Election bannerElection banner
Published:Updated:

கிரகதோஷம் நீக்கித் திருமண தடைகள் அகற்றும் 4 எளிய பரிகாரங்கள்!

ஸ்ரீராமர்
ஸ்ரீராமர்

கிரகதோஷம் நீக்கித் திருமண தடைகள் அகற்றும் 4 எளிய பரிகாரங்கள்!

இன்றைய பஞ்சாங்கம்

27. 4. 21 சித்திரை 14 செவ்வாய்க்கிழமை

திதி: பௌர்ணமி காலை 9.58 வரை பிறகு பிரதமை

நட்சத்திரம்: சுவாதி இரவு 9.43 வரை பிறகு விசாகம்

யோகம்: சித்தயோகம் இரவு 9.43 வரை பிறகு மரணயோகம்

ராகுகாலம்: பகல் 3 முதல் 4.30 வரை

எமகண்டம்: காலை 9 முதல் 10.30 வரை

நல்லநேரம்: காலை 10.30 முதல் 11.30 வரை/ மாலை 4.30 முதல் 5.30 வரை

சந்திராஷ்டமம்: உத்திரட்டாதி இரவு 9.43 வரை பிறகு ரேவதி

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

வழிபடவேண்டிய தெய்வம்: லட்சுமிநரசிம்மர்

நரசிம்மர் தரிசனம்
நரசிம்மர் தரிசனம்

திருமண தடைகள் நீக்கும் எளிய பரிகாரங்கள்...

இல்லறமே நல்லறம் என்பது சான்றோர் வாக்கு. ஒருவரின் வாழ்க்கை பூரணமாவதே திருமணத்தில்தான். முறையான வாழ்வில் மலரும் தலைமுறையே மதிப்புக்குறியது. ஒருவன் மரணத்தை வெற்றி பெரும் வழியே மழலை பாக்கியதால் என்கிறது சாஸ்திரம். மழலை பாக்கியம் முறையாக சிறப்பாகக் கிட்ட திருமணமே வழியாகிறது. அன்பையும் அறத்தையும் மட்டுமே கொண்டு வரன் தேடுவது நல்லது. பொன்னும் பொருளும் வீண் ஜம்பமும் மண வாழ்க்கையை இனிமையாக்கது. திறந்த மனதோடு வரன் தேட ஆரம்பித்தாலே பாதி பேருக்குத் திருமணம் ஆகிவிடும் என்கிறார்கள் அத்துறை சார்ந்தவர்கள்.

ஜாதகத்திலும் குறை இருக்கலாம். தடை உண்டாகலாம். தோஷங்கள், சாபங்களும் திருமணத் தடையை உருவாக்கலாம். இதை எல்லாம் சரி செய்ய ஆன்மிகம் வழிகாட்டுகிறது. ஓர் ஆண் 27 வயதுக்குள் திருமணம் செய்துகொள்வது உத்தமம். 32 வயதுக்கு மேல் திருமணம் செய்து கொள்வது அதமம் என்கிறது ஆன்மிகமும் அறிவியலும். தள்ளிப்போட்டுக் கொண்டே வரும் வரன்களுக்குப் பெரும்பாலும் திருமணத்தடை நிரந்தரமாகி விடலாம். எனவே உங்கள் விருப்பங்கள், இலட்சியங்கள் பல இருக்கலாம். அதற்காகத் திருமணத்தைத் தள்ளிப்போடாதீர்கள்.

திருமணத் தடைகள் நீக்கும் எளிய சில பரிகாரங்களை அறிந்துகொள்ள கீழே உள்ள வீடியோவைப் பாருங்கள்.

இன்றைய ராசிபலன்

விரிவான ராசிபலன்களை அறிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

மேஷம்

நன்மை : வரவும் செலவும் அடுத்தடுத்து ஏற்படும் நாள். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றி மகிழ்வீர்கள். சிலருக்கு எதிர்பாராத நன்மைகள் ஏற்படும். - நாள் நல்ல நாள்!

ரிஷபம் :

ஆதரவு : உற்சாகமாக இருப்பீர்கள். குடும்பத்தினர் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். முக்கிய முடிவுகள் எடுக்கும்போது அனுபவஸ்தர்களின் அறிவுரை அவசியம். - ஆல் தி பெஸ்ட்

மிதுனம்

பணவரவு : சிலருக்குத் திடீர் பணவரவு ஏற்படும். செலவுகளைச் சமாளிப்பீர்கள். குடும்பத்தினரின் தேவைகளை முயன்று நிறைவேற்றுவீர்கள். மகிழ்ச்சியான நாள். - ஜாலி டே

கடகம்

உற்சாகம் : உற்சாகமான நாள். செலவுகள் அதிகரித்தாலும் அதற்கேற்பப் பணவரவும் இருக்கும். குடும்பத்தினர் உங்கள் மனம் கோணாமல் நடந்துகொண்டு மகிழ்விப்பார்கள். - என்ஜாய் திடே!

சிம்மம்

அனுகூலம் : அனுகூலம் நிறைந்த நாள். எடுத்த முயற்சிகளை வெற்றிகரமாகச் செய்துமுடிப்பீர்கள். பணவரவும் உண்டு. சகோதர உறவுகளிடம் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. - ஆல் இஸ் வெல்

கன்னி

வெற்றி : நேற்று வரையிருந்த சோர்வும் குழப்பமும் நீங்கி உற்சாகம் ஏற்படும். செயல்களில் வெற்றி கிடைக்கும். புதிய உத்திகளைப் பயன்படுத்திச் செயல்படுவீர்கள். - இனி எல்லாம் சுபமே!

துலாம்:

மகிழ்ச்சி : குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மரியாதை அதிகரிக்கும். உறவினர்கள் பாசமழை பொழிவார்கள். சிறு பிரச்னை தோன்றினாலும் உங்கள் சாமர்த்தியத்தால் ஜெயித்துக் காட்டுவீர்கள். - பெஸ்ட் ஆஃப் லக்!

விருச்சிகம்

தாமதம் : அதிக அளவில் பொறுமை தேவைப்படும் நாள். தேவையற்ற வம்புகள் தேடிவரும். காரியங்களில் தாமதம் ஏற்படுவதால் உண்டாகும் பதற்றத்தைத் தவிர்ப்பது நல்லது. - தாமதமாகலாம் ஆனால் தடைப்படாது.

தனுசு:

மன உறுதி : மனதில் துணிவும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும் நாள். மன உறுதியோடு சில முடிவுகளை எடுப்பீர்கள். உங்கள் ஆலோசனை பாராட்டப்படும். நன்மைகள் நடைபெறும் நாள். - திறமைக்கு மரியாதை!

மகரம்

நிதானம் : செயல்களில் நிதானம் தேவை. வழக்கமான பணிகளை மிகவும் கவனத்துடன் செய்துவாருங்கள். உணவு விஷயத்திலும் அக்கறை தேவை. - நாளை உங்க நாள்!

கும்பம்

கலகலப்பு : குடும்பத்தில் மகிழ்ச்சியும் கலகலப்பும் இன்று நிலைத்திருக்கும். தாய்வழி உறவினர்களால் நன்மைகள் அதிகரிக்கும். வீண் அலைச்சலைத் தவிர்க்கச் சிந்தித்துச் செயல்படுங்கள். - இனி எல்லாம் சுபமே!

மீனம்

குழப்பம் : மனதில் தேவையற்ற குழப்பங்கள் உண்டாகும். அவசர முடிவுகளால் அலைச்சலும் செலவும் ஏற்படும். இறைவழிபாட்டின் மூலம் மன அமைதி பெற வேண்டிய நாள். - டேக் கேர் ப்ளீஸ்!

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு