தன்னம்பிக்கை
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
ஹெல்த்
Published:Updated:

ராசி பலன்கள்: செப்டம்பர் 3-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை

ராசி பலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
ராசி பலன்கள்

செல்வாக்குக் கூடும் நேரமிது.

ராசி பலன்கள்: செப்டம்பர் 3-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை

மேஷம்: இதுவரை குழம்பிக்கொண்டிருந்த விஷயத்தில் தெளிவான முடிவெடுப்பீர்கள். அதிகாரம் மிக்க பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். பிள்ளைகளால் சமூகத்தில் மதிப்பு கூடும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு வரும். பூர்வீகச் சொத்தில் மாற்றம் செய்வீர்கள். நாத்தனார் உங்களுக்கு ஆதரவாகப் பேசுவார். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகளைச் சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் கூடுதல் நேரம் ஒதுக்கி உழைத்தாலும் அதற்கேற்ற அங்கீகாரமோ, பாராட்டோ இல்லையென வருந்துவீர்கள். இங்கிதமான பேச்சால் சாதிக்கும் நேரமிது.

ராசி பலன்கள்: செப்டம்பர் 3-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை

ரிஷபம்: எதிர்பாராத பணவரவு உண்டு. வி.ஐ.பி-க்களின் நட்பு கிடைக்கும். கணவரின் ரசனையைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப நடப்பீர்கள். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலைக்குத் தகுந்தாற்போல் பொறுப்பாக இருப்பார்கள். அரசாங்க விஷயம் சுமுகமாக முடியும். வழக்கில் திருப்பம் ஏற்படும். தோழிகளால் உதவிகள் உண்டு. மாமியார் உங்களின் புதுத் திட்டங்களை வரவேற்பார். வியாபாரத்தில் புதிய கிளைகள் தொடங்குவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் கடின உழைப்பால் வெற்றிபெறுவீர்கள். நினைத்ததை நடத்திக்காட்டும் நேரமிது.

ராசி பலன்கள்: செப்டம்பர் 3-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை

மிதுனம்: உங்களின் புத்திசாலித்தனம் வெளிப்படும். வீடு வாங்க வங்கிக்கடன் கிடைக்கும். இங்கிதமாக பேசி எல்லோரையும் கவர்வீர்கள். கணவர் உங்களின் விட்டுக்கொடுத்தலைப் புரிந்துகொள்வார். மகளின் பிடிவாதம் தளரும். மகனுக்கு வெளிநாட்டுத் தொடர்புடைய நிறுவனத்தில் நல்ல வேலை அமையும். அரசால் ஆதாயம் உண்டு. பழைய உறவினர்கள், தோழிகள் தேடிவந்து பேசுவார்கள். விலையுயர்ந்த சமையலறை சாதனங்கள் வாங்குவீர்கள். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். வியாபாரத்தில் புதிய பணியாளர்களைச் சேர்ப்பீர்கள். உத்தியோகத்தில் உங்கள் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பு வரும். நிதானமாக முன்னேறும் நேரமிது.

ராசி பலன்கள்: செப்டம்பர் 3-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை

கடகம்: எடுத்த வேலையை முடிக்காமல் ஓய மாட்டீர்கள். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். கணவர் உங்களின் புதிய முயற்சிக்குப் பக்கபலமாக இருப்பார். தவணை முறையில் பணம் செலுத்தி புது வாகனம் வாங்குவீர்கள். உறவினர்கள் மதிப்பார்கள். தோழிகளைச் சந்தித்து மகிழ்வீர்கள். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து யோசிப்பீர்கள். வழக்கு சாதகமாகும். சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். மாமியாரின் ஆதரவு பெருகும். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளைச் சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகளை விமர்சனம் செய்யாதீர்கள். அனுபவ அறிவால் வெற்றிபெறும் நேரமிது.

ராசி பலன்கள்: செப்டம்பர் 3-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை

சிம்மம்: தொட்ட காரியம் யாவும் துலங்கும். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவரின் அறிமுகம் கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். கணவர் உங்களைப் புரிந்துகொள்வார். மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். மகனின் உயர்கல்வி, உத்தியோகம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் வெற்றிபெறும். வீடு கட்டும் பணியைத் தொடர்வீர்கள். இங்கிதமான பேச்சால் அனைவரையும் கவர்வீர்கள். ஆபரணங்களைக் கவனமாகக் கையாளுங்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனைக்கேற்ற பொருள்களைக் கொள்முதல் செய்து லாபத்தைப் பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் கை ஓங்கும். அடுத்தடுத்த பிரச்னைகளை எளிதாகத் தீர்ப்பீர்கள்.

ராசி பலன்கள்: செப்டம்பர் 3-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை

கன்னி: எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை வரும். அதிகாரம் மிக்க பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வழக்கு சாதகமாகும். கணவர் வியக்கும்படியான சாதனையைச் செய்வீர்கள். பிள்ளைகளின் விருப்பு வெறுப்பை அறிந்து அதற்கேற்ப அவர்களை நெறிப்படுத்துவீர்கள். புதுப் பொறுப்புகள், பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். சகோதரிக்கு இருந்த பிரச்னையைத் தீர்த்து வைப்பீர்கள். விருந்தினர்கள் வருகை அதிகரிக்கும். புண்ணிய தலங்களுக்குச் சென்றுவருவீர்கள். வியாபாரத்தில் கமிஷன் வகையால் லாபம் வரும். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளைத் தாண்டி முன்னேறுவீர்கள். நட்பால் நிம்மதி பெறும் நேரமிது.

ராசி பலன்கள்: செப்டம்பர் 3-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை

துலாம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் வெற்றிபெறுவீர்கள். புதிய யோசனைகள் பிறக்கும். உறவினர்கள், தோழிகள் வீட்டு விசேஷத்தை முன்னின்று நடத்துவீர்கள். தள்ளிப்போன திருமணம் இப்போது நிச்சயமாகும். புது வேலை கிடைக்கும். கணவரிடம் கலந்தாலோசித்து செலவுகளைக் குறைப்பீர்கள். நகர எல்லையையொட்டி வீடு வாங்குவீர்கள். வங்கியிலிருந்த வீட்டுப் பத்திரத்தை மீட்பீர்கள். பிள்ளைகள் மனத்திலிருக்கும் பயத்தைப் போக்குவீர்கள். வியாபாரத்தில் வரவு உயரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு பெறுவீர்கள். இதுவரை இருந்த தடைகள் நீங்கும் நேரமிது.

ராசி பலன்கள்: செப்டம்பர் 3-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை

விருச்சிகம்: உங்களின் நிர்வாகத்திறன் அதிகரிக்கும். கணவரை அவரின் போக்கிலேயே சென்று மாற்றுவீர்கள். உங்களைத் தாழ்த்திப் பேசியவர்களின் மனம் மாறும். வீடு, வாகனம் வாங்க கடன் கிடைக்கும். ஷேர் மார்க்கெட் மூலம் பண வரவு உண்டு. நாத்தனார் உங்களின் பேச்சுக்கு மதிப்பளிப்பார். அரசால் அனுகூலம் உண்டு. எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும். அயல்நாட்டிலிருப்பவர்களால் ஆதாயமடைவீர்கள். குடும்பத்தினருடன் சென்று குலதெய்வ பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் உயரதிகாரிகளுடன் விவாதங்கள் வரும். செல்வாக்குக் கூடும் நேரமிது.

ராசி பலன்கள்: செப்டம்பர் 3-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை

தனுசு: வாழ்க்கையின் நெளிவு சுளிவுகளைக் கற்றுக்கொள்வீர்கள். பிரபலங்களின் உதவியால் சில விஷயங்களைச் சாதிப்பீர்கள். வீட்டு வேலைகளை கணவர் இழுத்துப்போட்டுச் செய்வார். உங்கள் ரசனைக்கேற்ப வீடு, வாகனம் அமையும். உறவினர், தோழிகள் தேடிவந்து பேசுவார்கள். சமையல் பணி, மின்சாதனங்களில் கவனமாக இருப்பது நல்லது. அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். மாமியார், நாத்தனாரை அனுசரித்துப் போவீர்கள். வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும். போட்டிகளால் லாபம் குறையும். உத்தியோகத்தில் உங்களுடைய திறமையை மேலும் அதிகரித்துக்கொள்ளும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். சவால்களில் வெற்றிபெறும் நேரமிது.

ராசி பலன்கள்: செப்டம்பர் 3-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை

மகரம்: உங்களின் அணுகுமுறையை மற்றவர்களின் ரசனைக்கேற்ப மாற்றியமைத்துக்கொள்வீர்கள். பணவரவு திருப்தி தரும். உறவினர்கள், அயலவர்களால் உதவி உண்டு. பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். மாமியார், நாத்தனார் கனிவாக நடந்துகொள்வார்கள். ஒரு சொத்தைக் காப்பாற்ற மற்றொரு சொத்தை விற்க வேண்டி வரும். வாகனம் வாங்க வங்கிக் கடன் கிடைக்கும். வழக்கில் வழக்கறிஞரை மாற்றுவீர்கள். வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளைக் கற்றுக்கொள்வீர்கள். உத்தியோகத்தில் மற்றவர்களின் வேலையையும் சேர்த்து பார்க்கவேண்டி வரும். சகிப்புத்தன்மையால் முன்னேறும் நேரமிது.

ராசி பலன்கள்: செப்டம்பர் 3-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை

கும்பம்: உங்களின் பலம் பலவீனத்தை உணருவீர்கள். உங்களை எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள். தன்னிச்சையாக சில முடிவுகள் எடுப்பீர்கள். பேச்சில் கம்பீரம் பிறக்கும். வேலைக்கு விண்ணப்பித்துக் காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். மாமனார், மாமியார் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். சகோதரர்கள் மதிப்பார்கள். பழுதான பொருள்களை மாற்றுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் விரும்பி வருவார்கள். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். எதிர்பாராத திடீர் திருப்பங்கள் நேரும்.

ராசி பலன்கள்: செப்டம்பர் 3-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை

மீனம்: மனத்தில் உற்சாகம் பிறக்கும். குடும்பத்தில் நல்லது நடக்கும். பழைய பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். அரசு சம்பந்தப்பட்ட வேலைகள் சுமுகமாக முடியும். வீட்டைப் புதுப்பிப்பீர்கள். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். உறவினர்களுடன் இருந்துவந்த மோதல்கள் விலகும். திருமணம் கூடி வரும். தைரியமான முடிவுகளை எடுப்பீர்கள். மகனுக்கு நல்ல இடத்தில் வேலை கிடைக்கும். கல்வியாளர்களின் அறிமுகத்தால் பயனடைவீர்கள். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் எல்லாவற்றையும் பகிர்ந்துகொள்ள வேண்டாம்.