Published:Updated:

தூக்கம் இப்படித்தான்!

தூக்கம்
பிரீமியம் ஸ்டோரி
தூக்கம்

சில நியதிகள்... விளக்கங்கள்! எஸ்.கண்ணன்

தூக்கம் இப்படித்தான்!

சில நியதிகள்... விளக்கங்கள்! எஸ்.கண்ணன்

Published:Updated:
தூக்கம்
பிரீமியம் ஸ்டோரி
தூக்கம்

தூக்கம் சில நியதிகள்

இருட்டறையில் தூங்கக் கூடாது. ஈரக்காலுடன் தூங்கக் கூடாது. உடைந்த கட்டிலிலும், உணவு அருந்திவிட்டு வாய் அலம்பாமலும் உறங்கக் கூடாது. சூரிய உதயம் மற்றும் அஸ்தமனப் பொழுதுகளில் உறக்கம் கூடாது. வடக்கு திசையில் தலை வைத்துப் படுக்கக் கூடாது.

தூக்கம் இப்படித்தான்!
Prostock-Studio


தூங்கிக்கொண்டிருக்கும் நபரை வேகவேகமாக எழுப்பக்கூடாது. பாழடைந்த வீட்டில், கோயிலில், மயானப் பகுதிகளில் தூங்கக் கூடாது. ஆயுள் பெருகவேண்டும் எனில், தினமும் பிரம்ம முகூர்த்த வேளையில் எழுந்துகொள்ள வேண்டும்.

உங்கள் ஜாதகத்தில் வியாபார யோகம் எப்படி?

ரா
சியில் புதன் இருக்கும் வீடு கன்னியாகி, நவாம்சத்திலும் கன்னியா ராசியில் புதன் இருப்பார் எனில், அவர் வர்க்கோத்தமம் பெறுவார். இதனால், குறிப்பிட்ட ஜாதகர் வியாபாரத்தில் ஈடுபட்டு பன்மடங்கு லாபம் பெற வாய்ப்பு உண்டு. இந்த புதன் ராசியில் சூரியனுடன் சேர்ந்து அஸ்தங்கதம் ஆகாமல் இருக்கவேண்டும்.

புதனுக்கு மிதுனமும் கன்னியும் பலம் மிகுந்த வீடுகள். இந்த ராசிகளில் ஏதேனும் ஒன்றில் புதன் இருக்க, புதனுக்குச் சுபக்கிரகச் சேர்க்கையோ பார்வையோ ஏற்படும்போது, ஜாதகர் வியாபாரத்தில் கொடிகட்டிப் பறப்பார்.

தொழில் ஸ்தானம் என்பது 10-ஆம் இடம். லக்னத்துக்கோ, சந்திர ராசிக்கோ, சூரிய ராசிக்கோ 10-ல் புதன் இருந்தால் - வலுப்பெற்றிருந்தால், மனத்தில் வியாபாரச் சிந்தனை உருவாகும்; வியாபாரத்தில் அதிக லாபமும் பெறமுடியும்.

தூக்கம் இப்படித்தான்!
Weeraa

உங்கள் பிள்ளை டாக்டர் ஆவாரா?

ள்ளங்கையில் திகழும் சில ரேகை அமைப்புகள் மருத்துவப் படிப்பில் மேன்மை குறித்துச் சுட்டிக்காட்டும் என்கின்றன, கைரேகை சாஸ்திரம் குறித்த ஜோதிட நூல்கள்.

அவ்வகையில் ஒருவரது உள்ளங்கையில், ஆள்காட்டி விரலுக்கு கீழுள்ள குருமேடு செம்மையாக அமைந்திருந்தால் எதிலும் முதன்மை யான இடத்தைப் பிடிக்கலாம். மருத்துவத்துக்கான படிப்பு, தேர்வில் எதிர்பார்த்த வெற்றி கிட்டும் எனலாம்.

புத்திரேகை ஆயுள் ரேகையுடன் பின்னிப் பிணையாமல், ஆயுள் ரேகையினை லேசாகத் தொட்டுக்கொண்டோ ஆயுள் ரேகையில் இருந்து ஒரு நூல் அளவுக்கு பிரிந்தோ குருமேட்டில் இருந்து தொடங்கினால், இந்த அமைப்பும் சாதகமே.

மோதிர விரலுக்கு அடிப்பாகத்தில் இருப்பது சூரியமேடு. சூரியனை அரசுக்கான கிரகம் என்பார்கள். இந்தச் சூரியமேடு பரந்துவிரிந்து திகழ, சூரிய ரேகையும் நன்கு அமைந்திருந்தால் மருத்துவப் படிப்பில் மேன்மை உண்டு!