Published:Updated:

ராசிபலன்: செப்டம்பர் 10 முதல் 23 - ம் தேதி வரை

ராசிபலன்
பிரீமியம் ஸ்டோரி
ராசிபலன்

எதிர்மறை எண்ணங்கள் விலகி முன்னேற்றம் புலப்படும் காலம் இது.

ராசிபலன்: செப்டம்பர் 10 முதல் 23 - ம் தேதி வரை

எதிர்மறை எண்ணங்கள் விலகி முன்னேற்றம் புலப்படும் காலம் இது.

Published:Updated:
ராசிபலன்
பிரீமியம் ஸ்டோரி
ராசிபலன்

மேஷம்

பூர்வ புண்ணியாதிபதி சூரியன் 17-ம் தேதி வரை ஆட்சிபெற்று நிற்பதால், பிரச்னைகளை எதிர்கொள்ளும் தைரியம் பிறக்கும். பிள்ளைகளின் பிடிவாதம் விலகும். உறவினர்கள், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். 18-ம் தேதி முதல், சூரியன் 6-ம் வீட்டில் அமர்வதால், திடீர் திருப்பம் உண்டாகும். அரசால் அனுகூலம் உண்டாகும்.

ராசிபலன்: செப்டம்பர் 10 முதல் 23 - ம் தேதி வரை

புதனும் சுக்கிரனும் 6-ம் வீட்டில் மறைவதால், உடல்நலனில் கவனம் செலுத்துவது நல்லது. உறவினர்கள், நண்பர்களுடன் கருத்துமோதல்கள் வந்து நீங்கும். 8-ம் வீட்டில் குரு நீடிப்பதால் இனந்தெரியாத கவலை, பயம் ஆகியவை வந்து போகும். ராகு 3-ம் வீட்டில் நிற்பதால், தைரியம் பிறக்கும். வியாபாரத்தில் அதிரடிச் சலுகைகளை அறிவித்து, சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். உத்தியோகத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். கலைத் துறையினருக்கு மறைமுகப் போட்டிகள் அதிகரிக்கும்.

கடின உழைப்பால் இலக்குகளை எட்டிப் பிடிக்கும் தருணம் இது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ரிஷபம்

புதன், சூரியன், சுக்கிரன் ஆகிய மூன்று கிரகங்களும் வலுவடைந்து உள்ளதால், அரைகுறையாக நின்ற விஷயங்கள் உடனே முடியும். வீடு கட்ட எதிர்பார்த்த பணம் வரும்; கட்டட வரைபடமும் அப்ரூவலாகும். வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகள் நீண்ட நாள்களாகக் கேட்டுக்கொண்டிருந்ததை வாங்கித் தருவீர்கள். பரம்பரைச் சொத்தைச் சீர்செய்வீர்கள். தாய்வழிச் சொந்தங்களின் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும். உறவினர் திருமணத்தை முன்னின்று நடத்துவீர்கள்.

ராசிபலன்: செப்டம்பர் 10 முதல் 23 - ம் தேதி வரை

2-ம் வீட்டில் ராகுவும் 8-ம் வீட்டில் கேதுவும் நிற்பதால், ஒருவித படபடப்பு, பேச்சில் தடுமாற்றம் இருக்கும்; தியானம் செய்வது நல்லது. குரு பகவான் உங்களின் ராசியைப் பார்ப்பதால் ஆடை, ஆபரணங்கள் புதிதாக வாங்குவீர்கள். வியாபாரத்தில், போட்டிகளைத் தாண்டி லாபம் வரும். உத்தியோகத்தில், அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். கலைத்துறையினர், சம்பள விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது.

போட்டிகளைத் தாண்டி லாபம் ஈட்டும் வேளை இது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மிதுனம்

சுக்கிரனும் புதனும் 4-ம் வீட்டில் நிற்பதால், எதிர்பாராத பணவரவு உண்டு. மனைவியின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். சிலர், புதிய வாகனம் வாங்குவீர்கள். விலையுயர்ந்த தங்க நகைகள், ரத்தினங்கள் சேரும். சூரியன் சாதகமான வீடுகளில் நின்றுகொண்டிருப்பதால், தைரியமாக சில முடிவுகள் எடுப்பீர்கள். வீடு வாங்குவதும் கட்டுவதும் சாதகமாகும். அரசால் அனுகூலம் உண்டு.

ராசிபலன்: செப்டம்பர் 10 முதல் 23 - ம் தேதி வரை

சர்ப்ப கிரகங்களின் சஞ்சாரம் சரியில்லாததால், கணவன் - மனைவிக்கு இடையே வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். வியாபாரத்தில், பெரிய நிறுவனங்களுடன் புது ஒப்பந்தம் செய்வதன் மூலம் உங்கள் நிறுவனத்தின் புகழ் கூடும். உத்தியோகத்தில், பொறுப்புகள் கூடும். கலைத்துறையினர், புதுமையாகச் சில படைப்புகளை வெளியிட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பார்கள்.

சமயோசித புத்தியால் எதையும் சாதிக்கும் காலம் இது.

கடகம்

சூரியன் சாதகமாக இருப்பதால் வழக்கில் திருப்பம் ஏற்படும். வங்கிக் கடன் கிடைக்கும். சாதுர்யமாகப் பேசிச் சாதிப்பீர்கள். எதிர்பார்த்துக் காத்திருந்த அயல்நாட்டுப் பயணம் சாதகமாக அமையும். புதனும் சுக்கிரனும் வலுவாக இருப்பதால், சொந்தபந்தங்கள் பலவிதங்களில் உங்களுக்கு உதவுவார்கள்.

ராசிபலன்: செப்டம்பர் 10 முதல் 23 - ம் தேதி வரை

குரு பகவான் வலுவாக இருப்பதால், சுபநிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். சிலருக்குப் புதிய இடத்தில் வேலை அமையும். புதிதாகச் சொத்து வாங்குவீர்கள். சனி பகவான் வலுவாக இருப்பதால், வெளியூரிலிருந்து நல்ல செய்திகள் வரும். வேற்றுமொழிக்காரர்கள் அறிமுகமாவார்கள். ராகு 12-ம் வீட்டில் நிற்பதால் தூக்கமின்மை, பயணத்தின்போது அலைச்சல்கள் ஏற்படும். வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகளை வெல்வீர்கள். பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிப்பீர்கள். உத்தியோகத்தில், மற்றவர்களின் குறைகளில் கவனம் செலுத்தாதீர்கள்.கலைத்துறையினர், மூத்த கலைஞர்களின் நட்பைப் பெறுவார்கள்.

இழந்த பொருளை மீட்டெடுக்கும் தருணம் இது.

சிம்மம்

ங்களின் ராசிநாதன் சூரியன் 17-ம் தேதி வரை ஆட்சிபெற்று நிற்பதால், சவால்களில் வெற்றி பெறுவீர்கள். பெரிய பதவிகள் தேடி வரும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். 18-ம் தேதி முதல் சூரியன் 2-ம் வீட்டில் அமர்வதால் பல் வலி, வயிற்று வலி வந்து விலகும். வெளியூர்ப் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயம் உண்டு.

ராசிபலன்: செப்டம்பர் 10 முதல் 23 - ம் தேதி வரை

புதனும் சுக்கிரனும் சாதகமாக இருப்பதால் பணவரவு அதிகரிக்கும். கல்யாணம் மற்றும் கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். மூத்த சகோதரர் வகையில் உதவிகள் உண்டு. குரு பகவான் 4-ம் வீட்டில் நீடிப்பதால், மற்றவர்களை நம்பி குறுக்கு வழியில் செல்லவேண்டாம். வியாபாரத்தில் லாபத்தைப் பெருக்க புது விளம்பர யுக்திகளைக் கையாளுவீர்கள். உத்தியோகத்தில், அதிகாரிகள் புது பொறுப்பை ஒப்படைப்பார்கள். கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

விவாதம், போட்டிகளில் வெற்றிபெறும் வேளை இது.

கன்னி

ராசிநாதன் புதன் ஆட்சிபெற்று அமர்வதால், எதிர்பார்த்த அயல்நாட்டுப் பயணம் தேடி வரும். சூரியன் 17-ம் தேதி வரை 12-ம் வீட்டில் மறைந்திருப்பதால் தூக்கமின்மை வந்து விலகும். 18-ம் தேதி முதல் சூரியன் ராசிக்குள் நுழைவதால், பேச்சில் கவனம் தேவை.

ராசிபலன்: செப்டம்பர் 10 முதல் 23 - ம் தேதி வரை

சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால் புதிய டிசைனில் நகைகள் வாங்குவீர்கள். வீடு, வாகனத்தைச் சீர் செய்வீர்கள். பணவரவு திருப்தி தரும். கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். நினைத்தது நிறைவேறும். ஓரளவு பணவரவு உண்டு. குடும்பத்தில் மகளுக்குத் திருமணம் ஏற்பாடாகும். அர்த்தாஷ்டம சனி தொடர்வதால் யாரையும் எளிதில் நம்பவேண்டாம். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்வீர்கள். உத்தியோகத்தில், உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். கலைஞர்கள், கிடைக்கும் வாய்ப்பை நல்லமுறையில் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

அதிரடிச் செயல்பாடுகளால் முன்னேறும் தருணம் இது.

துலாம்

ராசிநாதன் சுக்கிரன் சாதகமாக அமர்ந்திருப்பதால், எடுத்த வேலை களை முடிக்காமல் ஓயமாட்டீர்கள். கடனாகக் கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். திருமணம், சீமந்தம் போன்ற சுபநிகழ்ச்சிகளால் வீடு களை கட்டும். கணவன், மனைவிக்குள் மனம்விட்டுப் பேசுவீர்கள். உங்கள் பாக்கியாதிபதி புதன் வலுவான நட்சத்திரங்களில் செல்வதால், புதிய எண்ணங்கள் உதயமாகும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும்.

ராசிபலன்: செப்டம்பர் 10 முதல் 23 - ம் தேதி வரை

17-ம் தேதி வரை சூரியன் லாப வீட்டில் நிற்பதால், அரசு வகையில் அனுகூலம் உண்டு. 18-ம் தேதி முதல் சூரியன் 12 - ல் மறைவதால் அலைச்சல், திடீர் பயணம் இருக்கும். குரு பகவான் 2-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால், குழந்தை பாக்கியம் சிலருக்குக் கிடைக்கும். புதிதாகச் சொத்து வாங்குவீர்கள். வியாபாரத்தில், எதிர்பார்த்த லாபம் வரும். உத்தியோகத்தில், உங்கள் ஆலோசனைகள் முக்கியத்துவம் பெறும். கலைத்துறையினருக்குப் பெரிய நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும்.

பெரியோர்களால் பாராட்டப்படும் வேளை இது.

விருச்சிகம்

ங்களின் ஜீவனாதிபதி சூரியன் வலுவாக இருப்பதால், தைரியம் பிறக்கும். புது வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு நல்ல பதில் வரும். அரசு வகைக் காரியங்கள் விரைந்து முடியும். அரசு அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். நீண்ட நாள்களாக எதிர்பார்த்துக் காத்திருந்த அயல்நாட்டுப் பயணம் சாதகமாக அமையும்.

ராசிபலன்: செப்டம்பர் 10 முதல் 23 - ம் தேதி வரை

புதனும் சுக்கிரனும் சாதகமாக இருப்பதால், தூரத்து சொந்தங்களைச் சந்திப்பீர்கள். பூர்வீகச் சொத்தில் மாற்றம் செய்வீர்கள். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். வீடு கட்டும் பணியில் இருந்த தடைகள் நீங்கும். தடைப்பட்டு நின்றுபோன மேலும் பல காரியங்களை அனுபவ அறிவால் செய்து முடிப்பீர்கள். குரு ராசிக்குள் நிற்பதால், உடல்நலத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் சரக்குகளை மொத்தமாகக் கொள்முதல் செய்வீர்கள். உத்தியோகத்தில் அதிகாரியின் ஆதரவால் செல்வாக்கு கூடும். கலைத்துறையினர், வேற்றுமொழி வாய்ப்புகளால் புகழடைவார்கள்.

எதிர்மறை எண்ணங்கள் விலகி முன்னேற்றம் புலப்படும் காலம் இது.

தனுசு

புதனும் சுக்கிரனும் சாதகமான வீடுகளில் செல்வதால் புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றிகரமாக நிறைவேறும். வரவேண்டிய பணம் கைக்கு வரும். வழக்கில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். ஷேர் மார்க்கெட்டில் இழந்ததைப் பிடிப்பீர்கள். போட்டித் தேர்வில் வெற்றிபெறுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். பிள்ளை களின் நட்பு வட்டம் விரியும்.

ராசிபலன்: செப்டம்பர் 10 முதல் 23 - ம் தேதி வரை

சூரியன் சாதகமான வீடுகளில் செல்வதால், உங்களின் செல்வாக்கு உயரும். அரசால் அனுகூலம் உண்டு. பணவரவு அதிகரிக்கும். தந்தையின் உடல்நலம் சீராகும். குரு 12-ம் வீட்டில் மறைந்திருப்பதால் திடீர்ப் பயணங்களும் செலவுகளும் ஏற்படும். வியாபாரத்தில் விட்டதைப் பிடிப்பீர்கள். பங்குதாரர்களின் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உத்தியோகத்தில், மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். கலைத்துறையினர், மற்றவர்களிடம் பேசும்போது கவனமாக இருக்கவும்.

உங்களின் செல்வாக்கு உயரும் வேளை இது.

மகரம்

சூரியன் ஓரளவு வலுவாக இருப்பதால், ஆன்மிகத்தில் மனம் லயிக்கும். அரசாங்க விஷயங்கள் உடனே முடியும். வெளிவட்டாரத்தில் அலைச்சல் இருந்தாலும் ஆதாயம் உண்டு. சுக்கிரன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உறவினர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். தங்க ஆபரணம் வாங்குவீர்கள்.

ராசிபலன்: செப்டம்பர் 10 முதல் 23 - ம் தேதி வரை

புதன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், பணவரவு எதிர்பார்த்த வகையில் உண்டு. மகளுக்குத் திருமணம் கூடி வரும். குரு பகவான் 11-ம் வீட்டில் நிற்பதால், கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தைத் தந்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் ஆழம் தெரியாமல் காலை விடாதீர்கள். வேலையாள்கள், வாடிக்கையாளர்களை அனுசரித்துப் போவது நல்லது. உத்தியோகத்தில், உங்களின் நிலையைத் தக்கவைத்துக்கொள்ளப் போராட வேண்டியிருக்கும். கலைத்துறையினரின் படைப்புகள் உரிய நேரத்தில் வெளியாகிப் புகழ் சேர்க்கும்.

வேகம் தவிர்த்து விவேகத்தால் முன்னேறும் வேளை இது.

கும்பம்

சூரியனும் புதனும் சாதகமாக இருப்பதால், மாறுபட்ட அணுகுமுறையால் வெற்றிபெறுவீர்கள். வி.ஐ.பிகளால் ஆதாயம் உண்டு. அரசு வகைக் காரியங்கள் சுலபமாக முடியும். பொறுப்புள்ள பதவிகள் தேடி வரும். சிலருக்குப் புது வேலை அமையும். சிலர், வேறு ஊருக்கு மாற்றலாவார்கள். வாழ்க்கைத் துணைவர் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உறவினர்கள், நண்பர்களுடன் மனம்விட்டுப் பேசுவீர்கள்.

ராசிபலன்: செப்டம்பர் 10 முதல் 23 - ம் தேதி வரை

குரு சரியில்லாமலிருப்பதால் எதிலும் ஒருவித பயம், டென்ஷன் இருக்கும். சகோதர வகையில் சங்கடங்கள் வரும். அநாவசியச் செலவு களைத் தவிர்க்கப் பாருங்கள். வியாபாரத்தில், சில தந்திரங்களைக் கற்றுக்கொள்வீர்கள். புது பங்குதாரரைச் சேர்ப்பீர்கள். உத்தியோகத்தில், உங்களுக்கு நெருக்கமாக இருந்த உயரதிகாரி வேறு இடத்துக்கு மாற்றப் பட்டு, புது அதிகாரி வந்துசேர்வார். அவரால் சில நெருக்கடிகளைச் சந்திக்க நேரிடும். கலைத்துறையினரின் திறமைகள் வெளிப்படும்.

வாழ்க்கைத் துணைவரால் வெற்றி காணும் வேளை இது.

மீனம்

சூரியன் 17-ம் தேதி வரை சாதகமாக இருப்பதால், சவாலான காரியங் களையும் சர்வ சாதாரணமாக முடிப்பீர்கள். வழக்கில் வெற்றிபெறுவீர்கள். பணப்புழக்கம் கணிசமாக உயரும். வீடு வாங்கவும் கட்டவும் வங்கிக் கடன் கிடைக்கும். குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள்.

ராசிபலன்: செப்டம்பர் 10 முதல் 23 - ம் தேதி வரை

18-ம் தேதி முதல், சூரியன் 7-ம் வீட்டில் நுழைவதால், கணவன் மனைவிக்கு இடையே வீண் வாக்குவாதங்கள் வேண்டாம். சுக்கிரனும் புதனும் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், கடன் பிரச்னைகள் தீரும். அடகிலிருந்த நகைகளை மீட்பீர்கள். வாழ்க்கைத் துணைவர் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். குரு சாதகமாக இருப்பதால், உங்களின் திறமைகள் வெளிப்படும். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். புதிதாக ஏஜென்சி ஒன்றை எடுப்பீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களைச் சொல்லித் தருவார். கலைத்துறையினரின் நீண்ட நாள் எண்ணங்கள் பூர்த்தியாகும்.

வாழ்க்கையின் அடிப்படை வசதிகள் பெருகும் காலம் இது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism