Published:Updated:

ராசி பலன்கள்: அக்டோபர் 29-ம் தேதி முதல் நவம்பர் 11-ம் தேதி வரை

ராசி பலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
ராசி பலன்கள்

காலம் கனிந்து வரும் நேரமிது

மேஷம்
மேஷம்

மேஷம்:

கிழ்ச்சி தங்கும். கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். கணவர் உங்களின் பெருந்தன்மையைப் புரிந்துகொள்வார். பிள்ளைகளுக்குத் திருமணம் நிச்சயமாகும். மகனுக்கு அயல்நாட்டுத் தொடர்புடைய நிறுவனத்தில் வேலை கிடைக்கும். உறவினர்கள் மத்தியில் இருந்துவந்த அதிருப்தி விலகும். நவீன ஆபரணங்கள் வாங்குவீர்கள். நாத்தனார், மாமியார் மதிப்பைப் பெறுவீர்கள். வியாபாரத்தில் புதிய முதலீடு செய்து விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் பதவி உயரும்.

வாக்குச் சாதுர்யத்தால் பிரச்னைகளைத் தீர்க்கும் நேரமிது.

ரிஷபம்
ரிஷபம்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ரிஷபம்:

திட்டமிட்ட காரியங்கள் கைகூடும். ஒரு சொத்தைக் காப்பாற்ற, மற்றொரு சொத்தை விற்க வேண்டி வரும். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவர் அவ்வப்போது அலுத்துக்கொண்டாலும் கர்ம சிரத்தையாக நடந்துகொள்வார். பிள்ளைகளிடம் உங்களின் கோபத்தைக் காட்ட வேண்டாம். குலதெய்வக் கோயிலுக்குச் சென்று நேர்த்திக் கடனைச் செலுத்துவீர்கள். சகோதரருக்கு நல்ல வாழ்க்கைத்துணை அமைவார். உறவினர்களின் நன்மதிப்பைப் பெறுவீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். உத்தியோகத்தில் முக்கியக் கோப்புகளைக் கையாளும்போது அலட்சியம் வேண்டாம்.

அதிரடியாகச் செயல்பட்டு சாதிக்கும் நேரமிது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
ராசி பலன்கள்: அக்டோபர் 29-ம் தேதி முதல் நவம்பர் 11-ம் தேதி வரை

மிதுனம்:

திட்டவட்டமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உயர்பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். பேச்சில் முதிர்ச்சி தெரியும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். கணவர் உங்களை முழுமை யாகப் புரிந்துகொள்வார். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து யோசிப்பீர்கள். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். குழந்தை பாக்கியம் சிலருக்குக் கிடைக்கும். பாதியில் நின்ற வீடு கட்டும் பணியைத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமையை மேலதிகாரி பாராட்டுவார்.

நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும் நேரமிது.

ராசி பலன்கள்: அக்டோபர் 29-ம் தேதி முதல் நவம்பர் 11-ம் தேதி வரை

கடகம்:

தொட்ட காரியம் யாவும் வெற்றிபெறும். உயர் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். பழைய சிக்கல்களுக்குத் தீர்வு காண்பீர்கள். அழகு, இளமை கூடும். கணவருக்கு முக்கிய ஆலோசனைகளை வழங்குவீர்கள். அவரின் தயக்கத்தைப் போக்குவீர்கள். பிள்ளைகளிடம் மறைந்திருந்த திறமைகளை இனம்கண்டறிவீர்கள். பூர்வீகச் சொத்தின் பங்கு கைக்கு வரும். அயல்நாடு செல்லும் வாய்ப்பு சிலருக்குக் கிடைக்கும். மாமனார், மாமியார் உங்களைப் பற்றி பெருமையாகப் பேசுவார்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களைப் பணியில் அமர்த்துவீர்கள். உத்தியோகத் தில் அதிகாரியின் ஆதரவால் செல்வாக்கு கூடும்.

அச்சம் விலகி, அதிகாரம் பெருகும் நேரமிது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ராசி பலன்கள்: அக்டோபர் 29-ம் தேதி முதல் நவம்பர் 11-ம் தேதி வரை

சிம்மம்:

எதையும் சாதிக்கும் துணிச்சல் வரும். மேல்மட்டத்திலிருப்பவர்கள் உதவுவார்கள். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். கணவர் சில நேரங்களில் முணுமுணுத்தாலும் கடைசி நேரத்தில் உங்களின் கருத்தை ஏற்றுக்கொள்வார். மூத்த சகோதரிக்கு இருந்த பிரச்னைகள் நீங்கும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். பழைய சொந்த பந்தங்கள் தேடிவந்து பேசுவார்கள். வாகனப் பழுதைச் சரிசெய்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் உண்டு. புதிய பங்குதாரரைச் சேர்ப்பீர்கள். உத்தியோகத்தில் அலுவலக ரகசியங்களை எல்லோரிடமும் பகிர்ந்து கொள்ளாதீர்கள்.

செல்வாக்கு உயரும் நேரமிது.

ராசி பலன்கள்: அக்டோபர் 29-ம் தேதி முதல் நவம்பர் 11-ம் தேதி வரை

கன்னி:

இங்கிதமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். சோர்ந்திருந்த கணவர் சுறுசுறுப்பாகப் பொருள் ஈட்டுவார். அவரின் புதிய முயற்சிகள் வெற்றியடையும். மகள் உங்களின் அன்பைப் புரிந்துகொள்வார். வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவீர்கள். உறவினர்களின் வீட்டுக் கல்யாணத்தை எடுத்து நடத்துவீர்கள். சொத்து சம்பந்தப்பட்ட வழக்குகள் சாதகமாகும். மாமனார், நாத்தனார் உதவுவார்கள். அரசு வகையில் ஆதாயம் உண்டு. வெளியூர்ப் பயணம் சிறக்கும். வியாபார ரகசியங்கள் யார் மூலம் கசிகிறது என்பதை அறிந்து, புது முடிவு எடுப்பீர்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமை இருந்தாலும் அதற்கான பலன் கிடைக்கும்.

சமயோஜித புத்தியால் வெற்றிபெறும் நேரமிது.

ராசி பலன்கள்: அக்டோபர் 29-ம் தேதி முதல் நவம்பர் 11-ம் தேதி வரை

துலாம்:

பிரச்னைகளைச் சமாளித்து வெற்றிகாண்பீர்கள். உயர் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். பழைய வீட்டை நல்ல விலைக்கு விற்று, புது இடம் வாங்குவீர்கள். கணவரின் வேலைச் சுமையைப் பகிர்ந்துகொள்வீர்கள். பிள்ளை களால் மதிப்புகூடும். வழக்கில் வெற்றிபெறுவீர்கள். மாமியார் உங்களை நம்பி முக்கியப் பொறுப்புகளை ஒப்படைப்பார். உங்களை ஏமாற்றிக்கொண்டிருந்தவர்களை இனங்கண்டறிந்து ஒதுக்குவீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் இழந்த பொறுப்பு மீண்டும் கிடைக்கும்.

தன்னம்பிக்கையால் சாதிக்கும் நேரமிது.

ராசி பலன்கள்: அக்டோபர் 29-ம் தேதி முதல் நவம்பர் 11-ம் தேதி வரை

விருச்சிகம்:

உங்களின் பேச்சில் முதிர்ச்சி தெரியும். பெரிய மனிதர்கள் உதவிக்கு வருவார்கள். பூர்வீகச் சொத்தில் மாற்றம் செய்வீர்கள். கணவர் உங்களிடம் அந்நியோன்யமாக நடந்துகொள்வார். உடல் நலனில் கவனமாக இருப்பது நல்லது. பிள்ளைகள் குடும்பச் சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். உறவினர் மற்றும் தோழிகளின் வீட்டு விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். மாமியார், நாத்தனார் அன்பாக இருப்பார்கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள்.

காலம் கனிந்து வரும் நேரமிது.

ராசி பலன்கள்: அக்டோபர் 29-ம் தேதி முதல் நவம்பர் 11-ம் தேதி வரை

தனுசு:

சவாலான காரியங்களையும் சாதாரணமாக முடிப்பீர்கள். புதிய வர்கள் நண்பர்களாவார்கள். வீடு கட்டும் பணி முழுமையடைய கடனுதவி கிடைக்கும். கணவர் உங்களைப் பாராட்டுவார். சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். மனத்தில் மகிழ்ச்சி தங்கும். சகோதரர் வகையில் இருந்த பிணக்குகள் நீங்கும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். உறவினர்கள் வருகையால் வீடு களைகட்டும். வியாபாரத்தில் வரவு உயரும். லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளைத் தாண்டி முன்னேறுவீர்கள்.

கனவுகள் நனவாகும் நேரமிது.

ராசி பலன்கள்: அக்டோபர் 29-ம் தேதி முதல் நவம்பர் 11-ம் தேதி வரை

மகரம்:

தடைகளைத் தாண்டி முன்னேறு வீர்கள். அரசியல்வாதிகளின் அறிமுகம் கிட்டும். தந்தைவழி சொத்து கைக்கு வரும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். நாத்தனார் உதவிகரமாக இருப்பார். கணவன் மனைவிக்குள் வீண் வாக்குவாதம் செய்ய வேண்டாம். சொத்து சம்பந்தப்பட்ட வழக்கை நிதானமாகக் கையாளுங்கள். மாமியார் வகையில் செலவுகள் வரும். உறவினர்கள், தோழிகளிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத்தீரும். உத்தியோகத்தில் பணிகளை முடிப்பதில் இருந்த களைப்பு நீங்கும்.

புதிய அணுகுமுறையால் சாதிக்கவேண்டிய நேரமிது.

ராசி பலன்கள்: அக்டோபர் 29-ம் தேதி முதல் நவம்பர் 11-ம் தேதி வரை

கும்பம்:

புதிய யோசனைகள் பிறக்கும். வி.ஐ.பிக்களிடமிருந்து எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். பூர்வீகச் சொத்தால் வருமானம் பெருகும். கணவர் உங்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு பாசமழை பொழிவார். பிள்ளைகள் படிப்பில் முன்னேறுவார்கள். புதிதாக மின் சாதனப் பொருள்கள் வாங்குவீர்கள். பழைய சொந்தங்கள் தேடி வரும். வியாபாரத்தில் பெரிய நிறுவனங்களுடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உங்களின் நிறுவனம் புகழ் பெறும். உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள்.

பொறுப்புகள் அதிகரிக்கும் நேரமிது.

ராசி பலன்கள்: அக்டோபர் 29-ம் தேதி முதல் நவம்பர் 11-ம் தேதி வரை

மீனம்:

எதிர்ப்புகள் அடங்கும். புதிதாக வீடு, மனை வாங்குவீர்கள். கணவரின் அலட்சியப்போக்கு மாறும். வருமானம் உயரும். பிள்ளைகளால் நிம்மதி அடைவீர்கள். கடனாகக் கொடுத்த பணம் கைக்கு வரும். வழக்கு சாதகமாகும். அரசாங்க காரியங்கள் சுலபமாக முடியும். சகோதரர் மனம்விட்டுப் பேசுவார். சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். வீட்டை அழகுபடுத்துவீர்கள். விலையுயர்ந்த ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள்.

பொறுமையால் பெருமை சேரும் நேரமிது.