Published:Updated:

`பெண்களின் கனிவான கவனத்துக்கு!'

பெண்களும் ஜோதிடமும்!
பிரீமியம் ஸ்டோரி
பெண்களும் ஜோதிடமும்!

பெண்களின் உடல்நிலையும் ஜாதகமும் ஜோதிட விளக்கங்கள்: ஜோதிடர் பாரதிஶ்ரீதர் படம்: படம்: மதன்சுந்தர்

`பெண்களின் கனிவான கவனத்துக்கு!'

பெண்களின் உடல்நிலையும் ஜாதகமும் ஜோதிட விளக்கங்கள்: ஜோதிடர் பாரதிஶ்ரீதர் படம்: படம்: மதன்சுந்தர்

Published:Updated:
பெண்களும் ஜோதிடமும்!
பிரீமியம் ஸ்டோரி
பெண்களும் ஜோதிடமும்!

நவீன உலகம் இன்று அனைத்திலும் வளர்ச்சி அடைந்துள்ளது. பொருளாதார அளவில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அறிவியல் வளர்ச்சியால் கிடைக்கும் உபகரணங்கள் நம் வாழ்க்கையை எளிமையாகவும் இனிமையாகவும் மாற்றிக்கொண்டிருக்கின்றன.

`பெண்களின் 
கனிவான கவனத்துக்கு!'

தேநேரம், தனிமனிதராகப் பலரிடம் இருக்கும் ஒரு சிந்தனை, ‘எல்லாம் இருக்கு; ஆனா ஏதோ இல்லாத மாதிரியே இருக்கு’ என்கிற விரக்தி மனோபாவம்தான். உடல் சார்ந்தும் உள்ளம் சார்ந்தும் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்னைகளே, இந்த விரக்தி நிலைக்குக் காரணமாகின்றன எனலாம்.

இந்த நிலை ஆண் பெண் என இருபாலருக்கும் உண்டு என்றாலும், உடல்ரீதியான பிணிகள் - பாதிப்புகளால் பெண்கள் அதிகளவில் பாதிப்புக்கு ஆளாகிறார்கள். இதற்குத் தீர்வாக மனநலம் சார்ந்தும் மருத்துவம் சார்ந்தும் பல வழிகாட்டல்கள் உண்டு. அதேபோல், ஜோதிடரீதியாகவும் சில விளக்கங்களை எடுத்துச் சொல்கின்றன ஜோதிட ஞானநூல்கள்.

பொதுவாக எந்தவொரு குழந்தையும் உருவாக ஒன்பது மாதங்கள் தேவை. ஒன்பது மாதங்களும் குறிப்பிட்ட கிரகங்களின் கட்டுப்பாட்டில் இருப்பவை. முதல் மாதம் கரு தரிப்பதற்குச் சுக்கிரன் காரணமாக இருக்கிறார். அதாவது ஆண்களுக்கு சுக்கிலம் என்கிற விந்து உருவாகவும் பெண்களுக்கு மாதவிடாய்ச் சுழற்சியில் முறையாகக் கருமுட்டை உருவாவதற்கும் சுக்கிரனின் பலமே காரணம். இரண்டும் ஆரோக்கியமாக இருக்கும் பட்சத்தில் ஒரு கரு உருவாகிறது.

இரண்டாவது மாதம் அந்தக் கரு ஒரு பிண்டமாக உருவாக வேண்டும் அல்லவா? அதற்கு செவ்வாயின் பலம் முக்கியம். இப்படியே 3-வது மாதம் - குருபகவான்; 4-வது மாதம் - சந்திரன்; 5-வது மாதம் சூரியன்; 6-வது மாதம் சனி; 7-வது மாதம் - புதன்; 8-வது மாதம் அந்த மாதத்துக்காக லக்னக்காரகன்; 9-வது மாதம் சந்திரன்; ஜனிக்கும் 10-வது மாதம் சூரியன் எனும் வகையில் கிரகங்கள் ஆளுமை செய்கின்றன என்கிறது ஜோதிடம்.

பொதுவாகப் பெண்களைப் பொறுத்தவரை சுக்கிரன், சந்திரன், செவ்வாய் ஆகிய மூன்று கிரகங்களும் அவர்களின் தேக ஆரோக்கியம் தொடர்பான பிரச்னைகளுக்குக் காரணமாகின்றன எனலாம்.

இப்போதைய சூழலில் பலருக்கும் மன அழுத்தம் அதிகமாக இருப்பதைக் காண முடிகிறது. இதற்குக் காரணம், சுக்கிரன் பூமிக்கு மிக நெருக்கமாக வருவதுதான் என்கிறார்கள் வானியல் மற்றும் ஜோதிட அறிஞர்கள். பெண்கள் வாழ் விலும் இந்த மன அழுத்தம் என்பது முக்கியமான பிரச்னை யாக உருவெடுத்திருக்கிறது.

`பெண்களின் 
கனிவான கவனத்துக்கு!'
Sujay_Govindaraj

பெண்கள் இன்றைக்கு நிறைய படிக்கிறார்கள். நல்ல வேலை பார்க்கிறார்கள். ஆனால் திருமணம் கைகூட நீண்டகாலம் ஆகி விடுகிறது. நவீன உலகில் சில பெண்கள், ‘லிவிங் டுகெதர்’ வாழ்வையும் தேர்வு செய்கிறார்கள். சிலர் மனஅழுத்தம் அதிகமாகித் தற்கொலை முடிவுக்குச் செல்கிறார்கள். இதற்கெல்லாம் அவர்களின் ஜாதகத்தில் சுக்கிரனின் வீடும் அதில் அமர்ந்திருக்கும் கிரகங்களின் சாதகமற்ற நிலையுமே காரணம் ஆகும்.

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இப்படியான செய்திகளை நிறைய பார்க்க முடிந்தது. அப்போது ராகு பகவான் சுக்கிரனின் வீட்டில் இருந்தார். இதனால் மனதின் சமநிலை குலைந்து பலரும் அவதியுற்றனர். சிலர் வாழ்வை வெறுக்கும் நிலைகூட உண்டானது. இதற்குக் காரணம், சுக்கிரனின் வீடான ரிஷபத்தில் ராகு அமர்ந்திருந்ததே ஆகும்.

சுக்கிரனைப் போலவே பெண்களின் வாழ்வில் ஆதிக்கம் செலுத்தும் கிரகங்கள் சந்திரன் மற்றும் செவ்வாய்.

ஒரு பெண்ணின் வாழ்க்கையும் சந்திரனின் சுழற்சியும் மிகவும் இணைந்த தொடர்பை உடையன. சந்திரனின் சுழற்சி என்பது 28 நாள்கள். பெண்ணின் மாதவிடாய்ச் சுழற்சி தினங்களும் 28 நாள்களே.

இன்று பெண் குழந்தைகள் அதிகம் சந்திக்கும் உடல்ரீதியான பிரச்னைகளில் ஒன்று சிறுவயதிலேயே மாதவிடாய்ச் சுழற்சி தொடங்கிவிடுவது. குறிப்பாகப் பத்து வயதுக் குழந்தைகள்கூட இப்படிப்பட்ட பிரச்னைகளுக்கு ஆட்படுகிறார்கள். மருத்துவர்களிடம் கேட்டால் `மன அழுத்தமும் உணவுப் பழக்கவழக்கமுமே காரணம்’ என்கிறார்கள்.

ஜோதிடம் அதற்கு வேறு சில காரணிகளைச் சொல்கிறது. ஒரு பெண்ணின் ஜாதகத்தில் எப்போது செவ்வாயின் பார்வை படுகிறதோ அப்போது, ‘ரஜஸ்’ என்கிற உதிரப்போக்கு ஆரம்பிக்கும்.

நம் உடலில் ரத்தத்துக்கு அதிபதி செவ்வாய். நீருக்கு அதிபதி சந்திரன். இருவரும் நல்ல நிலையில் இருந்து, ஒருவரையொருவர் பார்ப்பது, பெண்களுக்கு முறையான உதிரப் போக்கையும் ஆரோக்கியத்தையும் தரும்.

ஆனால் இருவரின் பார்வையும் சாதகம் இல்லாமல் அமையும் சூழலில், குறிப்பாக சந்திரனின் பார்வையும் இடமும் சாதகமாக அமையாத பட்சத்தில், ஒரு பெண்ணுக்கு மாதவிடாய்ச் சுழற்சி என்பது முறையாக அமை யாது. இதனால் கருவுறுதலிலும் பிரச்னை உண்டாகிறது. ஐ.வி.எஃப் எனப்படும் செயற்கைக் கருத்தரித்தலில்தான் சிலர் குழந்தைப் பாக்கியம் பெறுகிறார்கள். இவை அனைத்துக்குமே ஜாதகத்தில் சந்திரன் மற்றும் செவ்வாய் அமையும் நிலையே காரணம்.

இப்படி ஜாதகத்தில் செவ்வாயும் சந்திரனும் சாதகமாக அமையா மல் பாதிப்புகளுக்கு ஆளாகும் பெண்கள், சில பரிகாரங்களைச் செய்து பலன் பெறலாம்.

`பெண்களின் 
கனிவான கவனத்துக்கு!'

எளிய பரிகாரங்கள்...

முறையற்ற மாதவிடாய் அல்லது அதிக உதிரப்போக்கு ஆகிய பிரச்னைகளில் சிக்கித் தவிக்கும் பெண்கள், பௌர்ணமி திதி அன்று பச்சரிசி தானம் செய்வது நல்லது. சந்திரன் தன் முழு பலத்தோடு இருக்கும் நாள் பௌர்ணமி. அந்த நாளில் பச்சரிசியை யாருக்கு வேண்டுமானாலும் தானம் கொடுக்கலாம். அதேபோல், பௌர்ணமி அன்று சிவ வழிபாடு செய்வதும் மிகவும் விசேஷம். சிறு ஸ்படிக லிங்கம் வாங்கி வீட்டில் வைத்து வழிபட்டு வரவேண்டும்.

சிலருக்கு ஜாதகத்தில் சந்திரன் விருச்சிகத்தில் நீசம் பெற்று அமர்ந்திருப்பார். அப்படிப்பட்ட பெண்களுக்கு ஹார்மோனல் பிரச்னை கள் உண்டாகும். காரணம், அது செவ்வாயின் வீடு.

செவ்வாய், சந்திரனின் வீடான கடகத்தில் நீசம் பெறுவார். அதேபோன்று சந்திரன், செவ்வாயின் வீடான விருச்சிகத்தில் நீசம் பெறுவார். ஒருவரின் ஜாதகத்தில் சந்திரன் செவ்வாய் சேர்ந்திருந்து இருவரில் ஒருவர் நீசம் பெற்றிருந்தால், அந்த பெண் ஜாதகருக்கு நிச்சயம் தைராய்டு, ஹார்மோன் சமநிலை இன்மை, மனநிலை மாற்றங்கள் ஆகிய பிரச்னைகள் கட்டாயம் இருக்கும்.

குறிப்பாக திருமண வாழ்வில் தாம்பத்திய உறவில் ஈடுபாடு அற்ற நிலை இந்த அமைப்புடைய ஜாதகருக்கு இருக்கும். இன்று விவாகரத்து பெறும் பலரின் ஜாதகத்தில் இந்த நிலை காணப்படுகிறது. இவை அனைத்துக்குமே சிவ வழிபாடு சிறந்த பரிகாரமாகும். எப்பேர்ப்பட்ட சந்திர தோஷம் இருந்தாலும் பௌர்ணமி அன்று சிவலிங்கத்துக்கு பால் அபிஷேகம் செய்து வழிபட்டால் பாதிப்புகள் படிப்படியாக விலகும்.

சிலர், இதற்குப் பரிகாரமாக ஸ்படிக மணி வாங்கி அணிந்து கொள்ளச் சொல்கிறார்கள். அதையும் செய்யலாம். அதேவேளை ஸ்படிகம் அணிந்துகொண்டால் சில நியமங்களைக் கடைப்பிடிக்க வேண்டும். அவ்வாறு செய்ய இயலாதவர்கள் ஸ்படிக மணிகளை அணிவதைத் தவிர்ப்பது நல்லது. எனவே ஸ்படிக லிங்கத்தை வாங்கிப் பூஜை செய்வதே சிறப்பு.

தன்னால் முறையாகப் பூஜை செய்ய முடியாது என்று கருதுபவர்கள் ஸ்படிக லிங்கம் வாங்கி தானம் கொடுக்கலாம். அதேபோன்று சிவாலயத் திருக்குளங்களில் இருக்கும் மீன்களுக்குப் பொரி வாங்கிப் போடுவது சிறந்த பரிகாரமாகும். எவ்வளவுக்கு எவ்வளவு தானம் செய்கிறோமோ அந்த அளவுக்கு நம் உடலில் இருந்து வியாதிகளும் தோஷங்களும் நீங்கும்.