தொடர்கள்
தன்னம்பிக்கை
Published:Updated:

ராசி பலன்கள்: நவம்பர் 12-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை

மேஷம்
பிரீமியம் ஸ்டோரி
News
மேஷம்

திட்டமிடுதலால் வெற்றியடையும் காலமிது.

மேஷம்
மேஷம்

மேஷம்: மாறுபட்ட அணுகுமுறையால் வெற்றிபெறுவீர்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். தோற்றப்பொலிவு கூடும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். உங்கள் ரசனைக்கேற்ற வீட்டு மனை கிடைக்கும். புதிய வாகனம் வாங்குவீர்கள். கணவன் மனைவி அந்நியோன்யம் அதிகரிக்கும். மகளுக்குப் புதிய நிறுவனத்தில் வேலை கிடைக்கும். நவீன டிசைனில் நகை வாங்குவீர்கள். கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்தியோகத்தில் பிறரின் குறைகளை நாசூக்காகச் சுட்டிக்காட்டுவீர்கள்.

புகழ், கௌரவம் கூடும் நேரமிது.

ரிஷபம்
ரிஷபம்

ரிஷபம்: மனத்திலிருந்த குழப்பம் நீங்கும். பழைய பிரச்னைகள் தீரும். சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். புதிதாக நிலம், வீடு வாங்குவீர்கள். பண வரவு அதிகரிக்கும். கணவரின் குறை நிறைகளைச் சுட்டிக்காட்டி அவரை மாற்றுவீர்கள். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து யோசிப்பீர்கள். நாத்தனார், மாமியார் மத்தியில் உங்களின் மதிப்பு உயரும். சகோதரர் மனம் மாறி உதவுவார். வழக்கில் வெற்றிபெறுவீர்கள். வெளியூர்ப் பயணம் அமையும். வியாபாரத்தில் அதிரடியாக சில மாற்றங்களைச் செய்வீர்கள். உத்தியோகத்தில் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பு வரும்.

தடைகள் உடைபடும் நேரமிது.

மிதுனம்
மிதுனம்

மிதுனம்: திட்டங்கள் நிறைவேறும். பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். பேச்சில் கம்பீரம் பிறக்கும். எதிர்பார்த்த விலைக்குப் பழைய வீட்டை விற்பீர்கள். சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். வழக்கு வகையில் இருந்துவந்த பயம் விலகும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். மாமியார் உங்களுக்கு ஆதரவாகப் பேசுவார். பணப் பிரச்னைகளை எளிதாகச் சமாளிப்பீர்கள். சகோதரர் உங்களைப் புரிந்துகொள்வார். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் போட்டிகளைத் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்தியோகத்தில் சில சூட்சுமங்களைக் கற்றுக்கொள்வீர்கள்.

எதிலும் நிதானம் தேவைப்படும் நேரமிது.

கடகம்
கடகம்

கடகம்: உங்களின் செயலில் வேகம் அதிகரிக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். பூர்வீகச் சொத்தை மாற்றியமைப்பீர்கள். எதிர்பாராத வகையில் பண உதவி கிடைக்கும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். கணவரிடம் கலந்தாலோசித்து, செலவுகளைக் குறைப்பீர்கள். பிள்ளைகள் உங்களின் மனம்கோணாமல் நடந்துகொள்வார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். சகோதரர் மனம்விட்டுப் பேசுவார். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் உங்களின் கடின உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கும்.

உங்களின் ஆதிக்கம் அதிகரிக்கும் நேரமிது.

சிம்மம்
சிம்மம்

சிம்மம்: எதிலும் வெற்றிபெறுவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். பழைய இடத்தை விற்று புது வீடு வாங்குவீர்கள். கணவர் உங்களைப் பெருமையாகப் பேசுவார். குழந்தை பாக்கியம் சிலருக்குக் கிடைக்கும். தாய்வழிச் சொத்து கைக்கு வரும். மாமனார், மாமியார் உங்களிடம் சில பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். அயல்நாட்டிலிருப்பவர்களால் நன்மை உண்டு. விலையுயர்ந்த சாதனங்கள் வாங்குவீர்கள். சகோதரிக்கு நல்ல வரன் அமையும். உறவினர்கள், தோழிகள் மத்தியில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் எதிர்பாராத புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு உண்டு.

சொந்தங்களால் பயனடையும் நேரமிது.

கன்னி
கன்னி

கன்னி: சாதுர்யமாகப் பேசி எதையும் சாதிப்பீர்கள். தடைப்பட்டிருந்த வீடு கட்டும் பணியைத் தொடங்க பணம் கிடைக்கும். கணவர் உங்களிடம் முக்கிய விஷயங்களைப் பகிர்ந்துகொள்வார். பிள்ளைகளின் இசை, ஓவியம், விளையாட்டுத் திறன்களை வளர்க்கப் பயிற்சி வகுப்பில் சேர்ப்பீர்கள். வெள்ளிப் பொருள்கள் வாங்குவீர்கள். உடல்நலனில் கவனமாக இருங்கள். அரசு வகை வேலைகள் விரைந்து முடியும். மாமியார், நாத்தனாரிடம் வீண் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம்.ஜாமீன் கொடுக்க வேண்டாம். வியாபாரத்தில் வழக்கமான லாபம் உண்டு. உத்தியோகத்தில் வேலைச்சுமை இருந்து கொண்டேயிருக்கும்.

சலிப்பைத் தவிர்க்கவேண்டிய நேரமிது.

துலாம்
துலாம்

துலாம்: தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். கணவருக்கு முக்கிய ஆலோசனைகளை வழங்குவீர்கள். முதலீட்டு வகையில் அவரின் தயக்கத்தைப் போக்குவீர்கள். பிள்ளைகளின் தவற்றைச் சுட்டிக்காட்டித் திருத்துவீர்கள். புண்ணியத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சகோதரர்கள் உதவிகரமாக இருப்பார்கள். கடன் பிரச்னைகள் கட்டுக்குள் வரும். மாமியார், நாத்தனார் வகையில் மகிழ்ச்சி தங்கும். வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். உத்தியோகத்தில் அதிகாரிகள் பாராட்டும்படி நடந்துகொள்வீர்கள்.

படபடப்பைத் தவிர்க்கவேண்டிய நேரமிது.

விருச்சிகம்
விருச்சிகம்

விருச்சிகம்: உங்களின் புகழ், கௌரவம் கூடும். உற்சாகமாகப் பல வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். வீடு மாறுவது, புதிய வீடு கட்டுவது சாதகமாக அமையும். எதிர்பார்த்த வகையில் பணம் வரும். கணவர் உங்களைப் புரிந்துகொள்வார். பிள்ளைகளின் மனத்திலிருக்கும் பயத்தைப் போக்குவீர்கள். பயணங்களால் ஆதாயம் உண்டு. உறவினர்கள், தோழிகளைச் சந்திப்பீர்கள். பழுதான பொருள்களை மாற்றுவீர்கள். அரசாங்க காரியங்கள் தாமதமாகும். வியாபாரத்தில் சந்தை நிலவரத்தை அறிந்து முதலீடு செய்யுங்கள். உத்தியோகத்தில் யாரையும் அலட்சியப்படுத்த வேண்டாம்.

திட்டமிடுதலால் வெற்றியடையும் காலமிது.

தனுசு
தனுசு

தனுசு: உங்களின் நீண்டநாள் ஆசைகள் பூர்த்தியாகும். பண பலம் உயரும். பழைய கடன்களை பைசல் செய்வீர்கள். உயர் பதவிகள் தேடி வரும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். கணவரின் புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பிள்ளைகளால் உறவினர்கள் மத்தியில் உங்களின் செல்வாக்கு கூடும். வழக்கு சாதகமாகும். பூர்வீகச் சொத்தால் ஆதாயமடைவீர்கள். மாமியார், நாத்தனார் உங்களின் ஆலோசனையை ஏற்பார்கள். பங்குச்சந்தை மூலம் லாபம் வரும். வியாபாரத்தில் பெரிய நிறுவனங்களுடன் புது ஒப்பந்தம் செய்வதன் மூலம் உங்கள் நிறுவனத்தின் புகழ் கூடும். உத்தியோகத்தில் பதவி உயர்வு நிச்சயம்.

வருமானம் உயரும் நேரமிது.

மகரம்
மகரம்

மகரம்: குடும்பத்தில் அமைதி நிலவும். பாதியில் நின்ற வீடு கட்டும் பணியைத் தொடர கடன் கிடைக்கும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். பிரபலங்களின் நட்பு கிட்டும். பிள்ளைகளால் ஆறுதல் அடைவீர்கள். உறவினர்கள், தோழிகளால் நன்மை உண்டு. ஓரளவு பணம் வரும் பழைய இனிய சம்பவங்கள் நினைவுக்கு வரும். மாமனார், மாமியார் உங்களின் சகிப்புத்தன்மையைப் பாராட்டுவார்கள். நவீன டிசைனில் நகை வாங்குவீர்கள். வெளிநாட்டிலிருந்து நல்ல செய்திகள் வரும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் தாமதமாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் விமர்சனங்களைப் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

வாக்குறுதிகளைத் தவிர்க்கவேண்டிய நேரமிது.

கும்பம்
கும்பம்

கும்பம்: நீண்ட நாள்களாக வரவேண்டிய பணம் கைக்கு வரும். வீட்டை விரிவுபடுத்துவீர்கள். சுப நிகழ்ச்சிகள் நடக்கும். கணவரின் செயல்களுக்கு ஊக்கம் கொடுங்கள். பிள்ளைகளைப் புதிய பாதையில் வழிநடத்துவீர்கள். பழுதான சமையலறைச் சாதனங்களை மாற்றுவீர்கள். கல்லூரித் தோழியைச் சந்திப்பீர்கள். மாமியார், நாத்தனார் உதவுவார்கள். சொத்து ஒன்றை விற்று பழைய சிக்கலைத் தீர்ப்பீர்கள். தந்தையின் உடல்நலம் சீராகும். நல்ல வேலை கிடைக்கும். அரசு வகை காரியங்கள் சுலபமாக முடியும். வியாபாரத்தில் இருந்த முட்டுக்கட்டைகள் நீங்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.

உங்களின் செல்வாக்கு அதிகரிக்கும் நேரமிது.

மீனம்
மீனம்

மீனம்: திட்டமிட்ட காரியங்களைச் சிறப்பாக முடிப்பீர்கள். பணவரவு அதிகரிக்கும். கல்வியாளர்களின் நட்பால் புகழ் கூடும். கணவர் உங்களின் நிர்வாகத் திறமையைப் பாராட்டுவார். மகளுக்குத் தள்ளிப்போய்க்கொண்டிருந்த திருமணம் நல்லவிதமாக நடந்தேறும். உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். வழக்கில் வெற்றிபெறுவீர்கள். எதிர்பார்த்த இடத்தில் கடன் கிடைக்கும். பிள்ளைகளின் தனித்திறமைகளை வளர்ப்பீர்கள். சித்தர்களின் அருளாசி கிடைக்கும். வீடு வாங்குவது, விற்பது சாதகமாக முடியும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

திடீர்த் திருப்பங்கள் உண்டாகும் நேரமிது.