Published:Updated:

குடியிருக்கும் வீடு ராசியில்லை என உணர்கிறீர்களா... இதோ மாற்றம் தரும் 7 பரிகாரங்கள்!

வீடு
வீடு

குடியிருக்கும் வீடு ராசியில்லை என உணர்கிறீர்களா... இதோ மாற்றம் தரும் 7 பரிகாரங்கள்!

இன்றைய பஞ்சாங்கம்

1. 5. 21 சித்திரை 18 சனிக்கிழமை

திதி: பஞ்சமி இரவு 10.38 வரை பிறகு சஷ்டி

நட்சத்திரம்: மூலம் பகல் 3.39 வரை பிறகு பூராடம்

யோகம்: சித்தயோகம்

ராகுகாலம்: காலை 9 முதல் 10.30 வரை

எமகண்டம்: பகல் 1.30 முதல் 3 வரை

நல்லநேரம்: காலை 7.30 முதல் 8.30 வரை/ பகல் 4.30 முதல் 5.30 வரை

சந்திராஷ்டமம்: கிருத்திகை பகல் 3.39 வரை பிறகு ரோகிணி

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

வழிபடவேண்டிய தெய்வம்: வேங்கடேச பெருமாள்

வாடகை வீடு வாஸ்து
வாடகை வீடு வாஸ்து

குடியிருக்கும் வீடு ராசியில்லையா?

ஒரு சிலர் புதிய வீட்டுக்குக் குடி போனால் அமோகமாக வாழ்வார்கள். சொந்த வீடு வாங்கும் அளவுக்கு யோகம் அடிக்கும். சிலருக்கோ வீடு மாறுவது பெரும் அவஸ்தையைக் கொடுக்கும். வீட்டில் உள்ளவர்களுக்கு மாறி மாறி உடல்நிலை சரியில்லாமல் போகும். விரயம் வந்து சேரும். வீட்டில் எப்போதும் சண்டை சச்சரவு என்று நிம்மதி போகும். தொழில் நொடித்து போகும், வேலை இழப்பு எனத் தொட்டதெல்லாம் நஷ்டமாகும். உங்கள் வீடு எங்கு அமைந்துள்ளது, எப்படி அமைந்துள்ளது என்பதைப் பாருங்கள் என்கிறது வாஸ்து. ஏன், உங்களுக்கு வீட்டை வாடகை விட்டவர் எந்த மனநிலையில் உங்களுக்கு வீடு தந்துள்ளார் என்று பாருங்கள் என்றுகூட சொல்கிறார்கள் பெரியவர்கள். காரணம், நல்ல எண்ணங்கள் நன்மையையும் தீய எண்ணங்கள் கெடுதலையும் செய்யும் என்பது நம்பிக்கை.

இப்படிப்பட்ட பிரச்னைகளால் அவதியுறுபவர்களுக்குத் தீர்வு உண்டு என்கிறது வாஸ்து சாஸ்திரம். வாடகை வீட்டுக்காரர் என்றால் வீட்டை மாற்றிக்கொள்ளலாம். சொந்த வீட்டுக்காரர்கள் அப்படி மாற முடியாது. அதே நேரம் வாடகை வீட்டுக்காரர்களுக்கு வீடுமாற முடியாத நிலை இருக்கலாம். வீட்டின் அமைப்பிலும் பெரிய மாறுதல்களைச் செய்யும் உரிமை இல்லை. சொந்த வீட்டுக்காரர்களோ வாடகை வீட்டுக்காரர்களோ தாங்கள் குடியிருக்கும் வீட்டை மாற்றாமல் சில மாற்றங்களையும் வழிபாடுகளையும் செய்வதன் மூலம் வாஸ்துக்குறைபாடுகளை நீக்கலாம். இதுகுறித்து மேலும் அறிந்துகொள்ள கீழே உள்ள வீடியோவைப் பாருங்கள்.

இன்றைய சுருக்கமான ராசிபலன்

விரிவான இன்றைய ராசிபலன்களை அறிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

மேஷம்

தெளிவு : நேற்றுவரை இருந்த குழப்பங்கள் நீங்கும். மன உறுதி அதிகரிக்கும். பணவரவும் மேம்படும். ஆரோக்கியத்தில் மட்டும் அக்கறை தேவை. - நாளை உங்க நாள்.

ரிஷபம் :

பொறுமை : அனைத்து விஷயங்களிலும் பொறுமை காக்க வேண்டிய நாள். பணவரவுக்கு வாய்ப்புண்டு. இறைவழிபாடு நன்மை தரும். - இறைவன் இருக்க பயம் ஏன்?!

மிதுனம்

செலவு : திடீர் செலவுகள் ஏற்படும் நாள். மற்றபடி குடும்பத்தில் அமைதியும் அன்பும் நிறைந்திருக்கும். எதிர்பார்த்த நல்ல செய்தி ஒன்று மாலையில் வந்து சேரும். - செலவே சமாளி!

கடகம்

வெற்றி : அதிகாலையிலேயே முயற்சிகளைத் தொடங்கிவிடுவது நல்லது. பணிச்சுமை அதிகரிக்கும். காரியங்களை வெற்றிகரமாகச் செய்துமுடிப்பீர்கள். - நினைத்ததை முடிப்பவர்!

சிம்மம்

நிதானம் : சொல்லிலும் செயலிலும் நிதானம் தேவைப்படும் நாள். தேவையற்ற விவாதங்களில் கலந்துகொள்வதைத் தவிர்ப்பது அவசியம். உடல் ஆரோக்கியத்திலும் அக்கறை தேவைப்படும் நாள். - டேக் கேர் ப்ளீஸ்

கன்னி

சோர்வு : சற்று சோர்வும் ஏற்படும் நாள். சகோதர உறவுகளால் செலவுகள் ஏற்படும். எதிர்பாராத பணவரவு மனதுக்கு ஆறுதலாக அமையும். - ஸ்லோ அண்ட் ஸ்டெடி வின்ஸ் தி ரேஸ்!

துலாம்:

துணிவு : மனதில் தைரியமும் நம்பிக்கையும் அதிகரிக்கும். சகோதர உறவுகளால் ஆதாயம் உண்டாகும். எதிர்பாராத பணவரவினால் செலவுகளைச் சமாளிப்பீர்கள். - ஆல் இஸ் வெல்

விருச்சிகம்

குழப்பம் : தேவையற்ற குழப்பங்கள் அதிகரிக்கும். அதிகரிக்கும் செலவுகளால் சஞ்சலமடைவீர்கள். பொறுமையாகச் செயல்படுவதால் செயல்கள் அனுகூலமாகும். - லெஸ் டென்ஷன் மோர் வொர்க்!

தனுசு:

உற்சாகம் : மனதில் உற்சாகம் அதிகரிக்கும். உங்கள் யோசனைகளை குடும்பத்தினர் ஏற்றுக்கொள்வார்கள். வீட்டிலும் வெளியிலும் மரியாதை அதிகரிக்கும். பணவரவும் உண்டு. - ஆல் தி பெஸ்ட்

மகரம்

கட்டுப்பாடு : அதிகரிக்கும் செலவுகள் குறித்துக் கவலைப் படுவீர்கள். கடன் வாங்கும் முயற்சிகள் சாதகமாகும். உங்கள் முயற்சிகளுக்குக் குடும்பத்தினர் ஆதரவு தருவார்கள். - சிக்கனம் தேவை இக்கணம்.

கும்பம்

நம்பிக்கை : மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். துணிச்சலான முடிவுகளால் சாதித்துக் காட்டுவீர்கள். நீண்ட நாள் பிரச்னைகள் முடிவுக்கு வரும். பணவரவும் எதிர்பாராத செலவுகளும் ஏற்படும். - துணிவே துணை

மீனம்

சாதகம் : மனதில் உற்சாகம் நிறைந்திருக்கும். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். தாய்வழி உறவினர்களால் பணவரவு ஏற்பட்டு மகிழ்ச்சி உண்டாகும். - சாதகமான ஜாதகம் இன்று.

அடுத்த கட்டுரைக்கு