Published:Updated:

பொருளாதாரப் பிரச்னைகள் ஏற்படுத்தும் ஜாதக அமைப்பு எது? - ஹரிகேசநல்லூர் வெங்கட்ராமன் #Video

சக்தி ஜோதிடம்
சக்தி ஜோதிடம்

பொருளாதாரப் பிரச்னைகள் ஏற்படுத்தும் ஜாதக அமைப்பு எது? - ஹரிகேசநல்லூர் வெங்கட்ராமன்

வாழ்வில் செல்வம் மிக முக்கியமான இடத்தைப் பிடிக்கிறது. வள்ளுவனே, ‘பொருளில்லார்க்கு இவ்வுலகமில்லை’ என்றுதான் சொல்கிறார். அன்றாட வாழ்க்கைக்குத் தேவைப்படும் பொருளை சம்பாதிப்பதே நம் நோக்கம். வாழ்க்கையில் பொருளே ஆதாரம் என்பதால்தான் பொருளாதரம் என்கிறோம். பெரும்பாலானவர்களும் கடினமாக உழைக்கிறோம். ஆனால் வெகுசிலரே நிறைய பொருள் ஈட்டுகிறார்கள். தேவைக்கும் குறைவாக பணம் வரும்போது பலர் பொருளாதார சிக்கல்களில் மாட்டிக்கொள்கிறார்கள். அனைத்துக்கும் வழிகாட்டும் ஜோதிடம் பொருளாதாரப் பிரச்னைகள் தோன்றுவது ஏன் என்பது குறித்தும் விரிவாகப் பேசுகிறது. இது குறித்து அனுபவமிக்க பிரபல ஜோதிடர் ஹரிகேசநல்லூர் வெங்கட்ராமன் அவர்களிடம் கேட்டோம்.

ஜோதிடம்
ஜோதிடம்

“பொருளாதார வளம் என்பது பூர்வ ஜன்மம் சம்பந்தப்பட்டது என்கிறது ஜோதிட சாஸ்திரம். ஔவையார்கூட ‘தவத்தளவேயாம் செல்வம்’ என்று சொல்லியிருக்கிறார். அதாவது ஒருவர் என்ன தவம் செய்திருக்கிறார் என்பதைப் பொறுத்தே செல்வம் அமையும் என்பது அதன் பொருள். தவம் என்று இங்கே சொல்லப்படுவது பூர்வ ஜன்ம புண்ணியத்தையே. நம் ஜாதகத்தில் லக்னத்திலிருந்து ஐந்தாம் இடம் பூர்வ புண்ணிய ஸ்தானம். இந்த ஐந்தாம் இடம் வலுவாக இருந்தால் ஒருவருக்குப் பதவிகிடைக்கும், செல்வம் கிடைக்கும், மக்கட் செல்வங்கள் இருக்கும். ஏன், எல்லாமே இருக்கும். பொதுவாக ஜோதிட அடிப்படையில் இரண்டாம் இடத்துக்கு அதிபதி மற்றும் பதினொன்றாம் இடத்துக்கு அதிபதிகளான் கிரகங்கள் வலுவாக இருக்க வேண்டும். ஏதேனும் ஒருவிதத்தில் இந்த இரண்டு கிரகங்களும் சம்பந்தப்பட்டிருக்க வேண்டும்.

இரண்டு கிரகங்களும் ஒரே இடத்தில் இருக்கலாம். அல்லது ஒன்றை ஒன்று பார்த்துக்கொண்டிருக்கலாம். பதினொன்றுக்குடைய கிரகத்தின் சாரத்தில் இரண்டுக்குடையவனோ அல்லது இரண்டுக்குடையவன் சாரத்தில் பதினொன்றுக்குடைய கிரகமோ இருந்தால் அதை கவனத்தில் கொள்ள வேண்டும். இவ்வாறு ஒருவரின் ஜாதகத்தில் இந்த இரண்டு நிலைகளை ஆராய்ந்தாலே அவரின் பொருளாதார நிலையை விளக்கிவிடலாம்.

ஒரு சிலருக்குப் பொருளாதாரம் பெரும் சிக்கல்களாக மாறிவிடுகிறது. எந்த மாதிரியான ஜாதக அமைப்பில் இந்த பிரச்னைகள் தோன்றும் என்பது குறித்தும் ஜோதிட சாஸ்திரம் விரிவாகச் சொல்கிறது” என்ற கூறினார் ஹரிகேச நல்லூர் வெங்கட்ராமன்.

ஹரிகேசநல்லூர் வெங்கட்ராமன்
ஹரிகேசநல்லூர் வெங்கட்ராமன்

தொடர்ந்து அவர் பொருளாதாரப் பிரச்னைகள் ஏற்படுத்தும் ஜாதக அமைப்புகள் குறித்தும் அவற்றுக்கான எளிய பரிகாரங்கள் குறித்தும் பேசியதை அறிந்துகொள்ள கீழே உள்ள வீடியோவைப் பாருங்கள்.

அடுத்த கட்டுரைக்கு