Published:Updated:

கைப்பிடி உப்பு இருந்தால் இதையெல்லாம் சாதிக்கலாம்... கவலைகள் தீர்க்கும் கல் உப்புப் பரிகாரங்கள்!

கல் உப்பு
கல் உப்பு

கைப்பிடி உப்பு இருந்தால் இதையெல்லாம் சாதிக்கலாம்... கவலைகள் தீர்க்கும் கல் உப்புப் பரிகாரங்கள்!

இன்றைய பஞ்சாங்கம்

22. 5. 21 வைகாசி - 8 - சனிக்கிழமை

திதி: ஏகாதசி

நட்சத்திரம்: உத்திரம் காலை 10.05 வரை பிறகு அஸ்தம்

யோகம்: மரணயோகம்

ராகுகாலம்: காலை 9 முதல் 10.30 வரை

எமகண்டம்: பகல் 1.30 முதல் 3 வரை

நல்லநேரம்: காலை 7.30 முதல் 8.30 வரை/ பகல் 4.30 முதல் 5.30 வரை

ஏகாதசி
ஏகாதசி

சந்திராஷ்டமம்: அவிட்டம் காலை 10.05 வரை பிறகு சதயம்

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

வழிபடவேண்டிய தெய்வம்: மகாவிஷ்ணு

இன்று: ஏகாதசி விரதம்

கவலைகள் தீர்க்கும் கல் உப்புப் பரிகாரங்கள்!

ஏதேனும் சிறிய பிரச்னைகளுக்கு சண்டையிட்டால் உடனே அதை அறிந்தவர்கள், ‘உப்பு பெறாத விஷயத்துக்கு சண்டையா...’ என்று கேட்பதுண்டு. ஆனால் உப்பு என்பது அப்படி ஒதுக்கத் தகுந்ததல்ல. உப்புக்கும் வாழ்வுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. உணவில் சுவை கூட்டுவதோடு மட்டுமல்லாமல் உப்பு ஒரு மருத்துவப் பொருளாகவும் கருதப்படுகிறது. ஆரோக்கியத்துக்கும் உப்புக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. அதேநேரம் உப்புக்கு ஆன்மிகத்தில் மிக முக்கியமான இடம் உண்டு. ஆரோக்கியம் வேண்டுபவர்கள் ஆலயத்தில் வேண்டிக்கொண்டு உப்பும் மிளகும் போடும் வேண்டுதல்களைப் பார்த்திருப்போம். காரணம் உப்பு நம் வீட்டிலேயே இருக்கும் உன்னதமான பொருள் என்பதால்தான். வீட்டில் உப்பிருந்தால் சில எளிய பரிகாரங்களின் மூலம் நம் துயர்களைத் தீர்க்கலாம் என்கின்றனர் நம் முன்னோர்கள். இதோ அது குறித்து அறிந்துகொள்ள கீழே உள்ள வீடியோவைப் பாருங்கள்.

இன்றைய ராசிபலன்

விரிவான இன்றைய பலன்களை வாசிக்க இங்கே க்ளிக் செய்யவும்.

22.5.21

மேஷம் :பணிச்சுமை : நேரத்துக்கு உணவு எடுத்துக்கொள்ள முடியாத அளவுக்குப் பணிச்சுமை அதிகரிக்கும். எதிர்பார்த்த பணவரவு உண்டாகும். செயல்களில் கூடுதல் கவனம் தேவை. - உழைக்கும் கரங்கள் !

ரிஷபம் : நன்மை : முற்பகலில் சோர்வும் பிற்பகலில் உற்சாகமும் உண்டாகும் நாள். பணவரவும் உண்டாகும். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். - நாள் நல்ல நாள்!

மிதுனம் : ஆதாயம் : நீண்ட கால பிரச்னை ஒன்று முடிவுக்கு வரும். உறவினர்களால் ஆதாயம் உண்டாகும்.உறவுகளிடையே இருந்த மன வருத்தமும் நீங்கும். - இனி எல்லாம் சுபமே!

கடகம் : சுறுசுறுப்பு : காலை முதலே சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். செலவுகள் அதிகரித்தாலும் பணவரவும் இருக்கும். எதிர்பார்த்த நற்செய்தி வந்து சேரும். - ஆல் தி பெஸ்ட்!

சிம்மம் : நிதானம் : வழக்கமான பணிகளாக இருந்தாலும் கூடுதல் கவனம் தேவைப்படும் நாள். சொல்லிலும் செயலிலும் நிதானம் தேவை. பணவரவு கிடைக்கும். - லெஸ் டென்ஷன் மோர் வொர்க்!

கன்னி : பணவரவு : திட்டமிட்ட வேலைகளில் சாதகமான பதில் கிடைக்கும். புதிய முயற்சிகளைத் திட்டமிட உகந்த நாள். பணவரவுக்கும் குறைவில்லை. - ஜாலி டே!

துலாம் : செலவு : கொடுக்கல் வாங்கலில் கவனம் செலுத்த வேண்டிய நாள். செலவுகளும் அதிகரிக்கும். மற்றபடி செயல்களில் வெற்றி உண்டாகும். அனுகூலமான நாள். - செலவே சமாளி!

விருச்சிகம் : கவனம் : எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உறவினர்களால் அனுகூலம் உண்டாகும் என்றாலும் அவர்களிடம் பேசும்போது சொற்களில் கவனம் தேவை. - நா காக்க!

தனுசு : விவாதம் : குடும்பத்தினரின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.தேவையற்ற விவாதங்களை முற்றிலும் தவிர்க்க வேண்டிய நாள். வார்த்தைகளால் வம்பு வரலாம். - நோ ஆர்கியுமென்ட்ஸ்!

மகரம் : தெளிவு : நேற்றுவரை இருந்த குழப்பங்கள் மெள்ள மெள்ள விலகும். என்றாலும் குடும்பத்தினரைப் புரிந்துகொண்டு பேச முயலுங்கள். அன்பால் சாதிக்கலாம். - ஆல் தி பெஸ்ட்!

கும்பம் : கவலை : தேவையற்ற கவலைகள் மனதை வாட்டும். அவசரத் தேவைக்காக வெளியில் செல்ல நேர்ந்தால் உரிய பாதுகாப்போடு சென்று வாருங்கள். இறைவழிபாடு அவசியம். - ரிலாக்ஸ் ப்ளீஸ்!

மீனம் : பொறுமை : உறவினர்களிடம் பேசும்போது பொறுமை அவசியம். விட்டுக்கொடுத்துப் போவதும் அவசியம். மற்றபடி செயல்கள் அனைத்தும் சாதகமாகும். - ஸ்லோ அண்ட் ஸ்டெடி வின்ஸ் தி ரேஸ்!

அடுத்த கட்டுரைக்கு