Published:Updated:

ராசிபலன்: செப்டம்பர் 24 முதல் அக்டோபர் 7-ம் தேதி வரை

நீண்டகால எண்ணங்கள் நிறைவேறும் தருணம் இது.

பிரீமியம் ஸ்டோரி

மேஷம்

ராகு 3-ம் வீட்டில் வலுவாகத் தொடர்வதால், வி.ஐ.பி-க்களின்அறிமுகம் கிடைக்கும். பழைய பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்கும். திட்டமிட்டு சில வேலைகளைச் செய்வீர்கள். சூரியனும் செவ்வாயும் 26-ம் தேதி முதல் 6-ம் வீட்டில் வலுவாக இருப்பதால் பழைய சொத்து பிரச்னைகள் தீரும். உடன்பிறந்தவர்கள் உங்களைப் புரிந்துகொள்வார்கள். அரசால் அனுகூலம் உண்டு. பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் உண்டாகும்.

ராசிபலன்: செப்டம்பர் 24 முதல் அக்டோபர் 7-ம் தேதி  வரை

புதன் 7-ம் வீட்டில் அமர்வதால் மனக்கசப்பு நீங்கும். சோர்வு நீங்கி உற்சாகமடைவீர்கள். இழுபறியாக இருந்த பல வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். குருவும் சுக்கிரனும் சரியில்லாததால் அரசு வகை காரியங்களில் அவசரம் வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களிடம் ரகசியங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டாம். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளைத் தாண்டி முன்னேறுவீர்கள். கலைத்துறையினர், மற்றவர்களிடம் வீண் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம்.

எதிர்நீச்சல் போட வேண்டிய நேரம் இது.

ரிஷபம்

குரு வலுவாக இருப்பதால், எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். அரசு சம்பந்தப்பட்ட வேலைகளை சுமுகமாக முடிப்பீர்கள். செவ்வாய் ஓரளவு சாதகமாக நிற்பதால் அலைச்சல் இருந்தாலும் உறவினர்களின் சுப நிகழ்ச்சிகளில் உற்சாகமாகக் கலந்துகொள்வீர்கள். 25-ம் தேதி முதல் புதன் 6-ம் வீட்டில் மறைவதால் தொண்டை வலி, சளித் தொந்தரவு வந்து போகும். வழக்கில் தீர்ப்பு தள்ளிப்போகும்.

ராசிபலன்: செப்டம்பர் 24 முதல் அக்டோபர் 7-ம் தேதி  வரை

ராசிநாதன் சுக்கிரன் சாதகமாக இருப்பதால் ஓரளவு பணவரவு உண்டு. பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள். வியாபாரத்தில் புதிய யுக்திகளால் தேங்கிக் கிடந்த சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். நவீன திட்டங்களை வகுத்து, சிறப்பாகச் செயல்படுத்துவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரியால், சக ஊழியர்களால் சில நெருக்கடிகளைச் சந்திக்க நேரிடும். அனுசரித்துப்போவது நல்லது. கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும்.

அரசாங்க அனுகூலம் உண்டாகும் வேளை இது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மிதுனம்

சூரியனும் செவ்வாயும் 26-ம் தேதி முதல் 4-ம் வீட்டில் வலுவாக இருப்பதால் வீடு, சொத்து, வாகனம் வாங்குவீர்கள். வழக்குகளில் வெற்றியுண்டு. உடன்பிறந்தவர்கள் தக்க நேரத்தில் உதவுவார்கள். பழைய கடனை பைசல் செய்வீர்கள். 6-ம் வீட்டில் நிற்கும் குருவால் வேலைச்சுமை, விரக்தி, பகைமை வரக்கூடும்.

ராசிபலன்: செப்டம்பர் 24 முதல் அக்டோபர் 7-ம் தேதி  வரை

புதனும் சுக்கிரனும் சாதகமான வீடுகளில் செல்வதால் கற்பனை வளம் பெருகும். முகத்தில் அழகு, இளமை கூடும். பணப்புழக்கம் அதிகரிக்கும். பழைய வீட்டைப் புதுப்பிக்கும் முயற்சியில் இறங்குவீர்கள். உறவினர்கள், நண்பர்கள் உங்களின் பெருந்தன்மையைப் புரிந்துகொள்வார்கள். விலையுயர்ந்த பொருள்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்தியோகத்தில் உங்களின் வேலைத்திறமையை மூத்த அதிகாரி புரிந்துகொண்டு உதவுவார். கலைத்துறையினரின் கலைத் திறனுக்கு ஏற்ற நல்ல வாய்ப்பு கிடைக்கும்.

தொட்டது துலங்கும் பொன்னான நேரம் இது.

கடகம்

சுக்கிரனும் புதனும் சாதகமாக இருப்பதால் உங்களின் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். வீட்டில் சுப காரியங்கள் நடக்கும். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். செவ்வாயும் சூரியனும் வலுவாக இருப்பதால் மூத்த சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும். தங்கைக்குத் திருமணம் முடியும். தைரியம் கூடும். எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். சமூகத்தில் செல்வாக்கு கூடும்.

ராசிபலன்: செப்டம்பர் 24 முதல் அக்டோபர் 7-ம் தேதி  வரை

5-ம் வீட்டில் குரு சாதகமாக இருப்பதால் புதுத் திட்டங்களுக்கு வழி வகுப்பீர்கள். பிரபலங்களின் துணையுடன் சில காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். பணவரவு திருப்தி தரும். பழைய கடனை பைசல் செய்வீர்கள். வியாபாரத்தில் லாபம் உயரும். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த புதிய சலுகைகளை அறிமுகம் செய்வீர்கள். உத்தியோகத்தில் கூடுதலாக வேலைபார்க்க வேண்டிவரும். கலைத்துறையினருக்குப் பெரிய நிறுவனத்திலிருந்து வாய்ப்புகள் கிடைக்கும்.

திடீர் முடிவுகளால் புகழடையும் நேரம் இது.

சிம்மம்

புதனும் சுக்கிரனும் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் பணப் புழக்கம் அதிகரிக்கும். உடல்நலம் சீராகும். உறவினர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். பால்ய நண்பர்கள் மனம்விட்டு பேசுவார்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். செவ்வாய் 26-ம் தேதி முதல் 2-ம் வீட்டில் நிற்பதால், பேச்சில் கடுமையான வார்த்தைகளைத் தவிர்ப்பது நல்லது. 4-ம் வீட்டில் குரு இருப்பதால் தாயாரின் உடல்நலனில் அக்கறை செலுத்துவது நல்லது. தாய்வழி உறவினர்களிடையே கருத்து மோதல்கள் நிலவும்.

ராசிபலன்: செப்டம்பர் 24 முதல் அக்டோபர் 7-ம் தேதி  வரை

ராகு வலுவாக நிற்பதால், பழைய இனிய அனுபவங்கள் நினைவுக்கு வரும். அயல்நாடு செல்ல சிலருக்கு விசா கிடைக்கும். வியாபாரத்தில், முக்கிய பிரமுகர்களின் அறிமுகத்தால் பெரிய நிறுவனங்களின் ஒப்பந்தங்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் திறமைகள் வெளிப்படும். கலைத்துறையினருக்கு வசதி, வாய்ப்புகள் பெருகும்.

தன்னம்பிக்கையால் எதையும் சாதிக்கும் நேரம் இது.

கன்னி

ராசிநாதன் புதனும் சுக்கிரனும் வலுவாக இருப்பதால், நினைத்தது நிறைவேறும். பிரபலங்களின் வீட்டு விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். எதிர்பாராத பணவரவு உண்டு. மகிழ்ச்சியான சம்பவங்கள் குடும்பத்தில் நிகழும். சவால்கள், எதிர்ப்புகளை முறியடித்து முன்னேறுவீர்கள். தடுமாறிக்கொண்டிருந்த சில காரியங்களையும் முழுமூச்சுடன் முடித்துக் காட்டுவீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும்.

ராசிபலன்: செப்டம்பர் 24 முதல் அக்டோபர் 7-ம் தேதி  வரை

சூரியனும், 26-ம் தேதி முதல் செவ்வாயும் ராசிக்குள் நிற்பதால் கண் எரிச்சல், அடிவயிற்றில் வலி வந்து போகும். அரசு காரியங்கள் தாமதமாக முடியும். வழக்கில் வழக்கறிஞரை மாற்றுவீர்கள். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து கொஞ்சம் சேமிக்கத்தொடங்குவீர்கள். 3-ம் வீட்டில் குரு நிற்பதால் அலைச்சல் அதிகரிக்கும். வியாபாரத்தில் சந்தை நிலவரம் அறிந்து முதலீடு செய்வது நல்லது. உத்தியோகத்தில் காலநேரமில்லாமல் உழைக்க வேண்டி வரும். கலைத்துறையினருக்குப் பெரிய நிறுவனங்களின் அழைப்பு வரும்.

பலவீனத்தைச் சரி செய்துகொள்ள வேண்டிய நேரம் இது.

துலாம்

குரு சாதகமாக இருப்பதால் எதிர்பாராத வகையில் உதவிகள் கிடைக்கும். புதிய சிந்தனைகள் மனத்தில் தோன்றும். சூரியன் 12-ம் வீட்டில் மறைந்திருப்பதால் யாருக்கும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். 26-ம் தேதி முதல் செவ்வாய் 12-ம் வீட்டில் மறைவதால் வீண் செலவு, அலைச்சல், உறவினர்களால் டென்ஷன் வரக்கூடும். ராசிநாதன் சுக்கிரன் சாதகமாக நிற்பதால் எதிலும் முன்னேற்றம் உண்டு.

ராசிபலன்: செப்டம்பர் 24 முதல் அக்டோபர் 7-ம் தேதி  வரை

புதன் உங்களின் ராசிக்குள் அமர்வதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். தந்தைவழியில் இருந்த மனவருத்தம் நீங்கும். தந்தையாரின் உடல்நிலை சீராகும். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணர்வீர்கள். கடையை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் சொந்த விஷயங் களை உங்களிடம் சொல்லி ஆறுதல் அடைவார்கள். கலைத்துறையினர் புதுமையாக சில படைப்புகளால் அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பார்கள்.

ஆடம்பரச் செலவுகளைக் குறைக்கவேண்டிய வேளை இது.

விருச்சிகம்

சூரியன் லாப வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால், அரசு சம்பந்தப்பட்ட வேலைகள் விரைந்து முடியும். வழக்குகள் சாதகமாகும். 26-ம் தேதி முதல் ராசிநாதன் செவ்வாயும் 11-ம் வீட்டில் அமர்வதால் பயம், பதற்றம் நீங்கி தன்னம்பிக்கை துளிர்விடும். இங்கிதமாகப் பேசி கடினமான வேலைகளைக்கூட முடிப்பீர்கள். குடும்பத்தினரின் எண்ணங்களைப் பூர்த்திசெய்வீர்கள்.

ராசிபலன்: செப்டம்பர் 24 முதல் அக்டோபர் 7-ம் தேதி  வரை

சுக்கிரனும் புதனும் சாதகமாக இருப்பதால் சுப நிகழ்ச்சிகள் கைகூடும். மகனுக்கு நல்ல வேலை அமையும். சகோதர வகையில் மகிழ்ச்சி தங்கும். ஆனால், ஜன்ம குரு தொடர்வதால் அவ்வப்போது மன உளைச்சல் இருக்கத்தான் செய்யும். வியாபாரத்தில் பழைய வேலையாட்கள் மீண்டும் பணியில் வந்துசேருவார்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். கலைத்துறையினருக்குப் பட்டிதொட்டியெங்கும் பாராட்டு கிடைக்கும்.

நீண்டகால எண்ணங்கள் நிறைவேறும் தருணம் இது.

தனுசு

ங்களின் பாக்யாதிபதியான சூரியன் 10-ம் வீட்டில் வலுவாக நிற்பதால் பணவரவு உண்டு. தந்தை உங்களை ஆதரிப்பார். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. சுக்கிரன் சாதகமாக இருப்பதால் பணப்பற்றாக்குறையிலிருந்து விடுபடுவீர்கள். பழைய கடன் பைசலாகும். எடுத்த காரியங்கள் யாவும் வெற்றியடையும். வி.ஐ.பி-க்களின் தொடர்பு கிடைக்கும்.

ராசிபலன்: செப்டம்பர் 24 முதல் அக்டோபர் 7-ம் தேதி  வரை

பிள்ளைகளின் கல்யாண பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும். வீடு கட்டும் பணி முழுமையடையும். செவ்வாயும் வலுவாக இருப்பதால் புத்துணர்ச்சி ததும்பும். சகோதரர் வகையில் உதவிகள் கிடைக்கும். பூர்வீகச் சொத்துப் பிரச்னைகளைச் சுமுகமாகப் பேசித் தீர்க்க வழி கிடைக்கும். வியாபாரத்தில் போட்டியாளர்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில், புதிய கொள்முதல் செய்வீர்கள். உத்தியோகத்தில் நெடுநாளாக எதிர்பார்த்த பதவி உயர்வு இப்போது கிடைக்கும். கலைத்துறையினரை, உதாசீனப்படுத்திய நிறுவனமே அழைத்துப் பேசும்.

ஆளுமைத் திறன் அதிகரிக்கும் காலம் இது.

மகரம்

புதன் சாதகமாக இருப்பதால் பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வதற்கு உதவிகள் கிடைக்கும். ராசிக்கு 9-ம் வீட்டில் சூரியன் நிற்பதால் தந்தையாரின் உடல்நலனில் கவனமாக இருங்கள். யாருடனும் வீண் வாக்குவாதங்கள் வேண்டாம். 26-ம் தேதி முதல் 9-ம் வீட்டில் செவ்வாயும் நிற்பதால் சகோதரர்கள் வகையில் மனக்கசப்புகள் வரும். சொத்து விஷயங்களில் கவனமாக செயல்படுவது நல்லது.

ராசிபலன்: செப்டம்பர் 24 முதல் அக்டோபர் 7-ம் தேதி  வரை

9-ம் வீட்டில் சுக்கிரனும் இருப்பதால் தன்னம்பிக்கை துளிர்விடும். கேட்ட இடத்தில் பண உதவி கிடைக்கும். 11-ம் வீட்டில் குரு சாதகமாகத் தொடர்வதால் மனோபலம் கூடும். பணப்பற்றாக்குறை நீங்கும். வியாபாரத்தில் நவீன யுக்திகளைக் கையாளுவீர்கள். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். சக ஊழியர்களிடையே அவ்வப்போது மனஸ்தாபங்கள் வரலாம். வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. கலைத்துறையினருக்குச் சம்பள பாக்கி கைக்கு வரும்.

நெருக்கடிகளிலிருந்து விடுபடும் வேளை இது.

கும்பம்

புதன் 9-ம் வீட்டில் நுழைவதால் ஓரளவு பணவரவு உண்டு. எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். நண்பர்களுடன் இருந்துவந்த பிரச்னைகள் நீங்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தங்கும். ராசிக்கு 8-ம் வீட்டில் சுக்கிரன் நிற்பதால் வேற்றுமொழிக்காரர்கள், வெளிநாட்டிலிருப்பவர்களால் ஆதாயமுண்டு. எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் பிறக்கும்.

ராசிபலன்: செப்டம்பர் 24 முதல் அக்டோபர் 7-ம் தேதி  வரை

நீண்ட நாளாகத் தடைபட்டு வந்த காரியங்களை இப்போது முடிப்பீர்கள். மற்றவர்களிடம் பேசும்போது கவனமாகப் பேசுங்கள். வெளியிடங்களில் வீண் அலைச்சல், வேலைச்சுமை அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். வேலையாட்களை விட்டுப்பிடித்து வேலை வாங்குங்கள். உத்தியோகத்தில் அலுவலக ரகசியங்களைப் பற்றியோ, மேலதிகாரிகளைப் பற்றியோ எவரிடமும் கருத்துசொல்ல வேண்டாம். கலைத்துறையினர், சக நண்பர்களிடம்கூட கவனமாக இருக்க வேண்டிய நேரம் இது.

அலைச்சலுடன் ஆதாயமும் உண்டாகும் தருணம் இது.

மீனம்

சுக்கிரன் ராசிக்கு 7-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் தடைப்பட்ட பல காரியங்களை இனி விரைந்து முடிப்பீர்கள். நல்ல செய்திகள் வந்து உங்களை மகிழ்விக்கும். கணவன் மனைவிக்குள் அந்நியோன்யம் பெருகும். ஆனால், 7-ம் வீட்டில் சூரியனும் 26-ம் தேதி முதல் செவ்வாயும் நிற்பதால், கணவன் மனைவி ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. பிள்ளைகளின் வருங்காலத்துக்காக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.

ராசிபலன்: செப்டம்பர் 24 முதல் அக்டோபர் 7-ம் தேதி  வரை

குருவும் புதனும் சாதகமாக இருப்பதால் பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். அரசாங்க வகை வேலைகளிலிருந்த தேக்கநிலை மாறும். வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்டங்களை அனுபவ அறிவால் சரிசெய்வீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் தொடர்ந்து உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். கலைத்துறையினருக்கு, வெளிநாட்டு நிறுவனங்களிலிருந்து வாய்ப்புகள் வரும்.

மறைந்து கிடந்த திறமைகள் வெளிப்படும் வேளை இது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு