான காரியங்களைக்கூட எளிதாக முடிப்பீர்கள். தினந்தோறும் எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். கணவன் மனைவி அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகள் உங்கள் அருமையைப் புரிந்துகொள்வார்கள். சொத்து வாங்க முன்பணம் தருவீர்கள். மாமனார், மாமியார் மெச்சுவர். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். அதிக வட்டிக்கு வாங்கிய கடனை பைசல் செய்வீர்கள். தாயாருக்கு மருத்துவச் செலவு ஏற்படலாம். அவரின் உடல்நலனில் கவனமாக இருப்பது நல்லது. வியாபாரத்தில் வரவு உயரும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். உத்தியோகத்தில் கூடுதலாக வேலை பார்க்கவேண்டி வரும். அதிகாரத்தில் இருப்பவர்கள் உதவும் நேரமிது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ராசி பலன்கள்: ஆகஸ்ட் 6-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை

துலாம்: உங்கள் பலம், பலவீனத்தை உணர்வீர்கள். அரசியல்வாதிகள் உதவுவார்கள். புது வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு நல்ல பதில் வரும். எதிர்பாராத பணவரவு உண்டு. கணவர், உங்களிடம் முக்கிய விஷயங்களைப் பகிர்ந்துகொள்வார். பிள்ளைகள், குடும்ப சூழ்நிலைக்குத் தகுந்தாற்போல் பொறுப்பாக இருப்பார்கள். வழக்கில் வெற்றிபெறுவீர்கள். உறவினர்களுடன் இருந்த பிணக்கு தீரும். பழைய சொந்தங்கள் தேடி வரும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் உங்கள்மீது இருந்த வீண்பழி நீங்கும். சக ஊழியர்களால் பாராட்டப்படுவீர்கள். வசதி வாய்ப்புகள் பெருகும் நேரமிது.

ராசி பலன்கள்: ஆகஸ்ட் 6-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை

விருச்சிகம்: மனத்தில் தன்னம்பிக்கை பிறக்கும். திடீர் யோகம் உண்டாகும். உறவினர்கள், தோழிகளிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வரவேண்டிய பணம் கைக்கு வரும். கம்பீரமாகப் பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். மூத்த சகோதரர் வகையில் உதவிகள் கிடைக்கும். கணவர் உங்களின் திறமையைப் பாராட்டுவார். குழந்தைபாக்கியம் சிலருக்குக் கிடைக்கும். வியாபாரத்தில் ஆழம் தெரியாமல் காலை விட வேண்டாம். வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் சுட்டிக்காட்டினால் அமைதியாக ஏற்றுக்கொள்ளுங்கள். சிக்கனம் தேவைப்படும் நேரமிது.

ராசி பலன்கள்: ஆகஸ்ட் 6-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை

தனுசு: கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவீர்கள். மனவலிமை கூடும். வராது என்றிருந்த பணம் வரும். கணவர், உங்களின் நிர்வாகத் திறமையை மதிப்பார். மகனின் அலட்சியப்போக்கு மாறும். திருமண முயற்சிகள் வெற்றியடையும். உடன்பிறந்தவர்களின் பிரச்னைகளைத் தீர்த்துவைப்பீர்கள். வீட்டை அழகுபடுத்துவீர்கள். ஆலயங்களைப் புதுப்பிக்க உதவுவீர்கள். வெளிவட்டாரத்தில் உங்களின் அந்தஸ்து உயரும். மாமியார், நாத்தனார் உங்களின் சகிப்புத் தன்மையைப் பாராட்டுவார்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். எதிர்பாராத திருப்பங்கள் ஏற்படும் நேரமிது.

ராசி பலன்கள்: ஆகஸ்ட் 6-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை

மகரம்: செல்வாக்கு உயரும். அழகு, இளமை கூடும். கனிவாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். பணப்புழக்கம் கணிசமாக உயரும். வாகன வசதிகள் பெருகும். கணவர் உங்களிடம் முக்கியப் பொறுப்புகளை ஒப்படைப்பார். பிள்ளைகள் உங்கள் பேச்சுக்கு மதிப்பளிப்பார்கள். ஆடை, ஆபரணங்கள் சேரும். அரசு வகை காரியங்களில் அலட்சியம் வேண்டாம். வியாபாரத்தில் ஆர்வம் பிறக்கும். பழைய சரக்குகளைத் தள்ளுபடி விலையில் விற்றுமுடிப்பீர்கள். உத்தியோகத்தில் பிறரின் குறைகளைச் சுட்டிக்காட்ட வேண்டாம். வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. மன பலத்தால் சாதிக்கும் நேரமிது.

ராசி பலன்கள்: ஆகஸ்ட் 6-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை

கும்பம்: பிரச்னைகளை எதிர்கொள்ளும் ஆற்றல் பிறக்கும். வெளிநாட்டிலிருப்பவர்கள் உதவுவார்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் யார் என்பதைக் கண்டறிவீர்கள். வழக்குகளில் சுமுகத் தீர்வு கிடைக்கும். பிள்ளைகளின் பிடிவாத குணத்தை அன்பால் மாற்றுவீர்கள். கர்ப்பிணிகள் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. யாரையும் முழுமையாக நம்ப வேண்டாம். நாத்தனார், மாமியார் வகையில் அலைச்சல் இருக்கும். சொத்து பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் புதியவர்களை பணியில் சேர்ப்பீர்கள். லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். விட்டுக்கொடுக்கவேண்டிய நேரமிது.

ராசி பலன்கள்: ஆகஸ்ட் 6-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை

மீனம்: புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். நிலம், வீடு வாங்க வங்கிக்கடன் கிடைக்கும். நீண்ட நாள் பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்கும். பணவரவு திருப்தி தரும். கணவர் உங்களிடம் அனுசரணையாக நடந்துகொள்வார். புதிய வேலை கிடைக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தங்கும். விலையுயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். வீடு மாறுவது குறித்து யோசிப்பீர்கள். சகோதரர் வகையில் நன்மை உண்டு. மாமியார் உதவிகரமாக இருப்பார். வியாபாரத்தில் சில நுணுக்கங்களைக் கற்றுக்கொள்வீர்கள். லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உங்களைப் பாராட்டுவார்கள். கனவுகள் நனவாகும் நேரமிது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism