Published:Updated:

எதிரிகளை வெற்றிகொள்ள எளிய 5 பரிகாரங்கள்!

விநாயகர்
விநாயகர்

எதிரிகளை வெற்றிகொள்ள எளிய 5 பரிகாரங்கள்!

இன்றைய பஞ்சாங்கம்

17. 5. 21 வைகாசி 3 திங்கள்கிழமை

திதி: பஞ்சமி காலை 8.28 வரை பிறகு சஷ்டி

நட்சத்திரம்: புனர்பூசம் காலை 10.30 வரை பிறகு பூசம்

யோகம்: அமிர்தயோகம் காலை 10.30 வரை பிறகு சித்தயோகம்

ராகுகாலம்: காலை 7.30 முதல் 9 வரை

எமகண்டம்: காலை 10.30 முதல் 12 வரை

நல்லநேரம்: காலை 6.30 முதல் 7.30 வரை / மாலை 4.30 முதல் 5.30 வரை

முருகன்
முருகன்

சந்திராஷ்டமம்: கேட்டை காலை 10.30 வரை பிறகு மூலம்

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

வழிபடவேண்டிய தெய்வம்: முருகப்பெருமான்

இன்று: சஷ்டி விரதம்

எதிரிகளை வெற்றிகொள்ள எளிய பரிகாரங்கள்!

எவ்வளவு நல்லவர்கள் ஆனாலும் அவர்களுக்கும் சில எதிரிகள் இருப்பார்கள். சில நேரங்களில் உறவும் நட்புமே எதிரிகளாக மாறிவிடுவதுண்டு. காரணம் அவர்களை நம்மைத் தவறாகப் புரிந்துகொள்வதும் நம் வளர்ச்சியின் மீது பொறாமையும் வீழ்ச்சியின் மீது தாழ்வாக எண்ணுவதுமே ஆகும். ‘வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும்’ என்னும் பழமொழி இப்படித் தான் உருவானது. அவர்கள் கருத்தளவில் நமக்கு எதிரானவர்களாக இருக்கும்வரைக்கும் பெரிய பிரச்னைகள் இல்லை. மாறாக அவர்கள் நம் வாழ்வுக்கு வளர்ச்சிக்குத் தடை செய்பவர்களாக மாறும் தருணம் நம் பிரச்னையாகிறது.

இப்படி எதிரிகளால் உருவாகும் தடைகளை வெல்ல வேண்டியது மிகவும் அவசியம். அப்போதுதான் நம் இலக்கை நோக்கி முன்னேறமுடியும். இப்படி எதிரிகளால் உண்டாகும் தொல்லைகளை வெற்றிகாண்பதற்கு ஆன்மிகம் மிக எளிய பரிகாரங்களைச் சொல்கிறது. இதுகுறித்து விரிவாக அறிந்துகொள்ள கீழே உள்ள வீடியோவைப் பாருங்கள்.

இன்றைய சுருக்கமான ராசிபலன்

விரிவான இன்றைய பலன்களை அறிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

மேஷம்

அனுகூலம் : காரியங்கள் அனுகூலமாக முடியும். மனதில் உற்சாகமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். எதிர்காலத் திட்டம் ஒன்றை இன்று சிந்திப்பீர்கள். - ஆல் இஸ் வெல்!

ரிஷபம்

நன்மை : சின்னச் சின்ன பிரச்னைகள் தோன்றி மறைந்தாலும் பெரும்பாலும் நல்ல மனநிலை வாய்க்கும் நாள். குடும்பத்தினர் உங்கள் மனம்போல் நடந்துகொள்வார்கள். - நாள் நல்ல நாள்!

மிதுனம்

உற்சாகம் : பிற்பகலுக்கு மேல் உற்சாகமான மனநிலையும் வாய்க்கும். உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். செலவுகளுக்கு ஏற்ப பணவரவும் உண்டு. - ரிலாக்ஸ் ப்ளீஸ்!

கடகம்

நம்பிக்கை : குடும்பத்தினரிடையே இருந்த மன வருத்தங்கள் நீங்கும். எதிர்பார்த்த காரியங்களும் அனுகூலமாக முடியும். தன்னம்பிக்கை வெளிப்படும். - நம்பிக்கை அதுதானே எல்லாம்!

சிம்மம்

உதவி : எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உறவினர்கள் தேடிவந்து உதவுவார்கள். உங்கள் முயற்சிகளுக்கு ஆதரவும் பாராட்டும் கிடைக்கும். பணவரவு உண்டு. - ஆல் தி பெஸ்ட்!

கன்னி

மகிழ்ச்சி : மகிழ்ச்சி தரும் செய்திகள் உறவினர்களிடமிருந்து வந்துசேரும். சகோதரர்களால் செலவுகள் ஏற்பட்டாலும் மகிழ்வுடன் செய்துதருவீர்கள். - எல்லாம் நன்மைக்கே!

துலாம்:

கவனம் : அனைத்தும் சாதகமாக இருந்தாலும் கொடுக்கல் வாங்கலில் மட்டும் கவனம் தேவை. செலவுகள் அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவிகளும் கிடைக்கும். - டேக் கேர் ப்ளீஸ்!

விருச்சிகம்

சோர்வு : மனதில் இனம்புரியாத சோர்வு உண்டாகும். முற்பகலில் எதிர்பார்த்த பணவரவு மாலையில் கிடைக்கும். செலவுகளால் கவலைகள் உண்டாகும். - செலவே சமாளி!

தனுசு:

சுறுசுறுப்பு: சந்திராஷ்டம நாள் என்பதால் பிற்பகலுக்கு மேல் சோர்வு ஏற்படும். இறைவழிபாட்டில் கவனம் செலுத்துங்கள். அமைதியாக இருங்கள். - இறைவன் இருக்க பயம் ஏன்?!

மகரம்

சாதகம் : அனைத்தும் சாதகமாக இருக்கும் நாள். புதிய முயற்சிகளில் வெற்றிகிடைக்கும். என்றாலும் சகோதர வகையில் சில சங்கடங்கள் ஏற்படும். - சாதகமான ஜாதகம் இன்று!

கும்பம்

ஆரோக்கியம் : இன்று வழக்கமான பணிகளில் மட்டும் கவனம் செலுத்துங்கள். உடலில் சின்னச் சின்ன உபாதைகள் ஏற்படும். உரிய கவனம் தேவை. - ஹெல்த் இஸ் வெல்த்!

மீனம்

துணிவு : மன உறுதி அதிகரிக்கும். துணிச்சலாக சில முடிவுகளை எடுப்பீர்கள். சிலருக்குக் கடனில் ஒரு பகுதியை அடைக்க வருமானம் வரும். மகிழ்ச்சியாக இருப்பீர்கள். - துணிவே துணை!

அடுத்த கட்டுரைக்கு