Published:Updated:

அதிர்ஷ்டம் தருமா உங்கள் பெயர்?

எழுத்துகள்
பிரீமியம் ஸ்டோரி
News
எழுத்துகள்

அதிர்ஷ்டம் அள்ளித் தரும் பெயர் எழுத்துகள்!

ஜோதிடர் செய்யனூர் ரா. சுப்பிரமணியன்

இப்புவியில் தோன்றும் சகல ஜீவன்களுக்கும் அடையாளத்தைத் தருவன அவற்றின் பெயர்களே. மனிதனைப் பொறுத்தவரை, தொட்டில் தொடங்கி வயோதிகம் வரையிலும் அவனுடைய உருவம் மாறினாலும் அவனுடன் தொடர்ந்து இருப்பது அவனது பெயரே.

இப்படித் தனித்தன்மை வாய்ந்த பெயரை அதிர்ஷ்டம் வாய்ந்ததாக சூட்டவேண்டும் என்கின்றன எண்கணித சாஸ்திர நூல்கள்.

மனிதனுடைய பெயர்கள் அவரவர் தாய் மொழியில் வைக்கப்பட்டாலும் எண் கணித சாஸ்திரப்படி ஆங்கிலப் பெயர் எழுத்துகளே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன. உலகளாவிய மொழி என்பதால் ஆங்கிலம் நடைமுறையானது எனலாம்.

மேலும், ஒவ்வொரு மொழியிலும் அந்தப் பெயருக்கான எண் வலிமை உண்டு என்றாலும் அவற்றுக்கான வலிமை கண்டறியப்படவில்லை என்று கூறப்படுகிறது. எனவே, ஆங்கிலம் எண் கணிதப் பொதுமொழியானது என்பார்கள். இங்கே நாம், ஒருவரின் பெயர் முதல் எழுத்து அமைவதைப் பொறுத்து, அவருடைய பொதுவான குணாதிசயங்கள் எப்படி என்பதை அறிவோம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

A- வாழ்வில் படிப்படியாக முன்னேற்றம் அடைய வேண்டும் என்ற மனவலிமையும் நோக்கமும் கொண்டவர். எதையும் நேரிடையாகப் பேசும், எடுத்த காரியத்தை சாதிக்கும் ஆற்றல் கொண்டவர்.

B- எதிலும் ரகசியம் காப்பவர். தான் உண்டு தன் வேலையுண்டு என்று இருப்பவர். வெட்கப்படும் குணமும் உணர்ச்சிவசப்படும் மனநிலையும் கொண்டவர். எதிலும் திருப்தி கொள்ளும் அன்பர்.

C- கற்பனைத் திறன் மிகுந்தவர். அலை பாயும் மனமும் அலட்டிக்கொள்ளும் சுபாவமும் கொண்டவர். சுறுசுறுப்பும் உற்சாகமும் இவர்களின் பலம்.

அதிர்ஷ்டம் தருமா உங்கள் பெயர்?

D- உலக சுகங்களில் அதிகப் பற்று கொண்டவர். எதிலும் கௌரவம், அந்தஸ்து பார்க்கும் மனப்பாங்கு கொண்டவர். இவருக்கு, நெருங்கிய நண்பர்கள் குறைவு. மெதுவாகச் செயலாற்றும் இயல்பு கொண்டவர்.

E- எல்லோரிடமும் சகஜமாகப் பழகும் மனம் கொண்டவர். எதிர்காலத்தை ஆழ்ந்து நோக்கித் திட்டம் வகுப்பவர். உலக சுகம், தெய்வ பக்தி, கற்பனா சக்தி அதிகம் உள்ளவர்.

F - பக்தி, ஆன்மிகம் ஆகியவற்றில் ஈடுபாடு கொண்டவர். அன்பும் பிடிவாதமும் இருக்கும். குடும்பப் பாசமும் நிதானமும் இவர்களின் பலம்.

G- எதிலும் வளைந்துகொடுக்கும் இயல்பினர். புதுப்புது சிந்தனைகள், எண்ணங்களால் சிறப்படைவர். தன்னைத்தானே உணரும் ஆற்றல் கொண்டவர். எனினும் அவசரச் செயல்பாடுகள் இவர்களின் பலவீனம்.

H - அன்பானவர்கள்; சுயமாக முன்னேறும் ஆற்றல் கொண்டவர்கள். உறுதியான மனவலிமை கொண்ட நிதானக் காரர்கள்.

I - நான், எனது என்ற சுயநலம் அதிகம் கொண்டவர்கள். எச்சரிக்கை; சுயநம்பிக்கையோடு செயலாற் றுபவர்கள். உணர்ச்சிவசப்படுவதும் அதீத தன்னம்பிக்கையும் இவர்களின் பலவீனம்.

J - புதுப்புது நண்பர்களைக் கொண்ட இந்த அன்பர்கள், தொடர்ந்து வெற்றிகளைக் குவிப்பார்கள். பிரச்னைகளை அலசி ஆராயும் இவர்களுக்குக் கலைகளில் விருப்பம் அதிகம் இருக்கும்.

K - உள் உணர்வும் மனவலிமையும் அதிகம் கொண்ட இந்த அன்பர்கள், தொட்ட காரியத்தை வெற்றிகரமாக முடிக்கும் ஆற்றல் பெற்றவர்கள். அருள்சக்தியைப் பெறும் திறன் கொண்டவர்கள்.

L - பொது அறிவும் தத்துவ ஞானமும் கொண்ட இவர்கள், வாதத்தினால் எதிராளிகளை வசப்படுத்தும் ஆற்றல் கொண்டவர்கள். நேர்மையும் உண்மையும் இவர்கள் பலம்.

M - பிடிவாதம் வளைந்து கொடுக்கும் தன்மை என இரண்டுமே கொண்ட வர்கள். வெற்றியாளர்கள் என்றாலும் `நான்’ என்ற எண்ணமும் இவர்களிடம் அதிகம் இருக்கும். இது இவர்களின் பலவீனம் ஆகும்.

அதிர்ஷ்டம் தருமா உங்கள் பெயர்?

N - ஸ்திரமான மனநிலையைக் கொள்ளாதவர்கள். எதிலும் ஒரு குறை தென்படும் அளவில் செயல்படுவார்கள். இவர்களின் பொருளாதாரம் நிலையாக இருக்காது.

O- கருத்தில் உறுதியானவர்கள். வெற்றி பெறும்வரை விடா முயற்சியைக் கைவிடாதவர்கள். தலைமைப் பொறுப்பை விரும்புவார்கள். அதை அடைய கடும் முயற்சி மேற்கொள்வர். நியாயத்தை விரும்பும் மனவலிமை கொண்டவர்கள்.

P - ஆழ்ந்த அழுத்தமான குணம் கொண்டவர்கள். கஷ்டங்களைப் பகிர்ந்துகொள்ள மாட்டார்கள். எவ்வளவு சோதனை வந்தாலும் கலங்காதவர்கள். பொதுப் பிரச்னைகளில் இருந்து ஒதுங்கிக்கொள்ளும் சுபாவம் கொண்டவர்கள்.

Q- எதிலும் நிதானச் செயல்பாடும் தீர்மானமான அபிப்ராயமும் கொண்டவர்கள். வெற்றிக்காகப் போராடுவார்கள். தலைமைப் பொறுப்பை அடைய விரும்புவார்கள்.

R- தொண்டு புரியும் குணமும் அறிவுரை சொல்லத்தக்க வாழ்வும் கொண்டவர்கள். எந்தத் துறையிலும் பிரகாசிக்கும் திறன் கொண்டவர்கள். தெய்வாம்சம் நிறைந்தவர்கள். எல்லோ ரும் விரும்பும் குணம் கொண்டவர்கள்.

S - எதிலும் முடிவெடுக்க முடியாத சஞ்சல மனம் கொண்டவர்கள். ஏற்றத்தாழ்வுகள் கொண்ட வாழ்வை வாழ்வார்கள். உறுதியான நிலைப்பாடு இல்லாமல் திணறும் நிலை கொண்டவர்கள்.

T - பேச்சுத் திறமை கொண்டவர்கள். பிறருக்கு உதவும் மனம் கொண்டவர்கள். பகிர்ந்து வாழும் இவர்களது குணம் ஒரு பலம். எந்தச் செயலையும் பக்குவமாகச் செய்யும் ஆற்றல் கொண்டவர்கள்.

U - தன்னம்பிக்கை குறைந்தவர்கள். உலகப் பொருள்களின்மீது அதீத ஆசை கொண்டவர்கள். சஞ்சல மனம் துக்கத்தை அளிக்கும். தெய்வ வழிபாட்டிலும் திருப்தி அமையாது.

V- விவேகம் கொண்ட நடுநிலையா னவர்கள். எதையும் பணமாக்கும் சாமர்த்தியம் கொண்டவர்கள். வெற்றிகரமான வாழ்க்கை அமையும். எவரையும் வசிப்பயப்படுத்தும் ஆற்றல் கொண்டவர்கள்.

W- எந்த ஒரு காரியத்தையும் பொறுமையோடு அணுகும் குணம் கொண்டவர்கள். ஒரே நேரத்தில் பல செயல்களில் ஈடுபட்டுப் புலம்பும் குணம் கொண்டவர்கள். சோதனைகளுக்குப் பிறகு சாதனை புரியும் போராட்டக்காரர்கள்.

அதிர்ஷ்டம் தருமா உங்கள் பெயர்?

X- எதிலும் தெளிவு கொண்ட மனம் கொண்டவர்கள். அடிக்கடி மனச் சோர்வால் அவதிப்படுவர். ஆற்றல் கொண்டவர் எனினும் அதை அதிகம் பயன்படுத்தாதவர்.

Y - சாந்தமான மனமும் அறிவாற்றலும் இவர்களின் பலம். தனிமையை விரும்பும் நல்ல மனம் கொண்டவர்கள். நல்ல காரியங்கள் பல செய்து புகழை அடைவார்கள்.

Z - எந்தக் காரியத்தையும் நல்லபடியாகச் செய்பவர்கள். பொது நன்மைக்காக உழைப்பவர்கள். கொள்கைப்பிடிப்பும் உறுதியும் கொண்டவர்கள். தன் போக்கிலேயே செல்லும் மனம் கொண்டவர்கள்.

இதுவரை விளக்கப்பட்டவை எழுத்துகளின் வலிமையைக் கொண்டு கணிக்கப்பட்டவை. எனினும், பூர்ண அதிர்ஷ்டம் மற்றும் பலனைப் பெற பூர்வஜன்ம புண்ணியமும் இறைவனின் அருளும் அவசியமாகின்றன. ஆக, நாம் நாள்தோறும் இறையை வழிபட்டு, வளமான வாழ்வை வரமாகப் பெற்று மகிழ்வோம்.