Published:Updated:

பாதகம் செய்யும் சனி பகவானின் 4 சஞ்சாரங்கள்... பலன்தரும் எளிய பரிகாரங்கள்! - அதிகாலை சுபவேளை!

சனி பகவான்

பாதகம் செய்யும் சனி பகவானின் 4 சஞ்சாரங்கள்... பலன்தரும் எளிய பரிகாரங்கள்! - அதிகாலை சுபவேளை!

பாதகம் செய்யும் சனி பகவானின் 4 சஞ்சாரங்கள்... பலன்தரும் எளிய பரிகாரங்கள்! - அதிகாலை சுபவேளை!

பாதகம் செய்யும் சனி பகவானின் 4 சஞ்சாரங்கள்... பலன்தரும் எளிய பரிகாரங்கள்! - அதிகாலை சுபவேளை!

Published:Updated:
சனி பகவான்

இன்றைய பஞ்சாங்கம்

24. 4. 21 சித்திரை 11 சனிக்கிழமை

திதி: துவாதசி மாலை 4.19 வரை பிறகு திரயோதசி

நட்சத்திரம்: உத்திரம்

யோகம்: மரணயோகம்

ராகுகாலம்: காலை 9 முதல் 10.30 வரை

எமகண்டம்: பகல் 1.30 முதல் 3 வரை

நல்லநேரம்: காலை 7.30 முதல் 8.30 வரை/ பகல் 4.30 முதல் 5.30 வரை

சந்திராஷ்டமம்: அவிட்டம்

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

வழிபடவேண்டிய தெய்வம்: சிவபெருமான்

இன்று: சனி மகா பிரதோஷம். சிவாலய தரிசனம் நன்று.

பைரவர் வழிபாடு
பைரவர் வழிபாடு

பாதகம் செய்யும் சனிபகவானின் 4 சஞ்சாரங்கள்

நவகிரகங்களில் சனிபகவான் மிகவும் முக்கியமானவர். இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சி ஆகும் சனிபகவான், தான் சஞ்சரிக்கும் இடத்துக்கு ஏற்ப நற்பலன்களையும் அசுப பலன்களையும் வழங்குவார். சனிபகவான் போலக் கொடுப்பாரும் இல்லை... கெடுப்பாரும் இல்லை என்பது ஆன்றோர் வாக்கு. ஆனால் அவர் ஏதோ தன் விருப்பத்துக்கு ஏற்பப் பலன்கள் வழங்குவதில்லை. முன்வினைகளின் காரணமாக நமக்கு உண்டாகியிருக்கும் கர்மாக்களை நாம் அனுபவிக்கும் விதமாகவே பலன்களை வழங்குவார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நல்வினைகள் கொண்டோருக்கு நற்பலன்களையும் தீவினைகள் கொண்டோருக்கும் பாதகமான பலன்களையும் வழங்குவார் சனிபகவான். அதனால்தான் அவர் பார்வையால் பெருமை கொள்வோரும் உண்டு. அவதிப்படுவோருக்கு உண்டு. கொடுப்பதிலும் மங்கல சனிக்கு நிகர் அவரே. ஊழ்வினையால் காரியத் தடைகளை உருவாக்கிப் படாதபாடு படுத்துபவரும் அவரே. வினைக்கேற்ப தண்டனைகளை அளிக்கும் சனி பகவான், ஒருவரது ராசிக்கு ஏழரை சனி, கண்ட சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி என்று சஞ்சரித்துப் பல வகைகளையும் ஆட்டி வைப்பார். இப்படிப்பட்ட சனிபகவானின் 4 சஞ்சாரங்களினால் உண்டாகும் பலன்களை நற்பலன்களாக்க எளிய பரிகாரங்கள் உள்ளன. அவை என்ன என்பது குறித்து அறிந்துகொள்ள கீழே உள்ள வீடியோவைப் பார்க்கலாம்.

இன்றைய சுருக்கமான ராசிபலன்கள்

விரிவான இன்றைய பலன்களைத் தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

மேஷம்

துணிவு : இன்று மனதில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். துணிச்சலாகச் செயல்பட்டுப் பல நாள் பிரச்னைக்குத் தீர்வு காண்பீர்கள். உறவினர் வகையில் உதவிகள் தேடிவரும். - ஜாலி டே

ரிஷபம் :

செலவு : முற்பகலில் சோர்வும் பிற்பகலில் உற்சாகமும் கொள்ளும் நாள். என்றாலும் உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்படும். செலவுகளும் அதிகரிக்கும். - சிக்கனம் தேவை இக்கணம்.

மிதுனம்

கவனம் : புதிய முயற்சிகளை மேற்கொள்ளும்போது கவனம் தேவை. பிற்பகலுக்குமேல் சில தொல்லைகள் உருவாகும். விட்டுக்கொடுத்துப் போவதன் மூலம் சாதிக்கலாம். - டேக் கேர் ப்ளீஸ்

கடகம்

பணவரவு : முயற்சிகள் சாதகமாகும். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்புண்டு. செலவுகளில் மட்டும் கவனம் தேவை. அநாவசியச் செலவுகளால் கையிருப்பு கரையலாம். - ஜாலி டே

சிம்மம்

உற்சாகம் : நாள் முழுவதும் உற்சாகமாக இருப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். எடுக்கும் காரியங்களும் அனுகூலமாக முடியும். நன்மைகள் அதிக அளவில் நடைபெறும். - நாள் நல்ல நாள்

கன்னி

குழப்பம் : தேவையற்ற குழப்பங்கள் மனதில் தோன்றும். எதிர்பாராத செலவுகளால் திண்டாடுவீர்கள். உறவினர்களால் சிறு பிரச்னை ஏற்பட்டு நீங்கும். - லெஸ் டென்ஷன் மோர் வொர்க்!

துலாம்:

மகிழ்ச்சி : எதிர்பார்த்த செயல்கள் அனுகூலமாக முடியும். மனதில் உற்சாகம் பிறக்கும். பணவரவு இருந்தாலும் செலவுகளும் அதிகரிக்கும். எனவே சிக்கனம் தேவை. - என்ஜாய் தி டே!

விருச்சிகம்

நன்மை : எதிர்பாராத நன்மைகள் நடைபெறும் நாள். மனதில் உற்சாகம் அதிகரிக்கும் குடும்பத்தினர் உங்கள் மனம் கோணாமல் நடந்துகொல்வார்கள். பணவரவும் உண்டு. - இனி எல்லாம் சுபமே!

தனுசு:

சுறுசுறுப்பு : காலையிலிருந்தே பரபரப்பாகக் காணப்படுவீர்கள். எதிர்பார்த்த நல்ல செய்திகள் வந்து சேரும். குடும்பத்திலிருந்த சின்னச் சின்ன மனஸ்தாபங்கள் சரியாகும். - வெற்றி உங்கள் பக்கம்!

மகரம்

நிதானம் : முக்கிய முடிவுகள் எதையும் இன்று எடுக்க வேண்டாம். பிற்பகலுக்குப் பின் கவலைகள் தீரும். ஆரோக்கியமும் மேம்படும். செயல்களில் நிதானம் தேவை. - கேர் ஃபுல் ப்ளீஸ்

கும்பம்

விவாதம் : பணம் வந்த படியிருந்தாலும் செலவுகளும் அதிகரித்த வண்ணம் இருக்கும். தேவையற்ற விவாதம் ஏற்படும். வார்த்தைகளில் கவனம் தேவை. வார்த்தைகளால் வம்பு வரலாம். - நா காக்க!

மீனம்

வெற்றி : குழப்பங்கள் நீங்கும். எதிரிகளால் ஏற்பட்டிருந்த தொல்லைகள் மறையும். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்புண்டு. ஆரோக்கியமும் மேம்படும். - வெற்றிக்கொடிகட்டு!