திருத்தலங்கள்
Published:Updated:

கேது சூரியனுடன் இணைந்தால்...

ராகு - சூரியன்
பிரீமியம் ஸ்டோரி
News
ராகு - சூரியன்

ஜோதிடத் தகவல்கள்: முருகேசன்

ஒருவரது குலம் செழித்தோங்கி திகழவேண்டும் எனில், அவருக்கு கேதுவின் திருவருள் பரிபூரணமாக வேண்டும். ஒருவரது ஜாதகத் தில் ஞானகாரகனான கேது பகவான், ஆன்ம காரகனான சூரியனு டன் இணைந்தால், அந்த ஜாதகரின் வாழ்வை பிரகாசமாக விளங்க வைப்பார். அவரே வலுவான குருவுடன் இணைந்து காணப்பட்டால், விழிப்பு உணர்வைப் பெற்றுத் தருவார்.

கேது நிழல் கிரகம்தான். எனினும், நாம் எதிர்கொள்ள வேண்டிய துயரங்களை எல்லாம் வலுவிழக்கச் செய்து, வளமான வாழ்வை நிஜமாக்குபவர்.

கேது, காலன், எண்ணுபவன், மஹா கேது, ருத்ர பிரியர், தூம்ர கேது, விவர்ணகன், நறுமணம் ஏற்பவர், வைக்கோல் புகையின் வண்ணம் கொண்டவர் என்றெல்லாம் கேதுவைச் சிறப்பிக்கும் ஞானநூல்கள், கேது பகவானை வழிபடுவதால் சகல பீடைகளும் விலகும்; செல்வம், தான்யம், பசுக்கள் ஆகிய போகங்கள் பெருகும் என்றும் அறிவுறுத்துகின்றன.

நெற்றியும் பலன்களும்!

பிருகு முனிவர் தன் தந்தையான வருணதேவனிடம் இருந்து கேட்டறிந்து தொகுத்தது ‘சாமுத்ரிகா லட்சண சாஸ்திரம்’. மனிதரின் அங்க லட்சண பலன்களைக் கூறும் இந்த ஞானநூல், நம் நெற்றியைப் பற்றியும் விவரிக்கிறது.

ஒருவருக்கு விசாலமான நெற்றி இருப்பது ஞானத்தின் சின்னமாகும். கல்வி, கலைகளில் சிறந்தவர்கள். சிக்கன மனப்பான்மை அளவுக்கு மீறி இருக்கும். முப்பது வயது வரை போராட்டமான வாழ்க்கை அமையும். பிறகு திருப்பம் ஏற்படும்; 45 வயதுக்கு மேல் நிலையான வாழ்வு அமையும்.

நெற்றி சற்று மேடாக இருந்தால், லட்சுமியின் அருள் கிட்டும். இவர்கள் பிறந்த குடும்பமே வளம் கொழிப்பதாக இருக்கும். செல்வமும் செல்வாக்கும் நிறைந்த சூழலில் கவலையற்று வளருவார்கள்.

சுருக்கம் நிறைந்த நெற்றியைக் கொண்டவர்கள், சஞ்சல சுபாவம் மிகுந்தவர்களாக இருப்பார்கள். சந்தேகம் இவர்களுடைய இயல்பாக இருக்கும். எவரையும் எளிதாக நம்பமாட்டார்கள். சொந்தக் காலில் நிற்பார்கள். எனினும் குடும்ப வாழ்வில் நிம்மதியும், குழந்தைகள் மூலம் வாழ்வில் உயர்வும் உண்டு.

அடிக்கடி வியர்வை வழியும் நெற்றியை உடையவர்கள் நாவன்மை மிகுந்தவராக இருப்பர். வாய்ப்பாட்டு, இசைக் கருவிகள் வாசித்தல் போன்ற கலைகளில் ஒன்றை வாழ்க்கை ஆதாரமாகக் கொண்டிருப்பார்கள்.

`பிரச்ன’ வகைகள்!

எதிர்காலம் குறித்து கேள்வி கேட்கப்படும் நேரம், கேள்வி எழும் நேரம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, அந்தக் கால கட்டத்தில் உள்ள கிரக நிலைகளை ஆராய்ந்து பலன் சொல்வது, பிரச்ன முறை ஆகும். இதில் பலவகை உண்டு. என்னென்ன தெரியுமா?

விவாஹப் பிரச்னம்: கல்யாணத்துக்காக பார்க்கப்படுவது.

சந்தானப் பிரச்னம்: குழந்தை பாக்கியத்துக்காக

ரோகப் பிரச்னம்: பிணிகள் தொடர்பானது

ஆயுள் பிரச்னம்: ஆயுள் தொடர்பானது

மரணப் பிரச்னம்: மரணம் தொடர்பானது

ஸ்வப்னப் பிரச்னம்: கனவுகள் தொடர்பானது

யாத்ரா பிரச்னம்: பயணங்கள் தொடர்பானது

யுத்த பிரச்னம்: போரில் வெற்றி தொடர்பானது

சாந்திப் பிரச்னம்: சமாதானம் தொடர்பானது

வர்ஷா பிரச்னம்: மழை தொடர்பானது

கூபப் பிரச்னம்: கிணறு தோண்டுவது தொடர்பானது

போஜனப் பிரச்னம்: உண்ட உணவு பற்றியது

தாம்பூலப் பிரச்னம்: வெற்றிலைகளைக் கொண்டு பலன் சொல்வது.

சோழிப் பிரச்னம்: சோழிகளைக் கொண்டு பலன் கூறும் முறை.