மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ராசி பலன்கள்: செப்டம்பர் 17-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை

ராசி பலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
ராசி பலன்கள்

சின்ன ஆசைகள் நிறைவேறும் நேரமிது.

ராசி பலன்கள்: செப்டம்பர் 17-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை

மேஷம்: புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பிள்ளைகள் உங்களின் பேச்சைக் கேட்டு நடப்பார்கள். கணவன் வழி உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிர்மறை எண்ணங்கள் விலகும். உறவினர்களில் உண்மையானவர்களைக் கண்டறிவீர்கள். மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். உங்களின் முயற்சிகளை கணவர் பாராட்டிப் பேசுவார். அரசு வகை காரியங்கள் சுமுகமாக முடியும். கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருங்கள். வியாபாரத்தில் பாக்கிகளைக் கனிவாகப்பேசி வசூல் செய்வீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் தவற்றைச் சுட்டிக்காட்டினால் அமைதியாக ஏற்றுக்கொள்ளுங்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நேரமிது.

ராசி பலன்கள்: செப்டம்பர் 17-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை

ரிஷபம்: எல்லோரிடமும் இதமாகப் பேசி சாதிப்பீர்கள். தடைகள் விலகும். மனத்தில் புதிய தெம்பு பிறக்கும். பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். சொத்துக்கான பத்திரப் பதிவை எளிதாக முடிப்பீர்கள். மகனுக்குப் புதிய இடத்தில் வேலை கிடைக்கும். பூர்வீகச் சொத்து கைக்கு வரும். மாமியார், மாமனார் வகையில் மகிழ்ச்சி தங்கும். தூரத்து உறவினர்கள் தேடிவருவார்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். ஓரளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். வியாபாரத்தில் ஆர்வம் பிறக்கும். புதிய ஏஜென்சி ஒன்றை எடுப்பீர்கள். உத்தியோகத்தில் உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகிப்புத்தன்மை தேவைப்படும் நேரமிது.

ராசி பலன்கள்: செப்டம்பர் 17-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை

மிதுனம்: தொட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். உங்கள் ரசனைக்கேற்ற வீடு அமையும். கணவர், உங்களை முழுமையாகப் புரிந்து கொள்வார். அவருக்குத் தொழிலில் முன்னேற்றம் உண்டு. மகனைப் பயிற்சி வகுப்பில் சேர்ப்பீர்கள். மாமனார், மாமியார் மெச்சும்படி நடந்துகொள்வீர்கள். எதிர்பார்த்த அயல்நாட்டுப் பயணம் தேடி வரும். புதிய இடத்தில் வேலை அமையும். வழக்கில் வெற்றி கிடைக்கும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு எதிர்பார்த்தபடி அமையும். திடீர் வெற்றிகள் கிடைக்கும் நேரமிது.

ராசி பலன்கள்: செப்டம்பர் 17-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை

கடகம்: குடும்பத்தில் மகிழ்ச்சி நிரந்தரமாகத் தங்கும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். அரசு வேலைகள் விரைந்து முடியும். உங்களின் சகிப்புத்தன்மையை, கணவர் புரிந்துகொள்வார். மகனுக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். புண்ணியத் தலங்களுக்குச் செல்வீர்கள். கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும். கமிஷன் வகைகளால் லாபம் உண்டு. மாமனார், மாமியார் உங்களின் புதிய திட்டங்களை ஆதரிப்பார்கள். குழந்தைபாக்கியம் சிலருக்குக் கிடைக்கும். புதிதாக ஆபரணங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் இருப்பவர்களுக்குத் தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக ஊழியர்களால் மன அமைதி குறையும். நாவன்மையால் வெல்லும் நேரமிது.

ராசி பலன்கள்: செப்டம்பர் 17-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை

சிம்மம்: புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். எதிர்த்தவர்கள் நண்பர்களா வார்கள். அதிகாரத்தில் இருப்பவர்களால் ஆதாயம் உண்டு. பழைய வீட்டை நல்ல விலைக்கு விற்று புது இடம் வாங்குவீர்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். வீட்டைக் கட்டி முடிக்க எதிர்பார்த்த வங்கிக் கடன் கிடைக்கும். நாத்தனார் உதவிகரமாக இருப்பார். கணவர் சில நேரங்களில் முணுமுணுத்தாலும் உங்களின் புதிய முயற்சிகளுக்கு ஆதரவு தருவார். வியாபாரத்தை அதிக முதலீடு செய்து விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் தொல்லை தந்த அதிகாரி மாற்றப்படுவார். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவேண்டிய நேரமிது.

ராசி பலன்கள்: செப்டம்பர் 17-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை

கன்னி: எதிர்பார்ப்புகள் எளிதாக நிறைவேறும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தைத் தந்து முடிப்பீர்கள். புதிதாக வீடு மாறுவீர்கள். வி.ஐ.பிக்களின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். கணவருடன் ஆரோக்கியமான விவாதம் உண்டு. ஆடை, ஆபரணங்கள் சேரும். பூர்வீகச் சொத்தில் உங்களின் பங்கைக் கேட்டு வாங்குவீர்கள். மாமியார், நாத்தனார் வகையில் பனிப்போர் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். எவ்வளவு பணம் வந்தாலும் கரையும். வழக்கில் வழக்கறிஞரை மாற்றுவீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். உத்தியோகத்தில் சம்பளப் பாக்கி கைக்கு வரும். பதவி உயர்வும் உண்டு. சிக்கனம் தேவைப்படும் நேரமிது.

ராசி பலன்கள்: செப்டம்பர் 17-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை

துலாம்: திட்டவட்டமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பணப்புழக்கம் கணிசமாக உயரும். கணவர், உங்கள் வேலைகளைப் பகிர்ந்துகொள்வார். உங்களின் அறிவுரையைப் பிள்ளைகள் ஏற்றுக்கொள்வார்கள். விலை உயர்ந்த சமையலறை சாதனங்கள் வாங்குவீர்கள். மகனுக்கு அயல்நாட்டுத் தொடர்புடைய நிறுவனத்தில் வேலை கிடைக்கும். ஒரு சொத்தைக் காப்பாற்ற மற்றொரு சொத்தை விற்க வேண்டி வரும். புது வாகனம் வாங்குவீர்கள். உடன்பிறந்தவர்கள் பாசமழைப்பொழிவார்கள். மாமியார் உதவுவார். நாத்தனார் மனசு மாறும். வியாபாரத்தில் புதிய கிளைகள் தொடங்குவீர்கள். உத்தியோகத்தில் போராடி வெல்வீர்கள். புதிய முயற்சிகளில் வெற்றிபெறும் நேரமிது.

ராசி பலன்கள்: செப்டம்பர் 17-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை

விருச்சிகம்: சமூகத்தில் உங்களின் மதிப்பு, மரியாதை கூடும். ஆட்சியிலிருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவீர்கள். பிள்ளைகளின் நினைவாற்றல் கூடும். தள்ளிப்போய்க்கொண்டிருந்த வழக்கில் தீர்ப்பு சாதகமாகும். பழைய கடனைக் கொடுத்து முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்களின் பெருந்தன்மையை இப்போது புரிந்துகொள்வார்கள். எதிர்பாராத பணவரவு உண்டு. இழந்த செல்வாக்கை மீட்டெடுப்பீர்கள். தோழி வீட்டுக் கல்யாணம், சீமந்தத்தை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகளைச் சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். சின்ன சின்ன ஆசைகள் நிறைவேறும் நேரமிது.

ராசி பலன்கள்: செப்டம்பர் 17-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை

தனுசு: எதிர்பாராத வகையில் பணம் கைக்கு வரும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வீட்டைப் புதுப்பிக்கத் திட்டமிடுவீர்கள். பிள்ளைகள் படிப்பில் முன்னேறுவார்கள். சகோதரர் உதவிகரமாக இருப்பார். புதிதாக வாகனம் வாங்குவீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். பூர்வீகச் சொத்தைப் புதுப்பிப்பீர்கள். வழக்கு உங்களுக்குச் சாதகமாகும். மாமியார் உங்களின் செயல்களைப் பாராட்டிப் பேசுவார். நாத்தனார் வகையில் சுப செலவுகள் வந்து போகும். வியாபாரத்தில் இருந்த தேக்கநிலை நீங்கி, லாபம் பெருகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களிடம் வீண் வாக்குவாதம் செய்ய வேண்டாம். சுற்றியிருப்பவரின் சுயரூபத்தை அறியும் நேரமிது.

ராசி பலன்கள்: செப்டம்பர் 17-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை

மகரம்: குடும்பத்தில் அமைதி நிலவும். கணவருக்குப் புதிய இடத்தில் வேலை கிடைக்கும். பணவரவு திருப்தி தரும். சிலர் வீடு மாறுவீர்கள். பழுதான டி.வி, ஃப்ரிட்ஜை மாற்றி புதிதாக வாங்குவீர்கள். மகளுக்கு நல்ல இடத்தில் வாழ்க்கைத் துணை அமையும். உங்களின் முயற்சிக்கு, கணவர் ஆதரவு தருவார். பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். கணவர்வழி உறவினர்களால் உதவியுண்டு. குலதெய்வக் கோயிலுக்குச் சென்று வருவீர்கள். அயல்நாட்டில் இருப்பவர்களால் ஆதாயம் உண்டு. வியாபார ரகசியங்கள் யார் மூலம் கசிகிறது என்பதை அறிந்து புதிய முடிவு எடுப்பீர்கள். உத்தியோகத்தில் சில சூட்சுமங்களைக் கற்றுக்கொள்வீர்கள். சந்தர்ப்பம் அறிந்து காய் நகர்த்தும் நேரமிது.

ராசி பலன்கள்: செப்டம்பர் 17-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை

கும்பம்: வி.ஐ.பிக்கள் வீட்டு சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகளிடம் மறைந்து கிடந்த திறமைகளைக் கண்டறிந்து ஊக்கப்படுத்துவீர்கள். எதிரிகள் வலிய வந்து நண்பர்களா வார்கள். கடன் பிரச்னை கட்டுப்பாட்டுக்குள் வரும். மாமியார், நாத்தனாரிடம் வீண் வாக்குவாதம் செய்ய வேண்டாம். கணவர், உங்களின் முயற்சிக்கு உதவிகரமாக இருப்பார். சகோதரர் வகையில் ஆதாயம் உண்டு. பள்ளித்தோழிகளைச் சந்திப்பீர்கள். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்ட வேண்டியிருக்கும். உத்தியோகத்தில் உங்களின் கடின உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கும். தைரியமாக முடிவு எடுக்கும் நேரமிது.

ராசி பலன்கள்: செப்டம்பர் 17-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை

மீனம்: பிரச்னைகளைச் சமாளிக்கும் மன வலிமை கிடைக்கும். பணவரவு திருப்தி கரமாக இருக்கும். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். வழக்கில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். கணவர் சில நேரங்களில் வெறுப்பாகப் பேசினாலும் நீங்கள் அரவணைத்துப்போவது நல்லது. சிலர் வீடு மாற வேண்டிய சூழ்நிலை உண்டாகும். பிள்ளைகளால் ஏற்பட்ட டென்ஷன் குறையும். உடன்பிறந்தவர்கள் உதவி கரமாக இருப்பார்கள். நாத்தனார் உங்களிடம் அன்பாக நடந்துகொள்வார். உறவினர்கள், நண்பர்களுடன் இருந்த நெருடல்கள் நீங்கும். வியாபாரத்தில் வரவு சுமாராக இருக்கும். புதிய முதலீடுகள் வேண்டாம். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகளை ஏற்பீர்கள். உங்களின் பலம் உணரும் நேரமிது.