Published:Updated:

கிரக தோஷங்கள் நீக்கி நன்மைகள் அருளும் வழிபாடுகள்... 9 கிரகங்கள்... 9 எளிய பரிகாரங்கள்!

கிரக நிலவரம்
கிரக நிலவரம்

கிரக தோஷங்கள் நீக்கி நன்மைகள் அருளும் வழிபாடுகள்... 9 கிரகங்கள்... 9 எளிய பரிகாரங்கள்!

இன்றைய பஞ்சாங்கம்

15. 5. 21 வைகாசி 1 சனிக்கிழமை

திதி: திரிதியை காலை 6.28 வரை பிறகு சதுர்த்தி

நட்சத்திரம்: மிருகசீரிடம் காலை 7.23 வரை பிறகு திருவாதிரை

யோகம்: சித்தயோகம்

ராகுகாலம்: காலை 9 முதல் 10.30 வரை

எமகண்டம்: பகல் 1.30 முதல் 3 வரை

நல்லநேரம்: காலை 7.30 முதல் 8.30 வரை/ பகல் 3 முதல் 4 வரை

சந்திராஷ்டமம்: விசாகம் காலை 7.23 வரை பிறகு அனுஷம்

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

வழிபடவேண்டிய தெய்வம்: விநாயகர்

இன்று: சதுர்த்தி விரதம்

காணிப்பாக்கம் விநாயகர்
காணிப்பாக்கம் விநாயகர்

கிரக தோஷங்கள் நீக்கி நன்மைகள் அருளும் வழிபாடுகள்

நவகிரகங்கள் மனித வாழ்வோடு இணைந்தவை. வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஒரு கிரகத்துக்கு உரியது. காரணம் அவர்களே நம் காலத்தைத் தீர்மானிப்பவை. அவையே வாழ்வில் நன்மை தீமை வழங்குபவை. முன்வினைப்பயன்களால் கிரக தோஷங்கள் சிலருக்கு நேரும். அவ்வாறு நிகழும்போது வாழ்வில் துன்பங்கள் உண்டாகின்றன.

ஞாயிறு முதல் சனி வரை 7 நாள்களும் ஒவ்வொரு கிரகத்துக்கு உரியன. ராகுவும் கேதுவும் சாயாகிரகங்கள் ஆனதால் அவற்றுக்கென்று ராசிவீடுகளில் சொந்த வீடு இல்லாததுபோலவே நாள்களிலும் உரிமையான நாள்கள் இல்லை என்றாலும் இருக்கும் நாள்களில் சில நேரங்கள் அவற்றுக்கென ஒதுக்கப்பட்டுள்ளன. இப்படி ஒன்பது கிரகங்களுக்கும் உரிய நேரத்தில் வாரத்தின் ஏழு நாள்களிலும் சில எளிய பரிகாரங்களைச் செய்ய உங்கள் ஜாதகத்தில் கிரகதோஷங்கள் இருந்தால் அவை உடனே அகலுவதோடு நற்பலன்களும் அதிகரிக்கும். இதோ அத்தகைய வலிமைவாய்ந்த எளிய பரிகாரங்களை அறிந்துகொள்ள இந்த வீடியோவைப் பாருங்கள்.

இன்றைய சுருக்கமான ராசிபலன்

விரிவான பலன்களை அறிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

மேஷம்

மகிழ்ச்சி : பிற்பகலுக்கு மேல் எதிர்பார்த்த செயல்கள் வெற்றியாகும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். சகோதர உறவுகளால் நன்மைகள் உண்டாகும். - ஆல் இஸ் வெல்!

ரிஷபம்

அனுகூலம் : செயல்கள் அனுகூலமாக முடியும். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். செலவுகள் ஏற்பப் பணவரவும் இருக்கும். - ஆல் தி பெஸ்ட்!

மிதுனம்

பொறுமை : முயற்சிகள் சாதகமாக முடியும். சிலருக்கு எதிர்பாராத பணவரவும் ஏற்படும். பிற்பகலுக்கு மேல் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். - நா காக்க!

கடகம்

நன்மை : செலவுகள் ஏற்பட்டாலும் பணவரவு இருப்பதால் சமாளித்துவிடுவீர்கள். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். முயற்சிகளிலும் வெற்றி உண்டு. - நாள் நல்ல நாள்!

சிம்மம்

கவனம் : வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவை. நண்பர்களிடையே தேவையற்ற மனஸ்தாபம் ஏற்படலாம் என்பதால் வார்த்தைகளில் நிதானம் தேவை. - கேர் ஃபுல் ப்ளீஸ்!

கன்னி

பணவரவு : நன்மைகள் நடைபெறும் நாள். குடும்பத்தினர் உங்கள் மனம் மகிழும்படி நடந்துகொள்வார்கள். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்புண்டு. - என்ஜாய் தி டே!

துலாம்:

தெளிவு : நேற்றுவரையிருந்த குழப்பங்கள் தீரும். புதிய சிந்தனைகளை மேற்கொள்வீர்கள். குடும்பத்தினர் உங்கள் யோசனைகளை செயல்படுத்துவார்கள். - ரிலாக்ஸ் ப்ளீஸ்!

விருச்சிகம்

செலவு : சந்திராஷ்டம தினம் என்பதால் அவசரப்பட்டு முடிவெடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. செலவுகள் அதிகரிக்கும். சிலர் கடன் வாங்கவும் நேரலாம். - டேக் கேர் ப்ளீஸ்!

தனுசு:

உற்சாகம் : மனதில் உற்சாகம் அதிகரிக்கும். குடும்பம் தொடர்பான பிரச்னை ஒன்றுக்குத் தீர்வு ஏற்படும். உங்கள் சொல்லுக்கு மரியாதை ஏற்படும் நாள். - திறமைக்கு மரியாதை!

மகரம்

ஆரோக்கியம் : பணவரவும் மரியாதையும் ஏற்படும் நாள். என்றாலும் ஆரோக்கியத்திலும் கவனம் தேவை . உணவு விஷயங்களில் அக்கறை அவசியம். - ஹெல்த் இஸ் வெல்த்!

கும்பம்

துணிவு : மனதில் தன்னம்பிக்கையும் துணிவும் அதிகரிக்கும். முக்கிய முடிவுகளைத் துணிந்து எடுப்பீர்கள். குடும்பத்தினர் உங்கள் விருப்பம்போல் நடந்துகொள்வார்கள். - துணிவே துணை!

மீனம்

நிதானம் : செலவுகள் அதிகரிக்கும் நாள். உடலில் சின்னச் சின்ன உபாதைகளும் தோன்றி மறையும். குடும்பத்தினரின் செயல்கள் ஆறுதலாக இருக்கும். - ஸ்லோ அண்ட் ஸ்டெடி வின்ஸ் தி ரேஸ்!

அடுத்த கட்டுரைக்கு