Published:Updated:

ராசி பலன்கள்: அக்டோபர் 1-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை

ராசி பலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
ராசி பலன்கள்

உத்தியோகத்தில் முக்கிய பொறுப்புகள் கிடைக்கும். முற்போக்குச் சிந்தனையால் முன்னேறும் நேரமிது.

ராசி பலன்கள்: அக்டோபர் 1-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை

உத்தியோகத்தில் முக்கிய பொறுப்புகள் கிடைக்கும். முற்போக்குச் சிந்தனையால் முன்னேறும் நேரமிது.

Published:Updated:
ராசி பலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
ராசி பலன்கள்
ராசி பலன்கள்: அக்டோபர் 1-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை

மேஷம்: தடைபட்ட பணிகள் விரைவாக முடியும். பூர்வீக சொத்தைப் புதுப்பிக்கும் முயற்சியில் இறங்குவீர்கள். பணவரவு அதிகரிக்கும். பிள்ளைகளின் தனித்திறமைகளைக் கண்டறிவீர்கள். உறவினர், நண்பர்களுடன் இருந்த மனக்கசப்பு நீங்கும். நாத்தனாருக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். அரசாங்க விஷயங்கள் சாதகமாக முடியும். வழக்கில் வெற்றிபெறுவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களைத் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களைக் கற்றுக்கொள்வீர்கள். தொடர்முயற்சியால் சாதிக்கும் நேரமிது.

ராசி பலன்கள்: அக்டோபர் 1-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை

ரிஷபம்: பழைய சிக்கல்களுக்குத் தீர்வு கிடைக்கும். சொத்து வாங்குவது, விற்பதில் இருந்த வில்லங்கங்கள் விலகும். பணப்பற்றாக்குறை நீடித்தாலும் கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். மாமியார், நாத்தனார் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். கணவருடன் வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் புதிய சலுகைகளால் பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் பாராட்டினாலும் சக ஊழியர்களால் தொந்தரவுகள் இருக்கும். சிந்தித்துச் செயல்படவேண்டிய நேரமிது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
ராசி பலன்கள்: அக்டோபர் 1-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை

மிதுனம்: எதிர்பார்ப்புகள் தடையின்றி நிறைவேறும். அரசாங்க வேலைகள் வேகமாக முடியும். வீடு கட்டும் பணியைத் தொடங்க வங்கிக் கடன் கிடைக்கும். தாய்வழிச் சொத்து கைக்கு வரும். கணவர் அவ்வப்போது அலுத்துக்கொண்டாலும் பாசத்துக்குக் குறைவிருக்காது. பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். இங்கிதமான பேச்சால் அனைவரையும் கவருவீர்கள். வியாபாரத்தில் முக்கியப் பிரமுகர்களின் அறிமுகத்தால் பெரிய நிறுவனங்களின் ஒப்பந்தங்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் பணிகள் விரைந்து முடியும். மற்றவர்களால் பாராட்டப்படும் நேரமிது.

ராசி பலன்கள்: அக்டோபர் 1-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை

கடகம்: உங்களின் முன்னேற்றப்பாதையில் இருந்த தடைகள் நீங்கும். வி.ஐ.பிக்கள் அறிமுகமாவார்கள். கடனாகக் கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். கணவர், நீங்கள் கேட்ட பொருளை வாங்கித்தந்து உங்களை அசத்துவார். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். மாமனார், மாமியார் வகையில் மகிழ்ச்சி தங்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனைக்கேற்ற பொருள்களை விற்று லாபத்தைப் பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் உயர்பதவியில் அமர்வீர்கள். மனோபலத்தால் நினைத்ததை முடிக்கும் நேரமிது.

ராசி பலன்கள்: அக்டோபர் 1-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை

சிம்மம்: முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். வீடு, மனை வாங்குவீர்கள். வழக்கு சாதகமாகும். கணவர் இணக்கமாகப் பேசுவார். பிள்ளைகள் முன்னேற்றப் பாதையில் செல்வார்கள். சிலர் அயல்நாடுகளுக்குச் சென்று வருவார்கள். நாத்தனார் பாச மழையைப் பொழிவார். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். வியாபாரத்தில் வி.ஐ.பி வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். உத்தியோகத்தில் உங்களை நம்பி சில முக்கியப் பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். சமயோஜித புத்தியால் வெற்றிபெறும் நேரமிது.

ராசி பலன்கள்: அக்டோபர் 1-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை

கன்னி: திடீர் பணவரவு உண்டு. தோற்றப்பொலிவு கூடும். பூர்வீக சொத்தில் உங்களுக்கான பங்கைக் கேட்டு வாங்குவீர்கள். கணவர் உங்கள் பேச்சுக்கு மதிப்பளிப்பார். பிள்ளைகளின் உயர்கல்வி மற்றும் உத்தியோகம் குறித்து யோசிப்பீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் பலம் பலவீனத்தைக் கண்டறிவீர்கள். சகோதர வகையில் இருந்துவந்த மோதல்கள் விலகும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்களின் வருகையால் உற்சாகமடைவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை கூடும். கடின உழைப்பால் இலக்கை எட்டும் நேரமிது.

ராசி பலன்கள்: அக்டோபர் 1-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை

துலாம்: கடின உழைப்பால் வெற்றிபெறுவீர்கள். புதிய திட்டங்கள் வகுத்துச் செயல்படுவீர்கள். கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். கணவரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பிள்ளைகளைப் புதிய பாதையில் வழிநடத்துவீர்கள். ஒரு சொத்தை விற்று சில பிரச்னைகளிலிருந்து வெளியே வருவீர்கள். உறவினர்கள், நண்பர்கள் வீடு தேடி வருவார்கள். அவர்களின் பாசமான விசாரிப்புகள் ஆறுதலாக இருக்கும். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப்போகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாகக் கிடைக்கும். தடுமாறி முன்னேறும் நேரமிது.

ராசி பலன்கள்: அக்டோபர் 1-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை

விருச்சிகம்: தைரியம், புகழ், செல்வாக்கு கூடும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வீடு, மனை வாங்குவீர்கள். பதவிகள் தேடி வரும். சிலருக்குப் புதிய இடத்தில் வேலை கிடைக்கும். கணவன் மனைவி அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளின் நட்பு வட்டத்தில் அக்கறை செலுத்துவீர்கள். மாமனார், நாத்தனார் உங்களின் மனத்தைப் புரிந்துகொள்வார்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். நல்ல பணியாளர்கள் அமைவார்கள். உத்தியோகத்தில் முக்கிய பொறுப்புகள் கிடைக்கும். முற்போக்குச் சிந்தனையால் முன்னேறும் நேரமிது.

ராசி பலன்கள்: அக்டோபர் 1-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை

தனுசு: ஆடம்பரச் செலவுகளைக் கட்டுப்படுத்துவீர்கள். கணவரின் அன்பு அதிகரிக்கும். வழக்கில் வெற்றிபெறுவீர்கள். பிள்ளைகளால் உறவினர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். மாமியார், நாத்தனார் உங்களின் சகிப்புத்தன்மையைப் பாராட்டுவார்கள். அயல்நாட்டிலிருக்கும் தோழிகளால் திருப்பம் உண்டாகும். வியாபாரத்தில் பெரிய நிறுவனங்களுடன் புது ஒப்பந்தம் செய்வதன் மூலம் உங்கள் நிறுவனத்தின் புகழ் கூடும். உத்தியோகத்தில் பதவி உயர்வுக்காக உங்களுடைய பெயர் பரிசீலிக்கப்படும். மதிப்பு, மரியாதை கூடும் வேளையிது.

ராசி பலன்கள்: அக்டோபர் 1-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை

மகரம்: எதிர்காலம் குறித்து புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். தொழிலதிபர்களின் நட்பு கிடைக்கும். பெரிய பதவிகள், பொறுப்புகள் தேடிவரும். வீடு வாங்கும் ஆசை நிறைவேறும். கணவரின் மனத்திலிருந்த பயத்தைப் போக்குவீர்கள். குடும்பச் சூழ்நிலைக்குத் தகுந்தாற்போல பிள்ளைகள் பொறுப்பாக நடந்துகொள்வார்கள். வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்களால் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் பாராட்டப்படுவீர்கள். அச்சம் விலகி, தன்னம்பிக்கை அதிகரிக்கும் நேரமிது.

ராசி பலன்கள்: அக்டோபர் 1-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை

கும்பம்: மனப் போராட்டங்கள் நீங்கும். பேச்சைக் குறைத்து, செயலில் வேகம் காட்டுவீர்கள். எதிர்பார்த்த பணம் வரும். வீட்டைப் புதுப்பிக்கத் திட்டமிடுவீர்கள். கணவன் மனைவி அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகள் கூடுதல் மதிப்பெண் பெறுவார்கள். சொந்த பந்தங்களின் உண்மையான மனத்தைத் தெரிந்துகொண்டு அதற்கேற்ப இனி செயல்படுவீர்கள். வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்டங்களை அனுபவ அறிவால் சரிசெய்வீர்கள். உத்தியோகத்தில் சவால்களைச் சந்திக்கவேண்டி வரும். புதிய அணுகுமுறையால் முன்னேறும் நேரமிது.

ராசி பலன்கள்: அக்டோபர் 1-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை

மீனம்: புதிய நண்பர்களால் உற்சாகமடைவீர்கள். ஓரளவு பணவரவு உண்டு. குடும்பத்தில் நிம்மதி கிடைக்கும். உறவினர்கள், தோழிகளிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பிள்ளைகளிடம் உங்களின் எண்ணங்களைத் திணிக்க வேண்டாம். சகோதர வகையில் இருந்த மனக்கசப்பு மாறும். வீடு, மனை வாங்குவது, விற்பதில் இருந்த வில்லங்கங்கள் விலகும். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். சலுகைகளை அறிவித்து லாபத்தைப் பெருக்குவது நல்லது. உத்தியோகத்தில் மேலதிகாரியிடம் நற்பெயர் எடுக்கப் போராடவேண்டி வரும். பொறுமை காக்கவேண்டிய நேரமிது.