Published:Updated:

திருமணமும் ஜோதிடமும்!

கல்யாணமும் ஜோதிடமும்
பிரீமியம் ஸ்டோரி
கல்யாணமும் ஜோதிடமும்

ஜோதிடர் ஆம்பூர் வேல்முருகன்

திருமணமும் ஜோதிடமும்!

ஜோதிடர் ஆம்பூர் வேல்முருகன்

Published:Updated:
கல்யாணமும் ஜோதிடமும்
பிரீமியம் ஸ்டோரி
கல்யாணமும் ஜோதிடமும்

`திருமணம் என்பது ஆயிரங் காலத்துப் பயிர்' என்பது முன்னோர் வாக்கு. திருமணம் ஒவ்வொருவரின் வாழ்விலும் இன்றியமையாதது. வாழ்வை வரமாக்கவல்ல மணவாழ்க்கை ஒருவருக்கு எப்படி அமையும் என்பதை அறிந்துகொள்ள ஜோதிடம் மிக உதவியாக இருக்கிறது.

திருமணமும் ஜோதிடமும்!
Muralinath

ணோ, பெண்ணோ... ஒருவரின் ஜாதகத்தை வைத்து அவருடைய திருமண வாழ்க்கை எவ்வாறு இருக்கும், அவருக்கு வரக்கூடிய களத்திரம் எந்த மாதிரியான குணநலன்களைப் பெற்றிருக்கும், தம்பதிகளுக்குள் உறவு எப்படி இருக்கும், குழந்தைப் பாக்கியம், செல்வ நிலை வளர்ச்சி எப்படி போன்ற அனைத்து விஷயங்களையும் நிச்சயம் அறிய முடியும்.

பத்துப் பொருத்தங்கள் முதலானவற்றின் அடிப்படையில் மணப் பந்தம் குறித்த பலாபலன்கள் அறியப்படுகின்றன. பெரும்பாலும் நட்சத்திரத்தை அடிப்படையாக வைத்துப் பார்க்கப்படும் திருமணப் பொருத்தம் என்பது பொதுவான ஒன்று.

பழங்காலத்திலிருந்தே சரியான ஜாதகம் இல்லாதவர்களுக்கு, அவர்களின் பெயரின் அடிப்படையில் நாம நட்சத்திரத்தை அறிந்தும் அதற்குரிய நட்சத்திரம் - ராசியை அடிப்படையாகக் கொண்டும் தசவித திருமணப் பொருத்தம் பார்க்கும் வழக்கம் உண்டு.

இப்படியாக பலன் காணும் முறை ஒருவரின் வாழ்க்கையைப் பற்றிய முழுமையான துல்லியமான தகவல்களை அளிக்கும் என்று சொல்ல முடியாது. பிறந்த நேரத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்படும் ஜாதகத்தின் அடிப்படையில் - நம்முடைய துல்லியமான ராசி மற்றும் நட்சத்திரத்தை அறிந்து கணிக்கப்படும் பலன்களே முழுமையான தகவல்களைத் தரும். மட்டுமன்றி நட்சத்திரப் பொருத்தம் என்பது பொதுப்படையானது. ஜாதகத்தின் கிரகநிலைகளை அடிப்படையாகக் கொண்டு பார்க்கப்படும் மணப் பொருத்தம் - ஜாதகப் பொருத்தமே மிகவும் சரியானதாக இருக்கும்.

திருமண பொருத்தம் பார்க்கும்போது, முதலில் கணிக்க வேண்டியது ஆண் - பெண் இருவரின் ஆயுள். இருவருக்கும் ஆயுள் பலம் நல்லபடியாக இருக்கும்போது அவர்களின் மணவாழ்க்கை சிறப்பாக நீண்டநாள் அமையும் என்பதையும் உள்ளபடியே யோகங்களை அவர்கள் அனுபவிக்கும் வாய்ப்பு உள்ளது என்பதையும் நாம் அறியலாம்.

ஜாதகத்தில் வாழ்க்கைத் துணையை - களத்திரத்தைக் குறிக்கும் பாவம் ஏழாம் பாவம் ஆகும். குடும்பத்தைக் குறிக்கும் பாவம் இரண்டாம் பாவம் ஆகும். கணவன் மனைவிக்குள் ஏற்படும் மகிழ்ச்சியைக் குறிக்கும் பாவம் பதினோராம் பாவம் ஆகும். இந்த பாவங்கள் பலம் பெற்று இருப்பதும், இந்த பாவங்களில் சுப கிரகங்கள் வீற்றிருப்பதும், சுபக்கிரகங்களின் பார்வையைப் பெற்றிருப்பதும், அசுப கிரகங்களின் தொடர்பு இல்லாமல் இருப்பதும் நன்மை தரக்கூடிய அமைப்பாகும். இந்த நிலைகளை அவசியம் கணித்தறிய வேண்டும்.

மேலும் 7-ம் பாவமும், 7-ஆம் பாவ அதிபதியும் 6, 8, 12 ஆகிய பாவாதிபதிகளின் தொடர்பில்லாமல் இருப்பது நன்மை தரும். ஒருவேளை தொடர்பு இருப்பின், திருமணத்தின்போது குறிப்பிட்ட அந்தக் கிரகங்களின் தசாபுத்தி காலம் நடவாமல் இருக்கவேண்டும். இதையும் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டியது அவசியம். வரனின் ஜாதகத்தை நன்கு ஆராய்ந்து, பலனறிந்து திருமணம் நடைபெறும்போது தேவையற்ற பிரச்னைகளைத் தவிர்க்கலாம்.

ஏழாம் பாவத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட பாவ கிரகங்களின் தொடர்பு இருப்பின், அதனால் வரக்கூடிய பிரச்னைகளை ஆராய்ந்து அதற்குரிய பரிகாரங்களைச் செய்வது நல்லது.

அடுத்து கவனிக்க வேண்டியவை களத்திரத்திற்கு காரகமான கிரகங்களாகும்.

திருமணமும் ஜோதிடமும்!
anitha devi

ண்களுக்குச் சுக்ரனும், பெண்களுக்குச் செவ்வாயும் களத்திரக்காரகர்கள் ஆவார்கள்.

ஜாதகத்தில் ஆண்களுக்கு சுக்கிரன்-கேது சேர்க்கை, பெண்களுக்குச் செவ்வாய்- ராகு சேர்க்கை இருப்பது திருமண வாழ்வைப் பாதிக்கும் நிலையாகும்.

இந்த சேர்க்கையின் வீரியத்தைக் கணக்கிட்டு, அதற்குப் பொருத்தமுள்ள ஜாதகத்தினை இணைப்பதாலும், பரிகாரங்களை மேற்கொள்வதாலும் பிரச்னை களைக் குறைக்கலாம்.

லக்னத்திற்கு 2, 4, 7, 8, 12 ஆகிய ஸ்தானங்களில் செவ்வாய் இருப்பின், அது செவ்வாய் தோஷம் ஆகும். இவர்களின் செயல்பாடு களில் துடிப்பும் வேகமும் அதிகம் இருக்கும் என்பதால், அதற்குப் பொருத்தமான வரன்களையே பார்த்து, மற்ற ஜாதகப் பொருத்தமும் பார்த்து திருமணம் முடிப்பது நன்மை தரும்.

2, 4, 7, 8, 12- ல் உள்ள செவ்வாய் சுப கிரகங்களான குரு, சுக்கிரனின் பார்வையோ சேர்க்கையோ பெற்றாலும், செவ்வாய் குறிப்பிட்ட ராசியில் உச்சம், நீசம், ஆட்சி பெற்றாலும் செவ்வாய் தோஷம் இல்லை. அதேபோல் சனி பகவானின் சேர்க்கை அல்லது பார்வை பெற்றாலும் செவ்வாய் தோஷம் இல்லை எனலாம்.

லக்னத்திற்கு 1, 2, 5, 7, 8 ஆகிய ஸ்தானங்களில் ராகு கேது இருப்பின் அது சர்ப்ப தோஷம், களத்திர தோஷம் எனக் கண்டறிய வேண்டும். இவ்வாறு தோஷம் இருப்பின் அதற்குச் சமமான தோஷம் உடைய ஜாதகங்களை இணைப்பது நல்லது.

இது தம்பதிகளுக்குள் கருத்து வேறுபாடு களைத் தவிர்த்து, மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை வாழ ஏதுவாக இருக்கும்.

ஏழாம் இடத்தில் சுக்ரன் தனித்து இருப்பது காரகோ பாவ நாஸ்தி எனப்படும். அதாவது களத்திரக்காரகனான சுக்ர பகவானே களத்திர பாவத்தில் இருப்பது காரகோ பாவ நாஸ்தி ஆகும். இது திருமண வாழ்வில் தேவையற்ற பிரச்னைகளையும், பிரிவினையையும் ஏற்படுத்தும். ஆதலால் அதற்குரிய கிரகப் பொருத்தமுள்ள ஜாதகத்தை இணைக்க வேண்டும். அப்போது, இதுபோன்ற தேவையற்ற பிரச்னைகளைத் தவிர்க்கலாம்.

ணின் ஜாதகத்தில் 5-ம் பாவமும், குரு பகவானின் அமைப்பும் குழந்தை பாக்கியத்தை அறிய உதவும். பெண்ணின் ஜாதகத்தில் 9-ம் பாவமும், குரு மற்றும் சுக்கிர பகவானின் அமைப்பும் குழந்தை பாக்கியத்தை அறிய உதவும்.

இந்த பாவாதிபதிகள் வலுப்பெறுவது, அந்த பாவங்களுக்குச் சுபக்கிரகங்களின் தொடர்பு ஏற்படுவது, நல்ல குழந்தை பாக்கியத்தைத் தரும்; குழந்தைகளின் எதிர்காலத்துக்கு நன்மையைத் தரும் அமைப்பாகும்.

இதில் ஏதேனும் குறை இருந்தால், அந்தக் குறையை நிவர்த்தி செய்யக்கூடிய அளவிற்குப் பலம் பொருந்திய ஜாதக வரன்களையே தேர்ந்தெடுக்கவேண்டும்.

சிலர் ஜாதகப்படி, அவர்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட திருமணங்கள் நடக்கக் கூடிய அமைப்பு இருக்கலாம். அவ்வாறு இருக்கும்போது, உரிய பொருத்தமான ஜாதகங்களை இணைப்பதும் குறிப்பிட்ட திருமண முகூர்த்தத்தை அமைத்து அதில் திருமணம் முடிப்பதும், உரிய பரிகாரங்களை மேற்கொள்வதும் மிகவும் அவசியம்.

திருமணம் நடக்கும்போது ஆண் பெண் இருவருக்கும் நடக்கக்கூடிய திசை, புத்தி ஆகியவற்றை ஆராய வேண்டியது அவசியம். இதில் முக்கியமாக இருவருக்கும் தசா சந்தி இருக்கக் கூடாது.

தசா சந்தி என்பது இருவருக்கும் திருமணம் நடக்கக் கூடிய காலங்களில் ஒரே திசை, புத்தி நடப்பது ஆகும்.அவ்வாறு இருந்தால் அது திருமண வாழ்வில் தேவையற்ற பிரச்னைகளை உருவாக்கும்.

உரிய வகையில் திசா புத்தி காலங்களைப் பார்த்துத் திருமணம் நடத்தி வைக்கும்போது, மணமக்கள் பெரிதும் மகிழ்ச்சியுடனும் ஒற்றுமை யுடனும் வாழ்வார்கள். வளர்ச்சி, செல்வ நிலை, குழந்தை பாக்கியம் அனைத்தும் நல்லபடியாக அமையும்.

ஆகவே, தசவித திருமணப் பொருத்தம் பார்ப்பதோடு நில்லாமல், உரிய முறைப்படி ஜாதகத்தை ஆராய்ந்து கிரகநிலைகளை கணக்கிட்டு, தோஷங்கள் உள்ளனவா எனக் கவனித்துச் செயல்படவேண்டும். இதன் மூலம் மணப் பந்தத்தில் இணையும் தம்பதியரின் வாழ்வும் எதிர்காலமும் செழிக்கும்.

முறையாக ஜாதகப் பொருத்தத்தை முழுமையாகப் பார்த்து திருமணம் செய்வதால் விவாகரத்து, குடும்ப ஒற்றுமையின்மை போன்ற பல விஷயங்களைத் தவிர்க்கலாம். திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பதை உணர்த்தும் விதமாக திருமண வாழ்க்கை அமைய ஜோதிடம் மிகவும் உறுதுணையாக இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.